நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். மார்க்கெட்டிங் செய்ய தேரிந்தவன் எல்லாம் அழகா விளம்பரம் செய்து விக்காத சரக்கை விக்க வைக்கிறதுக்கு வெளி நாட்டுல இருந்து இறக்கி கொண்டுவந்த இறக்குமதி சரக்கு தானே இந்த காதலர் தினம்.இதுல இன்னொரு பெரிய விசயமும் இருக்கு இது எதுக்குன்னே தெரியாம கொண்டாடுற அதிக படியான மக்கள். எந்த அளவுக்குன்னா குழந்தைகள் கூட குதூகலித்து கொண்டாடுற ஒரு அவமான நிலை.நம்ம நாட்டு நிலைமை இப்படின்னா இத உருவாக்குன நாட்டு மக்கள் எல்லாம் இன்னைக்கு நம்ம நாட்டு கலாச்சாரத்த பின்பற்றுராங்கோன்னு இவுங்களுக்கு யாரு எடுத்து சொல்லுறது.இத சொல்லுரதுனால தமிழனுக்கு காதல் இருக்க கூடாதுன்னு சொல்லல.இந்த தினத்த சொன்னவன் அம்மணமா கிடந்த காலத்திலயே காதல கண்ணியமா சொன்ன மரபு தான் இந்த தமிழ் மரபு.ஆனா இன்னைக்கு வெத்து வேட்டு எல்லாரும் கொண்டாடுற தினம் தான் இந்த காதலர் தினம்.இது போல உள்ளவங்க கொண்டாடுரதுனால உண்மைய காதல் செயுரவங்களும் அசிங்க படவேண்டிய ஒரு தர்ம சங்கடம்.இன்னும் காதல்னா என்னானு புரியாத வயசுல இருக்குறவங்க வெறும் இனக்கவற்சிக்காக இன்னைக்கு இத அதிகமா கொண்டாடுறாங்க. ஊருகான்னு நினைச்சாலே உள்நாக்குல எச்சில் ஊறத்தான் செய்யும்.ஆனா கைல கிடைச்ச உடனே அவ்வளவயுமா தின்ன முடியுது.காரணம் ஹார்மோன் செய்யுற வேலை.அது போல தான் காதலும் அது மனசுல நினைச்ச உடனே ஹார்மோன் சுரக்க ஆரம்பிச்சிடும். உடனே கற்பனைல மிதக்க ஆரம்பிசிடுராங்கோ. ஒரு குறிப்பிட்ட காலம் கழிஞ்ச பிறது ரெண்டுபேருக்குமே அதுல ஒரு சலிப்பு அல்லது ஒரு சாதரண நிலை வந்துடுது.இது தான் உண்மை.இன்னும் கொஞ்சம் யோசிச்தால் கழிந்த வருடம் காதல் தினம் கொண்டாடிய எத்தனை பேர் இந்த வருடம் அதே நபருடன் காதல் செய்கிறார்கள். இது ஒரு பித்தலாட்டம் அப்படிங்கறதுக்கு இத விட ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமா.திரை படங்களில் வரும் கத்துக்குட்டி காதலுக்கு இந்த இளைய சமூகம் முன்னுரிமை கொடுப்பதனால் தான் இன்னைக்கு இந்த காதலர் தினம் எல்லா வெத்து வேட்டு களும் முன்னுக்கு நின்னு நடத்துறது மாதிரியான ஒரு சூழ் நிலைல இருக்குது. ஏற்கனவே இப்போ தான் புது வருஷம் கொண்டாடுரோம்னு சொல்லி பல புதுமைகளை நாமோ எல்லாரும் சந்திக்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப் பட்டோம். இப்போ அதே போல ஒரு சூழ் நிலை மீண்டும். இனிய சகோதர சகோதரிகளே இது போன்ற வெளி நாட்டு இறக்குமதிகள் நமக்கு உண்மையிலே தேவை தானா?. இவ்வளவும் சொல்லுரதுனால நான் ஒண்ணும் காதல் படத்துல வர்றது போல ஒரு வில்லன் கிடையாது. ஒரு சின்ன சமுதாய சிந்தனை தான். இவ்வளவும் சொன்ன பிறகும் கேட்க்காத ஒரு சில சகோதரர்களுக்காக இதோ ஒரு சிறிய ஆலோசனை. இந்த வருடம் காதலர் தினம் இப்படி கொண்டாடி முயற்சி செய்து பாருங்களேன்.
உங்கள் காதலிக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டி நீங்கள் வாங்கி கொடுக்க போகும் (அப்பா பணத்தில்) பரிசு அவளும் சரி நீங்களும் சரி மறைத்து வைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை காலம் காலமாக இருந்து வருவதால் இந்த முறை இரண்டுபேரும் சேர்ந்து ஆலோசித்து உங்கள் இருவருடைய நட்ப்பு வட்டாரத்தில் எதாவது ஒரு ஏழை நண்பனுக்கு அந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய உதவி செய்யலாமே.
உங்கள் பகுதியில் இருக்கும் அநாதை குழந்தைகளுக்கு ஒரு சிறிய அளவிலாவது இந்த பணத்தைக் கொண்டு ஒரு நேர உணவோ அல்லது அந்த குழந்தைகளுக்கு தேவையான நோட் புக் வாங்க தேவையான உதவியோ செய்யலாமே.
இந்த தினத்திலிருந்து உங்கள் காதல் கைகூடும் நாள் வரை இனி வரும் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு வகையில் யாருக்காவது உதவலாமே.
சிந்தியுங்கள் காதலர்களே நீங்கள் கொண்டாடும் இந்த தினம் சமுதாயத்திற்கு ஒரு அவமான தினமாய் இருந்து வரும் வேளையில் இது போன்ற காரியங்களை செய்வது மூலம் இந்த சமுதாயத்துக்கு உதவ முடியும்.அதே நேரம் குறிக்கோள் இன்றி கொண்டாட பட்டுய் கொண்டிருக்கும் இந்த தினத்துக்கு ஒரு சிறிய லட்சியத்தையாவது வரும் தலை முறைக்கு உருவாக்கி கொடுக்க முடியும்.இளைய சமுதாயமே இந்த முறையாவது சிந்தியுங்கள். உங்கள் காதல் உண்மை என்றால் இதை நடை முறை படுத்த முயலுங்கள். அதுக்கு பிறகு நாமும் சேர்ந்து பாடுவோம்
இனி எல்லோரும் கொண்டாடுவோம் ........................(பாடல் வரிகள் மனதுக்குள்ளே ..)
Sunday, February 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment