Saturday, February 9, 2008

புகைப்பவன் இனி முதல் நமக்கு பகைவன்


புதுடில்லி :நீங்கள் சிகரெட் பிடிக்காதவராக இருக்கலாம்; ஆனால், அடுத்தவர் விடும் சிகரெட் புகை, உங்கள் நுரையீரலில் போய், ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


சிகரெட் பிடிக்காதவர்களுக்கு சர்க்கரை நோய் வர, அடுத்தவர் விடும் புகையை சுவாசிப்பதும் ஒரு முக்கிய காரணம் என்று சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: சிகரெட் பிடிப்பவர்களுக்கு இதய, சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது. ஆனால், சிகரெட் பிடிப்போர் விடும் புகையால், மற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவது இப்போது அதிகரித்து வருகிறது.சிகரெட் பிடிக்காதவர்களுக்கு, சிகரெட் பிடிப்பவர்களை விட, இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
அலுவலகங்களில் வேலை செய்யும் பலருக்கு இப்படிப் பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு பரவி வருகிறது. சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகையால், ஆபீசில் உள்ள மற்றவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது.சிகரெட் பிடிப்பவர் , அவர் ஒருவர் விடும் புகையால் தான் பாதிக்கப்படுகிறார். ஆனால், பலர் பலவித சிகரெட்களை பிடித்து விடும் புகை, சிகரெட் பழக்கமில்லாதவர்கள் கணையத்தில் நிகோடின் சேருகிறது. அதனால், அதன் இயக்கம் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பது குறைகிறது.குடும்பத்தில் கணவன் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், மனைவி, குழந்தைகளுக்கு அதனால் பாதிப்பு வரும். அதனால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி ; தின மலர்

புகைப்பவன் இனி முதல் நமக்கு பகைவன் காரணம் இந்த சமுதாயத்தை அளிக்கும் ஒரு வைரஸ் போல தான் இருக்கிறது அவனது செயல் பாடும். அருமை நண்பர்களே உங்கள் நண்பர்களில் எவரேனும் இத்தைய விஷம் அருந்தும் பழக்கம் இருப்பவராய் இருந்தால் இன்றிலிருந்து அவரைத் திருத்த சபதம் செய்யுங்கள்.புகை குடிப்பழக்கம் இல்லாத ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம்.

No comments: