Saturday, April 26, 2008
சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதி செய்ய சொல்லும் அமெரிக்க தூதுவர்.
""சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்துத் தாம் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் உள்ளனர் என்பதை உணர்ந்தால் மாத்திரமே ஒன்றுபட்ட நாடு என்ற எண்ணக்கரு இங்கு சாத்தியமாகும்.''இவ்வாறு இலங்கை நிலைமையின் உண்மை நிலைவரத்தின் அடிப்படையை பின்னணியை தெளிவாக உரைத்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.எனவே, ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ், முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்றும் வழிகாட்டியிருக்கின்றார் அமெரிக்கத் தூதுவர்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் "சமாதான முன்னெடுப்புகளுக்கான வர்த்தக முயற்சி' என்ற கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்.
ஆனால், சிறுபான்மையினர் மீதான மேலாதிக்கச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் கொழும்பு அதிகார பீடத்தின் காதில் இந்த ஆலோசனை ஏறப்போவதில்லை என்பது நிச்சயம். பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரிலும், சிங்களத் தேசியவாதச் செருக்கிலும் தீவிரம் கொண்டு அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அதனடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கபளீகரம் செய்வதிலேயே தென்னிலங்கை முனைப்புக் கொண்டு நிற்கின்றது.
பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த ஆறு தசாப்த காலத்தில் கொடூரமாக அரங்கேறிய பேரினவாதத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளே இன்று இலங்கைத் தீவை இத்தகைய மீள முடியாத உள்நாட்டுப் போருக்குள் ஆழ்த்தி நிற்கின்றன.
இந்தப் பின்னணியைத் தமது பூடகமான வார்த்தைகளில் விளக்கியுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் தாராளத்துடனும், பரிவுடனும், அரவணைக்கும் பண்புடனும், நியாயம் செய்யும் உறுதியுடனும் செயற்படும் திடசங்கற்பம் பெரும்பான்மையினருக்கும் அவர்களது பிரதிநிதிகளான ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதையே அமெரிக்கத் தூதுவர் கோடிகாட்டுகின்றார்.ஆனால் சிங்களத்தின் மனவமைப்பில் அதன் மூளையத்தை இறுகப் பற்றிப் பீடித்திருக்கும் பேரினவாதப் பேய், அடக்கு முறைப் பிசாசு, சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யவிடாது என்பது தெளிவு. அடக்குமுறை முனைப்பிலேயே அது தீவிரம் கொண்டு நிற்கின்றது என்பதை யதார்த்த நிகழ்வுகள் நமக்கு வெளிப்படையாக எடுத்தியம்புகின்றன.பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய நிவாரணமும் நீதியும் செய்வதை விடுத்து, அவர்களை அடக்கி, ஒடுக்குவதிலேயே கொழும்பு அதிகாரத்தின் சிந்தனை முனைப்புப் பெற்று நிற்கின்றது.
சிறுபான்மை மக்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் ஆரம்பிக்கப்பட்ட எத்தனங்கள் எல்லாம் வெறும் வெளிவேஷ நாடகங்களாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டன. அடக்குமுறையை நோக்கமாகக் கொண்ட பலாத்கார நடவடிக்கைகளும் படைச் செயற்பாடுகளும் மட்டுமே தங்கு தடையின்றித் தொடர்கின்றன.
தமது நிச்சயமான உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வை வேண்டியும் போராடும் தமிழர் தரப்பிடம் போரியல் நடவடிக்கையில் பதிலடி வாங்கிக் கட்டிய பின்னரும் கூட அடக்குமுறையின் வெற்றிக்கான காலக்கெடு குறித்துப் பிரலாபிக்கும் கொழும்பு, அமைதித் தீர்வுக்கான காலவரையறை குறித்துச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.புதனன்று வடக்குப் போர் முனையில் பெரும் பின்னடைவு கண்டுள்ள கொழும்பு அரசு, அந்தத் தோல்வியைச் சமாளித்து, மூடி மறைத்துக்கொண்டு, மேலும் போர் முனைப்புடன் கூடிய மமதை அறிவிப்புகளையே விடுக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் தமிழர் தரப்பில் பேரம்பேசும் வலிமையுடன் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து ஒழிக்கும் தனது ஒரே இலக்குக்கான காலக்கெடுக்களை, காலவரையறைகளைத் தன்பாட்டில் அறிவித்து, அதன்மூலம் தென்னிலங்கையின் அடக்குமுறைச் சிந்தனையையும் பேரினவாத எண்ணப்போக்கையும் உசுப்பேற்றி விடுவதில் அதிக ஈடுபாடு காட்டும் கொழும்பு அரசு, பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு நீதி, நியாயம் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டிய தீர்வு முயற்சிகளுக்குக் காலக்கெடு அறிவிப்பதாகத் தெரியவில்லைஇப்போது, புதனன்று கிடைத்த வடக்குக் களமுனைப் பின்னடைவுகளை சமாளிக்கும் எத்தனத்தின்போது கூட, இவ்வருட இறுதிக்குள் புலிகளை அடியோடு ஒழித்து விடுவோம் என்ற கங்கணம் கட்டும் அறிவிப்பையே கொழும்பு முன்வைக்கின்றதே தவிர, தீர்வு முயற்சிக்கான காலக்கெடுவைப் பிரகடனப்படுத்துவதாக இல்லை. ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்றுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கி, அதனை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் தமிழர் தரப்போடு பேசி இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வு காண்பேன் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்துமூலம் உறுதியளித்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் அல்ல. இப்போது முப்பது மாதங்களாகின்றன.
அமைதித்தீர்வுக்கான இணக்கப்பாடு ஒன்றைத் தென்னிலங்கையில் உருவாக்குவதில் சிரத்தையும், ஈடுபாடும் காட்டாத அவர், தமிழர் தரப்பின் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரேயடியாக அழித்து ஒழிக்க வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனைக்கான தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து நிலைப்பாட்டை உருவாக்குவதில் மட்டும் ஒற்றைக்காலில் விடாப்பிடியாக நிற்கின்றார்.அமைதி முயற்சிகளைக் கிடப்பில் தூக்கிக் கடாசிவிட்டு, அழிப்பு முயற்சிகளுக்கான தென்னிலங்கையின் எத்தனம் உருக்கொண்டு, சந்நதம் பிடித்து நிற்பதன் பின்னணி தாற்பரியம் இதுதான்.
இத்தகைய போர் வெறிச் சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் ஆட்சியாளர்களின் காதில், சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யக்கோரும் அமெரிக்கத் தூதுவரின் கருத்து விழப்போவதில்லை என்பது ஊரறிந்த இரகசியம் ?.
நன்றி :- உதயன்
Friday, April 25, 2008
அப்பாவி முஸ்லிம்கள் மீது அடக்கு முறை ........................
ஏப்ரல் 26,2008,00:00
மதுரை : தென்காசியில் இரு பிரிவினருக்குள் மோதல் தொடர்பாக பதிவான 3 வழக்குகள் மேல் விசாரணைக்காக மதுரை இனகலவர வழக்குகளுக்கான சிறப்பு செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டன. இவ்வழக்குகளை மே 9ம் தேதிக்கு நீதிபதி ஜானத்தன் ஞானையா தள்ளிவைத்தார். தென்காசியில் 2.3.2007ல் இரு பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பைசேர்ந்தவர்கள் அம்மன் கோயில், புதிய பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் வாகன மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அரசு பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்யது ஒலி, ராகப்பா, நயினார் முகமது, சேக் ஒலி உட்பட 49 பேர் மீது தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வழக்குகள் தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தன. ஏற்கனவே இவ்வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். மேல் விசாரணைக்காக இவ் வழக்குகளை மதுரை கோர்ட்டிற்கு மாற்றம் செய்து தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. மதுரை கோர்ட்டில் நேற்று இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன. குற்றம் சாட்டப்பட்ட 49 பேரும் ஆஜராயினர். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜராயினார். விசாரணையை மே 9ம் தேதிக்கு நீதிபதி ஜானத்தன் ஞானையா தள்ளிவைத்தார்.
நன்றி : தினமலர்
இந்தப் பத்திரிகைசெய்தி மூலம் அந்த சம்பவம் முஸ்லிம்களால் மட்டும் நடத்தப் பட்ட தாக ஒரு பிம்பம் உருவாக்கப் படுகிறது.இனக் கலவரம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் கைது என்று எல்லாம் சொல்லும் இந்தப் பத்திரிகை இன்னொரு பிரிவினரைப (தனக்கு தானே குண்டு வைத்து அப்பவிமுச்ளிம்கள் மீது பழி போட நினைத்த பாசிடுகளை) பற்றி ஒரு வரி கூட குறிப் பிடாதடு இவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக காண்பிக்கிறது.இனி எனும் இந்த சமுதாயம் தற்காப்பு சிந்தனையும் சமுதாய எழுச்சியும் கொண்ட ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட்டு நின்றால் தான் இனி வரும் காலங்களில் நம் தலை முறை தலை நிமிர்ந்து நிற்க்கமுடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது.
Tuesday, April 22, 2008
ஜார்ஜ் புஷ் கைது .............
தீவிர வாதிக்கு உதவியவர் கைது
கொடைக்கானல் : தீவிர வாதிக்கு உதவியவரை போலீசார் கைது செய்து அவனிடம் விசாரணை நடத்துகின்றனர்.கொடைக் கானலில் நக்சலை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் ஜார்ஜ் புஷ் (27) என்பவர் தீவிரவாதிகளுக்கு உதவியது விசாரணையில் தெரிந்ததையடுத்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கேரளா இடுக்கி பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர்
எது எப்படியோ நாமோ எதிர்ப் பார்த்தது நடக்க போற நாளுக்காக காத்திருப்போம்
ஒரே நாளில் மலர்ந்த ஜனநாயகம்
முண்டே பி ஜே பி கூட சண்டே (சண்டை)
பாஜ கட்சி ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே கூறி யுள்ளார். கட்சியின் பொதுச் செய லாளராக இருந்த அவர், அனைத்துப் பொறுப்புகளி லிருந்தும் விலகிக் கொள்வ தாக அறிவித்துள்ளார். திங்களன்று மும்பை வந்த அவர், பாஜகவில் ஜனநாயகம் கொஞ்சம் கூட இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பதவி விலகிய தாக கூறினார்.
வடிவேலு ஸ்டைல் ல சொன்ன அது அப்போ...
ஆனா இப்போ பாஜகவில் இருந்து விலகப் போவது இல்லைன்னு சொல்லிஇருக்கிறார். இவரு எல்லாம் ஒரு பெரிய மனுசன்னு சொல்லி நம்பி பதினாறு பேரு ராஜினாமா கூட செய்தாங்கோ .இப்போ வழக்கம் போல அவுங்களுக்கும் சேர்த்து சங்கு ஊதிப் புட்டாங்கோ...
நம்பினோரை நட்டாத்தில் விடும் பி ஜே பி
{16 பிஜேபி கவுன்சிலர்கள் விலகல் புதுதில்லி
ஏப்-21. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் பதவி யிலிருந்து விலகிய கோபிநாத் முண்டேக்கு ஆதரவு தெரிவிக்கும் வந கயில் புனே மாநகராட்சியைச் சேர்ந்த 16 பிஜேபி கவுன்சிலர்கள் பதவி விலகிவிட்டனர். அவர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மும்பை கிளைக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது தொடர்ப க தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோபிநாத் முண்டே கட்சியின் எல்லா பதவிகளிலிருந்தும் விலகிவிட்டார். பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.}
நம்புவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும் என்று பட்டு தெரிந்து கொண்ட அந்தப் பதினாறு பேருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Sunday, April 20, 2008
NCHRO வின் தமிழ்நாட்டிற்கான நிர்வாகிகள் தேர்வு
மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பிபின் (NCHRO) தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (18.04.2008) சென்னையில் நடைபெற்றது. இதில்NCHRO வின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஓ.க. முஹம்மது ஷரீஃப் சிறப்புரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் குறித்தும், காவல்துறையின் போலி என்கவுன்டர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, NCHRO வின் தமிழ்நாடு மாநில கிளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் NCHRO வின் தமிழ்நாடு மாநில பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
1. வழக்கறிஞர் தி. லஜபதிராய் மதுரை தலைவர்
2. நிஜாமுதீன், Ex.M.L.A நாகப்பட்டிணம் துணைத் தலைவர்
3. வழக்கறிஞர், ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை துணைத் தலைவர்
4. முஹம்மது முபாμக், நெல்லை பொதுச் செயலாளர்
5. பேராசி. அ. மார்க்ஸ், சென்னை செயலாளர்
6. வழக்கறிஞர், ரஹமத்துல்லாஹ், மேட்டுப்பாளையம் செயலாளர்
7. வழக்கறிஞர், விவேகானந்தன், கும்பகோணம் செயலாளர்
8. வழக்கறிஞர் முஹம்மது அலீ ஜின்னா, மதுரை பொருளாளர்
9. ஷக்கூர், சென்னை மக்கள் தொடர்பு அதிகாரி (PRO)
செயற்குழு உறுப்பினர்கள்
1. வழக்கறிஞர், N.M. ஷாஜஹான், மதுரை
2. வழக்கறிஞர், நவ்ஃபல், கோயம்பத்தூர்
3. வழக்கறிஞர், முஹம்மது அப்பாஸ், மதுரை
4. வழக்கறிஞர், கீ. முருகன் குமார், திருநெல்வேலி
5. வழக்கறிஞர், எம்.எஸ். சுல்தான், மதுரை
6. சையது அலீ, நாகர்கோவில்
7. வழக்கறிஞர், அ. சையது அப்துல் காதர், மதுரை
8. வழக்கறிஞர், ஹரிபாபு, சேலம்.
9. அ. முஹம்மது யூஸுஃப் மதுரை
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அμசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM,AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போμணிட்டக் களத்தில் ஒரு மைல் கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனை வைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.
2. தமிழகத்தில் போலி என்கவுண்டர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதையே காட்டுகின்றது. இந்தப் போக்கை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. போலி என்கவுன்டர்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று தமிழக அμசை NCHRO கேட்டுக் கொள்கின்றது.
3. போலி என்கவுன்டரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.
4. கோவையில் கடந்த 2006ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏசி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினμணிலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் சிட் யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவையில் இவ்வாறு வெடிகுண்டு பீதியைக் கிளப்பி பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும் முகமாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெடிகுண்டு பழி சுமத்திய ஏ.சி ரத்தின சபாபதி, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவர்களுடைய வைப்பு நிதியிலிருந்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக்கொள்கிறது.
5. இந்திய அμசியல் அமைப்புச் சட்டம் ச்μத்து 14 வழங்கியுள்ள சமத்துவத்திற் கான உரிமை குடிமக்கள் அனைவருக்கும் ஒன்றுபோல வழங்கப்பட வேண்டும். பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தண்டனை கைதிகளை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும்போது சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், பெரும்பான்மை சமூகம் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் அதன் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.
6. இதனை வலியுறுத்தும் விதமாகவும், சமத்துவத்திற்கான உரிமை (Article14) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் எதிர்வரும் மே மாதம் NCHRO சார்பாக தமிழகத்தில் கருத்தμங்கம் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
தி. லஜபதிராய், தலைவர், NCHRO
தமிழ்நாடு, மொபைல் : 98432 51788,
Email: nchrotn@gmail.com