Saturday, February 9, 2008

கொன்னவங்க எந்த கூட்டம்னு ....................

ஹே ராம்... ராம், ராம்... ஆஹ்...! என்ன தான் சொன்னார் காந்தி? எதுவுமே சொல்லலியாம்; கல்யாணம் சொல்கிறார்



சென்னை :"ஹே ராம்...ராம், ராம்...ஆஹ்...!' கடந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி மாலை 5.10 மணிக்கு, டில்லி பிர்லா பவனில் நாதுராம் கோட்சே சுட்டபோது, மார்பில் குண்டு பாய்ந்து சரிந்தபடி, மகாத்மா காந்தி சொன்னது, இவற்றில் எந்த வார்த்தை என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
நாதுராம் சுட்டபோது, "ஹே ராம்' என்று சொல்லி ரத்த வெள்ளத்தில் காந்தி சரிந்தார் என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது ( ?) . சமீபத்தில், காந்தி பற்றிய வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில், அவர் "ராம்...ராம்' என்று தான் சொன்னார் என்று எழுதப்பட்டுள்ளது ( ?) . இதையடுத்து, இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.


காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் கல்யாணம்; வயது 84. சென்னையில் இவர் வசித்து வருகிறார். காந்தி சுடப்பட்டபோது, அவருக்கு பின்னால் கல்யாணம் நின்றிருந்தார்.
காந்தியை சுட்டபோது , அந்த இடத்தில் நடந்த விஷயங்கள் குறித்து கல்யாணம் கூறியதாவது:காந்தியின் இரு பக்கத்திலும், வழக்கம் போல, மனு மற்றும் அபா காந்தி உடன் வந்தனர். அவருக்கு பின்னால், இடதுபக்கம், அவருக்கு அருகில் நான் வந்து கொண்டிருந்தேன். காந்தியை நாதுராம் , துப்பாக்கியால் அடுத்தடுத்து சுட்டான். மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காந்தியால் பேச முடியவில்லை. அவர் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. அவரை பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தான், "ஹே ராம்' என்று கத்தியிருக்க வேண்டும். ஆனால், காந்தி வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. நாதுராம் கோட்சே, துப்பாக்கியை நீட்டியபடி காந்திக்கு முன்னால் வெகு அருகில் நின்று நேரடியாக அவர் மார்பில் சுட்டார். காந்தி மார்பில் குண்டுகள் பாய்ந்தன. அவர் இடது பக்கம் நின்று சுட்டிருந்தால், காந்தியை துளைத்த குண்டுகள், என்னையும் துளைத்து நானும் இறந்திருப்பேன்.
பிர்லா அரங்கில், வழக்கமான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளுடன் வெளியே வந்தார் காந்தி. அரங்கின் வெளியே வளாகத்தில், அவரை பார்க்க 200 பேர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவராக கோட்சே இருந்தார். காந்திக்கு பணிவது போல தலையை குனிந்து, அடுத்த தொடியே, காந்தியை நோக்கி சுட்டார்.ஆனால், காந்தி கொலை தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், அவர் அருகே இருந்த யாரையும் அழைத்து பேச அக்கறை காட்டவே இல்லை. காந்தி சுடப்பட்ட நாளில் இருந்து ,இன்று வரை, யாரை பார்த்தாலும், இந்த விஷயம் குறித்து பேச்சு வந்தால், "காந்தி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை' என்பதை சொல்லி வருகிறேன். ஆனால், இது பற்றி தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.
நான் சொன்னதை யாரும் கேட்பதாக இல்லை. தன் தாத்தாவை துஷார் காந்தி பார்த்தது கூட இல்லை. அப்படியிருக்க, காந்தி சுட்டுக்கொல்லப்படும் தறுவாயில், ஹே ராம் என்று சொன்னார் என்று எப்படி சொல்ல முடியும்? "நான் இறக்கும் தறுவாயில் ராமபிரான் பெயரைச் சொல்லி இறக்க வேண்டும்' என்று காந்தி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்படும் போது ராமபிரான் பெயரை சொல்லவில்லை. துப்பாக்கி குண்டுகள், மார்பை துளைக்கும் போது, அவர் எந்த வார்த்தையையும் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தார்.இவ்வாறு கல்யாணம் கூறினார்.




கொன்னவங்க எந்த கூட்டம்னு யோசிக்காம செத்தப்போ என்ன சொல்லிகிட்டு செத்தருன்னு இன்னும் சண்டை போடுரீங்களேப்பா ................

திருடனுக்கு அறிவுரையா ஆலோசனையா ?

பணம் திருடிய ராணுவ வீரருக்கு "பகவத் கீதை' பாணி "அட்வைஸ்!'

புதுடில்லி :பணம், புகழ், பதவிக்கு ஆசைப்படாதே; அது எப்போது வர வேண்டுமோ, அப்போது வரும்...!ராணுவ வீரர்கள் முகாமில் பணம் திருட்டு போனதைத் தொடர்ந்து, பகவத் கீதை பாணியில், அறிக்கை வெளியிடப்பட்டது.
இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில், சமீபத்தில் ஒரு வீரரின் ஏ.டி.எம்., கார்டை திருடி யாரோ ஒரு வீரர் பணம் எடுத்துள்ளார். இப்படி சிறிய அளவில் திருட்டுகள் நடந்து வருவது கண்டு உயர் அதிகாரிகள் அதை தடுக்க, நுõதன வழியை கண்டுபிடித்தனர்.ராணுவ வீரர்களுக்கு, வேதம், பகவத் கீதை பாணியில் அறிவுரை கூறி, இதுபோன்ற சிறிய திருட்டுகளை தடுக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். "பதவிக்கு ஆசைப்படக்கூடாது; பொருளுக்கு ஆசைப் படக்கூடாது; எது எப்போது வர வேண்டுமோ, அப்போது, உன் தகுதிக்கேற்ப வந்து சேரும்' என்று பாண்டவர்களுக்கு பீஷ்மர் அறிவுரை கூறியிருந்தது போல, ராணுவ வீரர்களுக்கு அறிவுரை அறிக்கையை உயர் அதிகாரிகள் தயார் செய்தனர்.
"நாம் எந்த சூழ்நிலையிலும், ஆசையில் மூழ்கி விடக் கூடாது. அடுத்தவர் மீது சந்தேகப்பட்டாலோ, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலோ அதுவே பெரும் அழிவுக்கு காரணமாகி விடும். மன அமைதி குலையும். பண்புகள் மறைந்துவிடும். அதனால், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து நழுவி விடுவோம். நம் உயர்ந்த கடமையை எண்ணி நாம் உயர்ந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும். எல்லாரும் சமம் தான். பாகுபாடே கிடையாது. அதை மற்றவரிடம் காட்டவும் கூடாது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பல இடங்களில், பகவத் கீதை தத்துவங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. "நம் முன் பெரிய சவால்கள் உள்ளன; அவற்றை தாண்டி சாதிக்க, நாம் எல்லாரும் ஒற்றுமையாக நடந்தால் தான் முடியும். மூத்தவர், இளையவர்கள் என்று பாகுபாடு இல்லாமல், ஒன்று சேர்ந்தால் தான் சாதிக்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : தின மலர்

சமீபத்தில நூறு தடவ திருடினவருக்கு ரூபாய் 5000 அபராதம்னு தண்டனை குடுத்தத படிச்சேன்.இது தான் திருட்டுக்கு தண்டனயன்னு கெட்ட இது திருடுரவன உற்சாக படுத்துரதுன்னு சொல்லலாம்.ஒரு தடவ திருடுனப்பவே பிடிச்சி அவன் கைய வெட்டி விட்டுருந்தா அதே ஆளு நூறு தடவ திருடி இருப்பனா? திருட்ட தடுக்கனும்ன இனி முதல் திருடு போனவரின் ஆலோசனைப் படி என்ன தண்டனை கொடுக்க சொல்கிறாரோ அந்த தண்டனையை பரிசீலித்து கொடுத்தாலே ஒழிய இந்த நாட்டில் திருட்டை ஒழிக்க முடியாது.காரணம் ஒழிக்க வேண்டியவங்களே அல்லவா பெரிய திருடகளாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி சின்ன நடவடிக்கைகள் மூலமாவது நாட்ட காப்பாத்துங்கய்யா!

02. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிரடி நீக்கம் :உளவுத்துறை அறிக்கையால் நடவடிக்கை


தமிழக அரசு திட்டங்களின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம், இரண் டாயிரம் ரூபாய் வரை அதிகாரிகள், ஊழியர் கள் லஞ்சம் வாங்குவதாக உளவுத்துறை கண் காணிப்பில் தெரியவந்துள்ளது.
மூவலுõர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித் தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதியுதவி, கலப்பு திருமண நிதியுதவி உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய ஆவணங் களை சமர்ப்பித்தாலும் சில அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் பெறுவதற்காக ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி தட்டிக் கழிக்கின்றனர்.
மேலும், விதிமுறைகளை தளர்த்தி உறவினர்கள், தெரிந்தவர்களை இத்திட்டங் களில் சேர்க்கின்றனர். நிதியுதவி கிடைத்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் வரை கமிஷனாக பெறுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு "மொட்டை பெட்டிஷன்' மூலம் புகார் அனுப்பினர். விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சிலர், ஊழியர்களுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதுகுறித்த, புகார்களும் வந்ததால் தற்போது உளவுத்துறை போலீசார், அரசு துறைகளை கண்காணித்து அறிக்கை அனுப்பி வருகின்றனர்.உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எந்த அதிகாரி எவ்வளவு லஞ்சம் கேட்டார் என்பது குறித்து நாங்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து சம்பந்தப் பட்ட துறைச் செயலர்கள், இயக்குனர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.


நன்றி ; தின மலர்

புகைப்பவன் இனி முதல் நமக்கு பகைவன்


புதுடில்லி :நீங்கள் சிகரெட் பிடிக்காதவராக இருக்கலாம்; ஆனால், அடுத்தவர் விடும் சிகரெட் புகை, உங்கள் நுரையீரலில் போய், ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


சிகரெட் பிடிக்காதவர்களுக்கு சர்க்கரை நோய் வர, அடுத்தவர் விடும் புகையை சுவாசிப்பதும் ஒரு முக்கிய காரணம் என்று சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: சிகரெட் பிடிப்பவர்களுக்கு இதய, சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது. ஆனால், சிகரெட் பிடிப்போர் விடும் புகையால், மற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவது இப்போது அதிகரித்து வருகிறது.சிகரெட் பிடிக்காதவர்களுக்கு, சிகரெட் பிடிப்பவர்களை விட, இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
அலுவலகங்களில் வேலை செய்யும் பலருக்கு இப்படிப் பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு பரவி வருகிறது. சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகையால், ஆபீசில் உள்ள மற்றவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது.சிகரெட் பிடிப்பவர் , அவர் ஒருவர் விடும் புகையால் தான் பாதிக்கப்படுகிறார். ஆனால், பலர் பலவித சிகரெட்களை பிடித்து விடும் புகை, சிகரெட் பழக்கமில்லாதவர்கள் கணையத்தில் நிகோடின் சேருகிறது. அதனால், அதன் இயக்கம் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பது குறைகிறது.குடும்பத்தில் கணவன் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், மனைவி, குழந்தைகளுக்கு அதனால் பாதிப்பு வரும். அதனால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி ; தின மலர்

புகைப்பவன் இனி முதல் நமக்கு பகைவன் காரணம் இந்த சமுதாயத்தை அளிக்கும் ஒரு வைரஸ் போல தான் இருக்கிறது அவனது செயல் பாடும். அருமை நண்பர்களே உங்கள் நண்பர்களில் எவரேனும் இத்தைய விஷம் அருந்தும் பழக்கம் இருப்பவராய் இருந்தால் இன்றிலிருந்து அவரைத் திருத்த சபதம் செய்யுங்கள்.புகை குடிப்பழக்கம் இல்லாத ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம்.
போதையில் 20 ரூபாய் சண்டை தம்பியை கொன்றான் அண்ணன்!



மும்பை : மதுபோதை தலைக்கேறிய நிலையில், 20 ரூபாய் கடன் விவகாரம், தம்பியை அண்ணனே கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டது.
மும்பை முலந்த் பகுதியில் வசிப்பவர்கள் மகேந்திர தோட்ரே; வயது 26. அவரின் சித்தப்பா மகன் அங்குஷ் பெங்கர்; வயது 25. பெங்கர் வீட்டில் சனிக்கிழமை இரவு இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கேறி விட்ட நிலையில், திடீரென அவர்களிடையே சாதாரண விஷயம் , பெரிய மோதலாக மாறியது. "அன்னிக்கு நான் 20 ரூபாய் கடனாக கொடுத்தேனில்லே...அதை இப்ப கொடு' என்று பெங்கர் கேட்க, அண்ணன் தோட்ரேயோ," எங்கே கொடுத்தே...அல்பத்தனமாக உன்கிட்டே 20 ரூபாயையா நான் வாங்கப்போறேன்' என்று திருப்பிக்கேட்க வாய்ச் சண்டை வலுத்தது.
திடீரென, பெங்கரின் கழுத்தை பிடித்து அழுத்தினார் தோட்ரே. பெங்கர் கத்தினார். பக்கத்து அறையில் இருந்த அவர் அண்ணன் ஆனந்த் ஓடி வந்து, பெங்கரை விடுவித்தான்.அப்போது அவர் மயக்கம் அடைந்திருந்தார். உடனே பெங்கரை மருத்துவமனையில் சேர்த்தார்; அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பெங்கர் இறந்துவிட்ட செய்தி தெரிந்ததும், தோட்ரே தலையில் ஏறியிருந்த போதை அறவே போய்விட்டது." மது போதையில் நாங்கள் இருந்ததால், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், சண்டை போட்டுக்கொண்டோம். பெங்கரை நான் கொன்று விட்டேன்' என்று கதறி அழுதார்.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், இருவரும் தாக்கிக்கொண்டனர். கழுத்தை இறுக்கியதால் பெங்கர் இறந்துவிட்டார்' என்று தெரிவித்தனர்.



நன்றி : தினமலர்


குடி குடியை கெடுக்கும் சரிதான் ஆனால் இந்த குடிகாரனின் குடி அடுத்தவரின் குடியையும் அல்லவா சேர்த்து கெடுக்கிறது. அருமை நண்பர்களே உங்கள் நண்பர்களில் எவரேனும் இத்தைய விஷம் அருந்தும் பழக்கம் இருப்பவராய் இருந்தால் இன்றிலிருந்து அவரைத் திருத்த சபதம் செய்யுங்கள்.குடிப் பழக்கம் இல்லாத ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம்.

ஐயையோ ! பக்கத்து போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுக்க சொல்லனும் !

05.போலீஸ் நிலையத்தில் துணிகர துப்பாக்கிகள் கொள்ளை: தர்மபுரியில் கும்பல் அட்டகாசம்


தர்மபுரி:போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், ஆறு துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றது. நக்சல் அமைப்பினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இரவு பாதுகாப்புப் பணியில் போலீஸ்காரர் சுப்பிரமணி, ஏட்டுக்கள் ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோர் இருந்துள்ளனர். முன்பக்க நுழைவாயில் கதவுக்கு பூட்டு போட்டு விட்டு, போலீஸ் நிலையத்தில் உள்ளே அனைவரும் தூங்கி விட்டனர்.
இதை பயன்படுத்தி ஒரு கும்பல், போலீஸ் நிலையத்தில் புகுந்தது. வெளிப்பக்க நுழைவு கிரில்கேட் பூட்டை உடைத்து புகுந்த கும்பல், ஆயுத அறையின் பூட்டையும் உடைத்தது. அங்கிருந்த, 410' மஸ்கட் ரக துப்பாக்கிகள் ஐந்து, எஸ்.பி.பி.எல்., நாட்டு துப்பாக்கி ஒன்று, போலீஸ் எஸ்.ஐ.,யின் வாக்கி டாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. அதிகாலை 3 மணிக்கு தூங்கியெழுந்த பின்னரே, போலீசாருக்கு சம்பவம் பற்றி தெரிய வந்தது. உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் எஸ்.பி., நஜ்முல்ஹோதா, அங்கு வந்து நேரில் விசாரித்தார்.
போலீஸ் டி.ஐ.ஜி., செண்பகராமன், எஸ்.பி.,க்கள் தேன்மொழி, பாஸ்கரன், அசோக்குமார் உட்பட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை ஐ.ஜி., சஞ்சய் அரோரா விசாரணை நடத்தினார்.போலீஸ் துப்பறியும் நாய்கள் ஷீபா, ஜீனோ வரவழைக்கப்பட்டன. போலீஸ் நிலையத்தின் பின்புறம் சிறிது தூரம் சென்ற நாய்கள், அதியமான்கோட்டை ரயில்வே கேட் வழியாகச் சென்று, அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் வீட்டிற்குள் புகுந்தன.கணேசனுக்கு வாய் பேச முடியாது. அவரது மனைவி ஜானகிக்கு காது கேட்காது.
பின்னர் மோப்ப நாய்கள், வீட்டின் பின் பகுதியில இருந்த மூங்கில் குடிசைக்குள் புகுந்து, திருப்பதிக்கு சொந்தமான வைக்கோல் போர் அருகே படுத்துக் கொண்டன. அங்கு, போலீசார் தேடிய போது, காலி மதுபாட்டில் கிடைத்தது. வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கி டாக்கி கொள்ளை போனதால், நேற்று காலை முதல் வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாற்றத்தை துண்டித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், முன்பு நக்சல் அமைப்பினர் நடமாட்டம் இருந்தது. தற்போதும் நக்சல் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக, நிருபர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் என்ன, ஈடுபட்டது யார்? என்ற அடிப்படை கேள்விகளுக்கே துப்பு துலங்காத நிலையில் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். சோதனை சாவடிகளில் வாகன சோதனை முழு வீச்சில் நடக்கிறது.
கொள்ளையடித்த கும்பல், தங்களுக்கு தேவையான அளவு ஆயுதங்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ஆயுத அறையில் 303 ரக துப்பாக்கி இரண்டு, 410' மஸ்கட் ரக துப்பாக்கி மூன்று, எஸ்.பி.பி.எல்., ரக துப்பாக்கி நான்கு ஆகியவற்றை கும்பல் எடுக்கவில்லை. அவற்றை கொள்ளைக் கும்பல் விட்டுச் சென்றதன் காரணமும் தெரியவில்லை.
டி.ஐ.ஜி., செண்பகராமன் காலை 11 மணிக்கு இது பற்றி கூறுகையில், இப்போது தான் வந்துள்ளேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று அதிகாலையில் 1.30 மணிக்கு ஸ்டேஷனில் இருந்த ஐந்து பேரும் தூங்கி விட்டனர். அந்த நேரத்தில் புகுந்த மர்ம கும்பல், ஆயுதக் கிடங்கில் இருந்த ஆறு துப்பாக்கிகளை திருடிச் சென்று விட்டனர். அவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணியில் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
போலீசுக்குள் கோஷ்டி பூசல்:போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், போலீசாரிடையேயான கோஷ்டி பூசலால் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த போது பணியில் இருந்த போலீசாரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமாரும் விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்தபோது பணியில் இருந்த போலீஸ் மீதான நடவடிக்கை, விசாரணை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். சம்பவம் பற்றி இந்திய தண்டனைச்சட்டம் 457 (பூட்டை உடைத்தல்), 380 (திருட்டு) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீஸ் நிலையத்தில் நிலவும் கோஷ்டி பூசலால் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி, போலீஸ் உயர் அதிகாரிகள் கருத்து கூற மறுத்து விட்டனர்.
நன்றி : தின மலர்

Friday, February 8, 2008

கும்பிடப் போன தெய்வம்....................... அடக் குறுக்கே ......................

மேலூர் அருகே கோவிலில்சாமி கும்பிடுவதில் கோஷ்டி மோதல்150 பேர் மீது வழக்கு;144 தடை உத்தரவு

மேலூர்,பிப்.9-

மதுரையை அடுத்த மேலூர் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையொட்டி, 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோஷ்டி மோதல்

மதுரை அடுத்த மேலூர் அருகேயுள்ள தெற்குத்தெரு கிராமத்தில் மலைமந்தை வீரன் - மலைமங்கான்பட்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இரு தரப்பினரும் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 150 பேர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
144 தடை உத்தரவு
தெற்கு தெரு கோவில் பிரச்சினை தொடர்பாக, தாசில்தார் ஜெயசீலன் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. அப்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடந்து தெற்கு தெரு கிராமத்தில் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜவகர் பிறப்பித்தார்.
இதனால், கோவில் வளாகத்திற்குள்ளும், கோவிலைச் சுற்றி 30 மீட்டர் தூரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நிற்கவோ, கூடவோ, பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, ஊர்வலங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நோட்டீசுகளை, பொது இடங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீசார் ஒட்டினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றி: தினத் தந்தி

இனிய சமுதாயமே! கடவுளை வணங்குவது எனபது அவன் நம்மைப் படைத்து நமக்கு எல்ல சவுகரியங்களையும் தந்தமைக்கு நன்றி கூறுவதற்கு மட்டுமே.அதனை இத்தனை ஆர வாரங்களோடு தான் செய்ய வேண்டும் என்றில்லை.தியாகம் மேலிடும் வண்ணம் இன்னும் அமைதியாகவும் செய்ய முடியும்.முதலில் கடவுள் என்பவன் எதை அவனின் படைப்புகளிடம் இருந்து எதிர்ப் பார்க்கிறான் என்பதை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் தேவை தானா? என்பதனை உணர முடியும்.

அடத் தூ ........................................

படன், குஜராத் :குஜராத் மாநிலம் படானில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சி கல்லுõரியில், தலித் மாணவியை ஆசிரியர்கள் பலர், பல முறை கற்பழித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த ஆசிரியரில் ஒருவர் நல்லாசிரியர் விருது பெற்றது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.


படானில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் செக்ஸ் சில்மிஷங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறைகளிலேயே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷங்கள் செய்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அருவெறுப்பான வகையில் ஜோக் சொல்வது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றி வெளியில் சொன்னால், மாணவிகளின் செயல்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று மிரட்டி வந்துள்ளனர். தலித் மாணவி ஒருவர் பல ஆசிரியர்களால், பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஆசிரியர்களின் கொடுமை தாங்காமல், இது குறித்து அந்த மாணவி புகார் செய்ததும் தான், அந்த கல்லுõரியின் ஆசிரியர்களின் செக்ஸ் வெறி அம்பலத்துக்கு வந்தது.
கடந்த இரு மாதங்களில் தலித் மாணவியை 14 முறை கற்பழித்ததாக, ஆசிரியர் டாக்டர் அதுல் என்பவர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இவருக்கு அரசின் "நல்லாசிரியர்' விருது வழங்கப்பட்டுள்ள விவரம் தற்போது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாநில அரசின், "நல்லாசிரியர்' விருது பெற்ற டாக்டர் அதுல், பாதிக்கப்பட்ட தலித் மாணவி மட்டுமின்றி, பல மாணவிகளின் கற்பையும் சூறையாடியவர். இவர் மாநில வருவாய் துறை அமைச்சர் ஆனந்திபென் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், கல்லுõரி வளாகத்தில் நியாயம் கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.



நன்றி : தினமலர்



ஆயிரக் கணக்கில் தன் சொந்த குடிமக்களையே கொலை செய்தும் அந்த கொலைகளை நியாயப் படுத்தியும் இன்னும் அந்த கொலைகளை செய்ததும் அதற்கு பின்புலமாய் இருப்பதும் நான் தான் என அறிந்தும் என்னை கைது செய்யத் தயங்குவது ஏன் என்று மிரட்டும் தொனியில் மத்திய அரசையே மிரட்டும் அளவு அதிகாரம் கொண்ட (?)ஒரு முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் இது ஒரு சாதாரண விசயமே.இன்னும் இது போன்ற நாசக் காரர் களுக்கு பாரத ரத்னா கொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.வேண்டுமானால் இந்த விஷயத்தில் மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இனி கொடுக்கப் பட இருக்கும் விருதுகளை எதிர்ப் பார்த்து காத்திருக்கலாம்.காரணம் அவர்கள் ஒரு ஏழை தலித் சகோதரியை கற்பழித்ததன் மூலம் இந்த பாசிஸ்டுகளின் அடிவரை வருடி ஒருமுறை ஆனந்த மளித்து இருக்கிறார்கள் அல்லவா?

Thursday, February 7, 2008

கோவில்களில் திருடுவது எப்படி என்பதை விளக்கும் வரைபடங்களும்....................


கொள்ளை கும்பல் மூலம் `குட்டு' வெளிப்பட்டது

ஆசிரமம் நடத்தி, `நிர்வாண படம்' தயாரித்த போலி சாமியார்சாமி சிலை திருட்டு வழக்கிலும் தொடர்பு அம்பலம்

நகரி, பிப்.7-
கொள்ளை கும்பலிடம் நடத்திய விசாரணையில் ஐதராபாத்தில் ஆசிரமம் நடத்தி நிர்வாண பட சி.டி.க்கள் தயாரித்த போலி சாமியார் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காட்டிக்கொடுத்த கொள்ளையர்கள்
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த நிஜாம் மன்னர்கள் கால கத்திகள், கடந்த மாதம் திருட்டு போய்விட்டன. இந்த திருட்டு தொடர்பாக, ஐதராபாத் சைபராபாத் போலீசார் 2 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த கொள்ளையர்களிடம் இருந்து ஆபாச நிர்வாண பட சி.டி.க்கள், மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணம் ஆகியவை சிக்கின. அவற்றை, ஐதராபாத்தில் உள்ள நித்தியானந்த சுவாமி ஆசிரமத்தில் இருந்து கொள்ளையடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரமத்தில் சோதனை
அந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று அறிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், ஐதராபாத்தில் போரபண்டா பகுதியில் காயத்ரி நகரில் உள்ள அந்த ஆசிரமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால், போலீசார் வரும் தகவல் அறிந்த சாமியார் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இந்த சோதனையின்போது, ஆசிரமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாண பட சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன. பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வயாகரா மாத்திரைகள் மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் `ஸ்பிரே' போன்றவைகளும் சிக்கின.

பெண்களை மயக்கி

ஆசிரமத்துக்கு வரும் பெண் பக்தர்களை மயக்கி இந்த ஆபாச படங்கள் தயாரிக்கப்பட்டதா? அல்லது, சாமியார் பார்த்து ரசிப்பதற்காக வாங்கி வைத்து இருந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா உலக பிரமுகர்கள் சிலரும் அந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரணையின்போது வெளியான பரபரப்பான தகவல்கள் வருமாறு-
போலி சாமியார் நித்தியானந்த சுவாமியின் உண்மையான பெயர், திரிபுரானந்த சுவாமி. கோதாவரி மாவட்டம், நக்ககவரபு மண்டலம் ஜங்காரெட்டி கிராமத்தை சேர்ந்தவர்.

கொள்ளையிலும் தொடர்பு

சாமியாரிடம் கொள்ளையடித்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதால், கள்ள நோட்டு கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், கொள்ளை கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பது என்பதுதான். பல கோவில்களில் திருடுவது எப்படி என்பதை விளக்கும் வரைபடங்களும் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

பல அரசியல் பிரமுகர்களும் போலி சாமியாருக்கு பின்னணி பலமாக செயல்பட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் போலி சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நன்றி: தின மலர்

கருத்து சொல்லுறதுக்கும் ஒரு தகுதி வேண்டாமா?


அலங்கார மின் விளக்குகள் தேவையற்ற வீண் செலவு : ஜெயலலிதா அறிக்கை

சென்னை : ""விழா நடக்கும் நாளன்று அலங்கார மின் விளக்குகள் வைப்பது நடைமுறை. நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே மின்விளக்குகள் எரிவது, தேவையற்ற வீண்செலவு; மின்சாரத்தை வீணடித்து மக்களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒரு நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேற்று (6ம் தேதி) மாலை வள்ளுவர் கோட்டம் வழியாகச் சென்றேன். அப்பகுதி முழுவதும் அலங்கார மின் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. "என்ன விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?' என்று கேட்டேன். "இன்று எந்த விழாவும் நடைபெறவில்லை' என்ற பதில் கிடைத்தது.தை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முதல்வருக்கு சங்கத் தமிழ்ப் பேரவை எடுக்கும் நன்றி பாராட்டும் விழா நடைபெறவுள்ளது என்றும், அதற்காகத்தான் இப்போதிருந்தே மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது.நான் இந்தக் காட்சியைப் பார்த்தது 6ம் தேதி, விழா நடப்பது 9ம் தேதி. எத்தனை நாட்களாக இந்த விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.
விழா நடக்கும் நாளன்று அலங்கார மின் விளக்குகள் வைப்பது நடைமுறை. நான்கு நாட்களுக்கு முன்னரே விளக்குகள் எரிவது தேவையற்ற வீண் செலவு. மின்சாரத்தை வீணடித்து மக்களுக்கு வேதனை தருவதாகவும் இருக்கிறது.மின்சாரப் பற்றாக்குறை, மின்வெட்டு என மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. தமிழகமே இருளில் மூழ்கும் நிலையில் உள்ள போது, சுய விளம்பரத்திற்காக மின்சாரம் வீணடிக்கப்படுவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தின மலர்

---------------------------------------------------------

இன்று இவ்வளவு தூரம் வாய்கிழிய பேசும் இவர்களின் வளர்ப்பு மகன் திருமண நிழ்க்வுகள் மக்கள் மனதை விட்டு அவ்வளவு எழிதில் மறைந்து விடக் கூடியது அல்ல.அப்போது 100 கோடி இல் இல்லாத ஆடம்பரத்தை இப்போது கண்டு விட்டார்களோ என்னவோ.

இதுக்கு முன்னாடி தூங்குனவங்க இப்போ முழிசிக் கிட்டாங்கோப்பா ............போற போக்கப் பார்த்தா நடவடிக்கை எடுத்துடுவாங்கோ போல தெரியுது!!


வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு ஆணை



மும்பை, பிப். 6: மும்பையில் வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் வசிக்கும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பை வழங்குமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புதன்கிழமை புதுதில்லியில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:

அனைத்து தரப்பினரும் வசிக்கும் மும்பை நகரின் தனிச் சிறப்பைக் கட்டிக்காக்க வேண்டும. அங்கு தனிப்பட்ட எவர் மீதும் தாக்குதல் நடத்தவோ, பொதுச்சொத்துகளை நாசம் செய்யவோ மகாராஷ்டிர அரசு அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
முன்னதாக ராஜ் தாக்கரே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் கோரிக்கை விடுத்தார். ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளால் மும்பையில் ஏற்பட்டுள்ள விபரீதம் குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் எடுத்துரைக்கப்போவதாகவும் அவர் கூறினார். ராஜ் தாக்கரேவை கைது செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார்.
சிவசேனையில் இணைந்த
ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள்
இதற்கிடையில், வடஇந்தியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுவரும் ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த அவரது கட்சியினர் 200 பேர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையிலிருந்து விலகி சிவசேனை கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.
இத்தகவலை சிவசேனை செயலாளர் வினாயக் ரெüத் புதன்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:
ராஜ் தாக்கரேயின் முறையற்ற செயல்பாடுகளை அவரது கட்சியினரே விரும்பவில்லை. எனவே அக்கட்சியின் தொண்டர்கள் 200 பேர் சிவசேனையில் இணைந்துவிட்டனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி பால் தாக்கரேயின் இல்லத்தில் சிவசேனை நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேயின் முன்னிலையில் புதன்கிழமை நிகழ்ந்தது.
மும்பையில் சமாஜவாதி கட்சியினருக்கும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது அவ்விரு கட்சியினருக்கும் இடையே நடக்கும் விரும்பத்தகாத சம்பவமாகும் என்றார் அவர்.
இதற்கிடையில் மாதுங்கா பகுதியில் உள்ள ஜவுளிக் கடை மீது புதன்கிழமை சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. கடையின் உரிமையாளரையோ அல்லது ஊழியர்களையோ அவர்கள் தாக்கவில்லை. கடையில் இருந்த துணிகளை மட்டும் வெளியே தூக்கிஎறிந்துவிட்டு அவர்கள் ஓடிவிட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் வசிக்கும் ஆந்திர மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

உண்மை தானே


05. சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைப்பது யார்?

முதல்வர் கருணாநிதி விளக்கம்


சென்னை: ""சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க நினைக்கின்றனர்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா அன்றாடம் அறிக்கை விடத் தவறுவதில்லை என்ற நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும், அவர் எப்படியாவது மீண்டும் பதவியில் வந்து அமர வேண்டும் என்பதாக வந்து கொண்டுள்ளது. பதவி ஏற்ற நாளில் இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குற்றம் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2006ம் ஆண்டில் ஆயிரத்து 220 பேரும், 2007ம் ஆண்டில் ஆயிரத்து 550 பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இதன் விளைவாக சொத்து சம்பந்தமான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பிற குற்றங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த குளித்தலை மீனாட்சி கொலை வழக்கு, கிரில் மற்றும் பீரோ புல்லிங் கொள்ளை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் குற்றவாளிகள் மீது மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் 2006ம் ஆண்டு நடந்த வழக்குகளில் 89 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 81 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டன. அதேபோல, 2007ம் ஆண்டு 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 86 சதவீத சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் செயல்கள் தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காவல் துறையினர், திறமையாகச் செயல்பட்டு தடுத்து வருவதுடன், அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் யாரும் தமிழகத்தில் நுழையாமல் கண்காணித்தும் வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம்களை அடிக்கடி சோதனை செய்து, தீவிரவாதிகள் எவரும் முகாம்களில் தங்காத வண்ணம் பார்த்து வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் தலைவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது தான் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது எல்லாம் மக்களுக்கு மறந்தா போய் விட்டது? கவர்னர் சென்னா ரெட்டிக்கு திண்டிவனம் அருகிலும், தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த சேஷனுக்கு விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த விடுதியிலும், சுப்பிரமணியசாமிக்கு ஐகோர்ட்டிலும் எப்படிப்பட்ட பாதுகாப்பு தரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,க்களாக இருந்த துõத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப் பட்டதை மறந்து விட்டார்களா? கும்மிடிப்பூண்டி தொகுதியிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த எம். எல்.ஏ., சுதர்சனம் கொல்லப் பட் டது அவர்கள் ஆட்சியில் தானே. இவ்வளவு ஏன், என்னை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்ததற்கு என்ன பெயர்? ஐ.ஜி., அலுவலக வாசலிலேயே ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத் தலைவர் பெருமாளைத் தாக்கி அவர் சாவதற்கே காரணமாக இருந்த ஆட்சி எது? அந்த ஊர்வலத்தில் பத்திரிகையாளர்கள் எல்லாம் எந்தளவு தாக் கப்பட்டார்கள். எத்தனை பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன.
பொதுமக்களிடையே இன்று சட்டம்ஒழுங்கு குறித்து எவ்விதமான பயமோ, அச்சுறுத்தலோ இல்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக அன்றாடம் குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வெளியே கெடுக்க முடியாத நிலையில் சட்டசபைக்கும் வருகை தந்து அங்கேயும் முயற்சி செய்து பார்த்து, அதிலும் தோல்வியடைந்து தொங்கிய முகத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். சட்டசபையில் பேசும் நாகரிகம் கற்றிடாமல், குட்டிச் சுவரோரம் நின்று வெட்டிக் கதை கூறுவதே, தாம் கற்றறிந்த விதம் என்கின்றனர். அதனால் தான் குக்கிராமங்களில் கூட பழமொழி சொல்வார்கள்; குறைகுடம் கூத்தாடுமென்று. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். ""சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க நினைக்கின்றனர்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்



கோவை போலீஸ் அதிகாரிகள் பல கோடி முதலீடு கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில்களில் ஆர்வம்






கோவை: கோவையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர், தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர்; "கிரானைட்' வியாபாரம், துப்பறியும் நிறுவனம், ரியல் எஸ்டேட், பனியன் கம்பெனி, அபார்ட்மென்ட் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
"சிவில் விவகாரம், பணத்தகராறு தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கடந்த ஆண்டு தமிழக போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி எச்சரித்தார். சிறிது காலம் அமைதியாக இருந்த கோவை போலீஸ் அதிகாரிகளில் சிலர், தற்போது கட்டப் பஞ்சாயத்து முறையை மீண்டும் துவங்கியுள்ளனர்.

சிவில் விவகாரத்தில் தலையிட்டு பண ஆதாயம் பார்ப்பது; நிலம், வீடு மற்றும் கடையை காலி செய்ய வைப்பது; நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பண பிரச்னையை பேசித் தீர்ப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானம் பார்க்கத் துவங்கியுள்ளனர்; சேர்த்த பணத்தை பல்வேறு தொழில்களில், மாமன், மைத்துனன், தம்பி, தங்கை போன்றோர் பெயரில் முதலீடு செய்துள்ளனர்.
"கோவை தொடர் குண்டுவெடிப்புக்கு முன், மாநகர போலீசில் உதவி கமிஷனராக பணியாற்றிய அதிகாரியும், ஓய்வு பெற்ற இரு டி.எஸ்.பி.,க்களும், தடாகம் ரோட்டில் "கிரானைட்' நிறுவனத்தில் ரூ.ஒரு கோடி முதலீடு செய்துள்ளனர். "கிரானைட்' கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. ஓய்வு பெற்ற ஐ.ஜி., மற்றும் இரு டி.எஸ்.பி.,க்கள் கோவையில் துப்பறியும் நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி மையத்தை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். கட்டண முறையில், தனியார் நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது மற்றும் தனியார் நிறுவனங்களில் நடக்கும் மோசடியை ரகசிய புலன்விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.
நகர போலீஸ் உதவி கமிஷனர், புறநகரில் பணியாற்றும் டி.எஸ்.பி., மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள், நகைத்தொழிலில் ரூ.30 லட்சம் முதலீடு செய்துள்ளனர். இங்கு முதலீடு செய்துள்ள உதவி கமிஷனர் வேறு ஒரு தொழிலும் செய்கிறார். தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்த புதிய கார்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று வருகிறார். மற்றொரு உதவி கமிஷனர் மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் காளப்பட்டி, சரவணம்பட்டி, செட்டிபாளையம் பகுதிகளில் நிலம் வாங்கி, "ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, இதே தொழிலில் ஈடுபட்டுள்ள அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்க "அட்வான்ஸ்' கொடுக்கும் அதிகாரிகள், கூடுதல் விலை வைத்து வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர். இந்த வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
சிறு தொழிலதிபர்கள், காய்கறி மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் "செல்வ'மான நபரிடம், நகர போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளார். இவரது "பேட்ச்' இன்ஸ்பெக்டர்கள் சிலரும், மீட்டர் வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.
கோவை புறநகரில் பல்லடம், அவினாசி பகுதிகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இருவர், திருப்பூரில் பனியன் தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பல லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளனர். திருப்பூர் சப் டிவிஷனில் நீண்ட காலமாக பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பேக்கரி மற்றும் கால் டாக்சி தொழிலில் ரூ.40 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்து, முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்துள்ள போதிலும், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், முறைகேடான வழியில் சம்பாதிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தின் மீதே சில அதிகாரிகள் குறியாக இருப்பதால், பணியில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை கோவையில் மீண்டும் தலைதுõக்கும் வாய்ப்பு உள்ளது.
கோவையில் நிலம் வாங்க உயரதிகாரிகள் ஆர்வம்: கோவையில் நிலவும் இதமான தட்பவெப்பம், சிறுவாணி குடிநீர், மருத்துவம் மற்றும் மேற்படிப்புக்கான வசதிகள், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகளை ஈர்க்கின்றன. தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தில் கோவையில் "உறவினர்' பெயரில் நிலம், வீடு, பண்ணை தோட்டம் வாங்கி வருகின்றனர். இரு கூடுதல் டி.ஜி.பி.,க்கள், மூன்று ஐ.ஜி.,க்கள், ஆறு எஸ்.பி., க்களுக்கு கோவையில் அதிக சொத்து இருப்பதாக போலீசாரே தெரிவிக்கின்றனர்.
நன்றி: தின மலர்
ஸ்கூல் ல படிச்ச ஞாபகம்
வேலியே பயிரை மேய்ந்தர்ப் போல

விற்பனைஆலோசனைகள் வரவேற்கப் படுகிறது !


03. கோமியம் விற்கிறது உத்தரகண்ட் மாநில அரசு



லக்னோ: உத்தரகண்ட் மாநில அரசு, தினமும் ஐந்தாயிரம் லிட்டர் கோமியத்தை வாங்கி, விற்பனை செய்கிறது.
விவசாயிகளிடம் உள்ள பசுக்களின் சிறுநீரை விலைக்கு வாங்கி, அதை பதஞ்ஜலி யோகபீடம், கீதா பவன் போன்ற ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரகண்ட் அரசு விற்பனை செய்கிறது. பதஞ்சலி யோக பீடம் நிறுவனம் மட்டும், தினமும் ஐந்தாயிரம் லிட்டர் கோமியத்திற்கு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்தை, யோகா குரு ராம்தேவ் நடத்தி வருகிறார். கீதாபவன், ஸ்வர்காஷ்ரம் ரிஷிகேஷ் போன்ற நிறுவனங்களும் கோமியத்தை வாங்குவதில், ஆர்வமாக உள்ளன. பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு லிட்டர் கோமியத்தை ஐந்து ரூபாய்க்கு அரசு வாங்குகிறது.
இத்திட்டம், டேராடூனில் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்டது. கார்வால் பகுதியில், இத்திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. 1,900 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கோமியம் சேகரிக்கப்பட உள்ளது. சிப்லாக்ஸ் மற்றும் அமாக்சிலின் போன்ற, நோய் எதிர்ப்பு மருந்துகளின் குணம் கோமியத்தில் உள்ளது. தற்போது உத்தரகண்ட் அரசிடம், கோமியத்தை, அடர்த்தி மிகுந்ததாக மாற்றும் வசதி இல்லை. விரைவில் இதற்கான வசதியையும், பசு ஆராய்ச்சிக் கழகத்தையும் மாநில அரசு துவக்க உள்ளது. மாட்டுச் சாணத்திலிருந்தும், மருந்து தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதையும் மாநில அரசே, விவசாயிகளிடம் இருந்து வாங்கி வர திட்டமிட்டுள்ளது.
நன்றி: தினமலர்
அவசரப் பட்டு மாட்டு மூத்திரமான்னு கேட்டுடதீங்கோ. அவாளுக்கெல்லாம் கோபம் வந்திடும் .இத உலக சந்தைல விக்கிறதுக்கு எதாவது ஐடியா இருந்தா குடுங்கோ.அவாளுக்கு இன்னொரு பிழைப்பு குடுக்குறதுனால உங்களுக்கு புண்ணியமாப் (?) போகும்.

Wednesday, February 6, 2008

மதி கெட்ட மத வெறியர்களால் தாக்கப்பட்ட அரசு ஊழியர்கள்

கன்னியா குமரி மாவட்டம் வேரி கிளம்பி அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கோவிலை அகற்றி பாதை அமைக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் (?) பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருந்தனர் .அப்போது சிலர் அவர்களோடு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இது நடந்துகொண்டு இருக்கும் போதே அர்ச்சுனன் என்பவன் அவர்களை கொலை செய்யும் நோக்கில் காரை ஒட்டி வந்து அவர்களின் மீது மோதினான்.இதில் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அந்தோனி சேவியர், ஜூனியர் இன்ஜினீயர் சுந்தரம் போலிஸ் ஏட்டு எட்வின் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இது தொடர்பாக அவர்களை கொலை செய்யும் நோக்கில் கரைக் கொண்டு மோதிய அர்ச்சுனன் என்பவனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர்.


இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் இனி இந்த நாட்டில் இவர்களை தவிர வேற யாரையும் வாழ விட கூடாது என்னும் முடிவின் உச்ச கட்டத்தில் இவர்கள் செயல் படுவது அறிவுடயவர்களுக்கு புரியாமல் இல்லை.இது போன்ற மூர்க்க தனமான மத வெறியர்களிடம் இருந்து இந்த நாடு கப்பட்டப் படாத வரை நம்மால் வல்லரசு ஆகமுடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

Tuesday, February 5, 2008

இப்படியும் ஒரு சிலுவைப் போர் ! ?

முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!



"சுதந்திரத்திற்கான போர்" எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான (Shaltarnaw) ‘ஷல்டர்னாவ்’வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, ‘ஷல்டர்னாவ்’ போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.

1) வழிமுறைகள்

இக்கிறிஸ்தவ அமைப்புகள் இஸ்லாமியப் பெண்களுக்கு மேலைக் கல்வியைப் புகுத்துவதுடன் அவர்களை மதம் மாற்றவும் முயற்சிகளை மேற்கொள்கின்றன, பெண் ‘தாய்’ என்பதாலும் அவளே குழந்தைகளை வளர்க்க வேண்டியவள், பயிற்சியளிக்க வேண்டியவள் என்பதாலும் அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் மூலம் முழு சமூகத்தையும் கிறிஸ்தவர்களாக்கி விடலாம் என்பதாலேயே இம்முயற்சிகள்.

2) அநாதைகளுக்கான கல்வி நிறுவனங்கள்

இவ்வமைப்புகள் அநாதைக் குழந்தைகளுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவுவதுடன் தத்தம் அமைப்புகளில் பணிபுரிந்த, மேற்கத்திய கல்வி பயின்ற பெண்களையே இக்கல்வி நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துகிறது.

3) உடல் நலம்

இவ்வமைப்புகள் உடல் நலம் மற்றும் சிகிச்சை எனும் பெயரில் குழந்தைப் பிறப்பை தடை செய்வதற்காக பயிற்சி பெற்ற பெண்களின் குழுக்களை அமைக்கின்றன. இப்பெண்கள் ஆப்கானிஸ்தானிய பெண்களிடையே கருத்தடை மாத்திரைகளை விநியோகம் செய்கின்றனர், இது மட்டுமன்று, ஆப்கானிய பெண்களின் ஏழ்மைக்கும் , அறியாமைக்கும் காரணம் பர்தாவே என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும் ஆப்கான் பெண்களுக்கு ‘சிலுவை’யுடன் கூடிய மாலையை விலை மதிப்புமிக்க அணிகலனாக விநியோகிக்கின்றன.

4)உணவுப் பொருட்களை விநியோகிப்பது

முஹாஜிர்கள் முகாம்கடினமான காலநிலை, உணவுப் பற்றாக்குறை போன்ற சூழ்நிலைகளில் பல்வேறு முகாம்களில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதுடன் ‘பஷ்து’ மொழிபெயர்ப்புடன் (ஆப்கானிய மொழி) கூடிய பைபிளையும் பலவிதமான கிறிஸ்தவ நூல்களையும் விநியோகிக்கின்றன.

5) ஒத்துழைப்போருக்கு வேலை

ஒத்துழைப்போருக்கு வேலை வாய்ப்புஇச்சர்வதேச மேற்குலகக் கம்பெனிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போர் மற்றும் கிறிஸ்தவக் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான உறுதி அளிக்கின்றன. இவர்களுக்கு ஏழ்மை சூழலில் உயரிய சம்பளத்தையும் சலுகைகளையும் அளிக்கின்றன.ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.

பாகிஸ்தானில் சேவைஅமைப்புகளின்கிறிஸ்தவசெயல்பாடுகள்:

பாகிஸ்தானில் தற்போது ஏறக்குறைய 12,000 NGO-க்கள் இயங்கி வருகின்றன. காதியானிய இயக்கமும், பஹாயிஸமும் கோலோச்சியுள்ள, ஏழ்மையும், அறியாமையும் நிறைந்த பலுச்சிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் நடைபெறும் கிறிஸ்தவ இயக்கங்களின் நடவடிக்கைகளை அரசு அறிந்தே உள்ளது என்பது பாகிஸ்தான் இயக்கங்களின் கருத்து.இக்கம்பெனிகள் மிகவும் இலகுவாக இப்பகுதியில் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் இஸ்லாமிய உடை ஒழுங்குகளை அம்மக்களிடமிருந்து களைந்தெறியும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றன, இவ்வுண்மைகள் வெளியான போது பெரும்பாலான மேற்கத்திய கம்பெனிகள் பூகம்பம் பாதிக்கப்பட்ட இடங்களில் தாங்கள் சொன்ன பணிகளிலிருந்து விலகி கிறிஸ்தவ பிரச்சாரப் பணியை செய்வதாக பாகிஸ்தான் அமைப்புகள் குற்றம் சாட்டின. இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ இயக்கங்கள்:

1) Dorothea Mission: இவ்வமைப்பு ரஷ்யாவிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் நடைபெற்ற போரின் போது பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த ஆப்கான் அகதிகளின் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டது. இது சேவை அமைப்பாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், கிறிஸ்தவ அழைப்புப் பணிக்கான திட்டமிட்ட முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

2) Fellowship Recording World Gospel: இவ்வமைப்பானது கிறிஸ்தவ நூல்களை வெளியிடுதல், இலட்சக்கணக்கான கிறிஸ்தவ சொற்பொழிவுகள் கொண்ட ஒலிப்பேழைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளுடன் வானொலியில் உருது, புஷ்து, பார்சி, தரி (ஈரானிய மொழி) மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றது.

3) சர்வதேச அமைப்புகள்: ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.2007 ஆகஸ்டில் இம்மிஷனரிகள் பைபிளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைக் கொண்ட நூலை வெளியிட்டன. இந்த நூல்களின் முகப்பில் மஸ்ஜிதே ஹராம். மஸ்ஜிதே நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகியவற்றின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களை ஏமாற்றுவதே இதன் நோக்கம்.பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,

ஆக்கம்: ரிஸ்வானா ஷகீல், நன்றி: சமரசம் 16-31 ஜனவரி இதழ்


அன்பிற்க் கினிய இஸ்லாமிய சமுதாயமே!

அன்பிற்க் கினிய இஸ்லாமிய சமுதாயமே அதனை வழி நடத்தும் தலைவர்களே இங்கே நாம் நமக்குள்ளே யார் பெரியவன் அல்லது யார் சொல்வது சரி என்று சண்டை போட்டு சமுதாயத்தை பிளந்து கொண்டு நிற்கும் இந்த வேழையில் சத்தம் இல்லாமல் சந்தடி சாக்கில் நம் சமூதத்தை இப்படியும் வழி கெடுக்க முடியும் என்று இவர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். இனிய சமுதாயமே எல்லா மூமின்களும் உங்கள் சகோதர சகோதரிகளே என்ற வாக்கின் அடிப்படியிலும் இன்னும் நீங்கள் நெருக்கத்தால் ஈயத்தினால் வார்க்கப்பட்ட சுவரைப் போல ஆகிவிடுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு எர்ப்பவும் நமக்குள்ளே அணி சேர்ந்து விரோதம் மறந்து இது போன்ற யகூதி நசாராக் களின் திட்டங்களை முறியடிப்போம் அதற்கு அந்த வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்


அன்புடன்

இறையடிமை

TV Report: 4000 Germans Converted To ISLAM Last Year

4000 Germans Converted To ISLAM Last Year:http://youtube. com/watch? v=B310QU5gxlE

Many Germans are Coming To ISLAM Everyday:
http://youtube. com/results? search_query= Germans+Converte d+to+ISLAM+ &search_type= &search=Search

இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் படிப்புதவி!

இந்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் நலிவுற்ற சிறுபான்மையினர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில படிப்புதவித் தொகை வழங்க இருக்கிறது. இந்த உதவித் தொகை இந்தியக் குடிமகனாக இருக்கும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, இந்தியாவில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பெறும்.மேனிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயில எண்ணும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்குக் குறைந்தபட்சமாகப் பள்ளியிறுதித் தேர்வில் ஐம்பது விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருத்தல் அவசியமாகும்.இந்தப் படிப்புதவி இந்தியாவின் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகளுக்கு அவரவர்களின் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப வழங்கப்படும். மொத்தப் படிப்புதவிகளில் முப்பது விழுக்காடு மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களுக்கும் இந்தப் படிப்புதவிக்கான விண்ணப்பத்திற்கும் இந்திய அரசின் சிறுபான்மையினர் நலவாழ்வு அமைச்சகத்தின் தளத்தை அணுகவும்.தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள், மாவட்ட வாரியாக அணுகவேண்டிய அரசு அலுவலர்களின் தொலைபேசி எண்களை இந்தச் சுட்டியைச் சொடுக்கிப் பெற்றுக் கொள்ளலாம்.இந்தப் படிப்புதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை வரும் பிப்ரவரி 10க்குள் சென்றடைய வேண்டும்.

நன்றி: சத்தியமார்க்கம்

உங்களோட தைரியத்துக்கு வாழ்த்துக்கள் மதியழகன்.


தகவல் அறியும் 'ஆயுதம்' - போலீஸ் கணக்கை ஆய்வு செய்த கராத்தே மாஸ்டர்!


செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008


நாமக்கல்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனி நபர் ஒருவர், காவல் நிலையக் கணக்கு வவக்கை ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தகவல் அறியும் உரிமை சட்டம் மிகப் பெரிய ஆயுதமாக திகழ்கிறது. இதை மக்கள் இன்னும் சரிவர புரிந்து கொள்ளாமல் உள்ளனர். இதை பிரபலப்படுத்த அரசுகளும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனி நபர் ஒருவர் காவல் நிலைய கணக்கு வழக்குகளை சரி பார்த்துள்ள செயல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளு. இப்படி தனி நபர் ஒருவர், காவல் நிலைய கணக்கு வழக்குகளை ஆய்வு செய்துள்ளது தமிழகத்திலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டர் மதியழகன்.இவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்ற ஸ்டேஷன் வரவு - செலவு கணக்கு, ஹோட்டல்களில் பார் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் விவரம், சாராயம் விற்பனை செய்தவர்கள் விவரம், திருட்டு வழக்குகள் மற்றும் டி.எஸ்.பி. ஆய்வறிக்கைகள் உள்பட 19 தலைப்பின் கீழ் தகவல் கேட்டு கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று விண்ணப்பித்தார்.விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் அவருக்கு தகவல் ஏதும் வரவில்லை. இதையடுத்து அவர் தமிழக உள்துறைக்கு மீண்டும் மனு அனுப்பினார்.இந்த மனுவை விசாரித்த உயர் அதிகாரிகள் இது குறித்த தகவல்களை மனுதாருக்கு அளிக்க தகவல் உரிமை கமிஷருக்கு பரிந்துரைத்தனர்.மேலும், தகவல் சம்பந்தமாக விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதி வழங்கவும், 30 நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை இலவசமாக பிரதி எடுத்து கொடுக்க வேண்டும், மேலும் ப.வேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதிக்கும்படி கூடுதல் எஸ்.பி. முருகசாமிக்கு தகவல் உரிமை கமிஷனர் உத்திரவிட்டார்.இதனையடுத்து விண்ணப்பதாரர் மதியழகன் நேற்று காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
நன்றி : தட்ஸ் தமிழ்

இன்னைக்கு தப்பு நடந்து போனா அத பத்தி பேசி அரசியல் பண்ணுற இந்த அரசியல் வாதிகள் மத்தில இந்த மதியழகன் போன்றவங்களோட தைரியமான செயல் ஓட்டு போட்டு ஏமாந்து போற இந்த மக்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணம். கேள்வி கேட்ப்பது குறைந்து போனால் தவறு செய்ய தைரியம் தானாக வரும். மக்களே நமக்கிருக்கும் உரிமையின் அடிப்படையில் நாம் செயல் படுவோம்.துணிவுடன் நின்று தவறுகளை தட்டிக்கேட்ப்போம்.

Monday, February 4, 2008

இன்னும் என்னென்ன செய்து வச்சிருக்கிரானுங்களோ


பன்றிக் கொழுப்பு.. உஷார்..


கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி: அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று. இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார். சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?
உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள். இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர். பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது. பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது. இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர்.
இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும். இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை. E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் -
வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம்
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))
இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்! சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம்.
கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும். இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார். தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.


"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)


நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.



நன்றி : sheik Mohamed

சும்மா ஒரு பதட்டத்த உண்டாக்கலாம்னு நினைச்சோம்


தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்த தீவிரவாதிகள் சிக்கினர் குமாரபாண்டியனின் சகோதரர் உட்பட 3 பேர் கைது


உலுக்கும் உண்மைகள் அம்பலம்

தென்காசியைக் குறிவைத்து சங்பரிவார் சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு அமைதிக்கு கேடு விளைவித்து வருவதை நாட்டு மக்கள் வேதனையோடு கவனித்து வருகின்றனர்.
ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு பொறுக்காத தேச விரோத சக்திகள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக தென்காசி மக்களின் நிம்மதியைக் குலைத்த கும்பலின் சதிச்யெல் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கடந்த 24லி01லி2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என கருதியிருந்தால் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இயங்கும் நேரத்தில் அதை செய்திருக்கலாம். அலுவலகம் பூட்டப்பட்ட பிறகு பொதுவாக அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இச்சம்பவம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்ட செயலாகவே இதை நாட்டிலுள்ள நல்லோர் கருதினர்.
ஊடகங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின. ஜெயா டி.வி, விண் டி.வி போன்ற சேனல்கள் தங்கள் செய்திகளின் மூலமாக பதட்டத்தை குறைய விடாமல் பார்த்துக் கொண்டன.
திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என திட்டமிட்டு பிரச்சாரங்களை நடத்தினர். இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் தென்காசிக்கு வந்து முஸ்லிம்கள் குறித்து அவதூறுகளை அள்ளி வீசினார்.
மீண்டும் மீண்டும் அப்பாவிகள் துன்பறுத்தப்பட்டனர். விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு விவகாரம் சிபிசிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமுமுக கோரியது.
இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்தாக முன்னாள் இந்து முண்ணனித் தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து அப்பாவி முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி தமிழகத்தை கலவரக்காடாக்க முயற்சித்த கொடிய சதி அம்பலத்துக்கு வந்துள்ளது.
நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வைத்தோம் என அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நமது இதழ் அச்சேறும் முன்பாக முதலில் வந்த தகவலின்படி 1) குமார பாண்டியனின் தம்பி ரவி, 2) கே.டி.சி. குமார், 3) செங்கோட்டை லட்சுமி நாராயண சர்மா என்ற மூன்று பேரின் பெயர் தெரிய வந்துள்ளது.
அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை அமளிக் காடாக்கும் சங்பரிவார சதிச் செயல் அம்பலமாகியுள்ளது.
திமுக ஆட்சி வந்தாலே தீவிரவாதிகள் அராஜக ஆட்டம் தொடங்கி விடும் என ஜெயலலிதா, ராமகோபாலன், சோ, இல.கணேசன் போன்றவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அவர்கள் இத்தகைய தீவிரவாதி களைத்தான் கூறியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
சங்பரிவாரின் தொடர் சதிகள்
அரசும், காவல்துறையும், உளவுத் துறையும் இந்த கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சங்பரிவார் தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
முன்கூட்டியே சதிகளை திட்டமிட்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தும் சங்பரிவார் சக்திகளைக் குறித்து நடுநிலையாளர்கள் பல்லாண்டுகாலமாக கூறிவருவதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
24 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வெடித்ததாக தகவல் வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக 22.01.2008 அன்று நாட்டு வெடிகுண்டுகளுடன் செல்லச்சாமி என்பவர் பிடிப்பட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தென்காசி ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சதிசெய்தவர்களின் பிண்ணனியில் இருந்தவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையாகும்.
தேசத் தந்தை காந்தியாரின் படுகொலை
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு
.கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸில் சங்பரிவாரத்தினரே தீவைத்து விட்டு குஜராத்தில் பெரும் இனப்படுகொலையை நடத்தியது.
மகாஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் பஜ்ரங்தள் அலுவலகத்தில் வெடிகுண்டு தொழிற்சாலையில் குண்டுவெடித்ததும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் தொப்பிகள் மட்டுமின்றி ஒட்டுத்தாடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. போன்ற சதிகளில் சங்பரிவரத்தினரின் சதிகள் தோலுரிக்கப்பட்டன.
தற்போது தென்காசியிலும் சங்பரிவாரத்தினரின் முகமூடி தோலுரிக்கப்பட்டது.உண்மைகளை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்.
உளவுத்துறை முகத்தில் கரிபூச முயன்ற கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் வேண்டுகோளாகும்.
தமுமுக ஏற்படுத்திய நெருக்கடிகள்
தென்காசியில் அமைதி திரும்ப வேண்டும் என்பதிலும் அமைதியை குலைக்கும் தீவிரவாத சக்திகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பதிலும் உண்மையாக தமுமுக தொடர்ந்து தீவிரக் கவனம் செலுத்தியது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜனவரி 27 அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி ஜனவரி 29 அன்று குமரி மாவட்டம் இரவிபுதூர் கடையிலும், இறுதியாக மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி பிப்ரவரி 3 அன்று நெல்லை மாவட்டம் தென்காசிக்கு வருகை தந்து புளியங்குடியிலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தினர்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவை என்ற வேண்டுகோள் பத்திரிக்கைகளில் முக்கிய செய்திகளாக வந்து காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் உனவுத்துறை ஐ.ஜி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதன் விளைவாக நெல்லை காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றது. டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர், தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒத்துழைத்த காவலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
வேணும்னு செய்து இருக்க மாட்டாங்க.சும்மா.............. நாங்கோ தமிழ் நாட்ட ஒரு குஜராத் ஆக்குவோம்னு சொல்லி ரொம்ப நாள் ஆச்சிதுல்லா.அதுனால் ஒரு சின்ன முயற்சி.என்ன செய்யுறது இவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர் களுக்கு எல்லாம் சிறந்த சூழ்ச்சியாளன் இருக்கும் போது இவுங்கோ எல்லாம் இன்னும் அவமான படத்தான் வேணும்.நடந்தது இப்படி இருக்க இந்த பத்திரிக்கை எல்லாம் சேர்ந்து அன்னைக்கு போட்ட அந்த நியுச இன்னும் ஒரு தடவ எல்லாரும் குறிப்பா நடுநிலை வாதிகள் எடுத்தது படிச்சி பார்த்தா உண்மைலயே இந்த பத்திரிகைகளின் சேவை எந்த மாதிரியானதுன்னு எல்லாருக்கும் புரியும்.

தமிழ காப்பாத்த வந்தவாங்க செய்த வேலைய பாருங்கோ.....................

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு
உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த நெல்லை காவல்துறையைப் பாராட்டுகின்றோம். மாநிலம் தழுவிய முக்கியப் புள்ளிகளையும் விசாரிக்க வேண்டும்.

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

கடந்த ஜனவரி 24 அன்று தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டு வெடித்ததாக செய்தி வெளியானது. அப்போதே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று கூறினோம். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டியிடம் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
இந்நிலையில், நெல்லை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட சங்பரிவார் பிரமுகர் குமார் பாண்டியனின் தம்பி ரவியும் ஒருவர். இவர் இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.
தங்கள் கொள்கையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இவர்களே குண்டுகள் மூலமாகத் தாக்கி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட இக்கும்பல் திட்டமிட்டிருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. சமூக அமைதியைக் குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே இவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.
இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் குண்டு வெடித்த இடத்தில் கிடைக்கப் பெற்ற வெடி மருந்துகளும் இப்போது தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக டி.ஐ.ஜி கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபடும் மத்திய புலனாய்வு குழு தமிழக காவல்துறையிடமிருந்து தென்காசியில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து தடயங்களைப் பெற்று அவ்வழக்குத் தொடர்பாக மறு விசாரணையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தென்காசி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இக்கும்பலுக்கு பின்னணியில் வேறு பலமான சக்திகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றோம். எனவே இது குறித்து மாநில அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளின் முக்கியப் புள்ளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வேலை கொடுக்காமல் துரிதமாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட நெல்லை காவல்துறையை பாராட்டுகின்றோம். தொடர்ந்து இவ்வழக்கை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

ஆடு நனயுதேனு ஒ நாய் அழுவுது



தமிழ்ப் புத்தாண்டு-தமிழக அரசுக்கு விஷ்வ இந்து பரிஷத் கெடு


திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 மதுரை: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 20ம் தேதி முதல் ஆர்பாட்டம் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் (இது யாரு நம்ம பழைய தல வெட்டி வேதாந்தியா ) தலைமையில் நடந்தது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய பண்பாடு சின்னமாக அறிவிக்க வேண்டும் (இதுக்கு தானே நீதி மன்றம் அன்னைக்கே கேட்டுது யாரும் பார்க்காத ஒரு விஷயத்த எப்படி பாரம்பரிய பண்பாட்டு சின்னமா அறிவிக்க முடியும்னு) .மலேசியாவில் உள்ள இந்து தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் லோக்சபாவிலும், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் (இன்னாப்பா நீங்கோல்லாம் இனி தமிழ் மொழி காத்த தங்கங்களா ஆவ போறீங்களோ அப்போ சமஸ்கிருதம்?) இந்த தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெறக் கோரி வரும் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



வேணும்ல இந்த மாதிரி எதாவது செய்தா தானே மக்கள் மத்தில நாங்களும் இருக்குரோம்னு இவுங்களால சொல்ல முடியும். கூடவே எலெக்சன் வேற வர போவுது இப்ப இருந்தே தொடங்கு நா தானே இதுக்கு முன்னாடி இவுங்கோ செய்த பழைய பல -------------- கள மக்கள் மனசுல இருந்து மெதுவா அழிக்க முடியும். சரி நீலிக்கண்ணீர் இன்னாரு தான் வடிக்கனும்னு இல்லலா?

அனாத மடம் தானே வா ஆளுக்கொருக்க ஆட்டயப் போடுவோம்

ராமர் பாலத்தின் பெயரால் சேது திட்டத்தை முடக்க சதி-கருணாநிதி

திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008


சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தின் 60 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அதை வேறு பாதையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, அதை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட வேண்டும் என்ற சதித் திட்டம் தான் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.முரசொலியில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில்:

கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், எந்தப் பாதையில் என்பது முக்கியமல்ல, நமக்கு திட்டம்தான் முக்கியம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்: இதே கருத்தை நானும் தொடக்கத்திலே எதிர்ப்பு கிளம்பியதுமே தெரிவித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் வேறு பாதை வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லை என்கிறார்கள். மேலும் 60 சதவிகித அளவிற்கு மேல் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.இந்த நிலையில் வேறு மாற்று வழித்தடம் என்று கூறுவது திட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்வதற்காகத்தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. ஆறு வழித் தடங்கள் என்று கூறப்பட்டு அத்தனை வழித்தடங்களை பற்றியும் 50 ஆண்டு காலத்திற்கு மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டு, நீண்ட இடைவெளிக்கு பின்னர்தான் தற்போதைய திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த காலத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போது, யாரும் ராமர் பாலம் பற்றி சொல்லவே இல்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்டபோதும் இத்தகைய எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவிகித பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் இந்த பெயரை சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திட்டத்தை நிறைவேற விடாமல் செய்வதற்கான சதி வேலை என்றுதான் கருதப்படுகிறது.தென் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதிலே நம்முடைய ஆட்சிக்கு பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், பல்வேறு முயற்சிகளிலே அந்த சதிகாரர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

பாமகவுடன் ஊடலா?:

கேள்வி: "ஊடல்" என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திப் பேசப்போய் அது, திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே பெரிய விமர்சனப் பொருளாகி விட்டதே?

பதில்: ஊடல் என்றால் தவறாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை"இல்லை தவறவர்க்காயினும் ஊடுதல்வல்லதவரளிக்கும் ஆறு''என்பது குறள். அதாவது எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது-இப்படி ஊடல் பற்றி உரைக்கிறது அய்யன் வள்ளுவன் வழங்கியுள்ள குறள்.இந்த வார்த்தையைக்கூட நான் எப்போது கூறினேன் என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு என் பதில் உரையைத் தொடங்கும்போது, அதனைப் பாராட்டி பத்திரிகைகள் எழுதியிருந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டேன்.இன்னும் கொஞ்சம் வேணுமா?:அப்போது, "தமிழ் ஓசை" பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஏடு. இப்போது நமக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் ஊடல் இருந்தாலும் கூட (இல்லை என்கிறார் ஜி.கே.மணி. ஊடல் இருந்தாலும் கூட என்று சொன்னதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்). இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

கேள்வி: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாகவும், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. டெல்லியிலிருந்து வரும் "எகானிமிக் டைம்ஸ்" ஏட்டில் வெளிவந்துள்ள செய்திதான் இந்தக் கேள்வி. மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு நான் ஏற்கனவே விளக்கம் தந்திருக்கிறேன். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இடம் தராது.ஞானசேகரனின் 'ஞானம்':

கேள்வி: காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் பேசும்போது உளவுத்துறையை முடுக்கிவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவரே பேசும்போது கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தமிழகத்திலே 102 பேர் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 40 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம் உளவுத்துறை முடுக்கி விடப்பட்டதுதான். மேலும் அவரே திலீபன், செல்வராஜ் ஆகியோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். அதற்குக் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டதுதான்.கியூ பிராஞ்ச்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஞானசேகரன், உளவுத் துறையைக் கண்டித்தார். வேடிக்கை என்னவென்றால்-கியூ பிராஞ்ச் என்பதே உளவுத்துறையின் கீழே செயல்படுவதுதான். அது தெரியாமல் தமிழகத்தின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் அங்கே கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.

கேள்வி- இன்றைய ஜனசக்தி நாளிதழில் 'சட்டமன்றம் ஒரு பார்வை' என்ற தலைப்பில் இரா.பாஸ்கர் என்ற தோழர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையை படித்தீர்களா?

ப:- படித்தேன். அந்த கட்டுரையில் "பிரதான எதிர்க்கட்சி பற்றி குறிப்பிடும்போது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமா என்கிற சந்தேகம் எழுகிற அளவிற்கு அந்த இயக்கத்தின் பெயரையோ, அக்கட்சியின் பொது செயலாளர் பெயரையோ மாற்று கட்சியினர் உச்சரித்தாலே அதிமுகவினர் உரக்க குரல் எழுப்புவதும், அனைவருமாக எழுந்து நின்று கொண்டு கூச்சல் போடுவதுமே அக்கட்சியின் சட்டமன்ற சாதனையாக உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது.மேலும் அந்த கட்டுரையில், "அதிமுக பொதுச் செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) ஏதோ சுவாரஸ்யமாக பேசுவதாகக் கருதி நிதியமைச்சரை நோக்கி நீ என்ன பேராசிரியரா? உதவிப் பேராசிரியர்தானே? சட்ட அமைச்சர் என்ன சட்ட நிபுணரா? தலைமை செயலர் திரிபாதி என்ன சட்ட மேதையா என்றெல்லாம் ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார். அன்றைக்கு ஜெயலலிதா அவையில் பேசிய விதமோ, தன்னை சட்ட மேதை போல கருதிக்கொண்டு சட்ட நுணுக்கங்களை புட்டு வைப்பது போல் இருந்தது.ஆளும் கட்சி தரப்பில் எடுத்து வைத்த எதிர் கேள்விகளுக்கு கூட அவரால் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறிப்போய், என்னை திசை திருப்ப முயல்கிறீர்கள் என்று கூறி அவர்தான் திசை மாறினார்" என்றும் கட்டுரையாளர் எழுதியிருப்பது உண்மையை உணர்த்துவதாக உள்ளது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி : தட்ஸ் தமிழ்

எது எப்படியோ இன்னைக்கு லெட்டர் பேட் மட்டும் வச்சிருக்குற கட்சிக்கு கூட பேசுறதுக்கு இது ஒரு சிறந்த மசாலா மேட்டர். இவுங்க எல்லாருக்கும் இது இப்போ தான் தெரிஞ்ச மாதிரி புதுசா கயறு விடுரானுவோ. நாளைக்கு இந்த பாலம் ஒரு வேல கட்டி முடிஞ்சா அல்லது கட்டவே இல்லன அப்பா கூட இவுங்க யாரும் இந்தியாவ முன்னேற விட மாட்டாங்க தானே.சரி நாமோ சொன்ன நடக்கவ போவுது.விடு தாய் அங்க இன்னொரு அனாத மடம் இருக்குதாம்லா வா அங்கயும் போய் ஆளுக்கொருக்க ஆட்டயப் போடுவோம்

Sunday, February 3, 2008

படித்ததில் பிடித்தது

நரேந்திர மோடிக்கு எதிராக பால்தாக்கரே! மதவெறியர்களுக்குள் போட்டி

காங்கிரஸின் கயமைத்தனத்தால் குஜராத்தில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் பா.ஜ.க. ஏதோ தேசிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துவிட்டதைப் போல நினைத்து பூரிப்படைந்து இருக்கிறது. நரேந்திர மோடியை பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று மிருகக்காட்சி சாலை யில் மிருகத்தை காட்டுவதைப் போல படம்காட்டி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் சங்பரிவாரின் ஊதுகுழல் துக்ளக் சோவால் வரவழைக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பாசிச எதிர்ப்பு முன்னணி மூலம் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காவல்துறையின் புண்ணியத் தால் சோவின் நிகழ்ச்சியிலும் ஜெலியின் விருந்திலும் கலந்துகொண்டு பாதுகாப் பாகத் திரும்பினார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் பா.ஜ.க.வால் அழைக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வெகுவாக விளம்பரம் செய்யப்பட்டது. தலைப்பாகையுடன் ரதத்தில் ஏறி கிருஷ்ணர் போல வாயில் சங்கு ஊதியபடியே போஸ் கொடுத்தார் மோடி.
ஆனால் ஏற்கனவே மும்பையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் மதவெறியன் பால்தாக்கரேவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடிக்க, தான் ஒருவன் மும்பையில் இருக்கும்போது இவன் யார் புதிதாக என்று கொதித்த தாக்கரே, மோடி வேலைகள் குஜராத்தில் மட்டுமே பலிக்கும் என்று கடுப்படித்ததுடன், ''மஹாராஷ்டிரா வில் மராட்டியர்களின் ஆட்சிதான் நடக்கும்; வேறு எவரும் இங்கு ஹீரோவாக முடியாது'' என்று புலம்பியிருக்கிறார்.
குஜராத்தில் முஸ்லிம்களை பயமுறுத்தி இந்துக்களின் பாதுகாவலர் என்ற இமேஜோடுதான் மோடி வெற்றி பெற்றிருக்கிறார் என்ற சங்பரிவாரங் களின் அரசியல் சூத்திரத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறார் தாக்கரே. இதே வேலைகளைத்தான் மஹாராஷ்டி ராவில் சிவசேனா செய்து வருகிறது என்பதை தன்னை மறந்தவராக உளறி யிருக்கும் தாக்கரே, 'முஸ்லிம்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபடலாம், அதனால் இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றும் கடைசியாக திரிகொளுத்தி இருக்கிறார்.
மதவெறியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் முஸ்லிம் எதிர்ப்பில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வது? இவர்களது அரசியலே ( வாழ்வாதாரமே )அதில்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நன்றி : இப்பி பக்கீர்

2008 குடியரசு தின நிகழ்ச்சியில் விருது பெற்ற முஸ்லிம்கள்

இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் கலை, கல்வி, தொழில் இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான முறையில் தொண்டுகள் புரிந்த முஸ்லிம்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பத்ம விபூஷன் விருது பெற்ற முஸ்லிம்கள்

1) ஆஸாத் அலிகான்

2) பஹிமுத்தீன்

3) மியான் பஷீர் அஹ்மத் (பொது நலன்) இவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்


பத்ம ஸ்ரீ விருது பெற்ற முஸ்லிம்கள்

1) கவிஞர் நிசார் அஹ்மத் (இலக்கியம்)

2) முஹம்மது யூசுப் (இலக்கியம்)

3) கலீமுல்லாஹ் கான் (தோட்டக் கலை)

இந்த ஆண்டு பாதுகாப்புத்துறையில் சாதனை புரிந்ததற்காக முஸ்லிம்கள் அதிக அளவு விருதுகளைப் பெற்றுள்ளனர்.
தேசத்தின் மூன்றாவது பெரிய விருதான சவுர்யசக்ரா விருது

அப்துல் ஹமீத் சாரா

என்ற ரைஃபிள் படை வீரருக்கு அவரது மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது.இந்த விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

சேனா பதக்கம் பெற்ற முஸ்லிம்கள்

1) முஹம்மத் ரஷீத்

2) முஹம்மத் அமீன்பட் லி 153 தரைப் படை பட்டாலியன்

3) அப்துல் ஹமீத் லி 156 தரைப்படை பட்டாலியன்

4) கமருதீன் பெய்க் லி 156 தரைப்படை பட்டாலியன் (பஞ்சாப்)

5) இஸ்தியாக் அஹ்மத் லி தரைப்படை 18 ராஷ்டிரிய ரைஃபிள்

6) மஹ்மூத் அஹ்மத் இட்டூ லி தரைப்படை 33 ராஷ்ட்ரிய ரைஃபிள்

7) முஹம்மத் யூசுப் லோன் லி 161வது பிரிவு தரைப்படை

8) முஸாஃபர் இக்பால் லி 14 அஸ்ஸாம் ரைஃபிள்


பரம் வசிஷ்ட் சேவா பதக்கம்

லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உத்தீன்ஷா - தரைப்படை துணைத் தளபதி

பீரங்கிப்படை வசிஷ்ட் சேவா பதக்கம்

ஜியா அஹ்மத் ரிஜ்வி ( குழுத் தளபதி )

சேனா பதக்கம்

1) கர்னல் முஜாஃபர் இஸ்மாயில் லி கூர்க்கா ரைஃபிள்

2) முஹம்மது இல்யாஸ் (காஷ்மீர்)


இந்த சிறந்த தியாகிகளுக்காக மனம் உருகி பிரதிக்கிறேன்.

25 லட்சம் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008
டெல்லி: பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் சிறுபான்மையினர் சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அடுத்த 5 வருடத்தில் ரூ. 1,800 கோடி உதவித் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறுகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30 சதவீதம் மாணவிகளுக்காக ஒதுக்கப்படும்.இதன் மூலம் 25 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுவர். இந்த உதவித் தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 25 சதவீதத்தை மாநில அரசுகள் வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கான முழுத்தொகையும் மத்திய அரசே வழங்கும்.ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ரூ.350 வழங்கப்படும். பள்ளிகளில் ஆறாம் வகுப்பிற்கு மேல் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.600ம் வழங்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை அனைத்திந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் வரவேற்றுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் கமல் பரூக்கி கூறியதாவது, சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது. இந்த உதவித் தொகை கல்வியில் மிகவும் பின்தங்கியிப் போயுள்ள சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.


சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது.இதற்க்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்

Peace conferance 2008 Chennai - Speeches CDs English and Tamil

Dear Brothers and Sisters !

Assalamu Alaikkum Warah...The Peace 2008 Chennai - Speeches in English and Tamil on CDs (DVD) Just arrived. If anybody wants single CD then the price will 2 Saudi Riyal.
Wassalam
Islamic Tamil Dawah Committe.
Dammam

இவங்க மட்டும் 50 வருஷத்துக்கு முன்னாடி சாதாரண மாணவின்னா?

சென்னை: 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, சாதாரண மாணவி. எனது 50 ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் கூறவா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. அப்போது நான் உதவிப் பேராசிரியராக இருந்தவன்தான். அதை தாழ்வாக நினைக்கவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்று கேட்டார்.இதுகுறித்து இப்போது பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா. அவர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், நிதியமைச்சர் புகாருக்கு நான் அப்போதே பதில் கூற நினைத்தேன். ஆனால் அதை விட முக்கியமான பிரச்சினைகள் இருந்ததால், அதை அப்போது பேச முடியாமல் போய் விட்டது. இப்போது அதைக் கூறுகிறேன்.எனது புகாருக்கு நிதியமைச்சர் பதிலளிக்கையில், பச்சையப்பன் கல்லூரியில் நான் உதவிப் பேராசிரியராகத்தான் இருந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்றார்.50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, மாணவி. சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இதில் எந்த ரகசியமும் இல்லை.

நன்றி : தட்ஸ் தமிழ்


எல்லாம் சரிதான் இவங்க மட்டும் 50 வருஷத்துக்கு முன்னாடி சாதாரண மாணவின்னா மத்தவங்க எல்லாம் ஸ்பெஷல் சாதா மாணவிங்களா?


ஐயோ ஐயோ !

காதலர் தினம் இது காதலுக்கு ஒரு அவமானம்

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். மார்க்கெட்டிங் செய்ய தேரிந்தவன் எல்லாம் அழகா விளம்பரம் செய்து விக்காத சரக்கை விக்க வைக்கிறதுக்கு வெளி நாட்டுல இருந்து இறக்கி கொண்டுவந்த இறக்குமதி சரக்கு தானே இந்த காதலர் தினம்.இதுல இன்னொரு பெரிய விசயமும் இருக்கு இது எதுக்குன்னே தெரியாம கொண்டாடுற அதிக படியான மக்கள். எந்த அளவுக்குன்னா குழந்தைகள் கூட குதூகலித்து கொண்டாடுற ஒரு அவமான நிலை.நம்ம நாட்டு நிலைமை இப்படின்னா இத உருவாக்குன நாட்டு மக்கள் எல்லாம் இன்னைக்கு நம்ம நாட்டு கலாச்சாரத்த பின்பற்றுராங்கோன்னு இவுங்களுக்கு யாரு எடுத்து சொல்லுறது.இத சொல்லுரதுனால தமிழனுக்கு காதல் இருக்க கூடாதுன்னு சொல்லல.இந்த தினத்த சொன்னவன் அம்மணமா கிடந்த காலத்திலயே காதல கண்ணியமா சொன்ன மரபு தான் இந்த தமிழ் மரபு.ஆனா இன்னைக்கு வெத்து வேட்டு எல்லாரும் கொண்டாடுற தினம் தான் இந்த காதலர் தினம்.இது போல உள்ளவங்க கொண்டாடுரதுனால உண்மைய காதல் செயுரவங்களும் அசிங்க படவேண்டிய ஒரு தர்ம சங்கடம்.இன்னும் காதல்னா என்னானு புரியாத வயசுல இருக்குறவங்க வெறும் இனக்கவற்சிக்காக இன்னைக்கு இத அதிகமா கொண்டாடுறாங்க. ஊருகான்னு நினைச்சாலே உள்நாக்குல எச்சில் ஊறத்தான் செய்யும்.ஆனா கைல கிடைச்ச உடனே அவ்வளவயுமா தின்ன முடியுது.காரணம் ஹார்மோன் செய்யுற வேலை.அது போல தான் காதலும் அது மனசுல நினைச்ச உடனே ஹார்மோன் சுரக்க ஆரம்பிச்சிடும். உடனே கற்பனைல மிதக்க ஆரம்பிசிடுராங்கோ. ஒரு குறிப்பிட்ட காலம் கழிஞ்ச பிறது ரெண்டுபேருக்குமே அதுல ஒரு சலிப்பு அல்லது ஒரு சாதரண நிலை வந்துடுது.இது தான் உண்மை.இன்னும் கொஞ்சம் யோசிச்தால் கழிந்த வருடம் காதல் தினம் கொண்டாடிய எத்தனை பேர் இந்த வருடம் அதே நபருடன் காதல் செய்கிறார்கள். இது ஒரு பித்தலாட்டம் அப்படிங்கறதுக்கு இத விட ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமா.திரை படங்களில் வரும் கத்துக்குட்டி காதலுக்கு இந்த இளைய சமூகம் முன்னுரிமை கொடுப்பதனால் தான் இன்னைக்கு இந்த காதலர் தினம் எல்லா வெத்து வேட்டு களும் முன்னுக்கு நின்னு நடத்துறது மாதிரியான ஒரு சூழ் நிலைல இருக்குது. ஏற்கனவே இப்போ தான் புது வருஷம் கொண்டாடுரோம்னு சொல்லி பல புதுமைகளை நாமோ எல்லாரும் சந்திக்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப் பட்டோம். இப்போ அதே போல ஒரு சூழ் நிலை மீண்டும். இனிய சகோதர சகோதரிகளே இது போன்ற வெளி நாட்டு இறக்குமதிகள் நமக்கு உண்மையிலே தேவை தானா?. இவ்வளவும் சொல்லுரதுனால நான் ஒண்ணும் காதல் படத்துல வர்றது போல ஒரு வில்லன் கிடையாது. ஒரு சின்ன சமுதாய சிந்தனை தான். இவ்வளவும் சொன்ன பிறகும் கேட்க்காத ஒரு சில சகோதரர்களுக்காக இதோ ஒரு சிறிய ஆலோசனை. இந்த வருடம் காதலர் தினம் இப்படி கொண்டாடி முயற்சி செய்து பாருங்களேன்.

உங்கள் காதலிக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டி நீங்கள் வாங்கி கொடுக்க போகும் (அப்பா பணத்தில்) பரிசு அவளும் சரி நீங்களும் சரி மறைத்து வைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை காலம் காலமாக இருந்து வருவதால் இந்த முறை இரண்டுபேரும் சேர்ந்து ஆலோசித்து உங்கள் இருவருடைய நட்ப்பு வட்டாரத்தில் எதாவது ஒரு ஏழை நண்பனுக்கு அந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய உதவி செய்யலாமே.

உங்கள் பகுதியில் இருக்கும் அநாதை குழந்தைகளுக்கு ஒரு சிறிய அளவிலாவது இந்த பணத்தைக் கொண்டு ஒரு நேர உணவோ அல்லது அந்த குழந்தைகளுக்கு தேவையான நோட் புக் வாங்க தேவையான உதவியோ செய்யலாமே.

இந்த தினத்திலிருந்து உங்கள் காதல் கைகூடும் நாள் வரை இனி வரும் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு வகையில் யாருக்காவது உதவலாமே.


சிந்தியுங்கள் காதலர்களே நீங்கள் கொண்டாடும் இந்த தினம் சமுதாயத்திற்கு ஒரு அவமான தினமாய் இருந்து வரும் வேளையில் இது போன்ற காரியங்களை செய்வது மூலம் இந்த சமுதாயத்துக்கு உதவ முடியும்.அதே நேரம் குறிக்கோள் இன்றி கொண்டாட பட்டுய் கொண்டிருக்கும் இந்த தினத்துக்கு ஒரு சிறிய லட்சியத்தையாவது வரும் தலை முறைக்கு உருவாக்கி கொடுக்க முடியும்.இளைய சமுதாயமே இந்த முறையாவது சிந்தியுங்கள். உங்கள் காதல் உண்மை என்றால் இதை நடை முறை படுத்த முயலுங்கள். அதுக்கு பிறகு நாமும் சேர்ந்து பாடுவோம்

இனி எல்லோரும் கொண்டாடுவோம் ........................(பாடல் வரிகள் மனதுக்குள்ளே ..)