Thursday, February 7, 2008

கருத்து சொல்லுறதுக்கும் ஒரு தகுதி வேண்டாமா?


அலங்கார மின் விளக்குகள் தேவையற்ற வீண் செலவு : ஜெயலலிதா அறிக்கை

சென்னை : ""விழா நடக்கும் நாளன்று அலங்கார மின் விளக்குகள் வைப்பது நடைமுறை. நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே மின்விளக்குகள் எரிவது, தேவையற்ற வீண்செலவு; மின்சாரத்தை வீணடித்து மக்களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒரு நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேற்று (6ம் தேதி) மாலை வள்ளுவர் கோட்டம் வழியாகச் சென்றேன். அப்பகுதி முழுவதும் அலங்கார மின் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. "என்ன விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?' என்று கேட்டேன். "இன்று எந்த விழாவும் நடைபெறவில்லை' என்ற பதில் கிடைத்தது.தை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முதல்வருக்கு சங்கத் தமிழ்ப் பேரவை எடுக்கும் நன்றி பாராட்டும் விழா நடைபெறவுள்ளது என்றும், அதற்காகத்தான் இப்போதிருந்தே மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது.நான் இந்தக் காட்சியைப் பார்த்தது 6ம் தேதி, விழா நடப்பது 9ம் தேதி. எத்தனை நாட்களாக இந்த விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.
விழா நடக்கும் நாளன்று அலங்கார மின் விளக்குகள் வைப்பது நடைமுறை. நான்கு நாட்களுக்கு முன்னரே விளக்குகள் எரிவது தேவையற்ற வீண் செலவு. மின்சாரத்தை வீணடித்து மக்களுக்கு வேதனை தருவதாகவும் இருக்கிறது.மின்சாரப் பற்றாக்குறை, மின்வெட்டு என மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. தமிழகமே இருளில் மூழ்கும் நிலையில் உள்ள போது, சுய விளம்பரத்திற்காக மின்சாரம் வீணடிக்கப்படுவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தின மலர்

---------------------------------------------------------

இன்று இவ்வளவு தூரம் வாய்கிழிய பேசும் இவர்களின் வளர்ப்பு மகன் திருமண நிழ்க்வுகள் மக்கள் மனதை விட்டு அவ்வளவு எழிதில் மறைந்து விடக் கூடியது அல்ல.அப்போது 100 கோடி இல் இல்லாத ஆடம்பரத்தை இப்போது கண்டு விட்டார்களோ என்னவோ.

No comments: