Tuesday, February 5, 2008

உங்களோட தைரியத்துக்கு வாழ்த்துக்கள் மதியழகன்.


தகவல் அறியும் 'ஆயுதம்' - போலீஸ் கணக்கை ஆய்வு செய்த கராத்தே மாஸ்டர்!


செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008


நாமக்கல்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனி நபர் ஒருவர், காவல் நிலையக் கணக்கு வவக்கை ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தகவல் அறியும் உரிமை சட்டம் மிகப் பெரிய ஆயுதமாக திகழ்கிறது. இதை மக்கள் இன்னும் சரிவர புரிந்து கொள்ளாமல் உள்ளனர். இதை பிரபலப்படுத்த அரசுகளும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனி நபர் ஒருவர் காவல் நிலைய கணக்கு வழக்குகளை சரி பார்த்துள்ள செயல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளு. இப்படி தனி நபர் ஒருவர், காவல் நிலைய கணக்கு வழக்குகளை ஆய்வு செய்துள்ளது தமிழகத்திலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டர் மதியழகன்.இவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்ற ஸ்டேஷன் வரவு - செலவு கணக்கு, ஹோட்டல்களில் பார் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் விவரம், சாராயம் விற்பனை செய்தவர்கள் விவரம், திருட்டு வழக்குகள் மற்றும் டி.எஸ்.பி. ஆய்வறிக்கைகள் உள்பட 19 தலைப்பின் கீழ் தகவல் கேட்டு கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று விண்ணப்பித்தார்.விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் அவருக்கு தகவல் ஏதும் வரவில்லை. இதையடுத்து அவர் தமிழக உள்துறைக்கு மீண்டும் மனு அனுப்பினார்.இந்த மனுவை விசாரித்த உயர் அதிகாரிகள் இது குறித்த தகவல்களை மனுதாருக்கு அளிக்க தகவல் உரிமை கமிஷருக்கு பரிந்துரைத்தனர்.மேலும், தகவல் சம்பந்தமாக விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதி வழங்கவும், 30 நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை இலவசமாக பிரதி எடுத்து கொடுக்க வேண்டும், மேலும் ப.வேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதிக்கும்படி கூடுதல் எஸ்.பி. முருகசாமிக்கு தகவல் உரிமை கமிஷனர் உத்திரவிட்டார்.இதனையடுத்து விண்ணப்பதாரர் மதியழகன் நேற்று காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
நன்றி : தட்ஸ் தமிழ்

இன்னைக்கு தப்பு நடந்து போனா அத பத்தி பேசி அரசியல் பண்ணுற இந்த அரசியல் வாதிகள் மத்தில இந்த மதியழகன் போன்றவங்களோட தைரியமான செயல் ஓட்டு போட்டு ஏமாந்து போற இந்த மக்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணம். கேள்வி கேட்ப்பது குறைந்து போனால் தவறு செய்ய தைரியம் தானாக வரும். மக்களே நமக்கிருக்கும் உரிமையின் அடிப்படையில் நாம் செயல் படுவோம்.துணிவுடன் நின்று தவறுகளை தட்டிக்கேட்ப்போம்.

No comments: