Thursday, February 7, 2008

இதுக்கு முன்னாடி தூங்குனவங்க இப்போ முழிசிக் கிட்டாங்கோப்பா ............போற போக்கப் பார்த்தா நடவடிக்கை எடுத்துடுவாங்கோ போல தெரியுது!!


வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு ஆணை



மும்பை, பிப். 6: மும்பையில் வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் வசிக்கும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பை வழங்குமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புதன்கிழமை புதுதில்லியில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:

அனைத்து தரப்பினரும் வசிக்கும் மும்பை நகரின் தனிச் சிறப்பைக் கட்டிக்காக்க வேண்டும. அங்கு தனிப்பட்ட எவர் மீதும் தாக்குதல் நடத்தவோ, பொதுச்சொத்துகளை நாசம் செய்யவோ மகாராஷ்டிர அரசு அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
முன்னதாக ராஜ் தாக்கரே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் கோரிக்கை விடுத்தார். ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளால் மும்பையில் ஏற்பட்டுள்ள விபரீதம் குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் எடுத்துரைக்கப்போவதாகவும் அவர் கூறினார். ராஜ் தாக்கரேவை கைது செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார்.
சிவசேனையில் இணைந்த
ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள்
இதற்கிடையில், வடஇந்தியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுவரும் ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த அவரது கட்சியினர் 200 பேர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையிலிருந்து விலகி சிவசேனை கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.
இத்தகவலை சிவசேனை செயலாளர் வினாயக் ரெüத் புதன்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:
ராஜ் தாக்கரேயின் முறையற்ற செயல்பாடுகளை அவரது கட்சியினரே விரும்பவில்லை. எனவே அக்கட்சியின் தொண்டர்கள் 200 பேர் சிவசேனையில் இணைந்துவிட்டனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி பால் தாக்கரேயின் இல்லத்தில் சிவசேனை நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேயின் முன்னிலையில் புதன்கிழமை நிகழ்ந்தது.
மும்பையில் சமாஜவாதி கட்சியினருக்கும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது அவ்விரு கட்சியினருக்கும் இடையே நடக்கும் விரும்பத்தகாத சம்பவமாகும் என்றார் அவர்.
இதற்கிடையில் மாதுங்கா பகுதியில் உள்ள ஜவுளிக் கடை மீது புதன்கிழமை சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. கடையின் உரிமையாளரையோ அல்லது ஊழியர்களையோ அவர்கள் தாக்கவில்லை. கடையில் இருந்த துணிகளை மட்டும் வெளியே தூக்கிஎறிந்துவிட்டு அவர்கள் ஓடிவிட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் வசிக்கும் ஆந்திர மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

No comments: