மேலூர் அருகே கோவிலில்சாமி கும்பிடுவதில் கோஷ்டி மோதல்150 பேர் மீது வழக்கு;144 தடை உத்தரவு
மேலூர்,பிப்.9-
மதுரையை அடுத்த மேலூர் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையொட்டி, 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோஷ்டி மோதல்
மதுரை அடுத்த மேலூர் அருகேயுள்ள தெற்குத்தெரு கிராமத்தில் மலைமந்தை வீரன் - மலைமங்கான்பட்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இரு தரப்பினரும் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 150 பேர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
144 தடை உத்தரவு
தெற்கு தெரு கோவில் பிரச்சினை தொடர்பாக, தாசில்தார் ஜெயசீலன் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. அப்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடந்து தெற்கு தெரு கிராமத்தில் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜவகர் பிறப்பித்தார்.
இதனால், கோவில் வளாகத்திற்குள்ளும், கோவிலைச் சுற்றி 30 மீட்டர் தூரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நிற்கவோ, கூடவோ, பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, ஊர்வலங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நோட்டீசுகளை, பொது இடங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீசார் ஒட்டினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி: தினத் தந்தி
இனிய சமுதாயமே! கடவுளை வணங்குவது எனபது அவன் நம்மைப் படைத்து நமக்கு எல்ல சவுகரியங்களையும் தந்தமைக்கு நன்றி கூறுவதற்கு மட்டுமே.அதனை இத்தனை ஆர வாரங்களோடு தான் செய்ய வேண்டும் என்றில்லை.தியாகம் மேலிடும் வண்ணம் இன்னும் அமைதியாகவும் செய்ய முடியும்.முதலில் கடவுள் என்பவன் எதை அவனின் படைப்புகளிடம் இருந்து எதிர்ப் பார்க்கிறான் என்பதை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் தேவை தானா? என்பதனை உணர முடியும்.
Friday, February 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment