Saturday, August 2, 2008

கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!

அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?


கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி



அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கைதான தீவிரவாதி ஹீரா தெரிவித்தார்.

நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது தீவிரவாதி ஹீரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
பழக்கம் ஏற்பட்டது எப்படி

இறைவன் ஒருவனே என்ற அமைப்பில் முன்பு இருந்தேன். அப்போது பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை. குண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை என்மீது போட்டு சிறையில் அடைத்தனர். சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லாவும், நானும் ஒரே செல்லில் இருந்தோம். அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

ரத்ததானம்

கடந்த 21&ந் தேதி நிபந்தனை ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். மண்ணடியில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தேன். நெல்லை போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்து இந்த வழக்கில் சேர்த்து விட் டனர்.

நாட்டுப்பற்று அதிகம் உடையவன் நான். 15 முறை ரத்ததானம் செய்து உள்ளேன். என்னை தீவிரவாதி என்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனக்கு மனம் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு ஹீரா கூறினார்.

அப்துல் கபூர்
நெல்லை கோர்ட்டுக்கு வந்த அப்துல் கபூர் கூறியதாவது:

எனக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சென்னையில் செருப்பு கடையில் நான் வேலை செய்தபோது ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் ஹீராவுடன் பழகி வந்தேன். காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் கிளையின் ஒரு அமைப்பின் (தவ்ஹீத் ஜமாத்) செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது பேட்டை பள்ளிவாசலில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

நான் என்னுடைய அமைப்பு அல்லாமல் மற்றொரு அமைப்பை (சுன்னத்துல் ஜமாத்) ஆதரித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த என்னுடைய அமைப்பினர் என்னை போலீசில் சிக்க வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னை போலீசார் கைது செய்தனர். எனக்கு டைம் பாம் செய்ய தெரியாது.
இவ்வாறு அப்துல் கபூர் கூறினார்.

நன்றி : தினத் தந்தி

குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம் காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின் சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன் தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.
நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும்.
இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்.


கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான் குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் யா முஹைதீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி : WWW.EASTADIRAI.BLOGSPOT.COM

ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....


தவ்ஹீத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்என் கணவரை சிக்க வைத்து விட்டனர்* ஷேக் அப்துல் கபூரின் மனைவி புகார்

ஆகஸ்ட்



திருநெல்வேலி:"தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் பிரச்னையில் எனது கணவரை சிக்கவைத்து விட்டனர்' என, நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா தெரிவித்துள்ளார்.குண்டு வைக்க திட்டமிட்டதாக நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா, நேற்று தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதே மனுவை, நேற்று நெல்லை கோர்ட்டிலும் வெளியிட்டனர்.



அதில் தெரிவித்திருப்பதாவது:எனது கணவர் கபூர் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏ.ஆர்., செருப்புக் கடையில் வேலை பார்த்தார். அவர் ஆரம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கில் மாநில அமைப்பாளராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு திருச்செந்தூர் லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.



பின்னர் தவ்ஹீத் ஜமாத்தின் பரங்கிமலை கிளைச் செயலராகச் செயல்பட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சென்னை ஆலந்தூரில் ஒரு பள்ளி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அந்தச் சிறுமிக்காகப் போராடி நீதி கிடைக்கச் செய்தார். ஜூலை 13ம் தேதி எனது தம்பி திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன் வரவேற்பு விழா பேட்டையில் நடந்தபோது அதில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.



பேட்டை மகதூம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் ஆகியோருக்கு இடையே யார் நிர்வாகத்தை நடத்துவது என்பது தொடர்பாக மோதல் நடந்தது. இதில் என் கணவர் தவ்ஹீத்தில் இருந்தாலும் சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூலை 27ம் தேதி சீருடை அணியாத போலீசார் வந்து எனது கணவரை அழைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் எனது கணவர் கைதானது குறித்து நாளிதழ்களைப் பார்த்து அதிர்ந்து போனேன்.



எனது கணவர் மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூர் ஜமாத் பிரச்னையால் உளவுத் துறையினர் திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.மறுநாள் சிறையில் அவரிடம் பேசியபோது, "சுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம் என்றும் இதன் மூலம் உள்ளூர் பாதுகாப்பை அதிகப்படுத்து வோம் எனவும், மீறினால் உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைப் போம்' எனவும் போலீசார் கூறியதாகச் சொன்னார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ., க்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.