Saturday, May 10, 2008

ஊழலின் பிடியில் இஸ்ரேலிய பிரதமர்

அமெரிக்க கோடீசுவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் இஸ்ரேல் பிரதமர் ஒப்புக்கொண்டார்

பதவி விலக மாட்டேன்
இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் அமெரிக்க கோடீசுவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார். இதற்காக பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார். அவரது நண்பர்களும், எதிர்க்கட்சியினரும் அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஊழல் புகார்கள்
இஸ்ரேல் நாட்டின் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், அமெரிக்காவில் நினியார்க் நகரத்தில் பைனான்சியராக இருக்கும் கோடீசுவரர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றார். அந்த கோடீசுவரர் தி லாண்ட்ரி மேன் என்று சங்கேத வார்த்தைகளால் போலீஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒப்புக்கொண்டார்
இந்த நிலையில் டி.வி.சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க கோடீவரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்றும், அது லஞ்சம் இல்லை நன்கொடை தான் என்றும் அவர் கூறினார். தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் வாங்கினேன். 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் ஜெருசலேம் மேயர் தேர்தலில் நான் போட்டியிட்டேன். இதற்கும், 1999-ம் ஆண்டு லிகுட் கட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் தேர்தல் செலவுக்காக பணம் பெற்றது உண்மை தான் என்று ஓல்மெர்ட் ஒப்புக்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் பணம் பெற்றேன். சுயநலத்துக்காக அதை பயன்படுத்தவில்லை. எனவே நான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகவேண்டும் என்று அவை கோரி உள்ளன. அவரது நண்பர்களும் அவர் பதவி விலகவேண்டும் என்று கோரினார்கள்.
அவர்கள் கோரிக்கையை ஏற்க ஓல்மெர்ட் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் பதவி விலகுவேன் எனறு அவர் குறிப்பிட்டார்.
நன்றி : தமிழ் நியூஸ்

Friday, May 9, 2008

இஸ்லாமியர்களின் இரத்த சகதியில் இஸ்ரேல் கொண்டாடிய வைர விழா

மத்திய கிழக்கில் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான வைர விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. வீதிகள் தோறும் பட்டாசு வெடிக்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புக்கள் சகிதம் கொண்டாட்டங்கள் களை கட்டின. இவை ஒரு புறம் நடைபெற மறுபுறம் கமாஸ் தீவிரவாதிகள் வைர விழா தாக்குதலை நடாத்தாது தடுக்க நாடளவியரீதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான பேச்சில் இஸ்ரேலிய பிரதமர் எக்குட் ஒல்மாற் கூறும்போது பாலஸ்தீன பிரச்சனையில் தாம் சிக்குண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதென்றும், இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவருடைய பதவிக்கு சவாலாக இருப்பதால் இவர் தனது காலத்தில் அமைதியை தொடுவார் என்று கருதப்படவில்லை. மறுபுறம் பாலஸ்தீனர் ஒரு பேருந்து வண்டியில் பெத்தலகேம் சென்று தமது தாய்மண்ணுக்கு என்றோ ஒருநாள் தாம் திரும்புவோம் என்று கோஷமெழுப்பினர்.
இஸ்ரேல் பிறந்த 60 வருட நினைவுகள் ஒரு புறம் நடைபெற அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சென்ற வாரம் இங்கிலாந்தில் கூடி பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான தீர்வு அவசியம் என்றும், இதற்காக தயாரிக்கப்பட்ட றோட் மாப் எனப்படும் அமைதித் திட்டத்தை எவ்வாறு விரைவு படுத்துவது என்றும் பேசியுள்ளனர். அடுத்த வாரம் எருசெலேமில் நடைபெறும் 60 ஆண்டு நினைவு நிகழ்வுகளில் மறுபடியும் இப்பேச்சுக்கள் புதிய வேகத்தில் முடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
1948 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி பாலஸ்தீனர்களின் நிலத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் உருவாக்கத்தாலும், நடைபெற்ற மோதல்களாலும் சிதறியோடிய 4.5 மில்லியன் பாலஸ்தீன மக்கள் இன்று உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி வாழ்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கதை முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு செல்கிறது.
1948ல் இஸ்ரேல் உருவானபோது அங்கு வெறும் 6.50.000 பேர் மட்டுமே இருந்தார்கள். இன்று அங்கு ஆறு மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்பட்டதும் உலகமெல்லாம் பரவியிருந்த யூதர்கள் விரைவாக நாடு திரும்பினர். சுமார் ஓர் இலட்சம் பேர் திரும்பினார்கள். அதுபோல ரஸ்யாவில் இருந்தும் ஓர் இலட்சம் பேர் நாடுதிரும்பினார்கள்.
இன்று பொருளாதாரத்தில், இராணுவ பலத்தில், அணு ஆயுத சக்தியில், உறுதி;பாட்டில் இஸ்ரேல் உலகம் திரும்பிப்பார்க்குமளவிற்கு முக்கியமான நாடாக இருக்கிறது. யூதர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைiயே நிர்வகிக்கும் நிலை உள்ளதால் அமெரிக்கா இஸ்ரேலின் அழுங்குப் பிடியில் இருந்து விலக முடியாத நிலையிலேயே இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இஸ்ரேலில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே பாரிய இடைவெளி நிலவுவது அந்த நாட்டின் பாரிய பலவீனம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
இஸ்ரேல் என்ற நாடு உலகால் வெறுக்கப்படும் சியோனிச கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாக உள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யுதர்களைக் கொன்ற காயம் ஆறாவிட்டாலும் கூட யுதர்களை அழிக்காத பாலஸ்தீனர்களை அழிப்பதில் இஸ்ரேல் காட்டும் தவறான ஆர்வம் முன்னர் யூதர்கள் பட்ட அவலத்தை மறந்த போக்கு என்று கூறுவாரும் உண்டு.
இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் 1956 ம் ஆண்டு சினாய் பாலைவனத்தில் புகுந்தது, 1967 ல் எகிப்துடன் ஆறு தினங்கள் போர் புரிந்து வெற்றியீட்டியது, 1973 எகிப்துடன் மீண்டும் போர், 1977- 79 எகிப்துடன் சமாதானம் செய்தது, 1982 லெபனானுக்குள் நுழைந்தது, 1987 இன்டிபாட்டா எதிர்ப்பை ஆரம்பிக்கிறது, 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்தானது, 2000 ல் பேச்சுக்கள் முறிந்து மீண்டும் போர், 2005ல் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றம், 2006 லெபனான் போர் என்று பத்து முக்கிய தடைகளை தாண்டி 60 வது ஆண்டு விழாவில் கால் பதித்துள்ளது.
இந்த 60 ஆண்டு வரலாற்றை தொகுத்து நோக்கினால் அயலில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்லுறவைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரை இஸ்ரேல் பெறவில்லை. இஸ்ரேல் என்ற நாடே உலகப்படத்தில் இருத்தல் கூடாது என்று கூறிய ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டின் கோபமும் அவருடைய அணு குண்டு தயாரிப்பு முயற்சியும் இன்னொரு அணுப் போருக்குள் இஸ்ரேலை வீழ்த்தக் கூடிய அபாயத்தில் முனைப்புற்று நிற்கிறது.
அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியை விட பலமுள்ள எஸ். 300 ஏவுகணை தகர்ப்பு பீரங்கிகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்குவது பிராந்தியத்தில் பாரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவும் போலந்து, ருமேனியாவில் அணு ஏவுகணைகளை நிறுத்த முயல்வது இன்னொரு பதட்டமாக உள்ளது.
இத்தகைய பின்னணியில் அமைதியா ? அழிவா ? என்ற கேள்விக்கு பதிலே இல்லாத நிலையில் இஸ்ரேல் தனது அறுபதாவது ஆண்டை சந்திக்கிறது. என்னதான் இருந்தாலும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் இன்னமும் கிடைத்துவிட்டதாகக் கூற முடியாது. நாளும் பொழுதும் அச்சத்துடன் வாழ்வதே அவர்களுடைய அவல வாழ்வாக உள்ளது. பாலஸ்தீனத்தில் சுதந்திர நாட்டை என்று இஸ்ரேல் ஏற்படுத்துகிறதோ அன்றுதான் இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற நாடாக மாறும் என்பதே உண்மையாகும். அச்சப்பட்ட அரசியலே இஸ்ரேல் நடாத்தும் படுகொலைகளுக்கு ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரச்சனையானது அமெரிக்க அதிபர் புஸ்சின் காலத்தில் தீராவிட்டாலும் இஸ்லாமிய பின்னணி கொண்ட கறுப்பரான பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானால் புதிய வழிகள் பிறக்கும் என்றும் சிலர் எதிர் பார்க்கிறார்கள். பாலஸ்தீனத்தில் அமைதி வந்தால் இலங்கையில் அமைதி வருவதை எவராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
அலைகள் மத்திய கிழக்கு விவகாரப் பிரிவிற்காக க. புவனசுந்தரம்

நன்றி : அலைகள்

Thursday, May 8, 2008

மீண்டும் பிரச்சனையை கிளப்பும் டென்மார்க் பத்திரிகைகள்


டேனிஸ் மக்கள் கட்சியை கண்டித்து 26 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் !
முகமது (நபி) கேலிச்சித்திர விவகாரத்தின் பின்னர் தற்போது டென்மார்க்கில் டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்ட புதிய விளம்பரப் புகைப்படம் இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்மணி ஒருவர் முகத்தை மூடி பர்தா ஆடை அணிந்து டேனிஸ் நீதிமன்ற இருக்கையில் இருந்தபடி எமது டென்மார்க்கை திருப்பித்தா என்று கேட்பதுபோல வெளியிட்ட புகைப்படமே இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
டேனிஸ் அடிப்படை அரசியல் விசயங்களில் முக்கியமானது நீதித்துறை, அதை அவமதிப்பதுபோல டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள புகைப்படமானது மிகவும் கீழ்த்தரமான கேவலமான செயல் என்று கொன்ஸ்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரொம் எப்கன்சன் தெரிவித்தார்.
டேனிஸ் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவி கெலதொனிங் போன்ற தலைவர்கள் ஏற்கெனவே இது குறித்து கருத்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக்கிய டேனிஸ் பிரமுகர்களும் களமிறங்கியுள்ளதால் விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் வென்ஸ்ர கட்சித் தலைவரும், வெளிநாட்டு அமைச்சருமான எலமன் ஜென்சன், பிரபல எழுத்தாளர் பெனி ஆனர்சன், முன்னாள் தேசிய வங்கித் தலைவர் எரிக் கூப்மேயர் உள்ளிட்ட 26 பிரபலங்கள் டேனிஸ் மக்கள் கட்சியின் செயலைக் கண்டித்து பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர். டேனிஸ் மக்கள் கட்சியின் விளம்பரப்படம் டேனிஸ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த டேனிஸ் மக்கள் கட்சித் தலைவர் பியா கியாஸ்கோ 26 முன்னாள் தலைவர்களின் கண்டன அறிக்கையானது டென்மார்க்கில் உள்நாட்டு பிரச்சனைகளை விளைவிக்கும் எனபது போல தெரிவித்தார். இந்த விஷயத்தில் டென்மார்க் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் நிலைப்பாடு அவருடைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவிக்கு மிதப் பெரிய இடையூறை விளைவிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
டென்மார்க்கில் முன்னர் வெளியான முகமுது (நபி) அவர்களின் கேலிச்சித்திரங்கள் டென்மார்க்கிற்கும் இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருந்தது.இதன் மூலம் டென்மார்க் ஒரு மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்போது வெளியாகியிருக்கும் படம் டேனிஸ் நீதித்துறைக்குள்ளேயே மூக்கை நுழைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் டென்மார்க் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையை கிளப்ப இருப்பது தெரிய வருகிறது.
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசில மனுசன கடிச்ச கதையா இருக்குதுன்னு சொல்றது போல அன்னைக்கு ந்த பத்த்ரிகைகள் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகம்மது நபி அவர்களை கேலி செய்யும் விதத்தில் சித்திரங்களை இட்டபோடே அதனை கண்டித்து இருந்தால் இன்று ஆட்சிக்கே ஆப்பு வர்ற சூழ்நிலை வந்து இருக்காது. இனியேனும் டென்மார்க் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?

உளறலின் உச்சியில் கைப்புள்ள (ஜார்ஜ் புஷ்)

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம்
இந்தியர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் உணவுப் பற்றாக்குறையும், விலையேற்மும் அதிகரித்திருப்பதாக அபாண்டமாக கூறியுள்ள அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம் என மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர். ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையைவிட இது அதிகமாகும். இந்த வர்க்கத்தினர் இப்போது அதிகம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் தரமான உணவை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
இதனால் உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. காரணம் இந்தியர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்து இந்தியர்களை எரிச்சலடைய வைத்தது.
பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் புஷ்ஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு வழக்கம் போல மெளனச் சாமியாராக உள்ளது.
இந்த நிலையில் இன்னொரு அபாண்டத்தை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காஸ் ஸ்டான்சல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்து விட்டது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே வெளியிலிருந்து வரும் எரிபொருளை அதிகம் நம்பியிருக்காத நிலையை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. இது அமெரிக்காவின் நலனுக்கு முக்கியமானது.
புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. கடந்த 30 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையம் எதையும் அமெரிக்கா கட்டவில்லை.
புஷ் கருத்துக்கு சப்பைக்கட்டு:
நாடுகள் வளர்ச்சியடைவது நல்ல விஷயம்தான். இதனால் பெருமளவு மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
அதிபர் புஷ் கருத்தைப் பொறுத்தவரை இப்படித்தான் குறிப்பிட விரும்புகிறேன். மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ளும்போது அசைவ உணவுகளைப் பிரியப்பட்டு சாப்பிட நேரிடலாம். இதனால் உணவுக்காகப் பயன்படும் கால்நடைகளின் தேவை அதிகரித்து, அந்த கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களும் அதிகம் வேண்டியுள்ளது.
இந்த தீவனங்களில் சோளம், கோதுமை அல்லது இதுபோன்ற ஏதாவது பண்டங்கள் இருக்கலாம். இதனால்தான் விலைவாசி அதிகரித்துவிட்டது. எனவே உலக அளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றத்துக்கு இதுபோன்ற காரணங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்றார்.
பயோ எரிபொருள் உற்பத்திக்காக உணவுதானியங்களை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது பற்றிய கேள்விக்கு ஸ்காட் பதிலளிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் உணவுப்பொருட்களின் விலை ஏறக்குறைய 43 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதில் நீங்கள் குறிப்பிடுவது போல பயோஎரிபொருள் தயாரிப்புக்கு உணவுதானியங்களை அதிகம் பயன்படுத்தியதால் இந்த விலையேற்றத்தில் அதன் பங்கு வெறும் 1.5 சதவீதம்தான்.
மற்றபடி விலையேற்றத்துக்கு முக்கிய காரணமான, பெரும் பங்கு வகிக்கின்ற, அதிகரித்துவரும் தேவை, இன்னும் உதாரணத்துக்கு வேண்டுமென்றால் நீங்களெல்லாம் (செய்தியாளர்கள்) சொல்வதுபோன்ற எரிசக்தி விலைஉயர்வு, ஆஸ்திரேலியாவில் தட்பவெட்ப மாற்றங்களால் விளைவுகள் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் கோதுமை உற்பத்தியில் பிரச்னை ஆகியவற்றால் உணவுப்பொருள்களின் விலைவாசி உயர்ந்திருக்கலாம்.
அன்னிய நாட்டு எரிபொருளை சார்ந்திருப்பதை ஈடுசெய்ய உள்நாட்டிலேயே பயோஎரிபொருளை உற்பத்தி செய்கிறோம். இதற்காக உணவு தானியங்களை பயன்படுத்துவதால் உணவுப்பொருள் விலையேற்றத்தில் அதன் பாதிப்பு தெரியத்தான் செய்கிறது. ஆனால் அதன் தாக்கம் மிகக்குறைவுதான் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார் ஸ்காட்.

என்னமோ இதுக்கு முன்னாடி இவுங்கோ சொன்னத எல்லாம் இந்த உலகம் நம்பிட்டா மாதிரியும் இப்போ இவுங்கோ சொல்லுறதையும் அப்படியே நம்பிடப் போறது போலையும் இருக்கு திருவாளர் பொய்யின் திலகம் அண்ணன் புஷ் சொல்லுறது.போற போக்கப் பார்த்த புத்தருக்கு அடுத்ததா ஞானோதயம் கிடைசது அண்ணன் கைப்புள்ளைக்கா தான் இருக்கும்.

தலைவர் மகளுக்கு கல்யாணம் தவறாம வந்துடனும்.சரியா.

புஷ் மூத்த மகள் திருமணம்-காதலனை மணக்கிறார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்கிறது. காதலனையே கைபிடிக்கிறார் ஜென்னா. அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கும் ஹென்றி ஹேகர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேம்ப்டேவிட் ஓய்விடத்தில் அதிபர் புஷ் தனது மனைவி லாராவுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஹென்றி ஹேகர் நேரில் சென்று ஜென்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.
வழக்கமான தந்தைகள் போல அப்போதைக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் புஷ். பின்னர் மகள் ஜென்னாவின் கருத்தை அறிந்து காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினார். திருமண ஏற்பாடுகளையும் செய்தார்.
வருகிற சனிக்கிழமை (10ம் தேதி) அன்று டெக்சாஸ் நகரில் கிராஃபோர்டு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணை வீட்டில் இந்த திருமணம் விமரிசையாக நடைபெறுகிறது. இதற்காக அந்த பண்ணை வீடு விழாக் கோலம் பூண்டுள்ளது.
திருமணத்தின்போது மணமகள் ஜென்னா, ஆஸ்கார் டி லா ரென்டா கவுன் அணிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
மணமகளுக்கு தோழிகளாக 14 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஜென்னாவின் தங்கை பார்பரா புஷ்ஷும் ஒருவர். திருமண மோதிரத்தை தேர்ந்தெடுக்க ஹேகருக்கு ரொம்ப உதவியாக இருந்தாராம் 'நாத்தனார்' பார்பரா.
அந்த மோதிரத்தில் ஹேகர் குடும்பத்தின் பரம்பரை வைரக்கல்லுடன் நீலக்கற்களும் இடம்பெற்றுள்ளன.
நன்றி : தட்ஸ் தமிழ்

Tuesday, May 6, 2008

மூன்று ட்ரில்லியன் டாலர்

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம்
நோபல் பரிசு வென்ற உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி பள்ளி விரிவுரையாளர் லின்டா பில்மேஸ் ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியிட்ட 3 டிரில்லியன் டாலர் போர்” (1 பில்லியன் 100 கோடி; 1 டிரில்லியன் 1000 பில்லியன்) என்ற புத்தகத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம் என்று கூறியுள்ளனர்.
போர்கள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது இரண்டாம் உலகப் போரின் பிரதான கருத்தாக இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு அது வெறும் கற்பனை என்று உணரப்பட்டது. தற்போதைய பொருளாதார அறிஞர்கள் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு போர் ஒரு பெரும் காரணமே என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
எந்த நோக்கத்திற்காக இராக் மீது அமெரிக்கா படையெடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற ஜார்ஜ் புஷ் கூறும் நோக்கமல்ல. உலகிற்கே தெரிந்த கச்சா எண்ணெய் விவகாரத்தில்தான் இராக் படையெடுப்பின் நோக்கம் நிறவேறவில்லை என்று இந்த ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது.
போர் துவங்கும் முன் பேரல் ஒன்றுக்கு 25 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் இன்று 120 டாலர்களாக அதிகரித்துள்ளது. இராக் போர் எதற்காக துவங்கப்பட்டது என்பது குறித்த அனைவரது கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறும் இந்த நூலின் ஆசிரியர்கள் கச்சா எண்ணெணெய்யை மலிவாக பெறவேண்டும் என்ற அந்த நோக்கம் அமெரிக்காவிற்கு படுதோல்வியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனால் எக்சாந்மொபைல் உட்பட சில எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த பணம் ஈட்டியுள்ளனர். இந்த நிறுவனங்களின் லாபமும்இ பங்கு விலையும் அதிகரித்ததுதான் மிச்சம் என்று இந்த நூல் கூறுகிறது. இந்த புத்தகத்தில் இராக் போருக்காக அமெரிக்கா செலவு செய்யும் தொகைகள் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்கள் பல உள்ளன. அனைத்தும் அரசு ஆவணங்களிலிருந்து பெறப்பட்டதுதான் என்று இந்த நூலின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இராக் போர் அமெரிக்கர்களுக்கு இலவச மதிய உணவைப் பெற்றுத் தரும் என்று அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்து வருவதற்கு மாறாக இந்த நூல் சில அபாரமான புள்ளி விவரங்களை தெரிவிக்கிறது. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலர வரி செலுத்தும் ஒவ்வொரு அமெரிக்கனும் 1.7 பில்லியன் டாலர்களை இழக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நூல்.
இராக்கில் போரை நடத்துவதற்கான செலவுகள் மட்டும் மாதமொன்றிற்கு 12.5 பில்லியன் டாலர்கள். ஆப்கானிஸ்தானையும் சேர்த்துக் கொண்டால் 16 பில்லியன் டாலர்கள்.
16 பில்லியன் டாலர்கள் (16 ஒ 100 ஒ 40 கோடி) என்பது ஐ. நா. வின் ஆண்டு பட்ஜெட். உலக சுகாதாரக் கழகத்தின் ஆண்டு பட்ஜெட் தொகையைக் காட்டிலும் இது 4 மடங்கு அதிகம். ஆப்ரிக்க நாட்டிற்கு அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு அளிக்கும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். மேலும் உலகம் முழுதும் கல்வியின்மையைப் போக்க செலவு செய்யும் தொகையைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம்.
இந்த 16 பில்லியன் டாலர் தொகை வெறும் போரை நடத்துவதற்கான அன்றாட செலவுகள் மட்டுமே. நிர்வாக செலவுகள் என்று காட்டப்படும் கணக்குகள் ஒரு ஏமாற்று வேலை என்று கூறுகிறது இந்த நூல். அதாவது தற்போது செலவு செய்யும் தொகைகளுக்கு மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் அதிகமான தொகைகள் கணக்கு புத்தகங்களுக்கு வருவதில்லை என்று இந்த நூல் அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல் வளைகுடாப் போரில் ஈடுபட்ட 7 லட்சம் அமெரிக்க போர் வீரர்களில் 45 விழுக்காடு ஊனமுற்றோர் இழப்பீட்டுத் தொகை கோரியுள்ளனர். இந்த 45 விழுக்காட்டினரில் 88 விழுக்காட்டினருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டுமே ஆண்டொன்றிற்கு 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.இதுவரை இராக் போருக்கு பலியானதாகக் கூறப்படும் அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4இ000 என்றால் இதற்காக கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை தற்போது 28 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்த போருக்காக உண்மையில் செலவிடப்படும் அதிர்ச்சியளிக்கும் தொகை விவரங்களை நிர்வாகம் திறம்பட மறைத்து வருகிறது என்றும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற ஆய்விலிருந்தும் தப்பித்து வருகிறது என்று‌ம் இந்த நூல் கூறுகிறது.
மிகவும் மரபான ஒரு கணக்கீட்டின் படி பார்த்தாலே இராக் போர் ஓரு 3 ட்ரில்லியன் டாலர் போர் என்று கூறும் இந்த நூல் அமெரிக்க பொருளாதாரம் தாங்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நூல் அமெரிக்காவின் எதிர்கால அயலுறவுக் கொள்கைகளை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நன்றி : அலைகள்

செயற்கை கோள் மூலம் அண்டை நாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்கா

அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தளத்தை சீனா இரகசியமாக நிர்மாணித்து வருவதை: அமெரிக்காவின் உளவு செய்மதி படம் பிடித்துள்ளது !

அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தை சீனா இரகசியமாக நிர்மாணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது . இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் உளவு செய்மதி - (சாட்டிலைட்) படம் பிடித்து உள்ளதாகவும் சீனாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த செய்மதி படம் காட்டுவதாகவும் தற்போது இந்த படங்கள் லண்டனில் வெளிவரும் பத்திரிகைக்கு ஒன்றுக்கு கிடைத்துள்ளதாகவும். அந்த பத்திரிகை தான் இச் செய்தியை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹைனான் தீவில் உள்ள சன்யா தளத்தில் பூமிக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு அதற்குள் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் அமெரிக்க செயற்கைகோளின் படங்கள் மேலும் தெரியப்படுத்துவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடபடுகிறது

நன்றி :அலைகள்