Monday, June 2, 2008

சாதாரணக் குற்றவாளியை கூட தீவிரவாதியாக மாற்ற முடியும்-மீடியாக்களின் தொடரும் சாதனை




திருச்சியில் சிக்கிய நெல்லை வாலிபர் வீட்டில் சோதனை! (தலைப்பேஎவ்வளவு தூக்கலா இருக்கு எதோ ஒசாமா பின் லேடனையே பிடிசிட்ட மாதிரிஎன்னமா ஒரு பில்டப்)

செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008

கடையநல்லூர்: திருச்சியில் 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி கோட்டை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சமஸ்பிரான் தெருவில் மின்சார வயர்கள், 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராஜாமுகமது என தெரியவந்தது. அவர் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதும், போலி முகவரி கொடுத்து மூன்று பாஸ்போர்டுகள் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கோட்டை போலீசார் (?) ராஜாமுகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தீவிரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருக்கிறதா, என விசாரணை நடத்தப்பட்டது.

ராணுவத்தில் இவர் எந்த பிரிவில் பணியாற்றினார், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவு அல்லது தொழில்நுட்ப பிரிவில் அவர் வேலை பார்த்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜாமுகமதுவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றி பயிற்சியளித்து வரும் துவாக்குடி அருகேயுள்ள காட்டூரை சேர்ந்த பேராசிரியர் (பேராசிரியர் பெயரை இன்னும் கண்டு பிடிக்க வில்லையோ என்னவோ )ஒருவரிடமும், கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தென்காசி அருகேயுள்ள ராஜாமுகமதுவின் வீட்டில் திருச்சி தனிப்படை போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அச்சன்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

திருச்சி தனிப்படை போலீசாரும் நேற்று சோதனை நடத்த தென்காசிக்கு வருவதாக அச்சன்புதூர் போலீசார் தெரிவித்தனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்




ஆட்டயப் போட்டதுல வீட்டக் கட்டுது இஸ்ரேல்


ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் புதிய வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்

Monday, 06.02.2008, 09:21am (GMT)

மத்திய கிழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியாக பாலஸ்தீனர்களும் சர்வதேச சமூகத்தினரும்

கருதும் ஒரு இடத்தில் யூதக் குடியேற்றக்காரர்களுக்காக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றை

இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இத்திட்டம், ஜெருசலேமில் தங்களது நிலையை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இத்திட்டம் சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.மன்ற தீர்மானங்களையும் நிச்சயமாக மீறுகிறது என்று பாலஸ்தீன அரசு கூறியுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் அல்மர்ட், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் சமாதானப் பேச்சுக்களை நாளை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்

இந்தியாவின் அமைதிக்கு ஆப்பு- ஆட்சிக்கு வந்ததும் அதிரடி

மீண்டும் பொடா: பிஜேபி உறுதி

.

Monday, 02 June, 2008 11:06 AM
.
புதுடெல்லி, ஜூன்.2: கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் பிஜேபி கையில் எடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
.
புதுடெல்லியில் நேற்று பிஜேபியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில், தலைமை உரையாற்றிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், நாட்டில் தற்போது 200 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 7 மாநிலங்களில் ஆட்சி செய்யும் மிகப்பெரிய தேசியக் கட்சி பிஜேபி தான் என்று தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ள எல்.கே.அத்வானி வெற்றிப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதே சமயம் மாற்றங்களை கொண்டு வரும் கட்சியாகவும், இளைஞர்களின் கட்சியாகவும் பிஜேபி உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கட்சியின் அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது பிஜேபியின் முடிவு என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு பிஜேபி தொடர்ந்து அளித்து வந்த நெருக்குதலால்தான் மகளிர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறு பவர்களால் ஏற்படும் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சர்வக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தேசிய அளவில் கருத்தொற்றுமை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழிக்க பொடா அல்லது அது போன்ற ஒரு கடுமையான சட்டம் மறுபடியும் கொண்டு வரப்படும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.

மதச்சார்பின்மை கொள்கை ‘தர்ம நிர்பேக்ஷ்’ (மதங்களிடம் அலட்சியமாக இருப்பது) என்று இருப்பதற்கு பதிலாக ‘பாந்த் நிர்பேக்ஷ்’ (பல்வேறு மதங்களிடம் நடுநிலையோடு இருப்பது) என்று மாற்றம் செய்யப்படவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். மதச்சார்பின்மை தொடர்பாக பிஜேபியின் வரையறைதான் சரியான ஒன்று என்றும் அவர் கூறினார்.

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள பிஜேபி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் தனது செயல்திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிகுறிகள் இந்த கூட்டத்தில் தெளிவாக தென்பட்டன.

நன்றி : மாலைச்சுடர்

மனித நீதி பாசறை- யார் இவர்கள் ?













































நன்றி : அனீஸ் ரஹ்மான்

Sunday, June 1, 2008

சபரிமலையும் சர்க்கரைப் பொய்யும் - இதுவரை ஏமாந்த பக்தர்கள்

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்

ஞாயிறு, ஜூன் 1, 2008

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.


சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.


கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.

சபரிமலை பூசாரி ராகுல் ஈஸ்வர் ஒரு பேட்டியில், "மகரவிளக்கு பற்றிய சர்ச்சை தெளிவான பக்தர்கள் மனதில் என்றும் இருந்ததில்லை. அறியாமையில் இருக்கும் பக்தர்கள் தான் இதை இவ்வளவு காலமாக நம்பி கொண்டிருந்தார்கள். மகரவிளக்கும் மகர ஜோதியும் வேறு வேறு. மகர ஜோதி என்பது ஒரு புனிதமான நட்சத்திரம். மகர விளக்கு பொன்னம்பல மேடு என்னுமிடத்தில் இருக்கும் தீபத்தில் இருந்து உருவாக்கபடும் ஒளி," என உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். இதை தொடரந்து மகரவிளக்கினை உருவாக்குவதில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.


மகர ஜோதியினை பற்றிய உண்மை வெளியானதற்கு பிறகு கட்டமைக்கபட்ட புனிதங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையுமா

நன்றி :poetry-tuesday.blogspot.com/2008/06/sabari-malai-makaravilakku.html