Saturday, March 22, 2008

தென்காசி தமிழக முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினை !




[ இந்துக்கள் மத்தியில் ஆதரவுகிடைக்கவில்லை. எனவேஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீதுகுண்டு வீசினால் ஆதரவு கூடும் ...]

தென்காசியில் RSS இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவு படுத்தி அயோக்கியத் தனங்களை செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். முஸ்லிம்கள் தங்களுடைய வணக்க வழிபாடு செய்யும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுத்து, அந்த பிரச்சினையை சகோதர்களாக வாழ்ந்து வரும் இந்து-முஸ்லிம் மக்களை இரு கூறாக பிறித்து கொலை செய்தவர்களும் இந்தக் கும்பல் தான்.மேலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டி குரங்கு பிடிங்கிய ஆப்பு போல தனக்கு தானே குண்டு வைத்து கொண்டு முஸ்லிம்களின் மீது கவனத்தை திருப்பி குளிர் காய நினைத்து அவர்களே மாட்டிக் கொண்ட செய்தி நாம் அறிந்த ஒன்று தான்.

குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவுகூடும் என்பதால் செய்ததாக அவன் வாக்குமூலம் கொடுக்கிறான்.

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமியபயங்கரவாதிகளை கைது செய் என்றுஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவவெறியுடன் பேசிய RSS இந்து முன்னனி படையின் தலைவன் கூற்றை நாம் கவனிக்கவேண்டும்.எப்படியென்றால், ''தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும்தாக்குதல் நடத்தப் படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்தவருடம் ஹிந்து முன்னனித் தலைவர் குமார்பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார்.பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போதுமீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர்.இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின்ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களைஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி இயக்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம்"";இவ்வாறு அவன் அறிக்கை விட்டான்.

அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து அயோக்கியர்களான RSS, இந்து முன்னனி காரர்களை கைது செய்தது. பயங்கரவாதிகளை கைது செய்! கைது செய்! என்றுகூப்பாடு போட்ட அந்தத் தலைவன், கைதுசெய்த உடனே இந்த கும்பல் அவர்களை மீட்டெடுக்க ஓர் இந்துத்துவ வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் இவர்களின் யோக்கியதை இந்த நாடுஅறியாத ஒன்று என்று இவர்களின் எண்ணம்.

நடுநிலையான மக்களின் கவனத்திற்கு

1 ) ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்குண்டுவைக்கப்பட்ட சதிச்செயலின் பின்னனியில்இராம.கோபாலனின் பங்கு முக்கியமானது.குண்டுவெடிப்புக்கு முன்னரே தீவிரவாதிகளின்அடுத்த குறி தென்காசிதான் என்று பாசிசபயங்கரவாதி இராம.கோபாலன் தொடர்பீதிகிளப்பி வந்ததும், தென்காசிக்கே சென்றுமுஸ்லீம்களை பற்றி அவதூறு பரப்பி கலவரச் சூழலை உருவாக்கி வந்ததும் இதனை தெளிவாய் வெளிப்படுத்தும்.

2 ) பார்ப்பனியத்தோட அடியாள் படை,ரவுடி, கொலைவெறிக் கும்பல் துப்பாக்கியோடுமத்தியப் பிரதேசத்தில் ஊர்வலம். இது 30ஆம்தியதி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாகவந்திருக்கிறது

3 ) RSS கும்பலின் கொலை செய்யும்அமைப்பான பஜ்ரங்தள் 2007ஆம் ஆண்டுஆரம்பத்தில் மஹாராஷ்டிரா நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கொண்டார்கள். விசாரணையில் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைத்தது, வேறு சில மசூதிகளில் குண்டு வைத்தது எல்லாம் இவர்கள் தான் என்று தெரிந்தது. இன்னும் பழியை முஸ்லீம்கள் மீது போட ஏதுவாய் முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோடு நாண்டட்டில் மாட்டிக் கொண்டார்கள்

4 ) சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது.இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, குஜராத் கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா வீடியோவில் ஒரு எம்.எல்.ஏ. வாக்கு மூலம் கொடுக்கிறான்.

5 ) தற்போது RSS கும்பல் IT துறையில் IT மிலன் என்ற பெயரில் நேரடியாக நுழைந்துவிட்டார்கள்.

முஸ்லிம்கள் கவனத்திற்கு:-

முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இன்று , இந்தியா எதிர் கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பேராபத்து இந்த பாசிசக் கூட்டம். அன்று நாட்டிற்கு தொண்டு செய்யும் பணி என்ற போர்வையில் வளர்ந்த இந்த பாசிச சக்தி இன்று வளர்ந்து எல்லா பேரழிவு ஆயுதமும் இயக்கக்கூடிய அளவு பயிற்சி பெற்று இருக்கிறான்.பொதுவாக பாசிச சக்திகளின் சதி வலையை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.எப்படியென்றால் தெருவில் போகும் நாயை எல்லோரும் சேர்ந்து கொல்ல வேண்டுமென்றால் ஓர் சூழ்ச்சி செய்ய வேண்டும். எப்படி யென்றால்''அந்த நாய் ஓர் வெறி நாய்"" என்ற ஓர் வதந்தியை பரப்பினால் போதும். எல்லோரும்சேர்ந்து அதை கொன்று விடுவார்கள். இந்தர்ய
Hate policyI ஐ தான் உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்ட, பரப்பப்பட்ட வதந்தி ''தீவிரவாதியென்று"".


எனவே தான் எப்படி சாதுவான நாயை எல்லோரும் கொல்ல முன்வந்தார்ளோஅப்படித்தான் சாதுவான முஸ்லிம்களை கொல்ல உலகம் முழுவதும் தயாராகி வருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நிலைமை உற்று நோக்கும் அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் இன்னும் இவர்களை வாழவிட்டால் இந்தியர் களை இவன் வாழ விடமாட்டன்.

இஸ்லாமியர்களே! மறுமையைமறந்து இம்மையில் பொருள் தேடி அலையும்நாம் இது போன்ற கயவர்களை கண்டும்காணாமல் வாழ்ந்து விடலாம் என்ற ஆசையில் ஓடிக் கொண்டிருந்தால் உங்களை ஓட ஓட கொல்வதற்காகவே இவர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்பதனை ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க சபதம் ஏற்போம்.ஒற்றுமை கொள் சமுதாயமே! இந்தியாவையும்இஸ்லாமியர்களையும் இவர்களின் கைகளில்இருந்து காப்போம். ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கிடுவோம்.

அன்புடன்

பிர்தௌஸ்

Friday, March 21, 2008

பன்றியோடு சேர்ந்த கன்றும்.............



இஸ்ரேல் மொசாத் போன்ற உளவு அமைப்பு?


மும்பை : "இஸ்ரேல் நாட்டின் "மொசாத்' போன்ற வலுவான உளவுப்பிரிவை இந்தியா அமைக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க முடியும்!'மும்பை வந்த, இஸ்ரேல் உளவுத்துறை நிபுணர் ஜாகி ஷாலோம், இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.


இஸ்ரேல் "மொசாத்' உளவு அமைப்பு, மிகவும் வலுவானது; உளவுத் தகவல்களை சேகரிப்பது மட்டுமின்றி, ரகசிய நடவடிக்கைகளிலும் இறங்கி, எதிரியை பூண்டோடு ஒழிக்கும் சக்தி வாய்ந்தது.ஷாலோம், சமீபத்தில் மும்பையில், மேற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார்.


பேட்டியில் அவர் கூறியதாவது:


இந்தியாவில் "ரா' உளவு அமைப்பு உள்ளது; லஷ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பற்றி தகவல்களை சேகரிக்கிறது. ஆனால், அத்துடன் தங்கள் பணிகளை முடித்துக் கொள்கின்றன.
அவர்களை ஒடுக்கும் செயல்களையும் அவை மேற்கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செயல்பட்டு, பயங்கரவாதிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் கலக்க வேண்டும்; அதற்கு அவர்களில் ஒருவராக உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் சேர்ந்து விட வேண்டும். அது மிகவும் கஷ்டமானது தான். ஆனால், அதை துல்லியமாக செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் ஒவ்வொரு நடமாட்டமும் தெரியும். அவர்களின் நடமாட்டத்தை அறிந்து, அவர்களை முழுமையாக ஒடுக்குவது தான் உளவுப் படையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதில் தான் முழு கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆதரவில்லாமல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்ய முடியாது. இந்த விஷயத்தை, முழு ஆதாரங்களுடன் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். பாக்., அரசு ஆதரவில்லாமல், காஷ்மீர் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல ஆண்டாக தாக்குதல் நடத்த முடியாது. பயங்கரவாதிகளை ஒடுக்க, இந்தியாவுக்கு "மொசாத்' போன்ற உளவுப்படை தேவை. அதன் உளவு முறைகளை பின்பற்றினால், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கலாம். அதற்காக, இஸ்ரேலுடன் கூட்டு சேரலாம்.இவ்வாறு ஷாலோம் கூறினார்..


நன்றி: தினமலர்

Thursday, March 20, 2008

இஸ்லாமிய பெண்கள் அமைப்பு! ஓர் பார்வை!-ஜம்மிய்யத்துன்னிஸா


மார்ச் 8 – உலகம் முழுவதும் ஓர் சடங்காக அனுஷ்டிக்கப்படும் ''உலக மகளிர் தினம்"" கொண்டாட்டங்கள் நிறைவடைந்து விட்டன.பெண்கள் அமைப்புகள் என்று உலகில் இருக்கும் எல்லா அமைப்புகளும் அன்றைய தினம் கூடி பெண்கள் நிலைப்பற்றி விவாதித்து முடித்திருப்பார்கள். உலகில் பல்வேறு நாட்டு அரசு அரசமைப்புகளும் இந்த மகளிர்தினத்தை முன்னிட்டு பல சலுகைகளை பெண்களுக்கு வழங்குவதாக பெருமையடித்து முடித்திருப்பார்கள். மேலும் பெண்ணுரிமை பற்றிபேசும் பல குறும்புத்தியுள்ள பெண்ணியக்கங்கள் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாத்திற்கு எதிரான பல பொய்களையும் அள்ளி வீசியிருப்பார்கள்.


இத்தருனத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பல செய்தி ஊடகங்களிலும் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியஎதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து முடித்திருப்பார்கள். இத்தகைய சூழலைஎதிர்க்கொள்ள ஓர் இஸ்லாமிய பெண்கள்அமைப்பு அவசியம் என்ற கருத்தினை மையப்படுத்துவதே இந்த சிறு கட்டுரையின் நோக்கமாகும்.


உலக மகளிர் தினம் தோற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால், இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


பெண்கள் தினத்தின் முக்கிய நோக்கம்


பெண்கள் தினத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து அநீதிகளும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே! ஆனால் பெண்கள் தினம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மேற்சொன்ன நோக்கம் ஓரளவாவது நிறைவேறி வருகிறதாஎன்றால் ஓர் அதிர்ச்சியளிக்க தக்க உண்மையே காணக்கிடைக்கிறது.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்,கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தேவருகிறது. மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தை விட, நாகரீக முன்னேற்றம் என்ற சதவீதத்தை விட பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.எந்தெந்த ரீதியில் அவர்களுக்கு எதிராக அநீதங்கள் நடக்கிறது என்பதை பட்டியலிட்டால் ஏடு தாங்காது.குறிப்பிடத்தக்க சிலவற்றை கூறுவதென்றால் வரதட்சனைக் கொடுமை, பாலியல் கொடுமை,குடும்ப வன்முறை, பெண் சிசுக் கொலை என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால்மேற்சொன்ன எந்த ஓர் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்ள எந்த பெண்ணியக்க வாதிகளும் முன்வரவில்லை. காரணம் அத்தனை பெண்ணியக்கங்களும் பெண்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கொடுமைகளை தடுத்துநிறுத்த சக்தியற்ற காரணத்தால் இஸ்லாத்தைநோக்கி அவர்கள் பார்வை திரும்பியுள்ளது.காரணம் மேற்கொண்ட கொடுமைகள்அனைத்தும் பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்களிடமே நடக்கிறது என்பது தான் நிரூபிக்கப்பட்ட உண்மை!


ஆனால் பெண்ணுரிமை பேசும்இயக்கங்களோ, இஸ்லாத்தில் பெண்களுக்குபாதுகாப்பு இல்லை என்றும் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் கூப்பாடு போடுகின்றார்கள். ஆனால் இஸ்லாமோ ஒருபெண்ணுடைய ரோமம் கூட பாதுகாக்கப்படவேண்டியவை என போதித்து அதைகடைப்பிடித்தும் வருகிறது. இந்த ரீதியில்உலகில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிட்டு காட்டுவது இந்தகட்டுரையின் நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியபெண்கள் அமைப்பு எப்படி செயல்பட வேண்டும்என்பதே நாம் பெற வேண்டிய தெளிவு. அந்த ரீதியில் பெண்களுக்கு இஸ்லாம் தந்த உரிமைகளின் ஓர் பார்வையை நம் மணக்கண் முன் கொண்டு வருவோம்.


கல்வி – கல்வியைக் கற்பது முஸ்லிமானஆண், பெண் இருபாலரின் மீதும்கடமையாகும். நபி (ஸல்) அவர்கள்


கல்வியறிவை இஸ்லாமிய ஆண் மற்றும்பெண்கள் தேடி கற்பது பர்ளு கிபாயா(கட்டாயம்) ஆகும் - இமாம் கஸ்ஸாலி(ரஹ்)


பத்ருப் போரில் முஸ்லீம்களிடம் தோல்வியைத்தழுவி கைதிகளாக்கப்பட்டவர்களிடம் ஒருநிபந்தனையை நபி (ஸல்) அவர்கள்விதித்தார்கள். கைதிகளில் இருந்தகல்வியாளர்கள் முஸ்லீம்களுக்கு கல்வியைபோதித்தால் விடுதலை அளிக்கப்படும் என்பதுதான் அந்த அற்புத நிபந்தனை. இதன்காரணமாக முஸ்லீம்களில் உள்ள ஏராளமானஆண், பெண்கள் கல்வியை கற்றுக்கொண்டார்கள். அந்த மக்கா கைதிகளிடம் கல்வியைக் கற்றுக் கொண்ட பெண்களில்ஒருவர் தான் உம்முல் முஃமினீன் ஹப்ஸா(ரலி) அவர்கள்.இஸ்லாத்தைப் போல பெண் கல்விக்குஅவ்வளவு ஆர்வமூட்டித் தூண்டிய மார்க்கம்இவ்வுலகில் வேறு இல்லை.


இஸ்லாம்கல்வியோடு ஒழுக்கத்தையும்இணைத்துள்ளது.பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கல்வியை மையப்படுத்தி இல்லை,ஒழுக்கத்தையே மையப்படுத்தியுள்ளது. எனவேதான் இஸ்லாத்தின் அஸ்திவாரமாக ஒழுக்கம் பேணப்படுகிறது. ஒழுக்கமில்லாத ஒழுக்கம்தவறிய கல்வி, அது எத்தகைய கல்வியாக இருந்தாலும் அதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் பாலியல் கொடுமைகள் தான். அதில் முதன்மையானது விபச்சாரம் தான். இஸ்லாம் கற்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.விபச்சாரத்தின் முன்னோடியான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் தடைசெய்கிறது.


விசுவாசிகளே! நீங்கள் விபசாரத்தின் பக்கம்நெருங்காதீர்கள், ஏனெனில் நிச்சயமாக,அதுமானக் கேடானதாகவும், வேறுகேடுகளின் பால் இழுத்துச் செல்லும் தீயவழியாகவும்இருக்கிறது.


(17:32)


விபச்சாரத்தின் முதல் நெருக்கம் ''பார்வை""தான். இருபாலாரும் ஒன்று சேரும் போது கண்தான் சந்திப்பை ஏற்படுத்துகின்றது. சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி அறிக்கையின்முடிவு இப்படிச்சொல்கின்றது. காதால் கேட்பதால் 20% மனதில் பதிகின்றன,கண்ணால் பார்ப்பதால் 30% மனதில் பதிகின்றன, காதால் கேட்டுக்கொண்டு,கண்ணால் பார்த்தால் 50% - 75% மனதில்பதிகின்றது. இந்த ரீதியில் தான் இஸ்லாம்ஆண்கள், மற்றும் பெண்கள் மத்தியில் ஓர் பர்தா என்ற திரையை போட்டு வேறுபடுத்துகின்றது. இதை அறியாத பெண்ணியக்க வாதிகள் இதை அடிமைத் தனம்என்று கூக்குரலிடுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.


இத்தகைய சூழ்நிலைகளை எதிர் கொள்ள இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் அதிகம் உருவாக வேண்டும். போலி பெண்ணியக்கவாதிகளின் போலி வேஷத்தை கலைக்க வேண்டும். போலி பெண்ணியக்கவாதிகளின் உண்மையான முகத்தையும், அவர்கள் பெண்களை எப்படி சீரழித்து வருகின்றார்கள் என்பதை ஓர் கண்ணோட்டம் பார்ப்போம்


1) அவர்கள் பெண்கள் கல்வி என்ற பெயரில்,வீட்டிலிருந்து பெண்களை வெளியே கொண்டு வருவார்கள்.


2) ஆணையும், பெண்னையும் கூட்டாக படிக்க வைப்பார்கள்.


3) பெண்களின் இயற்கையான வெட்கத்தை விரண்டோடச் செய்வார்கள்.


4) பெண்சுதந்திரம் என்ற பெயரில், பெண்களை வெளிவுலகிற்கு இழுப்பார்கள்.


5) ஆணும், பெண்ணும் சமம் எனும் கோஷத்தை பெண்களை வைத்தே எழுப்பச் செய்வார்கள்.


6) ஆண் மற்றும் பெண்கள்இரண்டரக் கலந்து செயல்பட வைப்பார்கள்.


பிறகு இயற்கை (ஷைத்தான்) தனது வேலையை செய்யத் தொடங்கும். காமம், மனோஇச்சை தலைதூக்கும். ஆங்காங்கே நைட் கிளப் உருவாகும்.அது சிறிது சிறிதாக வளர்ந்து விபச்சார விடுதியாக மாறும். பிறகு அரசு அனுமதியுடன் நிர்வாணிகள் மன்றம் தோன்றும். இது நாளடைவில் பெண் சுதந்திரமாக பேசப்படும். இந்த நிலைக்காகத்தான் உலகின் அனேக பெண் இயக்கங்கள் போராடி வருகின்றன.எனவே தான் இன்று உலகம் முழுவதும் பெண்கள் ஓர் போகப் பொருளாக பயன்படுத்தப் படுகின்றது.


இதை முற்றிலும் தடுக்கும் சக்தி இஸ்லாத்திற்குமட்டுமே உண்டு என்ற உண்மைநிலையைஉணர்ந்தே இஸ்லாத்தை வேறடி மண்ணோடு கிள்ளி எறிந்திட வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் காணப்படுகின்றது. அதனால்தான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை வழங்கவில்லை, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கின்றது, அவர்களை இருட்டறையில் அடைத்து வைத்திருக்கின்றது என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.மேற்கத்திய உலகின் போலி சித்தாந்தத்தால் கவரப்பட்ட சில முஸ்லிம் பெயர்தாங்கிய பெண்கள்கூட, முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமை இல்லை, அவற்றை நாம் போராடித்தான் பெற வேண்டும் என்று இயக்கம் கண்டு போலியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் உண்மை நிலை அறியாத நமது சகோதரிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் இந்த விஷமப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு அதை நோக்கி செல்லவும் செய்கின்றனர்.


இஸ்லாம் உண்மையில் பெண்களுக்குவழங்கி இருக்கும் உரிமைகள் என்ன?
ஏனைய சமூகங்களைவிட இஸ்லாம் எந்த அளவுக்குபெண்களை கண்ணியப்படுத்துகின்றது என்பனவற்றை விளக்கிச் சொல்லிடவேண்டியது இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் தலையாயகடமை. இதை நிறைவேற்றிட வேண்டி இன்று தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான், ஜம்மிய்யத்துன்னிஸா என்ற பெண்கள் அமைப்பு. இதில் நம் பெண்களையும் இணைத்துஉண்மையான பெண் விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


நன்றி :திப்பு சுல்தான்

இந்த ரீதியில் நாம் நம் சமுதாயத்தைபலபடுத்தினோம் என்றால்


அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும்,கொலை வெறித் தாக்குதல்களும், பெண்கள், குழந்தைகள்,இளைஞர்-கள், வயோதிகர்கள் - இவர்களுக்-கெதிரான பாலியல் வன்முறைகள், சித்தரவதைகள், கொலைகள் என்றும், பொதுச் சொத்துகள், பாட சாலைகள், கல்விக்கூடங்கள்,மருத்துவமனைகள், வாழ்விடங்-கள், வரலாற்றிடங்கள் இவைகளை அழித்தல், நாசம் செய்தல் என்றும் எப்போதும் அச்ச உணர்வுகளுடனும், தாங்கள் எப்போது இலக்காக்கப் படுவோமோ என்ற பயந்த பலஹீனமான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்-டிருக்கும் சமூகம் எது? என்றுவினவினால்! வெட்கித் தலை-குனியும் நிலையில் முன் நிற்கும்முதல் சமூகம் எம் முஸ்லீம் சமூகமே!


ஏன் தெரியுமா?


உலகில் கொள்கை ரீதியாக தொடங்கி, தனி மனித வாழ்வு வரை நடந்தேறும் அத்துனை எதிர்ப்புகளும், சவால்களும் முஸ்லீம்க-ளுக்கெதிராக என்று மட்டும் திரும்பி நிற்பது, ஏன்? தெரியுமா? ஓரிறைக் கொள்கையில் 'புரட்சி"என்று தொடங்கி, கொள்கை ரீதியாக,சித்தாந்த ரீதியாக, அரசியல் ரீதியாக, இஸங்கள் ரீதியாக,மதரீதியாக என்று ஒட்டுமொத்தமாக உலகில் தோன்றி தலைதூக்கி மனித இனத்தையே கபளீகரம் செய்யும் அனைத்து சித்தாந்தங்களுக்கும், முதல் முன் தடையாக, சவாலாக நின்று, வென்று ஒட்டுமொத்த மக்களையும்தன் பக்கம் ஈர்க்கும் மாபெரும் கொள்கையாக இஸ்லாம் இருப்பதே. அதைச் சார்ந்து முன் மொழிபவர்களாக முஸ்லீம்கள் இருப்பதே.


என்றாலும் இத்தகையஅழிவுகள் ஏற்படுத்திய தாக்குதலுக்கான காரணம் 'பலமின்மை" என்று ஒரே வரியில் முடித்து ஓராயிரம் விளக்கங்கள் குறிப்பிடலாம்.ஆம் அத்தனை பலஹீனங்கள்.அன்று பலமுடன் வாழ்ந்து சென்ற கொள்கைவாதிகளின் வீழ்ந்து மடியும் வாரிசுகளுக்கு…!பலஹீனம் என்றால் ஈமானில் (இறைநம்பிக்கையில்) ஏற்பட்ட பலஹீனம் என்று குறிப்பிடுவதற் கில்லை. காரணம் ஈமானிய பலம் மட்டும் இருப்பதினால் தான் இத்துனை அடக்கு முறைகளிலும் முஸ்லீம்களாகவே நின்று வீழ்கின்றது எம் சமூகம். வீழ்ச்சிக்கான காரணம் 'பலம்" பலம் சேர்ப்பதில் ஏற்பட்ட பலஹீனம். 'பலம்" என்றால் தனி மனிதன் தரித்திருக்கும் பலம். அவனுடைய அறிவு ரீதியான, மன ரீதியான இவைகளுக்கு அப்பாலும்உடல் வலிமையில் மிளிர்கின்ற பலம், ஆயுத பலம்.ஆம் உயிரினங்களில் ஊர்வன, நடப்பன, பறப்பன என்ற எல்லாவற்றிலும் பலம் வாய்ந்தவை தான் ஆளுமையுடன் வழி நடத்துகின்றது தன் கூட்டத்தினை. உலக அளவில் பலம் பொருந்திய வல்லரசாக கருதப்படும்அமெரிக்காதான் ஐ.நா. சபையையே அடக்கி வைத்துள்ளது.


இன்றைய மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய நாடுகளில் பலவும் உலகை அச்சுறுத்துவதற்கான முதல் காரணம் பலம் தான் என்றால் அது மிகை யல்ல. இவர்கள் தங்கள் வெளிப்படையான அந்தரங்கமான எதிரிகளையும், இன்னும் இவர்களுக்கே தெரியாமலே இவர்களைஅழித்துவிட கங்கணம் கட்டும் எதிரிகளையும், பயமுறுத்தி வைத்திருப்பது, பயம் கொள்ள வைத்திருப்பது தாங்கள் தரித்திருக்கும் பலத்தின் மூலமாகதானே! இவர்கள் தரித்திருக்கும் பலம் படைத்தவன் அறிவுறுத்தியது.


ஆம் இறைவன் தன்வழிகாட்டி மூலம் (திருக்குர்ஆன்) மனித சமூகத்திற்கு அறிவுறுத்திய பலம் இது. இதைப் பற்றிப் பிடித்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர்கள் பேதமில்லாது மிளிர்கின்றார்கள். அவர்கள் யாராக இருந்தாலுமே. ஆம்! உலகில் சில இடங்களில் சிற்சில கூட்டங்கள் மேற்கூறப்பட்ட வல்லரசுகளுக்கே இன்று மாபெரும் அச்சுறுத்தலாக, சவாலாக விளங்குகின்றன. இதன் விளைவு தீவிரவாதத்திற்கு, பயங்கரவாதத்-திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா பிரகடனப்படுத்தி மொத்த வல்லரசுகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு இச்சிறு கூட்டத்திற்கெதிராய், ஆஃப்கானில் இருந்து தொடங்கி, ஈராக் வழியாக ஈரானையும் தொடரமுடிவு செய்து படை பலனையும்,ஆயுதங்களையும், பின்னேசவப்பெட்டிகளையும் அனுப்பிக்கொண்டிருப்பதையும் இன்று நம்கண்களின் முன் காணமுடிகின்றது.


இன்னொரு கரையில் பாலஸ்தீனிலும், லெபனானிலும் மிக சொற்ப எண்ணிக்கையில் படைத்தவனுக்காக பலம் தரித்து நிற்பவர்களுக்கெதிராய் தொடங்கிய யுத்தத்திலும் இன்று அழிந்து வரும் இஸ்ரேலிய பலத்தையும் எம் கண்களின் முன் காண முடிகின்றதென்றால் அதன் பலம்(ன்) இச்சிறு கூட்டங்கள் தாங்கியிருக்கும் ஈமானிய எழுச்சியுடன் கொண்ட, இறைவன் சொல்லும், இறைத்தூதர் சொல்லும் பலம் ''ஆம்,


அவர்களை (நிராகரிப்பவர்களை) எதிர்பதற்காக உங்களால் இயன்ற அளவுபலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறியமாட்டீற்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்.அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச்செலவு செய்தாலும் (அதற்கான நற்;கூலி)உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்.(அதில்) உங்களுக்கு ஒரு சிறுதும் அநீதம்செய்யப் படமாட்டாது""


அல்க்குர்ஆன் (8:60)


'பலம்" கொண்டு தங்களை தயார் படுத்திய எல்லோருக்கும் பலன் ஒரே மாதரியாக கிடைப்பதில்லை. காரணம் அல்லாஹ் கூறுகின்றான் -


(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி (யின் மூலம் தீர்ப்பை) தேடிக் கொண்டிருந்தால்,நிச்சயமாக அவ்வெற்றி (முஸ்லீம்களுக்கு) வந்துவிட்டது. இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்குநலமாக இருக்கும், நீங்கள் மீண்டும் (போருக்கு)வந்தால் நாங்களும் வருவோம்.உங்களுடைய (பலம்) படை எவ்வளவுஅதிகமாக இருந்தாலும், அது உங்களுக்குஎத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவேஅல்லாஹ் முஃமீன்களோடு தான் இருக்கின்றான்.(என்று முஃமீன்களே கூறிவிடுங்கள்).


அல்குர்ஆன்(8:19)


ஒ! முஸ்லீம் சமூகமே! இன்று நம் சமுதாயம் எல்லா துறைகளிலும் பலஹீனமடைந்து காணப்படுகின்றது. உலகத்திற்கு நாகரித்தை கற்று தந்த இந்த சமூகம் கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பலஹீனமடைந்து காணமுடிகிறது. மருத்துவ உலகின் தந்தை என்று போற்றப்பட்ட முஸ்லீம் சமூகம் ஒரு மாத்திரைக்கு மேற்கத்தியவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை! உலக பொருளாதாரத்தையே மாற்ற வல்லமை கொண்ட முஸ்லீம்கள் மேற்கத்தியவர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்கும் நிலை !


இந்த நிலை மாற வேண்டுமென்றால் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் பலப்படுத்த வேண்டும். அந்த பலம் ஈமானிய பலம், கல்வி பலம், பொருளாதார பலம்,ஆயுத பலம் போண்ற எல்லா துறைகளிலும்கவணம் செலுத்த வேண்டும்.


இந்த ரீதியில் நாம் நம் சமுதாயத்தைபலபடுத்தினோம் என்றால் மீண்டும் இவ்வுலகில்தலைநிமிர்ந்த சமுதாயமாக முஸ்லீம் சமுதாயம்மாறும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை! இன்ஷா அல்லாஹ்!


நன்றி : -காதர் அலி


Jazakkallahu hairen

Tuesday, March 18, 2008

நீலிக் கண்ணீர் ...................

முஸ்லிம்களிடையே ஆதரவு பா.ஜ., புதிய திட்டம்























லக்னோ: ""கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானிக்கு, முஸ்லிம்களிடையே ஆதரவு திரட்ட, பெரிய அளவில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் லோக்சபா தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிக அளவில் போட்டியிட டிக்கெட் கொடுக்க உள்ளோம்,'' என்று, பா.ஜ., மத்திய தேர்தல் குழு உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் கூறினார்.


லக்னோவில், அவர் கூறியதாவது:

காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எங்கள் கட்சி சார்பில், முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். முஸ்லிம்களை ஒன்று திரட்ட, ஐதராபாத்தில், வரும் 4ம் தேதி முதல் துவங்கி மூன்று நாள் மாநாடு நடத்த உள்ளோம். அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெறும் வகையில், பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இதன் மூலம் சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரி அல்ல என்பதை நிரூபிப்போம்.இவ்வாறு உசேன் கூறினார்
Thanks: Dinamalar
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்கினிய இசுலாமிய சமுதாயமே..........................
இன்று இவர்கள் வடிப்பது எப்படி பட்ட நீலிக் கண்ணீர் எனபது எல்லாருக்கும் தெரியும்.இது மட்டும் அல்ல இன்னும் இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டி நம் வீடுகளுக்கே வந்து நம்முடைய கால்களை பிடித்து விட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.காரணம் ஆட்சி வேண்டும் என்றால் இவர்கள் அடிவரை வேண்டுமானாலும் விழுந்து தொழுவார்கள்.இனிய சமுதாயமே இன்றைய இவர்களின் கூற்று இது இஸ்லாமியர்களின் இன்றையகால எழுச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி. இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று தங்கள் ஆட்சி காலங்களில் அடக்கு முறைகளை கையாண்ட இவர்கள் இறைவனின் மிகப் பெரும் கிருபையால் இன்று இஸ்லாமியர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் அழிந்து விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். இது இறைவன் இந்த சமுதாயதிற்கு கொடுத்த ஒரு மிகப் பெரிய வெற்றி.

ஒரு வேளை இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் ...........

இதற்கு முன்பு இவர்கள் ஆட்சியில் இருந்த போது சுடு காடு முதல் இராணுவ வீரனின் சவப் பெட்டி வரை அனைத்திலும் ஊழல் செய்து உடம்பை வளர்த்தார்கள். போதாக் குறைக்கு இன்னும் இந்தியா ஒழிற்கிறது ஒழிர்கிறது என்றார்கள்.எங்கே ஒளிருது என்று பார்த்தால் இவர்கள் செய்த கலவரங்களால் எரியும் இஸ்லாமியர்களின் குடிசை களிலும் இன்னும் அப்பாவி பெண்களை கர்ப்பழித்து கொளுத்தி விட்டத்தின் நெருப்பிலும் இந்த இந்திய ஒளிர்ந்து கொண்டிருந்தது.இனிய சமுதாயமே. சிந்திப்போம் .இனியும் ஒரு முறை இந்த இந்தியா ஒழிற வேண்டுமா ?.அப்படி ஒழிர்ந்து விட்டால் இனி இங்கே இஸ்லாமியர்கள் வாழ முடியுமா. இன்று இந்தியாவை பொருத்த வரை இங்கே நாம் எடுக்கும் முடிவு தான் இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.இதற்கு மேலே இருக்கும் செய்தி கூட ஒரு உதாரணம். இது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வெற்றி.
இது நீடிக்க நாம் செய்ய வேண்டியது
இது நீடிக்க நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.இஸ்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு கொடுத்த ஒரு அருட் கொடை அது தான் சகோதரத் துவம் இது தான் இன்று நாம் பற்றி பிடிக்க வேண்டிய ஒரு கயிறு.இதை விட்டால் இனி நாம் நிலைமை கேள்விக் குறிதான். இந்தியாவின் முதுகெலும்பு இன்று நாம் தான்.இன்னும் சிந்திப்பீர்.இவர்களை எதிர் கொள்ள இன்று நாம் செய்ய வேண்டியது இந்திய அளவில் இவர்களை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட ஒரு தலைமையை தேர்ந்து எடுப்பது தான்.இன்றைய சூழலில் அது பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (Popular Front Of India)என்ற ஒரு தலைமையால் மட்டுமே இன்று எம்போவேர் (Empower India) இந்தியாவை உருவாக்க முடியும்.இஸ்லாமியர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க இன்றே இணைவோம் . சர்ச்சைகள் களைந்து சத்திய மார்க்கம் தலையெடுக்க தயாராவோம் .இந்தியாவில் இருந்து பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் துடைத்து ஒழிக்க ஒன்று படுவோம்ஓரணியில்.

உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

Monday, March 17, 2008

ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்




அநீதிக்கெதிராக ஆர்பரிக்கும் மனிதநீதிப்பாசறையினர்



16.03.2008 அன்று காலை 11 மணியளவில் மனித நீதிப் பாசறை மதுரை மாவட்ட தலைவர் திரு. ஏ.முகம்மது காலித் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாய நல்லூர் கிராமத்தில் ஃபாசிச வெறியர்களான ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி தீவிரவாத கும்பல் மரணமடைந்த பெண்ணின் உடலை அடக்க சென்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலைவெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ள மதவெறி ப(பி)டித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. டி.எஸ் அன்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியோர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நீதிப் பாசறையின் மாநில பேச்சாளர் திரு. கே. சையது இப்றாஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சட்டக் கல்லூரி மாணவர் திரு. ராஜா முகம்மது நன்றியுரை கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளில் இருந்தும் நூற்றுக்காணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
திருவாலவாய நல்லூர் முஸ்லிம் ஜமாத்தினர் அனைவரும் மதவெறி கொண்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அன்பு அவர்களால் பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதால் ஜமாத்தின் முன்னாள் செயலாளர் திரு. சேட் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து நமக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. உடனடியாக வக்ஃப் வாரியத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்களும், அரசில் இசுலாமியர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமுமுக வும் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த ஃபாசிச வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அறிக்கை நகல்


இறைவன் மிகப் பெரியவன்
முஸ்லிம் ஜமாத்
திருவாலவாயநல்லூர் - 625221 திருவாலவாயநல்லூர் அஞ்சல் -
வாடிப்பட்டி தாலுகா - மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அடக்கஸ்த்தலமான கப்ரஸ்தான் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தபோது ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச சிந்தனை கொண்ட சில விஷமிகளா எதிர்த்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தற்போது ஆர்.டி.ஓ விசாரனையில் உள்ளது.இந்த சூழ்நிலையில் 14.03.2008 அன்று முஸ்லிம் பெண்மணி ஒருவர் வஃபாத்தானார் (மரணித்தார்). அந்த ஜனாஸாவை(பிரேதத்தை) 15.03.2008 அன்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியை சோந்த சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1 சிறுவார் உட்பட 5 முஸ்லிம்க் படுகாயமடைந்துள்ளனர்.இதன் பின்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் அன்பு, ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட 28 முஸ்லிம்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் பலர் வயோதிகர்கள். ஆனால் எதிர் தரப்பில் ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆக அன்பு இந்து முன்னணிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் இத்தகைய கொடுமைகளையும் பல அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளோம்.


குறிப்பாக வக்ஃபு வாரியத்திடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று பல மாதமாகி விட்டது வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை நேரடியாக சந்தித்து வக்ஃபு நிலத்தை மீடு்க வேண்டும் என்று மனு நாம் கொடுத்துள்ளோம்.

மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெறியவில்லை. எனவு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பொய்வழக்குகளையும் கவணத்தில் கொண்டு பள்ளிவாசல் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ் அன்பு மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஜமாத்தின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


இவன்சேட்முன்னாள் செயலாளர்

என்னை உண்மை கண்டறியும் என்னை சோதனைக்கு உட்படுத்துங்கள்! -ஆர்.பி.சிறீகுமார்

ஆர்.பி. சிறீகுமார், குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்த போது, காக்கி உடையணிந்து உண்மையை உரத்து அறிவித்த அம்மாநில உளவுப் பிரிவின் தலைவர். குஜராத் உள்துறை செயலர், அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா மற்றும் பலரும் மிரட்டியும் எதற்கும் அஞ்சாதவர். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகார வர்க்கம், எவ்வாறு தங்கள் சொந்த நலன்களுக்காக முஸ்லிம் எதிர்ப்பு கதையாடல்களை கட்டவிழ்த்துவிட்டது என்பதை அவர் ‘தெகல்கா’ ஆங்கில இதழில் ஹரிந்தர் பவேஜாவுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.


நீங்கள் குஜராத் காவல் துறையின் அங்கமாக இருக்கிறீர்கள். மோடியால் நேரடியாக பாதிக்கப்படுகிறீர்கள். அங்கே நீதி எந்த அளவுக்கு மோசமாகப் போனது, சார்புடன் செயல்பட்டது?


இன்றும் அங்கு நீதி மிகுந்த சார்புடன் தான் இயங்குகிறது. அது, அதிகார மட்டத்திலிருந்தே அவ்வாறு உள்ளது. குற்றவியல் நீதித்துறையின் தொடக்க புள்ளியான நிலைய அதிகாரியிலிருந்தே அது சீரழிந்துள்ளது. நீங்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் போதே தோல்வி தொடங்குகிறது. இதனை நான் பல அறிக்கைகளின் வாயிலாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளேன். முதல் அறிக்கையை ஏப்ரல் 24, 2002இல் அளித்தேன். இதனை நானாவதி ஷா கமிஷனுக்கு அளித்த எனது மனுவிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முற்படும் போதே அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பார்வைகளைப் பதிவு செய்யாமல், அதிகாரிகள் நீங்கள் விட்டு விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என விஷயங்களை திரிக்கத் தொடங்குகிறார்கள். அடுத்ததாக சம்பவத்தின் மூர்க்கத்தை திரிக்கிறார்கள். 2002இல் கலவரத்தை வழிநடத்திய இந்துத்துவ தலைவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட முற்படும்போது, அவர்கள் காவல் துறையினரால் மிரட்டப்பட்டார்கள். முதலில் காவல் துறை இந்த திரிபு வேலையை தொடங்குகிறது. அரசு வழக்கறிஞர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.இந்த அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவர்கள். வி.எச்.பி.யின் பொறுப்பாளர்கள் தான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களின் பெயர்களை அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது பெரும் வெட்கக்கேடு. 25 - 35 வயதுக்கு உட்பட்ட அய்.ஏ..எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் தான் இந்த வி.எச்.பி. பொறுப்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். குஜராத் அரசின் சட்டத்துறை இப்படிப்பட்ட நபர்களை தேர்வு செய்துள்ளது.நாளை ஒருவேளை சட்ட அமைச்சர் அசோக் பட்டை பார்த்து யாராவது கேள்வி எழுப்பினால், அவர் நேரடியாக, தெளிவாக பதிலளிப்பார். மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்யும் பொழுது எங்களால் என்ன செய்ய முடியும்? இந்திய சட்டத்துறை வரலாற்றில் முதன் முறையாக, உச்சநீதிமன்றம் தலையிட்டு சட்ட நடைமுறையின் குளறுபடிகளின் காரணமாக 2000 வழக்குகளை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.


அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் அரசாங்கத்தின் தாள லயத்திற்கு ஏற்ப நடனமாடுகிறார்கள் என்பதை எப்படி விளக்குகிறீர்கள்? அவர்கள் கடமை உணர்வின் நிலை என்ன?


இது பதிலளிக்க முடியாத ஒரு பெரிய கேள்வி. பிப்ரவரி 27, 2002 அன்று மாலை (சபர்மதி ரயில் எரிப்பு கோத்ராவில் நிகழ்ந்த அன்று) மோடி ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் டி.ஜி.பி.யும் அகமதாபாத் காவல் துறை ஆணையரும் பங்கேற்றனர். அங்கு மோடி இவ்வாறு கூறினார், “இந்துக்களின் கோபம் மூன்று நாட்களுக்கு தணியட்டும்.” கமிஷனுக்கு அளித்த எனது மூன்றாவது மனுவில் இதனை குறிப்பிட்டுள்ளேன். குறுக்கு விசாரணையின் போது நானாவதி கமிஷனுக்கு நான் தகவல்கள் அளிப்பதை அவர்கள் தடுத்தார்கள். தொடக்கத்திலிருந்தே நான் ஒட்டுமொத்த சம்பவங்களின் பதிவேட்டை பராமரித்து வந்தேன். அந்தப் பதிவேட்டின் எழுத்துகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி, அவை எழுதப்பட்ட தேதியை கண்டுபிடிக்குமாறு நானே கேட்டுக் கொண்டேன்.


என்னையும் உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு உட்படுத்துமாறு (Narco Analysis & Brain Mapping Test) அவர்களிடம் சவால் விடுத்தேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது தான் இது போன்ற சோதனைகள் நிகழ்த்தப்படும். இங்கே நாம் ஓர் இனப்படுகொலையைப் பற்றி பேசுகிறோம். 2000 பேர் அழித்தொழிக்கப்பட்ட ஒரு மாபெரும் இனப்படுகொலை. ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இத்தகைய உண்மை அறியும் சோதனைகள் நிகழ்த்தப்படவில்லை? எனது பதிவேட்டில் இடம் பெறுகிறவர்கள், மோடி மற்றும் இந்த ‘களங்க நடவடிக்கை’யில் வாக்குமூலம் அளித்தவர்கள் என இவர்கள் அனைவரும் தங்களை இந்த சோதனைக்கு உட்படுத்த ஏன் முன்வரக்கூடாது? ஆனால் ஒரு எம்.பி.யோ அல்லது ஒரு மக்கள் தலைவரோ கூட இதனைக் கோரவில்லை.


சோதனையை செய்யும்படி யாரிடம் கோரினீர்கள்? அதனை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளீர்களா?



கமிஷனுக்கு அளித்த மூன்றாம்/நான்காம் மனுக்களில் அது உள்ளது. அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராக இத்தகு செயல்களில் ஈடுபடக்கூடாது என எனக்கு மூன்று மணி நேர அறிவுரையும் மிரட்டலும் விடுத்தார் உள்துறை செயலர். இதற்கு மேல் எத்தகைய வீழ்ச்சி உங்களுக்கு வேண்டும்? அனைத்து அரசு ஊழியர்களும் நானாவதி - ஷா கமிஷனுக்கு அனுசரணையால் ஒத்துழைக்க வேண்டும் என துணை விதிகளை அரசாங்கமே விதித்த போதும், அதனை எதிர்த்து தகவல்களை தாக்கல் செய்த ஒரே நபர் நான் தான். அதிகார வர்க்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் பாலமாய் விளங்குகிற கேபினட் செயலர், இதுவரை ஒரு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை.அவர் வெளியே வந்து ஒரு முறை சொல்லட்டும், இந்த இனப்படுகொலைக்கும் முதல்வருக்கும் தொடர்பே இல்லை என்று! அவர் அவ்வாறு செய்யமாட்டார், அவர் பயப்படுகிறார். காவல் துறையினரில் என்னைத் தவிர வேறு யாரும் இவ்வாறு அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. உங்கள் அதிகாரிகளை அறிக்கைகள் தாக்கல் செய்யவிடாமல் தடுக்கிறீர்கள் என்றால், இது எத்தகைய செயல், இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது?


கமிஷனுக்கான அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா ‘தெகல்கா’ பதிவுகளில் உள்ளார். அவர் இப்பொழுதுதான் எழுதப்பட்ட பிரதியை வாசித்ததாக கூறுகிறார். அவர் உங்களை பலவந்தப்படுத்த முயன்றாரா?


மிகச்சரியாக சொன்னீர்கள். அவர் எனக்கு விளக்கமளித்த போது சில தருணங்களில் என்னை மிரட்டவும் செய்தார். அவர் சொன்னார், “இங்கே பாருங்கள் சிறீகுமார், நீங்கள் அரசு தரப்பு சாட்சியம். இந்த கமிஷனின் விசாரணையைப் பொருத்தவரை அப்படி ஒரு அரசு தரப்பு சாட்சியமே கிடையாது. இது கிரிமினல் வழக்கு நடைமுறை அல்ல.'” என்னைப் போல் காவல் துறையில் 34 ஆண்டுகள் பணி புரிந்த ஒருவருக்கு கிரிமினல் வழக்கின் அடிப்படை நடைமுறைகள் தெரியும் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், நான் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் மிரட்டினார். நான் கமிஷனுக்கு சென்று அறிக்கை அளித்தால் பெரும் பிரச்சனைகள் உருவெடுக்கும் என்றார்கள். நான் மிரட்டப்பட்டபோதும் கமிஷனுக்கு நான்கு அறிக்கைகள் அளித்தேன். காவல்துறை எப்படி சார்புடன் இயங்கியது மற்றும் எப்படி நிவாரண முகாம்கள் பலவந்தமாக மூடப்பட்டு, அமைதியான சூழல் திரும்பியது போல் எவ்வாறு பொய் தோற்றம் உருவாக்கப்பட்டது என்பது போன்று ஏராளமான விவரணைகளுடனான தகவல்கள் என் அறிக்கைகளில் உள்ளது.இது, ஆகஸ்ட் 2002இல் தேர்தல் ஆணையம் லிங்டோவின் தலைமையில் குஜராத் வந்த நேரம். சூழ்நிலைமைகள் பற்றிய முற்றிலும் பொய்யாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் அரசாங்கம் தயாராக இருந்தது. அந்த நேரம் நான் ஓர் அறிக்கை தயார் செய்து, அதில் 154 தொகுதிகளில் பாதிப்பு உள்ளது என்பதை எடுத்துரைத்தேன். தலைமைச் செயலர், எவ்வாறு நான் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து இவ்வாறு மாற்றுக் கருத்து கொள்ள இயலும் என கேள்வி எழுப்பினார். நான் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்ற அறிக்கைகளை தொகுத்தளித்துள்ளேன் என்று தெரிவித்தேன். பின்னர் ஆகஸ்ட் 16, 2002 அன்று வெளியிடப்பட்ட ஆணையில் தேர்தல் ஆணையம் என் அறிக்கையின் மூன்று பகுதிகளை சுட்டிக்காட்டி, இது அரசாங்கம் அளித்த அறிக்கை பொய்யென நிரூபிப்பதாகக் கூறி தேர்தலை தள்ளி வைத்தது.


எப்படி உள்துறை செயலர், தலைமைச் செயலர் போன்ற பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிகிறார்கள்?


நாம் காணும் இன்றைய அதிகார வர்க்கத்தின் போக்கு மிகவும் மோசமானது. அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கும் தன்மையுடைய கொத்தடிமைகளாக மாற்றுவதன் மூலம் காரியங்களை சாதிக்கிறார்கள். உங்களுக்கு இட்லி பிடிக்கும் என்றால் நான் இட்லி அவித்து தருகிறேன், தோசை அல்ல. இப்போது நீங்கள் என்னையும், இட்லி அவித்து தர மறுக்கும் எனது நண்பரையும் எப்படி மதிப்பிடுவீர்கள்? ஏற்கனவே தங்களின் பணி உயர்வு நிமித்தமாக இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பது கச்சிதமாக நடைபெற்று வருகிறது.இது தவிர, அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கிடையே காக்காய் பிடித்தல் நடக்கிறது. இவை எல்லாம் நேரடி பலன் தரக்கூடியவை. உங்களுக்கு வெளிநாட்டுப் பணி, நல்ல துறையில் பொறுப்பு, அதுவும் செல்வாக்கு மிகுந்த துறையில், அங்கு தான் அதிக பணம் ஈட்ட இயலும். பணி இட மாற்றம், பணி நியமனம், தற்காலிக வேலை நீக்கம், வெளிநாட்டுப் பொறுப்பு, பணி உயர்வு, பணி ஓய்வுக்குப் பின் பொறுப்பு என இதுபோன்ற வசதிகளின் மூலம் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்திற்கு அழுத்தமான சமிக்ஞைகளை வழங்குகிறார்கள்.


இதனை எவ்வாறு சீர்படுத்துவது?


அதிகார வர்க்கத்தின் மீதான எனது நம்பிக்கைகள் பொய்த்து விட்டன. மக்கள் தான் முன் வந்து இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதிகாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். இங்கு நடைபெறுவது மிகவும் கொடிய கிரிமினல் செயல். இதனை ஜெர்மனியின் நாஜிக்களுடன் தான் ஒப்பிட்டாக வேண்டும்.


இத்தனை பெரிய கிரிமினல் நடவடிக்கையில் ஓர் அதிகாரியாவது தண்டிக்கப்பட்டாரா?


இல்லை, அனைவருமே கவுரவிக்கப்பட்டுள்ளனர்! முன்னாள் தலைமைச் செயலர் ஜி.அப்பாராவ் அரசியல் பாவைகூத்து பொம்மையாகவே உருமாறிப்போனார். அவருக்கு தலைமைச் செயலரின் சம்பளத்துடனான ஆறு ஆண்டு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சம்பளம், அதிகப்படியான பலன்கள். அவர்தான் தற்போது மின் வாரியம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதி ஆணையர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்கூட அவரது பணி தொடரும்.


காவல் துறை சீர்த்திருத்தங்கள் உதவுமா?


காவல் துறை சீர்திருத்தங்கள் சில பயன்களைத் தரும். இருப்பினும் நாம் கோருவது எண்ணங்களின் சீர்திருத்தமே. உளவுத் துறையில் நியமிக்கப்படும் அய்.பி.எஸ். அதிகாரிகள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை. ஆனால் நான் அய்ந்து மாதங்களில் பணி மாற்றம் செய்யப்பட்டேன். முதல்வர் அவர்களின் வன்மம் நிறைந்த மதவாத உரையைப் பற்றி நான் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்தேன். வேறு வழியின்றி அரசு அதனை சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. அந்தப் பேச்சுக்காக அல்க்யு பதம்சே (Alyque Padamse) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எந்தப் பலனும் கிட்டவில்லை. மக்களிடமிருந்து மாற்றம் வர வேண்டும். அவர்களிடம்தான் அதிகாரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு உள்ளது.


தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்


நன்றி:பிப்ரவரி 2008 Thalith murasu

வேகமாக பனி உருகிவருகிறது : ஐ.நா. எச்சரிக்கை

உலகின் பனிப் படலங்கள் முன்பெப்போதையும்விட வேகமாக உருகிவருகின்றன: ஐ.நா. எச்சரிக்கை

அல்ப்ஸ் மலைத்தொடரில் வேகமாக பனி உருகிவருகிறது உறைந்து நிற்கும் ஏரிகளான உலகின் பனிப் படலங்கள் பல முன்னெப்போதையும் விட மிக வேகமாக உருகியும் கரைந்தும் வருவது, வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக அரசாங்கங்கள் துரிதப்படுத்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பெரிய அளவிலும் தீர்மானமாகவும் திட்டமிடல் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி நிக் நட்டால் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் பனிப் படலங்கள் உருகிவரும் வேகம், கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் மேலாய் அதிகரித்துள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அல்ப்ஸ் மற்றும் பிரனே மலைத் தொடர்கள் உள்ளிட்டு ஐரோப்பாவில் இந்த இழப்பு மிக அதிகமாக உள்ளது என்றும் அங்கு 90களுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு வேகமாக பனி உருகிவருகிறது என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

விண்வெளி துறையைப் பற்றிய பாடப் பிரிவுகள்

சமீப காலங்கள் வரை மாணவர்கள் விண்வெளி துறை பற்றிய பாடப் பிரிவினைப் படிக்க வேண்டுமென ஆர்வம் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இல்லை என்கிற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது மாணவர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவது போன்று விண்வெளி துறையைப் பற்றிய பாடப் பிரிவுகள் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், சிறப்பு என்னவென்றால் இதனை "ஐ.எஸ்.ஆர்.ஓ.' எனப்படும் "இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்' இதனை வழங்குவதுதான்.

இதற்கென தனியே ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தும் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனமானது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பொன்முடி எனுமிடத்தில் அமையவுள்ளது.

இக்கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்றழைக்கப்படும். இங்கு ஸ்பேஸ் டெக்னாலஜி குறித்த இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பும், ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் ஸ்பேஸ் அப்ளிகேஷன் குறித்த ஒருங்கிணைந்த முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பும் வழங்கப்படும். அது மட்டுமின்றி, விண்வெளி ஆராய்ச்சி பற்றிய முதுநிலை பட்டங்கள், முனைவர் பட்டங்கள் குறித்த படிப்புகளும் படிப்படியாக வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப பாடத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றது. இங்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள்:

1. பி.டெக். ஸ்பேஸ் டெக்னாலஜி. இதில் சிறப்பு பாடப் பிரிவாக ஏவியானிக்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான மொத்த சேர்க்கை இடங்கள் 50.
2. பி.டெக். ஸ்பேஸ் டெக்னாலஜி ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங். இதற்கான மொத்த சேர்க்கை இடங்கள் 40.

முதுகலை பொறியியல் படிப்புகள்:

இங்கு ஐந்து வருட ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றது. இப்படிப்பானது ஐந்து வருட ஒருங்கிணைந்த அப்ளைடு சயன்ஸ் ஆகும். இதில் ஆய்வு பாடப் பிரிவுகளாக அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதில் சேர ஐ.ஐ.டி.க்களுக்கான சேர்க்கைக்கென நடத்தப்படும் "ஜாயின் என்ட்ரன்ஸ் டெஸ்டி'னை எழுத வேண்டும். இதன் மெரிட் பட்டியலுடன் ஐ.ஐ.டி.க்களில் எந்த பாடப் பிரிவையும் தேர்ந்தெடுக்காதவர்கள் இதில் சேர தகுதி பெறுவர்.

இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் சிறப்புமிக்க ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பாடத் திட்டங்களை வகுப்பதுடன் மாணவர்களுக்குக் கலந்துரையாடலும் வழங்குவர். இக்கல்வி நிறுவனத்திற்கென தனியே உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையம் உள்ளது. மாணவர்களுக்குப் படிப்பிற்கான செலவுகளை உதவித் தொகையுடன் ஐந்து வருடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது.

மேலும், மேற்கூறிய படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் விஞ்ஞானி/பொறியாளர் பதவியில் பணி நியமனம் வழங்கப் பெறுவர். எனவே, பல இந்திய மாணவர்களின் கனவான விண்வெளி ஆராய்ச்சியில் பிரகாசிக்க வேண்டும் என்ற நிலையினை இக்கல்வி நிறுவனத்தின் சேர்க்கை மூலம் வெற்றி கனியாக்கிக் கொள்ளலாம்.
இதுதவிர, படிப்பு மட்டுமின்றி உயர் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் வேலையும் கிடைக்கும்.

Thanks:
இரா. நடராஜன், உதவி இயக்குநர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம்
ஐ.டி.ஐ. வளாகம், கிண்டி, சென்னை } 600 032.

"உலமாக்கள் நலவாரியம்'

"உலமாக்கள் நலவாரியம்' அமைக்க முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை
சென்னை, மார்ச் 16: உலமாக்கள் நலவாரியம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலமாக்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சமூக நல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் இம் மாநாடு நடைபெற்றது.
இதில் இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் அ.

முகம்மது கான் பாகவி பேசியதாவது:

தமிழகத்தில் சுமார் 15,000 பள்ளி வாசல்கள் உள்ளன. இதில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த பள்ளிவாசல்கள் 6,000 ஆகும்.
தமிழகத்தில் மார்க்க அறிஞர்கள் எனப்படும் "ஆலிம்கள்' 10 ஆயிரம் பேர் உள்ளனர். அரபிக் கல்லூரிகளில் 5 அல்லது 7 ஆண்டுகள் கடுமையான ஒழுக்க நெறிகளையும், கட்டுப்பாட்டுடனும் மார்க்கக் கல்வி பெற்றுத் தேர்ச்சி பெறுவோரே ஆலிம்களாக பட்டம் பெறுகின்றனர்.
ஆலிம்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல்களில் இமாம்களாக இறை பணியாற்றுகின்றனர்.
முஸ்லிம் சமுதாய மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், மார்க்க வழிகாட்டும் இமாம்களுக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரூ. 1000 முதல் ரூ. 4.000 வரை மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதுதவிர "மத்திம்கள்' எனப்படும் தொழுகை அறிவிப்பாளர்களாக 12 ஆயிரம் பேர் இறை பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1000 அல்லது ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஏதும் இல்லை.

இதனால், தங்களது குழந்தைகளின் கல்விக்குக் கூட செலவிட இயலாத நிலையில் தவிக்கின்றனர். இதனால், மதராஸôக்களில் படிக்க வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

எனவே, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இமாம்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேருக்கு அரசு உதவும் வகையில் உலமாக்கள் நலவாரியத்தை அமைக்க வேண்டும் என்றார் முகம்மது கான் பாகவி.

இம் மாநாட்டில் வக்ஃப் வாரியத் தலைவர் எஸ். ஹைதர் அலி, எம்.கே. அலாவுத்தீன் பாகவி, முகம்மது இல்லியாஸ் காசிமி, உபைதுல்லாஹ் ஹஜ்ரத், முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலர் சே.மு.மு. முகமதலி, ஏ.கே. முகம்மது அனீபா, தர்வேஷ் ரஷாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டில்லி அருகே கிராமங்களில் அதிர்ச்சி தகவல்

பெண்களின் கல்வியறிவு கணக்கெடுப்பு: டில்லி அருகே கிராமங்களில் அதிர்ச்சி தகவல்

குட்காவ்: டில்லி அருகே 62 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தியதில், மொத்தமே ஏழு பெண்கள்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது."அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முன்னேற்றம், குழந்தைகளை ஆரோக்கிய மாக வளர்ப்பது, அறியாமையை போக்குவது போன்றவை இத்திட்டத்தின் குறிக் கோள். திட்டத்தை அமல்படுத்த, அரியானா மாநிலம் மேவாடு பகுதியில் 62 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.
கல்வி அறிவு பெற்ற பெண்கள் பற்றிய புள்ளி விவரத்தில், அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.புள்ளி விவரம் எடுக்கப்பட்ட 62 கிராமங்களிலும், மொத்தமே ஏழு பெண்கள்தான் படித்தவர்கள். படித்தவர்கள் என்றால், கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள்.மேவாட் பகுதி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி சஞ்சன் தல்வால் கூறுகையில், "சமூகக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த, மேவாட் பகுதியில் 62 கிராமங் களிலும் படித்த பெண்கள் கிடைக்கவில்லை.இதனால், மற்ற இடங்களைச் சேர்ந்த பெண்களையே இங்கும் பணியமர்த்தியுள்ளோம். கிராமங்களில் இருந்து வெகு தொலைவில் பள்ளிகள் இருப்பதாலும், மூடப் பழக்கவழக்கங்களாலும், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால், மற்ற இடங் களிலுள்ள பெண்களைத் திரட்டி கல்விப் பயிற்சி அளிக்க முயற்சிகளை செய்துவருகிறோம்' என்றார்.

Thanks:Dinamalar

குட்டி, குட்டியாக பறக்கும் இயந்திரங்கள்: அமெரிக்காவுடன் இணைந்து சோதனை


பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் தங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது, கண்ணி வெடிகளை கண்டறிவது போன்ற பணிகளுக்காக, குட்டி பறக்கும் இயந்திரங்கள் உருவாக்கப் பட்டுள்ளன."மைக்ரோ ஏரியல் வெகிக்கிள்ஸ்' ( எம். ஏ. வி.,) என்ற, குட்டி பறக்கும் இயந்திரங்களை உருவாக்கும் பணியில், 10 ஆண்டுகளாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் பயன்பாடு குறித்த சோதனை, ஆக்ராவில் நடந்தது. அமெரிக்க ராணுவத்தின், தெற்கு ஆசிய பிரிவு லெப்டினென்ட் கர்னல் எரிக் ஸ்டிரினா இதில் பங்கேற்றார்.
இந்தியா, அமெரிக்கா உட்பட எட்டு நாடுகளை சேர்ந்த 12 குழுக்கள் இதில் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து நான்கு குழுக்கள் இடம் பெற்றன. ஐ.ஐ.டி., மாணவர்கள், இரண்டு குட்டி இயந்திரங்களை உருவாக்கி இருந்தனர்.குட்டி பறக்கும் இயந்திரங்கள், பேட்டரியில் இயங்குபவை. 30 செ.மீ., அளவில் உருவாக்கப்பட்டவை. சூட்கேசில், மடக்கி வைத்து விடலாம். "குட்டி இயந்திரங்கள் ஒரு கி.மீ., துõரத்துக்கு பறக்கும்; இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கண்ணி வெடிகளை படம் எடுக்கும்; சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை சென்சார் மூலம் அறியும்' என, நிபுணர்கள் கூறினர்.

Thanks : Dinamalar