Saturday, February 9, 2008

இந்த மாதிரி சின்ன நடவடிக்கைகள் மூலமாவது நாட்ட காப்பாத்துங்கய்யா!

02. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிரடி நீக்கம் :உளவுத்துறை அறிக்கையால் நடவடிக்கை


தமிழக அரசு திட்டங்களின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம், இரண் டாயிரம் ரூபாய் வரை அதிகாரிகள், ஊழியர் கள் லஞ்சம் வாங்குவதாக உளவுத்துறை கண் காணிப்பில் தெரியவந்துள்ளது.
மூவலுõர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித் தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதியுதவி, கலப்பு திருமண நிதியுதவி உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய ஆவணங் களை சமர்ப்பித்தாலும் சில அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் பெறுவதற்காக ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி தட்டிக் கழிக்கின்றனர்.
மேலும், விதிமுறைகளை தளர்த்தி உறவினர்கள், தெரிந்தவர்களை இத்திட்டங் களில் சேர்க்கின்றனர். நிதியுதவி கிடைத்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் வரை கமிஷனாக பெறுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு "மொட்டை பெட்டிஷன்' மூலம் புகார் அனுப்பினர். விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சிலர், ஊழியர்களுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதுகுறித்த, புகார்களும் வந்ததால் தற்போது உளவுத்துறை போலீசார், அரசு துறைகளை கண்காணித்து அறிக்கை அனுப்பி வருகின்றனர்.உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எந்த அதிகாரி எவ்வளவு லஞ்சம் கேட்டார் என்பது குறித்து நாங்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து சம்பந்தப் பட்ட துறைச் செயலர்கள், இயக்குனர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.


நன்றி ; தின மலர்

No comments: