Sunday, February 3, 2008

படித்ததில் பிடித்தது

நரேந்திர மோடிக்கு எதிராக பால்தாக்கரே! மதவெறியர்களுக்குள் போட்டி

காங்கிரஸின் கயமைத்தனத்தால் குஜராத்தில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் பா.ஜ.க. ஏதோ தேசிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துவிட்டதைப் போல நினைத்து பூரிப்படைந்து இருக்கிறது. நரேந்திர மோடியை பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று மிருகக்காட்சி சாலை யில் மிருகத்தை காட்டுவதைப் போல படம்காட்டி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் சங்பரிவாரின் ஊதுகுழல் துக்ளக் சோவால் வரவழைக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பாசிச எதிர்ப்பு முன்னணி மூலம் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காவல்துறையின் புண்ணியத் தால் சோவின் நிகழ்ச்சியிலும் ஜெலியின் விருந்திலும் கலந்துகொண்டு பாதுகாப் பாகத் திரும்பினார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் பா.ஜ.க.வால் அழைக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வெகுவாக விளம்பரம் செய்யப்பட்டது. தலைப்பாகையுடன் ரதத்தில் ஏறி கிருஷ்ணர் போல வாயில் சங்கு ஊதியபடியே போஸ் கொடுத்தார் மோடி.
ஆனால் ஏற்கனவே மும்பையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் மதவெறியன் பால்தாக்கரேவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடிக்க, தான் ஒருவன் மும்பையில் இருக்கும்போது இவன் யார் புதிதாக என்று கொதித்த தாக்கரே, மோடி வேலைகள் குஜராத்தில் மட்டுமே பலிக்கும் என்று கடுப்படித்ததுடன், ''மஹாராஷ்டிரா வில் மராட்டியர்களின் ஆட்சிதான் நடக்கும்; வேறு எவரும் இங்கு ஹீரோவாக முடியாது'' என்று புலம்பியிருக்கிறார்.
குஜராத்தில் முஸ்லிம்களை பயமுறுத்தி இந்துக்களின் பாதுகாவலர் என்ற இமேஜோடுதான் மோடி வெற்றி பெற்றிருக்கிறார் என்ற சங்பரிவாரங் களின் அரசியல் சூத்திரத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறார் தாக்கரே. இதே வேலைகளைத்தான் மஹாராஷ்டி ராவில் சிவசேனா செய்து வருகிறது என்பதை தன்னை மறந்தவராக உளறி யிருக்கும் தாக்கரே, 'முஸ்லிம்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபடலாம், அதனால் இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றும் கடைசியாக திரிகொளுத்தி இருக்கிறார்.
மதவெறியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் முஸ்லிம் எதிர்ப்பில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வது? இவர்களது அரசியலே ( வாழ்வாதாரமே )அதில்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நன்றி : இப்பி பக்கீர்

No comments: