Thursday, February 7, 2008

விற்பனைஆலோசனைகள் வரவேற்கப் படுகிறது !


03. கோமியம் விற்கிறது உத்தரகண்ட் மாநில அரசு



லக்னோ: உத்தரகண்ட் மாநில அரசு, தினமும் ஐந்தாயிரம் லிட்டர் கோமியத்தை வாங்கி, விற்பனை செய்கிறது.
விவசாயிகளிடம் உள்ள பசுக்களின் சிறுநீரை விலைக்கு வாங்கி, அதை பதஞ்ஜலி யோகபீடம், கீதா பவன் போன்ற ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரகண்ட் அரசு விற்பனை செய்கிறது. பதஞ்சலி யோக பீடம் நிறுவனம் மட்டும், தினமும் ஐந்தாயிரம் லிட்டர் கோமியத்திற்கு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்தை, யோகா குரு ராம்தேவ் நடத்தி வருகிறார். கீதாபவன், ஸ்வர்காஷ்ரம் ரிஷிகேஷ் போன்ற நிறுவனங்களும் கோமியத்தை வாங்குவதில், ஆர்வமாக உள்ளன. பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு லிட்டர் கோமியத்தை ஐந்து ரூபாய்க்கு அரசு வாங்குகிறது.
இத்திட்டம், டேராடூனில் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்டது. கார்வால் பகுதியில், இத்திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. 1,900 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கோமியம் சேகரிக்கப்பட உள்ளது. சிப்லாக்ஸ் மற்றும் அமாக்சிலின் போன்ற, நோய் எதிர்ப்பு மருந்துகளின் குணம் கோமியத்தில் உள்ளது. தற்போது உத்தரகண்ட் அரசிடம், கோமியத்தை, அடர்த்தி மிகுந்ததாக மாற்றும் வசதி இல்லை. விரைவில் இதற்கான வசதியையும், பசு ஆராய்ச்சிக் கழகத்தையும் மாநில அரசு துவக்க உள்ளது. மாட்டுச் சாணத்திலிருந்தும், மருந்து தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதையும் மாநில அரசே, விவசாயிகளிடம் இருந்து வாங்கி வர திட்டமிட்டுள்ளது.
நன்றி: தினமலர்
அவசரப் பட்டு மாட்டு மூத்திரமான்னு கேட்டுடதீங்கோ. அவாளுக்கெல்லாம் கோபம் வந்திடும் .இத உலக சந்தைல விக்கிறதுக்கு எதாவது ஐடியா இருந்தா குடுங்கோ.அவாளுக்கு இன்னொரு பிழைப்பு குடுக்குறதுனால உங்களுக்கு புண்ணியமாப் (?) போகும்.

No comments: