Sunday, February 3, 2008

இவங்க மட்டும் 50 வருஷத்துக்கு முன்னாடி சாதாரண மாணவின்னா?

சென்னை: 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, சாதாரண மாணவி. எனது 50 ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் கூறவா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. அப்போது நான் உதவிப் பேராசிரியராக இருந்தவன்தான். அதை தாழ்வாக நினைக்கவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்று கேட்டார்.இதுகுறித்து இப்போது பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா. அவர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், நிதியமைச்சர் புகாருக்கு நான் அப்போதே பதில் கூற நினைத்தேன். ஆனால் அதை விட முக்கியமான பிரச்சினைகள் இருந்ததால், அதை அப்போது பேச முடியாமல் போய் விட்டது. இப்போது அதைக் கூறுகிறேன்.எனது புகாருக்கு நிதியமைச்சர் பதிலளிக்கையில், பச்சையப்பன் கல்லூரியில் நான் உதவிப் பேராசிரியராகத்தான் இருந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்றார்.50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, மாணவி. சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இதில் எந்த ரகசியமும் இல்லை.

நன்றி : தட்ஸ் தமிழ்


எல்லாம் சரிதான் இவங்க மட்டும் 50 வருஷத்துக்கு முன்னாடி சாதாரண மாணவின்னா மத்தவங்க எல்லாம் ஸ்பெஷல் சாதா மாணவிங்களா?


ஐயோ ஐயோ !

No comments: