Saturday, March 1, 2008

பாலஸ்தீனத்திற்குள் மீண்டும் நுழைந்தது இஸ்ரேல்


காஸா (பாலஸ்தீனம்): பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் நுழைந்துள்ள இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4 நாட்களுக்கு முன் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 ஹமாஸ் தீவிரவாதிகள் உள்பட ஏராளமான அப்பாவிகளும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 வீரர்களும் பலியாயினர். இதையடுத்து இஸ்ரேல் படைகள் காஸா பகுதியில் ஊடுருவி பயங்கர தாக்குதலை நடத்தின. இதில் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸா பகுதியில் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தை ஆண்டாண்டுகாலமாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் கடந்த 2005ம் ஆண்டு தான் காஸா பகுதியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டித்துள்ளார். இஸ்ரேல்பாலஸ்தீனம் இடையிலான புதிய மோதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவரசமாகக் கூடி விவாதித்தது.

இதில் பேசிய கி மூன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால், அப்பாவி மக்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது தவறு.

இஸ்லாம் நவீன உலகை உருவாக்கும்: ஷெய்க் கானூஷி!

"ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்" எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள சாந்தபுரம் அல்ஜாமிஆ அல்-இஸ்லாமியா கல்லூரியில் நடந்தப் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட ராஷித், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆக்ரமிப்புகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய முறையினை இஸ்லாமிய அடிப்படையில் விவரித்தார்.

சமகால இஸ்லாமிய சிந்தனையாளர், அரசியல் விமர்சகர், அறிஞர் எனப் பல்வேறு நிலைகளில் பரவலாக அறியப்பட்டிருந்த டாக்டர். ராஷித் கனூஷி, தனது சொந்த நாடான துனூசியாவில் அநியாயங்களுக்கு எதிராகப் போராட அந்நஹ்தா என்றப் பெயரில் ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியக் காரணத்தால் அங்கு வசிக்க இயலாமல் அரசியல் அகதியாக பிரிட்டன் வந்து சேர்ந்தவராவார்.

1942 ஆம் வருடம் ஜூன் 19 நாள் துனூசியாவிலுள்ள பரபீஸ் என்ற மாவட்டத்தில் ராஷித் கனூஷி பிறந்தார். குடும்பத்தில் இளையவரான கனூஷியின் தந்தை ஷெய்க் முஹம்மது அக்கிராமத்தின் முஃப்தியும் இமாமுமாக இருந்தார். கனூஷி, 13 ஆம் வயதில் குடும்ப வருமான சிக்கலின் காரணத்தால் தனது துவக்கப் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டியச் சூழல் ஏற்பட்டப் பொழுதும் அவரின் பெரிய சகோதரன் சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பியப் பிறகு தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு ஸைத்துல் பல்கலை கழகத்திலும் பின்னர் கெய்ரோ பல்கலைகழகத்திலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து விவசாயத்துறையில் பட்டம் பெற்றார். 1964-68 காலங்களில் டமாஸ்கஸ் பல்கலைகழகத்தில் இதே துறையில் பரிசீலனை எடுத்துக் கொண்டார்.

படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பிரெஞ்சு ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தேசிய விடுதலை இயக்கத்தின் (National Liberation Movement) உறுப்பினரான அவரின் மாமனார் பஷீர் மற்றும் அப்போராட்ட இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் ஆக்ரமிப்புக்கு எதிரான போராட்டங்களும் அவரை ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டகளம் காணத் தூண்டின.

ஆக்ரமிப்பு பிரெஞ்சுப்படைகள், ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இயக்கத்தின் பிரதேச குழுவான வல்லாஜா படையில் உள்ள இருவரை மிகக் கொடூரமாகக் கொன்று வீதிகளில் இழுத்துச் சென்று இறந்த உடல்களை அவமானப்படுத்தியச் சம்பவமும் சியோனிஸ தீவிரவாதிகள் தேர் யாசினில் நடத்திய இனப்படுகொலையும் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த கனூஷியின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்ட களத்தைத் தேர்வு செய்ய அவரை தூண்டியச் சம்பவங்களாகும்.

"இஸ்லாத்தின் மகத்துவத்தைக் களங்கப்படுத்த மேற்கத்தியர் முஸ்லிம்களிடையே பிரிவினைகளை வளர்த்து விடுகின்றனர். மேற்குலகின் இச்சூழ்ச்சியினை அறிந்துக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் அதற்குப் பலியாகி விடுன்றனர். இவர்களின் இந்தப் பிரிவினையைத் தூண்டும் சதிகளுக்கு எதிராகப் போராடும் குழுக்கள் சமூகத்தில் உருவாக வேண்டும். மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு நவீன, அறிவியல் தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவினைப் பெற்றுக் கொள்ளூம் ஒரு புது உலகினையே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது" என சாந்தபுரத்தில் நடந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசும் பொழுது அவர் குறிப்பிட்டார்.

"மேற்கத்தியப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கும் இஸ்லாமிய தலைமைகள் அத்தகையச் செயல்பாடுகளிலிருந்துப் பின்வாங்கவேண்டும். நவீன உலகில் இஸ்லாம் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருவதை மேற்குலகினர் விரும்பவில்லை. எனவே அதனைத் தகர்க்கும் நோக்கத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை இல்லாமலாக்க அனைத்து விதமான தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பாகமாக ஜனநாயகத்தின் ஊடாக இஸ்லாம் கலந்து வருவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்."

"அரசியலைக் குறித்த ஆழ்ந்த அறிவையும் சிந்தையையும் முஸ்லிம் உலகத்திற்கு உருவாக்கியே தீர வேண்டும். அதன்வழியாக இஸ்லாத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்த இயலும்" என அவர் உறுதிபடக் கூறினார். "ஆக்ரமிப்புகளையும் ஆக்ரமிப்பாளர்களையும் எதிர்த்துப் போராட வைக்கும் இஸ்லாம் கூறும் ஜிஹாதை மேற்குலகம் மக்களிடையே தவறாகச் சித்தரிக்க முயல்கின்றது" எனவும் கனூஷி குற்றம் சாட்டினார். "மக்கள் சுதந்திரக்காற்றை அனுபவிக்கும் இடங்களில் ஜிஹாதின் அவசியம் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி : சத்திய மார்க்கம்

காஸா மிகப்பெரும் இன அழிப்புக்குத் தயாராகட்டும்: இஸ்ரேல் மிரட்டல்!




ஜெரூஸலம்: "ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், காஸா பகுதி முழுவதும் சுவடின்றித் தரைமட்டமாக்கப்படும்" என இஸ்ரேலின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மத்தன் வில்நாய் மிரட்டியுள்ளார். காஸா பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல் தொடரும் நிலையில், முன்னர் யூதர்கள் மீது நாஜிகள் நடத்திக்காட்டியதைவிட மிகப்பெரிய இன அழிப்புக்கு காஸா தன்னைத் தயார் படுத்திக் கொள்ளட்டும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்


தவழும் அகவையில் ஒரு குழந்தை, மேலும் 5 குழந்தைகள் உட்பட 70 காஸாவினரை இஸ்ரேல் US தயாரிப்பான F-16 போர்விமானங்கள் மூலம் கடந்த இரு நாட்களில் மட்டும் குண்டுவீசிக் கொன்றுள்ளது. இது தவிர 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இஸ்ரேல் காஸா மீது முழு அளவிலான போர் தொடுத்துள்ளது என முன்னாள் பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்தார். உலக நாடுகள் இஸ்ரேலின் இந்தக் கொடூர நடவடிக்கையை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.




இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான கொலைவெறிக்குப் பலியான சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளில் கலந்துகொண்ட பாலஸ்தீனியச் சிறார்கள், "எங்களுக்கும் குழந்தைப்பருவத்தை அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது; அதனை அழித்துவிடாமல் உலக சமுதாயமே இஸ்ரேலைத் தடுத்து நிறுத்து!" என்ற வாசகங்கள் கொண்ட பலகைகளை ஏந்தியவண்ணம் சென்றனர்.
நன்றி : சத்திய மார்க்கம்
இனிய சமுதாயமே "குந்தும் ஹைர உம்மத்தன்" என்று ஏக இறைவன் நம்மை அழைப்பது இந்த பூமியில் நாம் நமையை ஏவி தீமையை தடுப்பதனால் தான் என்று அந்த இறைவனே கூறுகிறான். ஆனால் இத்தகைய ஒரு சம்பவம் நம்முடைய பிறப்பிலிருந்தே அல்லது பிறப்பிற்கு முன்னிருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இளம் பிஞ்சுகளுக்காய் மிசக் குறைந்த பட்சம் உங்கள் ஏகோபித்த குரலை குடுக்கக் கூடாதா? உங்கள் தலைவர்களிடம் நீங்கள் கேளுங்கள் எல்லா மூமின் களும் சகோதர சகோதரிகளே எனபது உண்மையாய் இருந்தால் இந்த சகோதர சகோதரிக்களுக்காக இவர்கள் இதுவரை ஏன் குரல் குடுக்க வில்லை.சரி இனியாவது குரல் கொடுப்பார்களா? என்ற ஒரு நியாயமான கேள்வியை கேளுங்கள் இந்த பிஞ்சு குழந்தைகளின் வாழ்வுரிமையை கொடுத்திடுங்கள். எத்தனையோ மாநாடுகள் போடும் நாம் இவர்களின் கண்ணீருக்காய் ஒரு மாநாடு போட்டால் என்ன என்று உங்கள் உரிமையை கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.உண்மை தலைவர்கள் ஒத்துழைப்பார்கள்.நமக்கு உதவி செய்திட அல்லாஹ் போது மாணவன்.
அன்புடன்
இறை அடிமை

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன. நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்தின் பெயர் கூறி கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதே காரணம் கூறி அவர்களுக்குச் சட்ட உதவிகள் கிடைப்பது தடை செய்யப்படுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற பொருள்படும் ஆதங்க்வாத் விரோதி ஆந்தோலன் (AVA) என்ற அமைப்பின் கீழ் அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஒரு சட்ட உதவிக் குழு உருவாக்கப்பட்டது.

"சந்தேகத்தின் பெயரில் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்படுபவர்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம்" என உருவாக்கப்ப்பட்டச் சட்ட உதவி குழுவின் பொறுப்பாளர் சஃபர்பாய் ஜீலானி அறிவித்தார். ஃபைஸாபாத், வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளிலுள்ள நீதிமன்ற வளாங்கங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தீவிர்வாதம் தொடர்பான வழக்குகளை எடுப்பதில்லை என வழக்கறிஞர் அமைப்புகள் (Bar Associations) தீர்மானம் செய்திருந்தன. இத்தகையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களின் மீது தீவிரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகளில் சிக்க வைக்கும் செயல் நாடுமுழுவதும் அதிகரித்ததைக் கணக்கில் எடுத்தே உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் சட்ட உதவிக்குழு அமைக்க முடிவு செய்தன.

"Bar Association வழக்கறிஞர் அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்தே சட்ட உதவி குழு செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளும்" என சட்ட உதவிகுழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் சட்ட உதவிகுழு செயல்படும் அமைப்பான AVA-க்கு 12 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் 35 செயல்பாட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் செயல்படும். இதில் 6 உறுப்பினர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களாவர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத் தலைவர் ராபிஹ் நத்வி, துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் குரைஷி, ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்திய அமீர் ஜலாலுதீன் உமரி, தாருல் உலூம் முதல்வர் ஸலீம் காஸி, அகில இந்திய மில்லி கவுன்ஸில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்ஸூர் ஆலம் போன்றோரின் முயற்சியில் இந்தச் சட்ட உதவி குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர் சமுதாயம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தற்போதையச் சூழலில் இது போன்றச் சட்ட உதவி குழுக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிக அத்தியாவசியமானதாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் சமுதாய நல அமைப்புகளும் இது போன்ற ஒரு சட்ட உதவி குழு அமைக்க ஒருங்கிணைந்துத் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

நன்றி : சத்திய மார்க்கம்

அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன - FBI

வாஷிங்டன்: அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI, தாக்கல் செய்த அறிக்கை ஒன்று "அமெரிக்காவில் உறவினர்களின் மூலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக" அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டு தோறும் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான பெண்கள் அவர்களின் முன்னாள் அல்லது இந்நாள் கணவர்களினால் கொடுமைகள் அனுபவித்து வருகின்றனர்.
வாகன நேர்ச்சி, வல்லுறவு / மானபங்கம் போன்றவற்றை விட பெண்களுக்கு அதிகமான உடல்ரீதியிலான காயங்கள், அவர்களின் வீடுகளிலேயே நடத்தப்படும் கொடுமைகளினால் ஏற்படுகின்றன.

தங்களது கணவர்கள் அல்லது காதலர்கள்/நண்பர்கள் மூலம் கொடுமைபடுத்தப்படும் பெண்கள் வருடக்கணக்கில் அதனை வெளியே தெரிவிக்காமல் மறைத்து வைப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. FBI சமர்ப்பித்த அறிக்கைபடி, அமெரிக்காவில் 1991 அம் வருடம் கணவர்களாலோ ஆண் நண்பர்கள்/காதலர்களாலோ கொலை செய்யப்பட்டப் பெண்களில் 90 சதவீத பெண்களும் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன் பல வருடங்களாக நிரந்தரமாக அவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ஒரு கற்பழிப்பு நடப்பதாகவும் FBI அறிக்கை கூறுகின்றது. ஆனால், நடக்கும் கற்பழிப்புகளில் பெரும்பான்மையானவை பதிவு செய்யப்படாததால் இக்கணக்கீடு இதனை விட இரு மடங்காக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறுகின்றது.தேசிய குற்றவியல் கணக்கீடின்(National Crime Survey) படி 1990 ஆம் ஆண்டு கணக்குபடி கற்பழிப்புகளில் 58 விழுக்காடு அவர்களின் கணவர்கள், நண்பர்கள், காதலர்கள் தொடங்கிய அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே நடத்தப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த வீட்டிலேயே 35 விழுக்காடு கற்பழிப்புகள் நடக்கின்றன எனவும் அறிக்கை கூறுகின்றது.

ஜனநாயகத்தையும் பெண்ணுரிமையையும் சுதந்திரத்தையும் குறித்து உலகம் முழுக்கப் பாடம் நடத்தித் திரியும் அமெரிக்காவின் உண்மையான உள்நாட்டு நிலவரம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

நன்றி : சத்திய மார்க்கம்

ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி

திருநெல்வேலி; முஸ்லிம்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மனித நீதி பாசறை மாநில தலைவர் முகம்மது அலி ஜின்னா கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஜனநாயக அடிப்படையில் கடையநல்லுõரில் போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த உறுப்பினர்களை துன்புறுத்தி பொய் வழக்கு போட்டதையும் போலீஸ் துறையின் அராஜக செயலை கண்டித்து ஜனநாயக அடிப்படையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை மனித நீதி பாசறை கண்டிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை அரசு உடனடியாக இடமாற்றம் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் மீது பதிவு செய்துள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். படுகாயமடைந்த இவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். உறுப்பினர்கள் போஸ்டர் ஒட்டியதை சதி செய்ததாக சித்தரித்து போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். கோவையில் முஸ்லிம் இளைஞர்ள் மீது பொய் வழக்கு போட்டு மனித நீதி பாசறையின் வீண் பழி சுமத்திய போலீஸ் ஏ.சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதிகாரிகளின் அராஜகத்திற்கும், அத்துமீறல்களுக்கும் ஒரு போதும் பணிந்து விடாது. நீதிக்கான போராட்டத்தில் எத்தகைய சவால்களைம் எதிர்கொள்ள சித்தமாக உள்ளது. இதனை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர் ஷேக்முகம்மது தெஹ்லான் பாகவி, முகம்மது முபாரக், மாவட்ட செயலாளர் மகபூப் அன்சாரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Thanks:Dinamalar

ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பு

ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பு : பா.ஜ.,குழு சிறையில் விசாரணை

திருநெல்வேலி; தென்காசி ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகம் குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.,குழுவினர் பாளை.,மத்திய சிறையில் விசாரணை நடத்தினர். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகத்தில் ஜனவரி 24ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட குமார்பாண்டியனின் தம்பி ரவி, அவரது நண்பர்கள் குமார், முருகன், நாராயணசர்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது பாளை.,மத்திய சிறையில் உள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்துள்ளனர் எனகூறி கைதானவர்களிடம் உண்மையறிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கிருஷ்ணமாச்சாரி மற்றும் வைத்தியலிங்கம், ரகுமனோகர், குற்றாலநாதன், ஸ்ரீதரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள இந்து முன்னணியினரை சந்திக்க சென்றனர். ஆனால் சிறை அதிகாரிகள் அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திக்க முடியாதெனவும் ஒரு பார்வையாளர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும் எனவும் கூறினர். இதனால் பா.ஜ.,குழுவினர் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சந்தித்து பேசிவிட்டு வெளியேறினர். மாலையில் தென்காசியில் ரவிபாண்டியனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த குழுவின் அறிக்கையை கொண்டு பா.ஜ.,வினர் பார்லி.,யில் பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு

புதுடில்லி : பிற நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இடது சாரிகளின் எதிர்ப்பால் தாமதமாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அதற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா, பிரான்சுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாயின. பிரான்ஸ் தூதரும் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்கிறது என கூறியுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு செயலர் நிக்கோலன்ஸ் பர்ன்ஸ் அமெரிக்காவை மீறி இந்தியா வேறுநாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என கூறினார். மேலும் என்.எஸ்.ஜி., எனப்படும் சர்வதேச அணுசக்தி வழங்கும் நாடுகளில் ‌அமெரிக்காவின் பங்கு முதன்மையாக உள்ளது. இந்தியா வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமெனில் அமெரிக்காவின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. மேலும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Wednesday, February 27, 2008

ஹஜ் பயணிகளுக்கு கொடுப்பது போலமற்ற மத பயணிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி, பிப்.28-
ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படுவது போன்று, மற்ற மத பயணிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் அசோக் பாண்டே என்பவர், பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஹஜ் பயணிகள்

முஸ்லிம்கள், மெக்காவுக்கு புனித பயணமாக செல்கிறார்கள். அவர்களின் இந்த பயணத்துக்கு மத்திய அரசு மானியம் கொடுக்கிறது. அதுபோல, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், புனித பயணமாக இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்.
இலங்கை மன்னர் ராவணனால், சீதா தேவி சிறை வைக்கப்பட்டு இருந்த "அசோக வனம்'' இன்னும் அந்த நாட்டில் இருக்கிறது. இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, அசோக வனத்தை பார்வையிட, பாஸ்போர்ட், விசா இல்லாமல், இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தர்ம வீடுகள்

இந்த புனித பயணத்துக்கு, முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது போன்று, மானியத்தொகை வழங்க வேண்டும். இது குறித்து நான் மத்திய அரசு அதிகாரிகளை அணுகி மனு கொடுத்து பார்த்து விட்டேன். இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. எனவே இதில் கோர்ட்டு தலையிட்டு. மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்தியாவில், பிரபல இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் அரசு சார்பில் "தர்ம வீடுகள்'' கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Thanks : Dailythanthi

அமெரிக்க நலனுக்கு ஆபத்தானால் பாகிஸ்தானிலும் வேட்டை : ஒபாமா அறிவிப்பு


வாஷிங்டன் : "பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன் எனக் கூறவில்லை. அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாகிஸ்தான் உட்பட பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் பகுதிகளில், வேட்டையாடுவோம் என்று தான் கூறினேன்' என, பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், பராக் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் கடுமையாக மோதி வருகின்றனர். ஓகியோவில் நடந்த விவாதத்தின் போது, ஹிலாரி கிளின்டன், "செனட்டர் ஒபாமா, பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன், என மிரட்டுகிறார். இது புத்திசாலித்தனமான நடவடிக்கை இல்லை' என்றார். இதற்கு ஒபாமா அளித்த பதில் வருமாறு:பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன் எனக் கூறவில்லை. ஒசாமா பின்லாடன் மற்றும் இதர அல்குவைதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயக்கம் காட்டினால், நாம் எடுப்போம் என்று தான் கூறினேன்.நமக்கு அமெரிக்கர்களின் நலன் தான் முக்கியம். ஈராக்கில் அல்குவைதா ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது என்றால், அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் அமெரிக்கர்களின் நலன் காக்க, நாம் நடவடிக்கை எடுப்போம். எனவே, ஈராக் மற்றும் பிற நாடுகளில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி இருந்தேன். அதில் பாகிஸ்தானும் அடக்கம் தான்.இவ்வாறு பராக் ஒபாமா கூறினார்.

இட ஒதுக்கீட்டை பின்பற்றக் கோரி மனு : செலவுத்தொகை கட்ட கோர்ட் உத்தரவு

சென்னை : சென்னைப் பல்கலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றக் கோரி மனுத் தாக்கல் செய்தவருக்கு, ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவுத் தொகை விதித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தவுகித் ஜமால் அமைப்பின் செயலர் சையத் இக்பால் தாக்கல் செய்த மனுவில், "தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணி நியமனத்தின் போது, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை. எனவே, இந்த தேர்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதிகள் முகோபாத்யா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', "பணிகள் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர முடியாது. பொதுநலன் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரியவில்லை. விளம்பரத்துக்காக தொடரப்பட்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்படுகிறது. இதனை ஆறு வாரங்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.

Thanks:Dinamalar

எழுத்தாளர் சுஜாதா மரணம்

சென்னை: பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்று மரணமடைந்தார். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன்(73). பெங்களூருவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அவர், சுஜாதா என்ற புனைப் பெயரில் விஞ்ஞான பூர்வமான சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி பிரபலமானார். மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள ஜட்ஜ் சுந்தரம் தெருவில் வசிந்து வந்தார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட சுஜாதா கடந்த வியாழக் கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ரங்காபிரசாத், கேசவபிரசாத் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் கேசவ பிரசாத் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நாளை(29ம்தேதி) சுஜாதாவிற்கு இறுதி சடங்கு நடை பெறுகிறது.

இந்து முன்னணி பிரமுகர் கொலை : மனைவி வாக்குமூலம்

நாகர்கோவில்: பாலியல் தொல்லை செய்ததால் அடித்து கொலை செய்தோம் என இரணியல் அருகே இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதான கணவன் மனைவி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். வில்லுகுறி திருவிடைக்கோட்டை சேர்ந்தவர் மணி என்ற தாணுபிள்ளை (34). இவர் கடந்த 22ம் தேதி இரணியலுக்கும் ஆளூருக்கும் இடையேயுள்ள ஆளில்லாத ரயில்வே கேட் அருகில் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயில் மோதி இறந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் தாணுபிள்ளை தற்கொலை செய்யவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என இந்து முன்னணியினரும், பா.ஜ.வினரும் கூறியதையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.எஸ்.பி.சந்திரபால் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தாணுபிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதைப்போல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பேனா மனோகரன், திருச்சி ரயில்வே குற்ற ஆவண பிரிவு டி.எஸ்.பி. பட்டாபிராமன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் எட்வின் தம்பி, திருநெல்வேலி டி.எஸ்.பி. முகைதீன்ஷா ஆகியோர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், ராஜசுலோச்சனா, ஏட்டுகள் ஜோசப், ஹரிகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து தாணுபிள்ளையின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை வந்தால்தான் அவர் கொலை எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்ற நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதில் தாணுபிள்ளை தலையில் காயம் ஏற்பட்டதால்தான் இறந்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. தலையில் ரயில் மோதியதால் காயம் ஏற்பட்டதா, அல்லது கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதா என்பதை கண்டறிய அவரது உடல் பாகம் கெமிக்கல் டெஸ்டிற்காக பாளையங்கோட்டையிலுள்ள தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே போலீஸ் தனிப்படையினர் அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் பூலன்கோடு ரயில் தண்டவாளம் அருகே குடியிருக்கும் முருகன் (33), அவரது மனைவி பத்மா (32) ஆகியோர் ஒரு கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று தாங்கள் தாணுபிள்ளையை அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாகவும், தங்களுக்கு சரியான வழியை காட்டும்படியும் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸ் தனிப்படையினர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தாணுபிள்ளையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பத்மா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: முருகன் கல்லுடைக்கும் தொழில் செய்து வருகிறார்.
நான் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு முகேஷ் (11), சுபாஷ் (10), சஜித் (7) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது திருமணத்திற்கு முன்னர் தாணுபிள்ளைக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அப்போது என்னை திருமணம் செய்ய கூறியபோது வரதட்சணை கிடைக்காது என்பதால் என்னை திருணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் முருகனோடு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். கடந்த சில மாதங்களாக எனது கணவர் வேலைக்கு சென்ற பின்னர் தாணுபிள்ளை எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்து வந்தார். கடந்த 22ம் தேதி மாலையில் நானும் எனது கணவரும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தாணுபிள்ளை வந்து எனது கணவர் முன்னிலையில் என்னை உடலுறவுக்கு அழைத்தார். இதில் ஆத்திரமடைந்த எனது கணவர் வீட்டின் கூரையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாணுபிள்ளையின் தலையில் அடித்தார். கீழே விழுந்த அவர் எழுந்த போது அங்கிருந்த மிளகாய் தூளை தண்ணீரில் கலக்கி அவர் முகத்தில் நான் ஊற்றினேன். இந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் எனது கணவர் மீண்டும் ஒரு அடி அடித்தார். இதில் கீழே விழுந்த அவர் இறந்து விட்டார் என நினைத்து ஒரு சாக்கில் போட்டு தூக்கி வந்து ரயில் தண்டவாளத்தில் போட்டோம்.
அதன்பின்னர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, தாணுபிள்ளையின் செல்போன் சிம்கார்டை தீயில் போட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் வந்த பைக்கை பூலன்கோட்டிலுள்ள ஒரு குளத்திற்குள் போட்டோம், அவரது செல்போன் மற்றும் சில உடைகளை சாத்தான்கோயில் குளத்தில் வீசினோம். அவரை அடிக்க பயன்படுத்திய உருட்டு கட்டையை வீட்டின் அருகிலுள்ள ரயில்வே டிராக் நீரோடையில் மண்ணுக்குள் புதைத்து வைத்தோம். இதனால் இது யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த போது போலீசார் சல்லடை போட்டு தேடுவதை அறிந்து என்ன செய்வது என தெரியாமல் கிராம நிர்வாக அலுவலரிடம் உண்மையை கூறினோம். என பத்மா கூறியுள்ளார். அவர் கூறிய தகவல்படி போலீசார் சம்பவ இடம் சென்று பைக்கையும், உருட்டு கட்டையையும், துணிகளையும் மீட்டனர். இதுவரை தற்கொலை என நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை என அறியப்பட்டதால் இந்த வழக்கு இரணியல் போலீசுக்கு மாற்றப்படுகிறது.


இது குறித்து இன்ஸ்பெக்டர் எட்வின்தம்பி கூறும்போது, முருகனும், பத்மாவும் தாணுபிள்ளையை அடித்ததல் அவர் மயங்கி விழுந்த பின்னர் இருவரும் சேர்ந்து தூக்கி ரயில்வே தண்டவாளத்தில் போட்டுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் சென்ற ரயில் தாணுபிள்ளையின் உடலில் மோதியதும் அவரது உடலில் இருந்து ரத்தம் பீரிட்டு பாய்ந்துள்ளது. மறுநாள் ரயில் தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக கிடைத்த தகவல் படி சென்றபோது தண்டவாத்தில் அதிகளவு ரத்தம் கிடந்ததால் அவர் ரயியிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என கூறினார். ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்: தாணுபிள்ளையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள முருகன் மற்றும் பத்மா தம்பதியினருக்கு முகேஷ், சுபாஷ், சஜித் என மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேரும் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இதுவரை பெற்றோரின் ஆதரவில் இருந்த மூன்று குழந்தைகளும் பெற்றோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் தற்போது ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அல்லது ஏதாவது அமைப்புகளோ முன்வரவேண்டும்.

Thanks:Dinamalar

டெல்லியில் மேலும் ஒரு மோசடி: அமெரிக்காவுக்கு 100 பேர் கடத்தல்

டெல்லியில் இருந்து போலி விசா மற்றும் போலி தஸ்தாவேஜுகளை தயா ரித்து வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல் செயல்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து ரகசிய விசாரணை யில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தில் விசா வழங் கும் பிரிவு அருகே சந்தேகத் தின் பேரில் ஒருவர் பிடிபட் டாரர்.
அவரிடம் ஏராளமான போலி விண்ணப்பங்கள் இருந்தன. இதையடுத்து தட் ஷின் புரியைச் சேர்ந்த பவன் மிஸ்ரா என்பவர் கைது செய் யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் ரோகிணி பகுதியில் சென்டிரல் மார்க்கெட் அரு கில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த போலி பாஸ் போர்ட்டுகள், போலி விசாக் கள் மற்றும் பாஸ் போர்ட் எடுக்க தேவையான பல்வேறு போலி விண்ணப்பங்கள், பாங்கி பாஸ் புத்தகங்கள் தஸ் தாவேஜுகள் கட்டு கட்டாக சிக்கின.

இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட டெல்லி கிரீன் பார்க் பகுதியைச் சேர்ந்த அஜய் சுக்லா, பாட்டியா லாவைச் சேர்ந்த குர்சாகிப் சிங் ஆகிய 2 பேர் கைது செய் யப்பட்டனர்.

அமெரிக்கா செல்ல விரும்பி தன்னை நாடி வருபவர்களிடம் அஜய் சுக்லா போலி விசா, பாஸ்போர்ட் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார். இதற் காக ஒவ்வொரு வரிடமும் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் முதல் 15 பேருக்கு விசா கேட்டு விண் ணப்பம் செய்வார்கள். இதில் 3 பேருக்காவது விசா கிடைத்து விடும். கடந்த 3 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்களை இவ்வாறு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளனர்.

கைதான அஜய் சுக்லா டெல்லி சப்தர் ஜங் ஆஸ்பத்திரி ஊழியர் குடியிருப்பில் வசிக் கிறார். எனவே ஆட்கள் கடத்தலில் கிட்னி மோசடி கும்பலுக்கு தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் குர்கானில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் அமீத்குமார் கைது செய்யப் பட்டார். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆட்கள் கடத் தலில் ஈடுபட்டார்களாப என்று போலீசார் விசாரிக்கிறார் கள்.
முக்கிய புள்ளியான அஜய் சுக்லா மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்ட அனைவரும் அப்பாவிகள் மற்றும் வறுமை யில் வாடுவோர்கள் என தெரிய வந்துள்ளது. எனவே அவர் களை பண ஆசை காட்டி கடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. (?)
இது பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Thanks : Maalaimalar

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மகளை தாக்க முயற்சி:

மாணவர்களிடம் இருந்து பாதுகா பு படைமீட்டது

புதுடெல்லி, பி. 26-பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் உபேந்தர் கவுர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியாக உள்ளார்.வரலாற்று துறை மாணவர் களின் பாடத்திட்டத்தில் ராமாயணம் தொடர்பாக ஏ.கே.ராமானுஜம் எழுதிய விமர்சனகட்டுரைகளை சேர்த்து இருந்த னர். அதில் ராமாயணம் பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றுஇருந்தன.இதற்கு பாரதீய ஜனதா மாணவர் அமைபான அகில பாரத வித்யாத்தி பரிசத் எதிர்பு தெரிவித்தது. அவர்கள் நேற்றுமாலை டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் துணைவேந்தர் தீபக் பென்டசை சந்திக்க சென் றனர். ஆனால் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.எனவே அவர்கள் வரலாற்று துறைக்கு வந்தனர். அபோது உள்ளே பிரதமர் மகள் உபிந்தர்கவுர் மற்றும்பேராசிரியர்கள் அமர்ந்து இருந்தனர்.மாணவர்கள் திடீரென வர லாற்று துறை அலுவலகத்தை தாக்க தொடங்கினர். ஜன்னல், மேஜை, நாற்காலிகளைஅடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த ஆசிரியர்களைம் தாக்க பாய்ந்தனர்.பிரதமர் மகளுக்கு ஏற் கனவே சிறபு பாதுகாபு படை போலீசார் பாதுகாபு அளித்து வந்தனர். அவர்கள் உபிந்தர்கவுரை அங்கி ருந்து பத்திரமாக மீட்டு சென்ற னர்.ஆனால் மாணவர்கள் வரலாற்று துறை தலைவர் சையது ஜாகீர் உசேனை சரமாரியாக தாக்கினார்கள்.இந்த சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரபு ஏற்பட்டது.


http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=253276

Monday, February 25, 2008

பா.ஜ., தாமரை யாத்திரை


பொள்ளாச்சியில் பா.ஜ., தாமரை யாத்திரை செயற்குழு கூட்டத்தில் முடிவு


பொள்ளாச்சி: அத்வானியை பிரதமராக்க பொள்ளாச்சியில் மார்ச்., 5ம் தேதி தாமரை யாத்திரை துவங்க முடிவு செய்யப் பட்டுள் ளது. பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில் பண்டித தீனதயாள் உபாத்யாயா சமர்பண நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, செயற்குழு கூட்டம் நடந்தது.


நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். நகர தலைவர் பாலு தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் நஞ்சப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டப்படுவதால், தற்போது, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படும் கட்டடத்தை அரசு பொது மருத்துவமனைக்கு ஒப்படைக்க வேண்டும். வால்பாறை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது போன்று பாலக்காடு ரோட்டிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டியுள்ளனர். சாக்கடை திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் இரவு நேரத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அதனால் சாக்கடை கட்டும் பணியை நகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக இருந்த நவரத்தின விநாயகர் கோவிலை அகற்றி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் வைத்துள்ளனர். அந்த விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மறுபடியும் நடக்காமல் இருக்க விநாயகர் கோவிலை சுற்றிலும் கம்பி வலை அமைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அத்வானியை பிரதமராக்க பொள்ளாச்சியில் மார்ச்., 5ம் தேதி தாமரை யாத்திரை துவங்க பொதுக்கூட்ட விழா நடக்கிறது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் 10 ஆயிரம் பேர் (?) கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Thanks : Dinamalar

விஷ்வ இந்து பரிஷத் கூட்டம்



பொள்ளாச்சி: விஷ்வ இந்து பரிஷத் இளைஞர் அணி சார்பில் சி.கோபாலபுரத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. கிளை அமைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், "பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் சிலர் இந்துக்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மதமாற்ற நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்தி, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்' . மேலும், சித்திரை மாதம் முதல் தேதிக்கு பதிலாக, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ரவிபிரகாஷ், கோபால் சபரீஸ்வரன், சிவகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Thanks: Dinamalar

பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும்அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்



புதுச்சேரி, பிப்.26-



பெண்கள் தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பரிசளிப்பு விழா



புதுச்சேரி தேக்வோண்டோ சங்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் கடந்த 2 நாட்கள் உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 2500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.



போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேக்வோண்டோ சங்க தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


தற்காப்பு



நானும் ஒரு கராத்தே வீரன் தான். கறுப்பு பெல்ட் வழங்கும் அளவிற்கு பயிற்சி பெற்று இருந்தேன். தேக்வோண்டோ வெளிநாட்டில் இருந்து வந்த கலையாக எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த கலையில் பிறப்பிடம் இந்தியா தான். இது வெளிநாடுகளுக்கு சென்று மறுவி தேக் வோண்டோவாக மாறி வந்துள்ளது.



தற்காப்பு கலை ஆண்களுக்கு மட்டுமல்ல. எனவே தற்காப்பு கலைகளை பெண்களும் கற்று கொள்ள வேண்டும். தற்காப்பு கலையான தேக்வோண்டோயை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றி அளிக்க அரசு தயாராக உள்ளது.


அனுமதி



எனவே முறை படியாக எங்களை வந்து அணுகினால் அதற்கு அனுமதி வழங்கப்படும். இது போன்ற கலைகள் புதுச்சேரியில் வளரவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.


கலந்து கொண்டவர்கள்



விழாவில் அகில இந்திய தேக்வோண்டோ சங்க துணை செயலாளர் செல்வமணி, புதுச்சேரி தேக்வோண்டோ சங்க பொருளாளர் சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தேக்வோண்டோ சங்க அமைப்பாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.




Thanks : Dinamalar

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற போராட்டம்: முதல்வர் அறிவிக்க த.மு.மு.க., கோரிக்கை

சேலம்: ""சேது சமுத்திர திட்டத்தை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை அறிவிக்க வேண்டும்,'' என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லாஹீ கூறினார்.

சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான சேது சமுத்திர திட்டத்துக்கு ஜ.மு.கூட்டணி கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அடிப்படை ஆதாரமற்ற காரணத்தை கூறி திட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது நியாயமற்றது. மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.திட்டம் நிறைவேறினால் புதுக்கோட்டை, துõத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மேம்பாடு அடையும். திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும்.காங்., தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அகில இந்திய அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்த நீதிபதி தலைமையிலான குழுவினர், தனது அறிக்கையை கடந்த மே 22ம் தேதி பிரதமரிடம் சமர்ப்பித்தது. இதுவரை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அந்த பரிந்துரையின் பேரில், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதசிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் பயங்கரவாத செயல் நடந்தால் முஸ்லிம்கள் மீது பழிபோடும் போக்கு நிலவுகிறது. உதாரணமாக, தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பில் முஸ்லிம்கள் மீது பார்வை திருப்பப்பட்டது.கைது செய்த எட்டு பேரில் ஹிந்து முன்னணியை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார். சரியான முறையில் புலன் விசாரணை நடத்திய திருநெல்வேலி போலீஸாரை பாராட்டுகிறோம்.மதவழி கல்வி நிறுவன ஆசிரியர் பணி நியமன நடைமுறையை மாற்ற நினைக்கும் உயர்கல்வி துறை அதிகாரிகள் விஷயத்தில் முதல்வர் தலையிட வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மிகப் பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Thanks:Dinamalar

சிறைக்குள்ளும் தாக்கப்படும் சிறுபான்மையினர்


சிறையில் கைதிகள் மோதல் இருவர் காயம்: போலீஸ் விசாரணை


திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் தாரளமாக மொஃபைல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது சில நாட்களாக நடந்து வரும் அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளிடம் மொஃபைல்போன் உள்ளாத என்று நேற்று முன்தினமும் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மணப்பாறை போலீஸ்காரர் மகன் இங்கர்சால் என்பவனிடம் மொஃபைல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் தன்னிடம் இருந்த மொஃபைல்போனை கண்டுபிடிக்க காரணம், சிறையில் இருக்கும் மற்றொரு கைதி பாலக்கரையைச் சேர்ந்த சலீம் (27) என்பவன் என்று இங்கர்சால் சந்தேகித்தான். இங்கர்சால் நேற்று காலை சலீமிடம் கேட்டான். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இங்கர்சால் மற்றும் சலீம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சிறைத்துறை போலீஸார், காயமடைந்த இருவரையும் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


Thanks:Dinamalar

சிவராத்திரியில் குழந்தை திருமணம் : தடுக்க ஆந்திர அரசு தீவிர முயற்சி


நகரி : பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் மகா சிவராத்திரி உற்சவ விழாவின்போது நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த ஆந்திர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.


காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவின் போது ஞானபிரசூணாம்பிகை சமேதரான வாயுலிங்கேஸ்வரர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவம் சிறப்பு வைபவமாக நடத்தி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மார்ச் 6ம் தேதியன்று மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. காளஹஸ்தி கோவிலில் சாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பெற்றோர் பால்ய விவாகம் நடத்தி வைப்பதை சுப நிகழ்ச்சியாக, நினைத்து எளிமையான முறையில் திருமணம் செய்கின்றனர்.சுவாமி திருமணத்தன்று அதிகாரிகளிடம் சிக்காமல், ஏராளமான மைனர் ஜோடிகள் பெற்றோருடன் மலர்மாலை தாலியுடன் ரகசியமாக கோவிலை சுற்றிலும் குவிந்து விடுகின்றனர்.
சட்டத்திற்குப் புறம்பாக, குழந்தைகளுக்கு திருணம் நடத்தி வைப்பதை தடுக்க சித்துõர் மாவட்ட கலெக்டர் ராவத் தலைமையில் வெள்ளியன்று காளஹஸ்தியில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


"மகா சிவராத்திரி உற்சவத்தின்போது சித்துõர், நெல்லுõர் மாவட்டத்தைச் சேர்ந்த வசதியற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், அறியாமையால், சிறுவயது பிள்ளைகளுக்கு பால்ய விவாகம் செய்து வைப்பது கொடுமையானது. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் செயல் கொலை செய்வது, கொலை செய்வதற்கு துõண்டி விடுவது போன்ற குற்றத்திற்கு சமமானது. இதை தடுத்து நிறுத்த அரசு அதிகாரிகள் பெற்றோரிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். மீறி செயல்படுவோர் கடுமையான தண்டனைக்குள்ளாவர் என எச்சரிக்கை செய்ய வேண்டும்' என, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளை கலெக்டர் ராவத் கேட்டுக் கொண்டார். விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் போஸ்டர்களையும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.


இதே போன்று தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற தாலுகாக்களில் குக்கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடி இருளர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெற்றோர் சிலரும், சிவராத்திரி தினத்தில், ரகசியமாக பால்ய விவாகம் செய்து வைப்பதை சுப நிகழ்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.

Sunday, February 24, 2008

குர்ஆனில் 'ஹுத்ஹுத்' (الْهُدْهُد) பறவை



'ஹுத்ஹுத்' (الْهُدْهُد) மரங் கொத்திப்பறவை


மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை.

இறைமறை கூறுகிறது:-

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். (27:20)


لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ


நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்' என்றும் கூறினார். (27:21)

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ


'(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.' தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். 'ஸபா' என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.' என்று கூறியது.(27:22)


إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ

'நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.'(27:23)


وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِي فَهُمْ لَا يَهْتَدُونَ
'அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி,சூரியனுக்கு ஸுஜூதுசெய்வதை நான் கண்டேன்.அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்குஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்.ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை'(27:24)

أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ

'வானங்களிலும்,பூமியலும்,மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்,இன்னும் நீங்கள்மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்குஅவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? '(27:25)

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

'அல்லாஹ்-அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை.(அவன்) மகத்தானஅர்சுக்கு உரிய இறைவன்' (என்று ஹுத்ஹுத் பறவை கூறிற்று.(27:26)

தகவல்களைச் சேகரித்து வரும் அரசு தூதர்!

மரங்கொத்தி வெகுதொலைதூரம் சென்று அதற்குரிய உணவை மட்டுமல்ல, மனிதர்களுக்குத் தேவையான செய்திகளையும் சேகரித்து வருகிறது. நபி சுலைமான்(அலை) அவர்களிடம் ஸபாநாட்டு ராணிபற்றியும் அவர்களின் மக்களைப் பற்றியும் தகவல்களைக்கொடுத்து அவர்கள் ஏகத்துவ நெறியின்பால் வருவதற்கு துணைபுரிந்தது என்று திருமறை அல்குர்ஆன் 27:20-26 எனக் கூறுகிறது.

அது பேசியது என்றும், அது பேசிய மொழியை நபி சுலைமான் அலை) அவர்கள் அறிந்திருநதார்கள் என்றும் (27: 20-26) குர்ஆன் கூறுகிறது.

இதனை ஆய்வு செய்த அறிவியலார் அவை மரங்களில் பொந்துகளை துளைத்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதுமட்டுமல்ல, மரத்துளைகளை தங்களின் உணவுக்கிடங்காகவும் பயன்னடுத்துகின்றன. பறவைகள் தங்கள் அலகுகளைப்பயன்படுத்தி மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மரங்;களை கொத்துகின்றன.

இந்த வேகத்தில்; கொத்தினால் அதன் அலகுகள் பாதிக்காதா? இரண்டாகஉடைந்துவிடாதா ? தொடர்ந்து மிக வேகமாக கொத்துவதால் அதன் மூளைகள் பாதித்து மயக்கமேற்படாதா? போன்ற என்ற ஐயங்கள் நமக்கு எழலாம்.

இடிதாங்கிகள் (Shock Abserbers)

ஆனால் அதன் அலகுகளிலே அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் அபார அமைப்பு அதைப்பாதுகாத்து எஃகு போன்ற பலத்தை அளிக்கிறது. அதன் மூளை தலையின் பின் பகுதியில் அலகுகளுக்கு நிகராக பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது துளையிடும் போது அவற்றின் கீழ் அலகை ஒட்டியுள்ள சதைப்பகுதிஇடிதாங்கியைப்போல (அதாவது மோட்டார் காரின் ளூழஉம யுடிளநசடிநசள) போன்று செயல்பட்டு வேகமாகத் துளையிடுவதால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நிற்கிறது.

ஓவ்வொரு மரங்கொத்தியும் தனக்கே உரிய தனிப்பட்ட சிறப்புயல்புகளைக் கொண்டுள்ளது. சில வகை மரங்கொத்திகள் சோளப் பொறிகளை தாம் இட்ட துளைகளில் சேமித்து வைக்கிறது.



50000 சோளப்பொறிகள் வரை சேமித்து வைக்கும் திறமை
கோடை காலம் முழுவதும் பட்டுப்போன மரங்களில் ஆயிரக்கணக்கான துளைகளைப்போட்டுவைக்கின்றன. குளிர்காலத்தில் அவற்றை உணவாகக்கொள்கின்றன.துளையிடும் இந்த இனம் ஒவ்வொரு துளையிலும் ஒவ்வொரு சோளப்பொறியைச் சேமித்து வைக்கிறது. இவ்வாறு சேமிக்கும் மரங்கொத்திப் பறவைகள்எவ்வளவு சேமித்து வைக்கும் என நினைக்கிறீர்கள்? ஐந்தா பத்தா? இல்லை. ஒரு பெரிய மரத்தில் 50000 சோளப்பொறி வரை சேமித்து வைக்கும் திறமை கொண்டவை.

அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளின் அதிசயச்செயல்களைப் பற்றி வியந்து வியந்து அவன் வல்லமையைப் புரிந்து அவனையே வணங்கி அவனுக்கு நன்றிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தப் பறவையின் ஏகத்துவ உணர்வைத் தெரிந்து நாமும் ஓரிறைந் கொள்கையில் உறுதியாக இருப்போமாக!
Thanks: மீரான்

எல்லா புகழும் இறைவனுக்கே.இறைவன் மிகப் பெரியவன்.