Monday, February 4, 2008

ஆடு நனயுதேனு ஒ நாய் அழுவுது



தமிழ்ப் புத்தாண்டு-தமிழக அரசுக்கு விஷ்வ இந்து பரிஷத் கெடு


திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 மதுரை: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 20ம் தேதி முதல் ஆர்பாட்டம் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் (இது யாரு நம்ம பழைய தல வெட்டி வேதாந்தியா ) தலைமையில் நடந்தது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய பண்பாடு சின்னமாக அறிவிக்க வேண்டும் (இதுக்கு தானே நீதி மன்றம் அன்னைக்கே கேட்டுது யாரும் பார்க்காத ஒரு விஷயத்த எப்படி பாரம்பரிய பண்பாட்டு சின்னமா அறிவிக்க முடியும்னு) .மலேசியாவில் உள்ள இந்து தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் லோக்சபாவிலும், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் (இன்னாப்பா நீங்கோல்லாம் இனி தமிழ் மொழி காத்த தங்கங்களா ஆவ போறீங்களோ அப்போ சமஸ்கிருதம்?) இந்த தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெறக் கோரி வரும் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



வேணும்ல இந்த மாதிரி எதாவது செய்தா தானே மக்கள் மத்தில நாங்களும் இருக்குரோம்னு இவுங்களால சொல்ல முடியும். கூடவே எலெக்சன் வேற வர போவுது இப்ப இருந்தே தொடங்கு நா தானே இதுக்கு முன்னாடி இவுங்கோ செய்த பழைய பல -------------- கள மக்கள் மனசுல இருந்து மெதுவா அழிக்க முடியும். சரி நீலிக்கண்ணீர் இன்னாரு தான் வடிக்கனும்னு இல்லலா?

No comments: