Saturday, February 9, 2008

போதையில் 20 ரூபாய் சண்டை தம்பியை கொன்றான் அண்ணன்!



மும்பை : மதுபோதை தலைக்கேறிய நிலையில், 20 ரூபாய் கடன் விவகாரம், தம்பியை அண்ணனே கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டது.
மும்பை முலந்த் பகுதியில் வசிப்பவர்கள் மகேந்திர தோட்ரே; வயது 26. அவரின் சித்தப்பா மகன் அங்குஷ் பெங்கர்; வயது 25. பெங்கர் வீட்டில் சனிக்கிழமை இரவு இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கேறி விட்ட நிலையில், திடீரென அவர்களிடையே சாதாரண விஷயம் , பெரிய மோதலாக மாறியது. "அன்னிக்கு நான் 20 ரூபாய் கடனாக கொடுத்தேனில்லே...அதை இப்ப கொடு' என்று பெங்கர் கேட்க, அண்ணன் தோட்ரேயோ," எங்கே கொடுத்தே...அல்பத்தனமாக உன்கிட்டே 20 ரூபாயையா நான் வாங்கப்போறேன்' என்று திருப்பிக்கேட்க வாய்ச் சண்டை வலுத்தது.
திடீரென, பெங்கரின் கழுத்தை பிடித்து அழுத்தினார் தோட்ரே. பெங்கர் கத்தினார். பக்கத்து அறையில் இருந்த அவர் அண்ணன் ஆனந்த் ஓடி வந்து, பெங்கரை விடுவித்தான்.அப்போது அவர் மயக்கம் அடைந்திருந்தார். உடனே பெங்கரை மருத்துவமனையில் சேர்த்தார்; அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பெங்கர் இறந்துவிட்ட செய்தி தெரிந்ததும், தோட்ரே தலையில் ஏறியிருந்த போதை அறவே போய்விட்டது." மது போதையில் நாங்கள் இருந்ததால், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், சண்டை போட்டுக்கொண்டோம். பெங்கரை நான் கொன்று விட்டேன்' என்று கதறி அழுதார்.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், இருவரும் தாக்கிக்கொண்டனர். கழுத்தை இறுக்கியதால் பெங்கர் இறந்துவிட்டார்' என்று தெரிவித்தனர்.



நன்றி : தினமலர்


குடி குடியை கெடுக்கும் சரிதான் ஆனால் இந்த குடிகாரனின் குடி அடுத்தவரின் குடியையும் அல்லவா சேர்த்து கெடுக்கிறது. அருமை நண்பர்களே உங்கள் நண்பர்களில் எவரேனும் இத்தைய விஷம் அருந்தும் பழக்கம் இருப்பவராய் இருந்தால் இன்றிலிருந்து அவரைத் திருத்த சபதம் செய்யுங்கள்.குடிப் பழக்கம் இல்லாத ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம்.

No comments: