Saturday, May 17, 2008

நேர்முகத் தேர்வுகளை (Interviews) எதிர்கொள்ள எளிய வழிமுறைகள


பெருகிவரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தகங்கள் போன்றவைகளால் ஒருபுறம் வேலை வாயப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தற்போது நல்ல வேலை அமைவது என்பது குதிரைக் கொம்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. கற்ற கல்வி, பெற்றிருக்கும் முன் அனுபவம் போன்றவற்றைப் பொறுத்து வேலைகள் அமைந்தாலும், நேர்முகத்தேர்வு என்று சென்றுவிட்டால் ஒரு காலியிடத்திற்கு குறைந்தபட்சம் பத்து நபர்களாவது போட்டி போடக்கூடிய சூழ்நிலையாகத்தானிருக்கிறது.

இந்நிலையில் வேலைக்காகத் தெரிவு செய்பவர்கள் மத்தியில் கிடைக்கப்பெறும் சொற்ப நேரத்தில் நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே நமக்கான வேலையை தக்க வைத்துக் கொள்ளமுடியும். சில காரணங்களால் கூட நமக்குக் கிடைக்கப்பெறும் வாய்ப்பு நம்மைவிட்டு நழுவி விடலாம். நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் கீழ்கண்ட அணுகு முறைகளை மேற்கொண்டால் வெற்றியை எதிர்பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).

தோற்றமும், ஆவணங்களும்

நேர்முகத் தேர்வுக்காகச் செல்லும் போது சாதாரண உடைகளை அணிந்து செல்லாமல், அலுவலகத்திற்கு அணிந்து செல்வது போன்ற உடைகளை அணிந்து செல்லுங்கள். புத்தம் புதிய ஆடைகளை அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புதிய ஆடைகள் அன்றுதான் நீங்கள் அணிந்து சென்றால் அது எவ்வாறு உங்களுடன் ஒத்துச் செல்லும் என்பதை அறியமாட்டீர்கள். நீங்கள் தலை வாரும் முறையை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் புதிய ஆடைகளாலும், தலைமுடியை மாற்றிச் சீவிக் கொள்வதாலும் சில சமயம் பொருந்தாமல் உங்களுக்கே அது அருவருப்பானதாக்கிவிடும். நீங்கள் அணிந்து செல்லும் உடைகள் நல்ல வசீகர நிறங்களாகவும், தரமான துணியாகவும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற தினங்களில் அணியும் உயர்தர ஆடைகளில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அணிந்து செல்லும் ஆடைகளை முறையே சலவை செய்தும் அழுக்குகள் இல்லாமலும் அணிந்து செல்லுங்கள். இவ்வாறு நீங்கள் அணிந்து செல்லும் ஆடை உங்களுடைய ஒழுங்கு மற்றும் தன்னடக்கத்தை வெளிப்படுத்துமளவுக்குக் கவனமாயிருங்கள்.

மறவாமல் உங்கள் சட்டைப் பையில் பேனாவை எடுத்துச் செல்லுங்கள். எடுத்துச் செல்லவேண்டிய அனைத்து சான்றிதழ்களும் முறையே வரிசைப்படுத்தி ஃபைலில் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக உங்களுடைய சான்றிதழ்களை மாற்றிமாற்றி வைத்து ஓரே போல்டரில் போட்டு எடுத்துச் செல்வதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வில் காண்பிக்கப்படும் போது நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் முறையில்லாமலும் இருக்கும்.

முக்கியமாகக் காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்களை முன்னுக்கும், முக்கியமில்லாத சான்றிதழ்களை தனியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையே தனித்தனியான லீஃப் பைலில் ஒழுங்குபடுத்தி எடுத்துச் செல்லுங்கள். உங்களிடம் இருக்கும் சான்றிதழ்கள், பயோடேட்டா போன்றவைகளின் நகல்களை இரண்டு செட்களை எப்பொழுதும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துச் செலலும் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வு செய்பவரிடம் அவர்கள் கேட்காதவரை தானாக எதையும் காண்பிக்க வேண்டாம்.

அமர்வும், சந்திப்பும்
அறையை மெதுவாகத் தட்டுங்கள். உங்கள் பெயர் கூறி அழைக்கப்படாதவரை தானாக உள்ளே பிரவேசிக்காதீர்கள். உள்ளே சென்றதும் மறவாமல் முகமன் கூறிவிடுங்கள். அவர்கள் அனுமதிக்காதவரை இருக்கையில் அமராதீர்கள். அவர்கள் அமரச் சொன்னால் அமர்ந்ததும், புன்முறுவலோடு நன்றியை மொழியுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை முன்னக்கும் பின்னுக்கும் இழுக்காதீர்கள். அமர்ந்துகொண்டிருக்கும் நாற்காலியை அசைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் அங்கே எதை எடுத்தாலும் கொடுத்தாலும் வலது கையையே பயன்படுத்துங்கள். நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் போது உங்கள் ஒருகாலின் மீது மறுகாலை இட்டு அமராதீர்கள். உங்கள் பார்வைகளை கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்காமல் நேர்முகத் தேர்வு மேற்கொள்வோரை பார்த்துக் கொண்டிருங்கள்.

நீங்கள் எடுத்துச் செல்லும் பைல்கள், பொருட்கள் எதுவாக இருப்பினும் அவர்களுடைய மேசைமீது வைக்காமல் உங்கள் மடியில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்வத்தை அங்கே குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக மீசையை தடவிக் கொள்வது, மூக்கின் மேல் விரல் கொண்டு தடவுவது, உங்கள் தலைமுடியை கோதிச் சரி செய்வது, அதிகப்படியான பேச்சுக்களை பேசுவது போன்றவை. உங்களுடைய சாவிக் கொத்தை வைத்துக் கொண்டோ, பேனாவைக் கொண்டோ, விரல்களின் நெட்டி முறித்தோ சப்தம் ஏற்படுத்தாதீர்கள். நேர்முகத் தேர்வின் அறையை விட்டு உங்கள் பார்வைகளை ஜன்னல் வழியாக வெளியே செலுத்துவதோ, மற்றவர்களின் மேஜைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதோ செய்யாதீர்கள்.

நேர்முகத் தேர்வின் இறுதியில் நீங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து புன்முறுவலோடு விடைபெறுங்கள். நீங்கள் கொண்டு சென்ற அனைத்தையும் மறவாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அறையை விட்டு வெளியேறும் போது அவர்களை முன்னோக்கி பார்த்த வண்ணம், உங்கள் காலடிகளை பின்வைத்து அறைக்கதவை மெதுவாக மூடிவிட்டு வெளியேறுங்கள்.

கேள்விகளுக்கு விடையளித்தல்

அவர்கள் கேட்கும் கேள்விகளைக் கவனமாகக் கேளுங்கள். சிலசமயம் அவர்கள் கேட்கும் கேள்விகள் உங்களுக்குப் புரியாமல் போகலாம், அப்போது அழகிய முறையில் திரும்பச் சொல்லும்படி பணிந்து கொள்ளுங்கள். பதிலைச் சொல்லும் போது தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அவர்கள் அதிகமான விவரங்கள் கேட்டால் மட்டும் விரிவாகச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் தாமதிக்காமல் தெளிவான பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும் போது மறவாமல் கேள்வி கேட்டவரை மட்டும் பார்த்துச் சொல்லாமல் மற்ற அனைவரின் பக்கமும் உங்கள் பார்வைகளை பார்த்துக் கொள்ளுங்கள். சரியான பதில்களை மட்டும் உறுதியாகச் சொல்லுங்கள். உங்களுக்குச் சந்தேகமாக இருப்பவைகளை நான் நினைக்கிறேன்..., எனக்குத் தெரிந்த வரையில்..., என்று ஆரம்பித்துச் சொல்லுங்கள். பதில் கூறும் போது. தெளிவான வார்த்தைகளைக் கொண்டு உச்சரியுங்கள். அந்த அறையில் தேவையான சப்தத்தை மட்டும் உயர்த்துங்கள். உங்கள் பதில்களை உடனடியாக உரையுங்கள் காலதாமதம் செய்யாமல் நகைச்சுவையாகப் பேசுவதையும், பிறரை குறை சுமத்திப் பேசுவதையும் அங்கே தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை தொடர்புபடுத்தி பதிலைச் சொல்லவும். பதில் சொல்லும் போது உங்கள் கழுத்து டையை இறுகப்படுத்துவதோ அல்லது உங்கள் ஆடைகளை சரி செய்வதோ செய்யாதீர்கள். அவர்கள் மேஜையிலுள்ள பொருட்கள் உங்களுக்கத் தேவைப்பட்டால் அவர் அனுமதி பெற்று பயன்படுத்துங்கள். அவர்கள் கேள்வி கேட்க எந்த அளவிற்கு சப்தத்தை உயர்த்துகிறார்களோ அதே அளவு சப்தத்தைக் கொண்டு பதில்களைக் கூறுங்கள்.


உங்கள் விடைகள் சரியானவை என அவர்களால் வரவேற்கப்படும் போது நன்றியைத் தெரிவியுங்கள். உங்கள் பதில்கள் நிராகரிக்கப்படும்போது ஸாரி என்று வருத்தத்தைத் தெரிவியுங்கள். பதில்களைச் சொல்லும் போது மரியாதையைக் கடைபிடியுங்கள்.


கவனிக்கப்படவேண்டியவைகள்

1. உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். சரியான தகவல்கள் கொண்டதாகவும், தங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களும் அவசியமாக இருத்தல் வேண்டும்.

2. உங்கள் பயோ-டேட்டா குறுகியதாகவும், உங்கள் ஒப்பம் இட்டதுமாக இருக்க வேண்டும்.

3. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் உங்களுக்கான அழைப்பிதழ் கடிதத்தை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

4. அவர்களோடு உங்கள் சந்திப்பின் ஆரம்பத்திலும், கடைசியிலும் கைகுலுக்கி இந்த வாய்ப்புக்கு நன்றி கூற வேண்டும்.

5. நேர்முகத்தேர்வின் போது நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அமைதியாக வெளியேறி விடவும்.

6. நேர்முகத் தேர்வின் போது நீங்கள் தேர்வு செய்யப்பட்டதை அவர்கள் அறிவித்தால் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் நீங்கள் உங்கள் நிலைமைகளைச் சொல்லிவிடுங்கள். உதாரணமாக சம்பளம் மற்றும் இதர படிகள் வசதிகளின் விபரம் போன்றவை

இன்ஷா அல்லாஹ் வெற்றி உங்களது ஆகட்டும்

நன்றி : இஸ்லாம் கல்வி (மாலிக் கான்)

Friday, May 16, 2008

ஆட்டம் காணப் போகும் டென்மார்க் அரசு

டேனிஸ் மக்கள் கட்சியோடு உள்ள உறவை துண்டிக்க கண்சொவேடிவ் இளைஞர் அணி வலியுறுத்தல்

முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்து வரும் டேனிஸ் மக்கள் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவதை முழுவதுமாக நிறுத்திவிடும்படி அரசை ஆதரிக்கும் கண்சொவேடிவ் இளைஞர் அணியை
சேர்ந்த கிறிஸ்டியான் துலூசன் டால் தெரிவித்தார். அனைத்து முஸ்லீம்களையும் ஒட்டு மொத்தமாக பகைத்துக் கொள்ளும் டேனிஸ் மக்கள் கட்சியின் போக்குடன் இணைந்து போக முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது இவ்விதமிருக்க முஸ்லீம் பெண்களின் தலைத்துண்டு அணிவதை எதிர்க்கும் பிரச்சனை , முகமது (நபி) கேலிச்சித்திரங்கள் போன்றவற்றால் முஸ்லீம்களுடன் பகைத்துக் கொள்ளும் போக்கை டென்மார்க் பிரதிபலிபப்பது இனி வரும் காலங்களில் டென்மார்க்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தி துண்டாக்கிவிடும் அபாயத்தை உள்ளடக்கியது என பெல்ஜியம் தத்துவ, சமூகவியல் பேராசிரியர் கார்மன் டி லே தெரிவித்துள்ளார்.

நன்றி : சிங்கை இமாம் அலி

Tuesday, May 13, 2008

பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் விஞ்ஞானம்.

இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துவதாகவும் அவர்களை பர்தா என்ற சிறையில் அடைத்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்ட தாகவும் அவர்களின் உள் அலகுகளைப் பார்க்கமுடியாமல் போன ஆவேசத்தில் அறை கூவல் விடும் அறிவீனர்களுக்கு ஆப்பு வைப்பது போல இருக்கிறது கீழே இருக்கும் இந்தப் பதிவு. இத்தனை பதிந்த வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இதில் மட்டும் அல்ல இன்னும் பல விசயங்களில் இஸ்லாம் ஒரு நீண்ட தொலை நோக்குப் பார்வை கொண்ட ஒரு மார்க்கம் என்பதை இன்றைய பல கண்டுபிடிப்புகளும் சம்பவங்களும் நினைவூட்டத் தவற வில்லை.

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

நன்றி : உழவன்

http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post_13.html

Sunday, May 11, 2008

பக்தியின் பெயரில் அப்பாவி இந்து மக்களை ஏமாற்றும் சாமியார்கள்.

துபாயில் லட்சக்கணக்கில் மோசடி புகார் கேரள சாமியார் வீட்டில் சோதனை: ஆபாச சி.டி.க்கள் சிக்கின

துபாய் நாட்டில், லட்சக்கணக்கில் மோசடி செய்த புகார் தொடர்பாக, கேரள சாமியாரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஆபாச சி.டி.க்கள் சிக்கின. வெளிநாட்டுக்கு அவர் பெண்களை கடத்தினாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரள சாமியார்
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த கட்டப்பனை என்ற இடத்தை சேர்ந்தவர் அமிர்தா சைதன்யா சுவாமி என்ற சந்தோஷ் மாதவன். இவர் கேரளாவில் பிரபலமாக விளங்கி வந்தார். இவர் அடிக்கடி துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு விமானத்தில் சென்று வருவார்.(?)
இந்த நிலையில் அவர் மீது குற்றம் சாட்டி, சர்வதேச போலீசில் இருந்து, கேரள போலீசுக்கு கடிதம் வந்தது. சாமியாரின் நடவடிக்கையை கண்காணிக்கும் படியும், அவர் ஐக்கிய அரபு நாடுகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும், இது பற்றி கேரளாவில் விசாரிக்கும்படியும், அவரை கண்டு பிடிக்கும்படியும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் துபாயில் வசிக்கும் சாராபின் எட்வின் என்ற பெண்ணும் ஒரு புகாரை, கேரள போலீசுக்கு பேக்சில் அனுப்பி இருந்தார். அதில் சாமியார் தன்னிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்த இரண்டு புகார்களையும் வைத்து, கேரள போலீசார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வீட்டில் சோதனை
கடந்த 10-ந் தேதி, கொச்சியில் உள்ள அமிர்தா சைதன்யா சுவாமியின் அடுக்கு மாடி வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அமிர்தா சைதன்யா, வீட்டில் இல்லை. போலீசார் அங்கு துருவித்துருவி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சாமியார் அமரும் புலித்தோல் ஒன்றும், ஏராளமான ஆபாச சி.டி.க்களும், ஆபாச புத்தகங்களும், போலீஸ் னினிபார்ம் ஒன்றும், நிலம் தொடர்பான சில தஸ்தாவேஜுக்களும், சந்தன கட்டைகளும், வெளிநாட்டு மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
சாமியாருக்கு சொந்தமான எர்ணாகுளம் விருந்தினர் மாளிகை மற்றும் ஆசிரமத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சாமியாரின் பூர்வீக வீடு கட்டப்பனையில் உள்ளது. அங்கும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கேரள மந்திரிகள் பேட்டி
இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி பினாய் விஸ்வம் கூறியதாவது:-
சாமியாரின் வீட்டில் இருந்து ரூ. 11/2 லட்சம் மதிப்புள்ள புலித்தோல் சிக்கி இருக்கிறது. புலித்தோல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். எனவே அவர் மீது, எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி கேரள வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து, அரசுக்கு அறிக்கை கொடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு மந்திரி விஸ்வம் கூறினார்.
உள்துறை மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாமியார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது சர்வதேச போலீஸ் பிரச்சினை. எனவே இதில் எந்த குறுக்கீடும் இன்றி நடவடிக்கைகள் இருக்கும். சந்தோஷ் மாதவன் என்ற பெயரில் 2 பேர் கேரளாவில் இருக்கிறார்களா? என்றும் சர்வதேச போலீஸ் கேட்டு இருக்கிறது. இது பற்றியும் விசாரிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
உண்மையான புலித்தோல்தானா?
துபாய் பெண் அனுப்பிய புகார் தொடர்பாக ஒரு வழக்கும், புலித்தோல் வைத்திருந்ததாக ஒரு வழக்கும், சாமியார் மீது, கேரள போலீசார் பதிவு செய்து இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட புலித்தோல் பற்றி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்பதை உறுதிப்படுத்த அதை ஐதராபாத்தில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
சர்வதேச மற்றும் கேரள போலீசாரால் தேடப்படும் சந்தோஷ் மாதவன் 2 பெயரில் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக தெரிகிறது. அவர் கேரளாவில் இருந்து சில பெண்களை அரபு நாடுகளுக்கு, கடத்தினாரா? போதைப்பொருள் போன்றவற்றை கடத்தினாரா? நிழல் உலக தாதாக்களுடன் அவருக்கு தொடர்பு உண்டா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாமியார் ஆவதற்கு முன்
சந்தோஷ் மாதவன், சாமியார் ஆவதற்கு முன் சாதாரண மனிதராக இருந்தார். அப்போது அவர் துபாயில் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் துபாய் போலீசுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு, கேரளா வந்து, சாமியார் ஆகி குறி, ஜோதிடம் சொல்லி பிரபலம் ஆனதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் மாதவனுக்கு 2 மனைவிகள் உண்டு. அவர்கள் தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் அழகிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம்.
நடிகர்கள் யார்?
மேலும் அவர் அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்தார் என்றும், உயர் மட்ட அளவில் விபசாரம் நடத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாமியாருடன் தொடர்பு வைத்திருந்த அரசியல் புள்ளிகள்-நடிகர்கள் யார்? என்று போலீசார் துருவித்துருவி விசாரிக்கிறார்கள்.

நன்றி : தமிழ் நியூஸ்

அன்பிர்க் கினிய இந்து சமய சகோதரர்களே இத்தகைய போலிகள் அன்றிலிருந்து இன்று வரை என்றும் உங்களை பக்தியின் பெயரில் ஏமாற்றுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது.நீங்கள் கடவுள் என்றால் என்ன என்பதனைப் பற்றி உண்மையாக அறிந்து கொள்ளாததுதான்.சாதாரணமாக ஒரு கம்பெனி யில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் கூட அவருக்கு சில தகுதிகள் இருக்கிறதா என்று சோதித்து தேர்ந்தெடுக்கும் போது உலகம் மொத்தத்துக்கும் வழிபாட்டுக்கு அல்லது வழிபட போதுமான தகுதி நான் தேர்ந்தெடுத்த கடவுளுக்கு உள்ளதா என்று நிங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.அப்படி இதுவரை சிந்தித்திருக்கவில்லை எனில் இனியேனும் உங்கள் கடவுளை தேடிக் செல்லுங்கள். உங்களை படைத்தவனை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.மனிதனால் படைக்கபட்டவற்றை பகுத்தறிந்து கொள்ளுங்கள் .