Saturday, March 8, 2008

வாட்டர்போர்டிங் விசாரணை உத்தியை எதிர்த்து நடந்த ஒரு போராட்டம்










சி.ஐ.ஏ.வின் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடுக்கும் சட்டம் அமலுக்கு வருவதை அதிபர் புஷ் தடுத்துள்ளார்


வாட்டர்போர்டிங் விசாரணை உத்தியை எதிர்த்து நடந்த ஒரு போராட்டம் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயன்படுத்திவரும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடைசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தனது வெட்டு வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுதிவிட்டதை அதிபர் புஷ் உறுதிசெய்துள்ளார்.
சி.ஐ.ஏ.வின் இந்த விசாரணை முறைகளால்தான் அமெரிக்கா மீது மறுபடியும் மறுபடியும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பது தடுக்கப்படிருக்கிறது, இந்த சட்டம் தெரிவிக்கும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அதிபர் புஷ் கூறியுள்ளார்.






விசாரிக்கப்படும் நபருக்குக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற விசாரணை உத்திக்கும் இந்த சட்ட மசோதா தடை விதித்திருக்கக் கூடும். இந்த விசாரணை உத்தியை சித்ரவதை என்று கூறி மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தனர்.












செய்தி தொகுப்பு : BBC தமிழ் (Thanks)

அருகேஎஸ்.டி.டி.பூத் உடைப்பு; வாலிபர் மீது தாக்குதல்(சேக் தாவூது ....

வேதாரண்யம், மார்ச்.9-

வேதாரண்யம் அருகே எஸ்.டி.டி. பூத் கடையை அடித்து உடைத்து வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல்

வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை செங்காத்தலைரோடு கடைவீதியில் சேக் தாவூது என்பவர் எஸ்.டி.டி. பூத் மற்றும் செராக்ஸ் கடைவைத்துள்ளார். இங்கு அதே ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்லையன்(வயது32) வேலைபார்க்கிறார்.

இந்தநிலையில் அங்குள்ள ஒர்க்-ஷாப்புக்கு வந்த கார் பின்னோக்கி வந்தபோது அந்தக் கடையின் போர்டு நொறுங்கியது. இதைக்கண்ட செல்லையன் தட்டிக்கேட்டார். உடனே காருக்குள் இருந்த சிவசந்திரன்(26), ரசல் சாக்ரடீஸ்(35), சபரிநாதன்(29), அரவிந்தன்(25) ஆகிய 4 பேரும் கீழே இறங்கி வந்து கடையில் இருந்த கம்ப்ïட்டர், செராக்ஸ் மிசின் அகியவற்றை அடித்து நொறுக்கினர். செல்லையனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்களையும் அள்ளிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

கடையடைப்பு

இதுபற்றி வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த செல்லையன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து அந்தப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் சுப்பிரமணி அங்கு விரைந்து வந்து, சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர்களிடம் தெரிவித்தார். அதனால் கடையடைப்பு, மறியலை வியாபாரிகள் வாபஸ் பெற்றனர்.
4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம், ஏட்டுகள் தனிக்கொடி, சேகர், பாலு, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Thanks:Dailythathi

"கொசுவே இன்று வேண்டாம், நாளை வா' கொசுவுக்கு கோவில் (கொசுவாம்பிகை ?)



கொசுவுக்கு கோவில் எழுப்பிய அதிசய டாக்டர்
ஐதராபாத்:கொசுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களிடம் செய்து வந்த பிரசாரம், கண்காட்சி, கருத்தரங்கு எதுவுமே கைகொடுக்கவில்லை. இப்படிப்பட்ட கொசுவுக்கு கோவில் தான் கட்ட வேண்டும் என்று ஒரு டாக்டர் முடிவு செய்தார். கொசுவுக்கு அவர் கட்டிய கோவில், இப் போது நல்ல பலன் தருகிறது.



ஆந்திர மாநிலத்தில் உள்ள மொக்ஷாகுந்தம் என்ற கிராமத்தில் டாக்டராக பணியாற்றுகிறார் சதீஷ் குமார். கிராமத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர், குப்பைகளால் கொசு அதிகளவில் உற்பத்தியாகி, கொசுக்கடியால் பல் வேறு நோய்களுடன் சிகிச் சைக்கு வந்தவர்களிடம், கொசுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பார்த் தார். கண்காட்சி நடத்தி, கொசுக்களை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து விளக்கினார். கருத்தரங்கு நடத்தினார்; கலந்து கொள்ளத்தான் ஆளில்லை.வெறுத்துப் போன டாக்டர் சதீஷ், ஆன்மிக வழியில் மக்களை திருத்த முடிவு செய்தார். ஒரு வேப்பமரத்துக்கு கீழே, திண்ணையுடன் கூடிய இரண்டரை அடி உயர, "கோவில்' கட்டினார். "கோவிலில்' பெரியளவில் கொசுவின் படத்தை வரைந்து வைத்தார். இந்த, "கோவில்' நல்ல பலனை கொடுத்தது. "இந்த கோவில் வழிபாடு நடத்துவதற்கு அல்ல; கொசுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்வதற்குத் தான்' என்று கிராம மக்களிடம் விளக்கினார்.



கொசுவின் படத்துக்கு கீழே, "கொசுவே இன்று வேண்டாம், நாளை வா' என்று வாசகம் எழுதி வைத்துள்ளார். பக்கவாட்டில் ஒரு பெரிய பலகையில், கொசுவை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பதை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துள்ளார்.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன், இந்த "கோவிலுக்கு' செல்ல டாக்டர் சதீஷ் குமார் தவறுவதில்லை. அங்குள்ள திண்ணையில் சற்று நேரம் அமர்ந்திருப்பார். அப்போது அங்கு வரும் மக்களிடம், கொசுக்களின் தீமை குறித்தும், அவற்றை எப்படி ஒழிப்பது என்பது குறித்தும் விளக்குவார். பின்னர் வீடு திரும்புவார். இது அன்றாட வழக்கமாகிவிட்டது. மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. பெற்றோருக்கு, நேசிப்பவர்களுக்கு, வளர்ப்பு பிராணிகளுக்கு, ஏன், நடிகைக்குக் கூட கோவில் கட்டிய கதையை கேள்விப்பட்டு இருக்கலாம். கொசுவுக்கு கோவில் கட்டப்பட்டு இருப்பதை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. கொசுவுக்கு எழுப்பப் பட்ட ஒரே கோவில், இதுவாகத்தான் இருக்கும்.



நன்றி : தினமலர்


அன்பிற்குரிய சகோதர சமுதாயமே இன்று இது உங்களுக்கு ஒரு நல்ல முயற்சியாய் தெரியலாம். ஆனால் இனி வரும் தலைமுறை கடவுள் என்றால் இதுவும் கடவுளின் உருவம் தான் இப்படியும் கடவும் பாவங்களை அழிக்க வருவார் என்ற ஒரு கீழ்த்தரமான ஒரு நம்பிக்கையை உருவாக்கிவிடும்.இன்னும் இது போன்ற ஒரு சிலரின் முயற்சி தான் அன்றும் இருந்தது.
இதே போன்று தான் முன்பு ஒரு முறை சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு விற்கு கோவில் கட்டியதையும் அதில் குஷ்பாம்பிகை என்ற ஒரு சிலை வைத்தும் இன்னும் அந்த கோவிலில் பூஜை களும் புனஷ் காரங்களும் மக்களால் நடத்தப் படுவதும் குறிப்பிடலாம்.இந்த குஷ்பு தமிழ் நாட்டுப் பெண்களையும் இந்தியக் கலாச்சறதும் குழி தோண்டி புதைக்கும் விதமாக பேசியதாக பல வழக்குகள் இவர்மேல் உள்ளதும் குறிப்பிடத் தக்கது.இப்போது சொல்லுங்கள் இந்த குஷ்பு வழி பட தகுதி உள்ளவர் தான ? இலை எனபது அப்பட்ட மான உண்மை.இது ஒரு சமகால நிகழ்வு.எனவே தான் இத்தனை இங்கே குறிப்பிடுகிறேன்.
இன்று நீங்கள் கடவுள் என்ற பெயரால் சில படைப்புகளை வணங்க இதுவே முதற்காரணம். எல்லா விசயத்திலும் உங்கள் மூததயர்களை பின்பற்றும் நீங்கள் அத்தகைய ஒரு அன்பின் காரணமாக உணமயான் படைப் பாளனை பற்றி ஒரு ஆழ்ந்த அறிவு இல்லாமலே இருக்கிறீர்கள்.ஒரு படைப்பாளனுக்கு உள்ள தகுதிகள் என்ன என்பதனை நீங்கள் சற்று சிந்தித்தாலே போதும் இது போன்றவர்கள் சாக்கடையில் இருக்கும் ஒரு அற்ப ஜந்துவிர்க்கு கோயில் என்று உங்களை ஏமாற்ற எத்தனிக்க மாட்டார்கள்.சிந்திபீர். இனியாவது

படைப்புகளை வணங்கு வதை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவனை வணங்குங்கள்.


ஒருவனுக்கு ஒருத்தி எனபது தான் எங்கள் மத கோட்பாடு

வரதட்சணை கொடுமை 7 பேர் மீது வழக்கு

மேலுõர்: அக்கா தங்கையை மணந்தவர் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவியை மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தி உள்ளார்.
கீழ கள்ளந்திரியை சேர்ந்தவர் மந்தக்காளை. இதே ஊரைச் சேர்ந்த சாந்திக்கும் இவருக்கும் 92ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஏராளமான சீர் வரிசைகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால், ஆண் குழந்தை வேண்டி சாந்தியின் தங்கை ராசாத்தியையும் இவர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஆடு மேய்க்கும் சுசீலா என்பவருடன் மந்தக்காளைக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி சாந்தியை இவர் மற்றும் இவரது பெற்றோர் கொடுமைப் படுத்தி உள்ளனர். இந்த தகராறில் சாந்தியின் மண்டையை மந்தக் காளை உடைத்துள்ளார்.

இது குறித்து சாந்தி மேலுõர் மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மந்தக்காளை, அவரது தந்தை ராமையா, தாயார் மல்லிகா, சகோதரர் சேதுபதி, அவரது மனைவி சித்ரா, கார்த்திகா மற்றும் சுசீலா ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

நன்றி : தினமலர்


"பெண்களிடம் வரதட்சணை வாங்க கூடாது"மாறாக மகர் பணம் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையை போதிக்கும் மார்க்கத்தை குறை சொல்லும் போது அறிவு இல்லாத காவி வெறியர்கள் இது போன்ற ஆட்களை திருத்தும் வேலையே இனி முதல் தொடங்கினால் நல்லது .

அசாம் மாநிலத்தில்2 இடங்களில் குண்டு வெடித்தது20 பேர் படுகாயம்


கவுகாத்தி, மார்ச்.9-


அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடை வீதியில் ஒரு லாரியின் கீழ் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு நேற்று பகல் 1 1/2 மணிக்கு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ஒரு தொழிலாளி, ஒரு டீக்கடைக்காரர், பாதையில் நடந்து சென்ற 2 பேர் ஆக 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.


இந்த குண்டு வெடிப்பு நடந்த 30 நிமிடங்களில் தின்சுக்கியா நகரத்தில் ஒரு குண்டு வெடித்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
2 குண்டு வெடிப்புகளையும் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தாங்கினி என்ற இடத்தில் வெடிக்காத 2 1/2 கிலோ எடையுள்ள ஒரு குண்டை போலீசார் கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.


Thanks : Dailythanthi



தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் பிற பகுதிகளிலும் சரி நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் பல காவி கொலைவெறி இயக்கங்கள் இருப்பது சமீப காலமாக எல்லோரும் அறிந்த ஒன்று தான்.உதாரணமாக சமீபத்தில் தமிழ்நாட்டில் தென்காசி என்ற இடத்தில் R.S.S அலுவலகத்துக்கு அவர்களே வெடி குண்டு வைத்து வெடிக்க செய்து அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை கலவர சுடுகாடாய் ஆக்க போட்ட திட்டம் அம்பலமானதும் இன்னும் நான்டிடில் குண்டு தயாரிக்கும் போது பிடிபட்டதும் கூடவே பழியை அப்பாவிகளும் தியகிகளுமான ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் மீது போட வேண்டி போலியான தாடிகளும் தொப்பிகளும் மறைத்து வைத்திருந்ததும் இவர்களின் கொலை வெறியையும் முளுவதுமாக மிருகங்களாக ஆகிவிட்ட தன்மையயுமே காட்டுகிறது.இனியும் இந்தியர்கள் உறங்கி விடாமல் இதுபோன்ற இழி பிறவிகளின் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டும்.


அன்புடன்


இறை அடிமை


புதைப்பதா எரிப்பதா...............

..புதைப்பதா எரிப்பதா மோதலில் கோர்ட் புது தீர்ப்பு!*மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைக்க உத்தரவு
கோல்கட்டா: "தாயின் உடலை தகனம் செய்ய வேண்டும்' என்று,இந்து மத வாரிசுகள் போர்க்கொடி உயர்த்தினர்; "அடக்கம் செய்ய வேண்டும்' என்று, முஸ்லிம் வாரிசுகள் வலியுறுத்தின. இரு தரப்பினரிடமும் தாயின் உடலை ஒப்படைக்காமல், கோர்ட் அதிரடி(?) தீர்ப்பு அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பரி ராய்; வயது 65. பிரசாத் பக்ஷி என்பவரை 1961 ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். பக்ஷியின் மரணத்துக்கு பின், சகாரியா மாலிக் என்ற முஸ்லிமை பரி ராய் திருமணம் செய்தார். இவர்களுக்கு பரீதா என்ற பெண் இருக்கிறாள்.
கடந்த நவம்பர் மாதம் பரி ராய் மரணம் அடைந்தார். "எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும்' என்று சகாரியா கோரினார். ஆனால், பரி ராய்க்கு முதல் கணவர் மூலம் பிறந்த இரு பெண்களும்,"எங்கள் தாய் உடலை, சகாரியாவிடம் ஒப்படைக்கக்கூடாது' என்று தெரிவித்தனர். இதனால், மருத்துவமனை அதிகாரிகள் குழம்பினர். " கோர்ட் உத்தரவு வாங்கி வாருங்கள்; பரி ராய் உடலை ஒப்படைக்கிறோம்' என்று சகாரியாவிடம் கூறினர். கோல்கட்டா ஐகோர்ட்டில், இரு தரப்பினரும் வழக்கு போட்டனர். "எங்கள் தாய் , இந்துவாக பிறந்தவர்; அவர் உடலை தகனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று இந்து மதத்தை சேர்ந்த மகள்கள் கூறினர்.
"பரி ராய், என்னை திருமணம் செய்து கொண்ட பின் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராகி விட்டார். அவர் உடலை அடக்கம் செய்ய, என்னிடம் ஒப்டைக்க வேண்டும்' என்று சகாரியா கோரினார். "இருவரில் எவரிடமும் உடலை ஒப்படைக்க முடியாது; மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் மருத்துவக்கல்லுõரியிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கும் இரு தரப்பினரும், தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
தலைமை நீதிபதி நிஜ்ஜார் மற்றும் நீதிபதி பட்டாச்சார்யா, இரு தரப்பினரின் அப்பீலையும் நிராகரித்து, கோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர்." உடலை , ஒரு தரப்பினரிடம் தந்தால், அடுத்த தரப்பினர்பிரச்னை செய்வர். இரு தரப்பினரும் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால், பரி பாய் உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவக்கல்லுõரியிடம் ஒப்படைப்பது தான் சரி' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய தயாராக இல்லைமத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருத்து

புதுடெல்லி, மார்ச்.9-

"அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய தயாராக இல்லை'' என்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் கெடு
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை. இடது சாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவை வருகிற 15-ந் தேதிக்குள் கூட்டவேண்டும் என்றும் இடது சாரி கட்சிகள் கெடு விதித்து இருக்கின்றன.
இந்திய கம்ïனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனோ, அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார்.
இதனால் பாராளுமன்றத்துக்கு முன்னதாகவே தேர்தல் வரலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உரிய நேரத்தில் நடக்கும்
இந்த நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலை, உரிய நேரத்தில் (2009-ல்) நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்.

தியாகம் செய்ய தயாராக இல்லை

அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இந்த எண்ணம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் மத்தியில், இதுவரை உருவாகவில்லை.
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்காவுடன் எந்த வித கால கெடுவும் கிடையாது. அவ்வாறு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், மே மாதத்துக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறதே தவிர, ஒப்பந்தத்துக்கு காலக்கெடு இல்லை.

மே மாதத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று, அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். அதற்கு அமெரிக்கா, அதிபர் புஷ்சின் நிர்வாகம் முடிவதற்குள் இதை நிறைவேற்றிக்கொள்ள தவறினால், அடுத்து வரும் ஆட்சியின் போது, இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய நிலையிலேயே நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்து இருக்கிறது.

எனக்கு தெரியும்

கூட்டணி அரசியல் என்றால் எதிர்பாராதவை நடக்கத்தான் செய்யும். இடது சாரிகளின் நிலை எங்களுக்கு நன்றாகவே தெரியும். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்பது, இடதுசாரியின் கொள்கை ரீதியான முடிவு. அதுபற்றி பேச நான் தயாராக இல்லை. இந்த பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் முன்னதாகவே நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். எங்களது கூட்டணி கட்சிகளோ அல்லது கூட்டணியை ஆதரிப்பவர்களோ தேர்தல் பற்றி இதுவரை நினைக்க வில்லை.
மேற்கண்டவாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Thanks : dailythanthi

Tuesday, March 4, 2008

கோவிலில் வெடிகுண்டு பீதி`டம்மி' வெடிகுண்டுகளை விட்டுச் சென்ற................

திருவிடைமருதூர் கோவிலில் வெடிகுண்டு பீதி`டம்மி' வெடிகுண்டுகளை விட்டுச் சென்ற சினிமா படப்பிடிப்பு குழுவினர் மீது நடவடிக்கை

திருவிடைமருதூர், மார்ச். 5-

திருவிடைமருதூர் மகாலிங்கர் கோவிலில் நேற்று வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் பீதி நிலவியது.
மகாலிங்கர் ஆலயம்
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்கர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.

இந்த கோவிலில், மூகாம்பிகை அம்மன் சன்னதியின் மேல்தளத்தில் ஜெகந்நாதன் என்பவர் உழவாரப் பணிகளில் நேற்று ஈடுபட்டு இருந்தார். அவர், அங்கு வளர்ந்து நின்ற தேவையற்ற செடிகளை அகற்ற முற்பட்ட போது அங்கு ஒரு பிளாஸ்டிக் பை இருப்பதைக் கண்டார்.

அதை எடுத்துப் பார்த்த போது அதில் பல வயர்கள், பேட்டரி ஆகியவற்றின் மூலம் வெடிகுண்டு ஒன்று சுற்றி இருந்ததைக் கண்டு அலறியவாறே கோவில் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிரடி சோதனை

இதற்கிடையே இந்த செய்தி, காட்டுத்தீ போல் திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் பரவியதால் மக்களிடம் பீதியும், பதட்டமும் ஏற்பட்டு கூட்டம்-கூட்டமாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் கோவிலை வந்தடைந்தனர். யாரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கும்படி போலீசார் தடை விதித்தனர்.

மோப்ப நாய்

வெடி குண்டு இருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க, மோப்ப நாய் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
போலீசார் 4 பிரிவாக பிரிந்து கோவிலுக்குள் சென்று, மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.
ஒரு குழுவினர், கோவில் ஊழியர் ஜெகந்நாதன் கூறிய இடத்திற்கு சென்று, அங்கிருந்த பிளாஸ்டிக் பையை தண்ணீருக்குள் போட்டு சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் இருந்தது "டம்மி'' (போலி) வெடிகுண்டு என தெரிய வந்தது.

சுமார் 2 மணி நேரம் போலீசார் மற்ற இடங்களிலும் சோதனையிட்டனர். ஆனால் வேறு எங்கும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதை அறிந்த பிறகு பொதுமக்களிடம் பீதி அகன்றது.

மூகாம்பிகை அம்மன் கோவில் மேல்தளத்திற்கு அந்த டம்மி குண்டு எப்படி வந்தது என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரொசாரியோ விசாரணை நடத்தினார்.

அப் போது கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலில் ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்தது தெரிய வந்தது. அந்த குழுவினர் இதை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுபற்றி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரொசாரியோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

"பிளாஸ்டிக் பையில் இருந்தது, டம்மி வெடி குண்டு. அது எப்படி அங்கு வந்தது என்பதை பற்றி விசாரணை நடத்தியதில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு, `சிங்கக்குட்டி' என்ற சினிமா படப்பிடிப்பு நடந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதன்பேரில் அப்படத்தின் மேலாளர்களில் ஒருவரான விஜய குமாரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, படப்பிடிப்பின் போது தீவிரவாதி கோவிலில் வைக்கும் வெடிகுண்டை கதாநாயகன் எடுத்து செயலிழக்கச் செய்வதாக ஒரு காட்சி ஒன்று எடுக்கப் பட்டது என தெரிவித்தார்.
இந்த போலியான வெடி குண்டால் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டு விட்டன. அஜாக்கிரதையாக கோவிலில் அவர்கள் இந்த போலி வெடிகுண்டை விட்டு சென்றதே பீதிக்கு காரணமாகும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.''
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Monday, March 3, 2008

இரவில் மட்டும் பேய் நடமாடுவது ஏன்?

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா? உண்மையில் அப்படி இல்லை. மனிதர்களுக்குத் தான் இருளை கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறது. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது, லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லுõரியின் ஆராய்ச்சிக்குழு. இருள் சூழ்ந்து இருக்கும் போது, நிழலைப் பார்த்து, இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக் கொள்கிறது.

கண்களால் காணும் காட்சி, முழுமையாக மூளைக்கு சென்றடைவதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன் பின் ஒன்றாக, இரண்டு பந்துகளை வீச செய்த போது, வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும், மூளையையும் ஏமாற்றும் செயல். உண்மையில் மூன்றாவது பந்து வீசப்படாத போது, அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும், வீசப்பட்ட பந்து, மற்ற இரு பந்துகளை போல மறைந்து விடுவதாகவும் மூளை உருவகப்படுத்திக் கொள்கிறது.


இது மட்டுமின்றி,கம்ப்யூட்டர் திரைகள் மூலமும், மூளையை கண்கள் ஏமாற்றும் சோதனைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில், 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய, பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப் பட்டது. இந்த சோதனையின் போது, உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தை விட, அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை, அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது.

இதன் மூலம் ஒளி இல்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள், மூளையை ஏமாற்றும் விதமான உருவங்களில் தோன்றுகிறது. இதைத் தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்து கொள்கிறது.

"பயங்கரவாதிகள் ஊடுருவுவதை நிறுத்த வேண்டும்'டில்லி இமாம் திடீர் கோரிக்கை




புதுடில்லி: "பயங்கரவாதிகளை இனியும் ஆதரிக்காதீர்கள்; இந்தியாவில் ஊடுருவ அனுமதிக்காதீர்கள் என, பாகிஸ்தான் புதிய அரசிடம், இந்திய முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும்' என்று, டில்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சையது அகமது புகாரி திடீர் யோசனை தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் டில்லி ஜும்மா மசூதியில், ஷாகி இமாம் சையது அகமது புகாரி பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து அனுப்பப் படும் பயங்கரவாதிகள் தான், இந்தியாவில் பல இடங்களில் சதி செயல்களை நிறைவேற்றி விட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று பதுங்கி விடுகின்றனர். அவர்கள் செய்த வன்முறைகளின் பலன்களை, இந்திய முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இனியும் இதை அனுமதிக்க முடியாது; உடனே நிறுத்தியாக வேண்டும்.பாகிஸ்தானில் இதுவரை இருந்த அரசு, இதை கண்டுகொள்ளவே இல்லை. இப்போது புதிய அரசு உருவாகப்போகிறது. இது தான் சரியான தருணம். மத்திய அரசு உதவியுடன் , இந்திய முஸ்லிம் தலைவர்கள், பாகிஸ்தானுக்கு சென்று, புதிய அரசிடம்," பயங்கரவாதிகளை இனியும் இந்தியாவுக்குள் ஊடுருவ அனுமதிக்காதீர்கள்' என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.


இந்தியாவில் பயங்கரவாதிகள் நடத்தும் சதி செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் ஆதரவு உள்ளது என்பதை புதிய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதை உடனே நிறுத்தச் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை 2002 ம் ஆண்டு சந்தித்தேன். "பயங்கரவாதிகளை வளர்த்து விட வேண்டாம்; உடனே அவர்களை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால், பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும்' என்று சொன்னேன். இப்போது, பாகிஸ்தான், பயங்கரவாத தீப்பந்தில் சிக்கித்தவிக்கிறது. இவ்வாறு ஷாகி இமாம் கூறியுள்ளார்.

மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பா.ஜ.,

புதுடில்லி: "சேது சமுத்திர திட்டம் குறித்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பா.ஜ., தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் விஜய்குமார் மல்கோத்ரா கூறுகையில், "சேது சமுத்திர திட்ட விவகாரம் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் மத்திய அரசு தவறான போக்கை கடைபிடித்து வருகிறது. ராமர் பாலத்தை சேத படுத்தாமல் மாற்று வழியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இந்துக்களின் மத நம்பிக்கையை சீர்குலைக்காத வண்ணம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசு தான் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கூறி சுமுக முடிவு எட்ட வழிவகை செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை' என்றார்.

ஆசிரியர்களை மதிப்பிடும் மாணவர்கள் டில்லி பல்கலை யில் புது திட்டம்

புதுடில்லி: ஆண்டு இறுதியில் மாணவர்களின் திறனை, தேர்வு வைத்து, ஆசிரியர்கள் மதிப்பிடுவது நடைமுறை. டில்லி பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லுõரிகளிலும், ஆசிரியர்கள் எப்படி கற்பிக்கின்றனர் என்பதை மாணவர்கள் மதிப்பிடப் போகின்றனர்.
டில்லி பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சில், முதுநிலை பட்டப்படிப்புகளில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு துறையின் பாடத்திட்டம், அதை கற்பிக்கும் விதத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பதை மாணவர்களிடம் இருந்தே அறிய திட்டமிடப்பட்டுள்ளது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறன் குறித்தும் மாணவர்களே மதிப்பிட உள்ளனர். இதற்காக, தனியாக அவர்களுக்கு படிவம் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த படிவத்தில்,

* ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை எப்படி உள்ளது?

* குறிப்பிட்ட பாடத்தின் வகுப்புகள், வழக்கமாக நடக்கிறதா? ஆசிரியர் தவறாமல் வகுப்புக்கு வருகிறாரா?

* மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு வகுப்பறையில் உரிய முறையில் சரியான விளக்கம் கிடைக்கிறதா?

* கலந்துரையாடல் வகுப்புகள் வழக்கமாக நடத்தப் படுகிறதா?

* செயல்முறை பயிற்சிக்கு போதுமான உபகரணங் கள் உள்ளனவா, கூடுதல் தேவை இருக்கிறதா ?

இது போன்ற கேள்விகள் கொண்ட படிவத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து அளிப்பர். மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீது துறைத்தலைவர் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வரும் 200809 கல்வி ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படும். தங்களை மாணவர்களை வைத்து மதிப்பிடுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலித் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் இடஒதுக்கீடுக்கு அரசு விளக்கம்

புதுடில்லி: "சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தவர்களும், இந்து மதத்துக்கு உட்பட்டவர்கள் தான். அவர்களுடன் ஆதி திராவிட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஒப்பிட முடியாது' என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

"சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தை சேர்ந்த கீழ் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் போது, ஆதி திராவிட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் முரண்படுவது ஏன்?' என்று, ராஜ்யசபாவில் நேற்று போராசிரியர் குரியன், சரத்யாதவ், தாரிக் அன்வர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் துணைப்பிரிவு பி, சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தவரையும் இந்து மதத்துக்கு உட்பட்டவர்களாகவே விளக்குகிறது. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத மற்றும் மொழி சிறுபான்மையினர் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

ஆதி திராவிடர்களை பாதிக்கும் விஷயங்கள், ஆதி திராவிட தேசிய கமிஷனின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும், ஆனால், இதனால் ஆதி திராவிடர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் பரிந்துரை அளித்துள்ளது. ஏற்கனவே, இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பிற்பட்ட, இதர பிறப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து தான், இதைத் தர முடியும். இது தொடர்பாக, பிற்பட்ட வகுப்பினர் தேசிய கமிஷனின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் பரிந்துரை எதுவும் வரவில்லை. 1950ம் ஆண்டு, இந்து மதத்துடன், ஆதி திராவிட வகுப்பினரை தொடர்பு படுத்தி கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு மாநில ஐகோர்ட்டிலும் இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இது குறித்து ஆழமாக விவாதிப்பது, கோர்ட் அவமதிப்பு குற்றமாகிவிடும். இவ்வாறு மீரா குமார் கூறினார்.

Thanks: dinamalar