Saturday, February 9, 2008

திருடனுக்கு அறிவுரையா ஆலோசனையா ?

பணம் திருடிய ராணுவ வீரருக்கு "பகவத் கீதை' பாணி "அட்வைஸ்!'

புதுடில்லி :பணம், புகழ், பதவிக்கு ஆசைப்படாதே; அது எப்போது வர வேண்டுமோ, அப்போது வரும்...!ராணுவ வீரர்கள் முகாமில் பணம் திருட்டு போனதைத் தொடர்ந்து, பகவத் கீதை பாணியில், அறிக்கை வெளியிடப்பட்டது.
இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில், சமீபத்தில் ஒரு வீரரின் ஏ.டி.எம்., கார்டை திருடி யாரோ ஒரு வீரர் பணம் எடுத்துள்ளார். இப்படி சிறிய அளவில் திருட்டுகள் நடந்து வருவது கண்டு உயர் அதிகாரிகள் அதை தடுக்க, நுõதன வழியை கண்டுபிடித்தனர்.ராணுவ வீரர்களுக்கு, வேதம், பகவத் கீதை பாணியில் அறிவுரை கூறி, இதுபோன்ற சிறிய திருட்டுகளை தடுக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். "பதவிக்கு ஆசைப்படக்கூடாது; பொருளுக்கு ஆசைப் படக்கூடாது; எது எப்போது வர வேண்டுமோ, அப்போது, உன் தகுதிக்கேற்ப வந்து சேரும்' என்று பாண்டவர்களுக்கு பீஷ்மர் அறிவுரை கூறியிருந்தது போல, ராணுவ வீரர்களுக்கு அறிவுரை அறிக்கையை உயர் அதிகாரிகள் தயார் செய்தனர்.
"நாம் எந்த சூழ்நிலையிலும், ஆசையில் மூழ்கி விடக் கூடாது. அடுத்தவர் மீது சந்தேகப்பட்டாலோ, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலோ அதுவே பெரும் அழிவுக்கு காரணமாகி விடும். மன அமைதி குலையும். பண்புகள் மறைந்துவிடும். அதனால், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து நழுவி விடுவோம். நம் உயர்ந்த கடமையை எண்ணி நாம் உயர்ந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும். எல்லாரும் சமம் தான். பாகுபாடே கிடையாது. அதை மற்றவரிடம் காட்டவும் கூடாது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பல இடங்களில், பகவத் கீதை தத்துவங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. "நம் முன் பெரிய சவால்கள் உள்ளன; அவற்றை தாண்டி சாதிக்க, நாம் எல்லாரும் ஒற்றுமையாக நடந்தால் தான் முடியும். மூத்தவர், இளையவர்கள் என்று பாகுபாடு இல்லாமல், ஒன்று சேர்ந்தால் தான் சாதிக்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : தின மலர்

சமீபத்தில நூறு தடவ திருடினவருக்கு ரூபாய் 5000 அபராதம்னு தண்டனை குடுத்தத படிச்சேன்.இது தான் திருட்டுக்கு தண்டனயன்னு கெட்ட இது திருடுரவன உற்சாக படுத்துரதுன்னு சொல்லலாம்.ஒரு தடவ திருடுனப்பவே பிடிச்சி அவன் கைய வெட்டி விட்டுருந்தா அதே ஆளு நூறு தடவ திருடி இருப்பனா? திருட்ட தடுக்கனும்ன இனி முதல் திருடு போனவரின் ஆலோசனைப் படி என்ன தண்டனை கொடுக்க சொல்கிறாரோ அந்த தண்டனையை பரிசீலித்து கொடுத்தாலே ஒழிய இந்த நாட்டில் திருட்டை ஒழிக்க முடியாது.காரணம் ஒழிக்க வேண்டியவங்களே அல்லவா பெரிய திருடகளாக இருக்கிறார்கள்.

No comments: