Thursday, April 3, 2008
சதித்திட்டம் நிறைவேறாததால் ஆர்எஸ்எஸ் ஆத்திரம்
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்தபின் இந்த இரண்டாண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி யிருக்கிறீர்கள். அவற்றில் மிக முக்கிய மானவையாக நீங்கள் கருதுகிற நடவடிக் கைகள் எவை?
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதும், மூடப்பட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை மறுபடி இயங்கச் செய்த தும், மீனவர்கள் உள்பட பெரும்பகுதி மக்களை கந்துவட்டிக்காரர்கள் பிடியிலிருந்து மீட்டதும், கல்வித்துறையை தனியாரிடமிருந்து மீட்டு சமூகநீதியை நிலைநாட்டியதும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் என்று சொல்லலாம். எல்டிஎப் ஆட்சிக்கு வந்த போது, விவசாயம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. ஆயிரத்துக் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தி ருந்தார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, அந்த ஆயிரம் விவசாயி களின் குடும்பங்கள் அரசுக்குச் செலுத்தவேண் டியிருந்த கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்தோம். மற்ற விவசாயிகள் கடனைத் திருப் பிச் செலுத்த ஓராண்டு கால நீட்டிப்பு அறிவித்தோம்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசு, விவசாயத் தொழிலாளர்களுக் கான ஓய்வூதியத் தொகையை 26 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது. விவசாய நெருக்கடி யால் அவர்களது குடும்பங்களும் வேலையி ழந்து தவித்த நிலையில் அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.1050 வீதம் அந்தத் தொகையை உடனடியாக வழங்கினோம். உடன டியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கடன் நிவாரணக் குழு ஒன்று அமைத்தோம். நிலைமைகளை ஆராய்ந்த அந்தக் குழு முதல் நடவடிக்கையாக, 25,000 ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் பரிந்துரைத்தது. வேறு பல பரிந்துரைகளையும் அந்தக் குழு வழங்கியது. அமைச்சரவை கூடி உடனடியாக அந்தப் பரிந்துரைகளைச் செயல் படுத்த முடிவெடுத்தோம், செயல்படுத்தினோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் யுடிஎப் ஆட்சியில் கிலோ ரூ.7 விலையில்தான் கொள்முதல் செய்யப்பட்டுவந்தது. எல்டிஎப் அரசு அதை இப்போது 10 ரூபாயாக உயர்த்தி யிருக்கிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் விவசாயிகள் தற்கொலை முற்றிலுமாக நின் றது. சாகுபடி செய்யாமல் போடப்பட்டிருந்த நிலங்களில் மறுபடியும் பயிர்கள் விளையத் தொடங்கின.
யுடிஎப் ஆட்சியின்போது லாபகரமாக இல் லை என்று சொல்லி மூடப்பட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை மறுபடியும் திறக்க வலி யுறுத்திப் போராடிவந்தோம். எல்டிஎப் அரசு தனது அடுத்த முக்கிய நடவடிக்கையாக அந் தத் தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்தது. அவற்றைச் சார்ந்திருந்த தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. அவ் வாறு திறக்கப்பட்ட பின், 24 நிறுவனங்கள் இப் போது லாபகரமாக இயங்குவதாகத் தணிக்கை அறிக்கைகள் காட்டுகின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் அது தனி யாரின் வேட்டை நிலமாக மாற்றப்பட்டிருந்தது. கல்விக்கட்டணங்கள் ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த மாணவர்களால் கனவுகூட காணமுடியாத அளவுக்கு மிகக் கடுமையாக இருந்தன. எங்கள் அரசு கல்விக்கான சட்ட முன்வரைவு ஒன்றை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தது. அமைச்சர்கள் கல்லூரி நிர்வாகங்களோடு பேசினார்கள். இன்று, ஏழை மாணவர்கள், தலித் மாணவர்கள், பிற் படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு உறுதிப்படுத் தப்பட்டிருக்கிறது. கல்வித்துறையில் சமூக நீதி யும், தகுதியும் இணைந்து நடைபோடச் செய்தி ருக்கிறோம். இப்படிப்பட்ட திட்டவட்டமான நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்கள் அதாவது ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
புதிய வேலை வாய்ப்புகள் எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன? நில விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளனவா?
புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வளமான, எளிதான வாய்ப்புகளை அரசு உரு வாக்கிக் கொடுக்கிறது. இன்றைய நவீன தக வல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில் களும் நிறைய தொடங்கப்பட்டுள்ளன. இத னால், தகவல் தொழில்நுட்பம் பயின்ற பல்லா யிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கச் செய்வது என்பது ஒரு முக்கியமான கொள்கை. முந்தைய ஆட்சியில் லட்சக் கணக் கான அரசு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்க ளும், ரியல் எஸ்டேட் கொள்ளை நிறுவனங் களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தன. அந்த நிலங்களை அவர்களிடமிருந்து மீட்பது என்று முடிவு செய்தோம். இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் மட்டுமே கிட்டத்தட்ட 12,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டோம். அது பெரிய சர்ச்சையானதும், அரசு உறுதியான நிலையை மேற்கொண்டதும் ஊட கங்கள் வாயிலாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந் தது 3,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியிருக் கிறோம். இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விரைவில் தலித் மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் மற்றவர் களுக்கும் மறுவிநியோகம் செய்யப்பட உள் ளன. அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட் டுள்ளன.
“விமோசன சமரம்” என்ற பெயரில் முன்பு இ.எம்.எஸ். அரசுக்கு எதிரான ஒரு கலவ ரத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி இப்போ தும் அதேபோல் அறிவித்திருக்கிறதே?
எல்டிஎப் அரசின் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்கிறது என்பதுதான் இதன் பொருள். இப்போது கேரளத்தின் நெல் வயல்களில் அறு வடைக் காலம். எதிர்பாராமல் பெய்த மழையால் வயல்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாழாகிவிட்டன. விவசாயிகள் துயரத்திற்கு உள்ளாகியிருக்கி றார்கள். அரசும் துயர்துடைப்புப் பணிகளைத் துவக்கியிருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதில்கூட அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்று பார்க் கிறார்கள். அரசு எதுவுமே செய்யவில்லை என்ற அவதூறுப்பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார் கள். அதற்கு விமோசன சமரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த முயற்சிக்குப் பின்னால், முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகளில் எல்டிஎப் அரசின் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் கார ணமாக மக்களிடையே தாங்கள் தனிமைப் பட்டுப்போய்விடுவோம், எல்டிஎப் மேலும் செல் வாக்குப் பெற்றுவிடும் என்ற கலக்கமும் இருக்கிறது. உதாரணமாக, முறைசாராத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை யுடிஎப் அரசு பொருட்படுத்தியதே இல்லை. நாங்கள் அவர் களது குறைந்தபட்சக் கூலியை உறுதிப்படுத் தும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கடைகளில் ஒரு நாளில் 13, 14 மணிநேரம் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் உள்பட சுமார் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சக் கூலி உத்தரவாதமாகியிருக்கிறது.
இந்த ‘விமோசன சமர வீரர்கள்’ தங்களு டைய குறுகிய அரசியல் நோக்கங்கள் காரண மாக, பல இடங்களில் மதவாத சக்திகளுடனும் கூட சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் இதை யெல்லாம் எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இதர எல்டிஎப் கட்சிகளும் தயாராக இருக்கிறோம்.
கண்ணூர் மாவட்டத்தில் மதவெறி சக்திகளால் பிரச்சனையும் வெடித்திருக்கிறது. தலைநகர் டில்லியிலும் மற்ற இடங்களிலும் ஆர்எஸ்எஸ் தலைமையில் மதவெறி சக்தி கள் வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார் கள். இதன் பின்னணி என்ன?
கேரள மண்ணை மதவெறிமயமாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டமும், அதை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஆத்திரமும்தான் அடிப் படையான பின்னணி. மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக் களிடையே உள்ள தாக்கம் அவர்களை விரக்தி யடைய வைக்கிறது. அந்த விரக்தியால், உள் ளூர் வட்டாரங்களில் தங்களது நோக்கத்திற் குத் தடையாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தாக்குகிறார்கள். ஆத்திர மூட்டும் செயல்களால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற தோற்றத் தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் முயல்கிறது. இப்ப டிப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகவே கண் ணூர் மாவட்டத்தில் திடீர் வன்முறை மோதல் கள் ஏற்பட்டன. வன்முறையில் 11பேர் கொல்லப் பட்டார்கள்.
முதலமைச்சர் என்ற முறையில் நான் உட னடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டினேன். மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்ட ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத் தேன். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இப்படி அரசு மட்டத் திலும் அரசியல் மட்டத்திலும் மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் காரணமாக, முன்பு தொடர் கதையாக இருந்துவந்த வன்முறை தற்போது விரைவாக முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அரசு பொறுப்பேற்ற முதல் மாநிலம் கேரளம் தான். நாட்டின் அரசியலில் கேரளத்தின் பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்...
முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புக்கு உள்ளேயே எப்படி அதிகபட்ச நன்மைகள் மக் களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதை முதலில் எடுத்துக்காட்டியது கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசுதான். இன்று மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து மத்திய ஆட்சியாளர் களுக்கும் மற்றைய மாநிலங்களின் ஆட்சியா ளர்களுக்கும், மக்களைத் தாக்கும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளுக்கு மாறாக மக்களைக் காக்கும் மாற்றுக் கொள்கை களைச் செயல்படுத்துவது எப்படி என்ற முன்னு தாரணமாகத் திகழ்கின்றன. கடுமையான அர சியல், பொருளாதார பிரச்சனைகளில் இந்த மூன்று மாநிலங்களின் இடதுசாரி அரசுகள் எப் போதும் மக்களின் பக்கமே நின்றுவந்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் பக்கமே நின்று வந்துள்ளன. மதச்சார்பின்மை என்பது இந்த மூன்று மாநிலங்களிலும் வலுப் படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தொகுத்து அனுப்பி பதிய சொன்ன நண்பர் அன்சாரி அவர்களுக்கு
மானங்கெட்ட மனித பிறவிகள்
பழைய அத்வானியை மறந்துவிட்டு புதிய அத்தியா யத்தை அவருடன் இணைந்து தொடங்குவோம் என்று பாஜக சிறுபான்மையினர் முன்ன ணியின் தலைவர் ஷா நவாஸ் ஹூசேன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
ஷாநவாஸின் இந்த அறிவிப்பு பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் தலைமை வட்டாரங்களில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் ஏப்ரல் 4 முதல் வரை பாஜகவின் சிறு பான்மையினர் முன்னணி மாநாடு நடைபெறுவதை ஷாந வாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.
அத்வானி முன்பு தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்வ தாக இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளப்படும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமை கருதுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அத்வானியின் தலைமையில் எதிர்கொள்ளப் போவதால் நடந்தவைகளை மறந்துவிட்டு புதிய பாதையை படைப்போம் என்று முஸ்லிம் மக்களுக்கு ஷாநவாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் மத்தியில் அத்வானி குறித்த நல்லெண் ணங்களை உருவாக்கும் முயற்சியில் பாஜக இறங்கி விட்டதெனத் தெளிவாகி வருகி றது. அத்வானியும் தன்னைப் பற்றிய தீவிரமானவர் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். கந்தகார் மற்றும் ஜின்னா விவகாரங்களில் அத்வானி சிக்கி திண்டாடியது இந்த முயற்சியின் விளைவே.
2004 நாடாளுமன்ற தேர்த லின் போது சில முஸ்லிம்கள் வாஜ்பாய் ஹிமாயத் கமிட்டி ஒன்றை உருவாக்கி வாஜ்பாய் கட்சிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்தனர். இதனால் தீவிர பாஜகவினரின் ஆத்திரத் தை சம்பாதிக்க கட்சி தலை மை தேர்தலில் தோல்வியை யும் தழுவியது. வாஜ்பாய்க்கே இந்த தந்திரம் வெற்றி தேடித்த ராத போது அத்வானிக்கு எப் படி உதவும் என்று சில பாஜக வினர் கேள்வி எழுப்புவது நியாயந்தானே.
Thanks: Theekkathir
இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் தரமிறங்கி நம்முடைய வீடுகளுக்கே வந்து பத்துப் பாத்திரம் தேய்த்து பணிவிடை செய்து "நான் ரொம்ப நல்லவன்னு " சொன்னாலும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.பன்றி என்ன தான் பன்னீரில் குளிச்சிட்டு வந்தாலும் பளிச்னு அடிக்கிற வாசம் சொல்லிடும் வந்திருக்கிறது பண்ணி தான்னு.
இனிய சமுதாயமே இன்று இந்த இந்தியாவின் அரசியலை நிற்ணயிக்கும் சக்தியாக வல்ல அல்லா நம்மை ஆக்கி வைத்திருக்கிறான்.இன்று இந்த சூழல் வருவதற்க்காக போராடிய அனைத்து உள்ளங்களும் இன்று இறைவனின் கிருபையால் அவர்களின் லட்சியத்தை அடைய போகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.இந்த நிலை என்றும் நிலைக்க நீங்கள் ஆசைப் பட்டால் உங்களில் கருத்து வேற்றுமை மறந்து இறைவனின் பாதையில் ஈயத்தால் வார்க்கப் பட்ட சுவரை போல ஒன்று சேருங்கள்.உங்கள் தலைவர்களை குறை சொல்ல வில்லை.ஆனால் உங்களின் லட்சியம் உங்களை முன்னேற்ற வேண்டும்.அடிமை வாழ்வு வாழ்வதில் அர்த்தம் இல்லை .இந்த இந்தியாவில் நாம் உண்மையான சுதந்திர வாழ்க்கை வாழ உங்கள் லட்சியங்களை உங்கள் தொலை நோக்கு பார்வைகளை உங்கள் தலைவர்களுக்கு விளக்குங்கள். பிறரை குறை கூறி நேரத்தை விரயம் செய்வதை விட என்னுடைய அமலுக்கு என் இறைவன் கூலி தர போது மானவன் என்ற எண்ணத்தோடு இந்த சமுதயதிற்காய் எதையாவது சிந்தியுங்கள் .இனிய ஒரு லட்சிய பயணத்தை உங்கள் சந்ததிகளுக்காய் தொடங்குங்கள். நம்மை சக்தி படுத்த இதை விட ஒரு அரிய சந்தர்ப்பம் இனி வருமோ என்னவோ? கிடைத்ததை கெடுத்து விடாமல் நம் சந்ததிகளுக்கு கிடைக்கப் போவதை நினைத்து செயல் படுவோம்.மொழி இன நிற வேறுபாடு அற்ற ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.இதனையே லட்சியமாய் கொண்டிருக்கும் தலைவர்களுடன் அணி சேருவோம்.
என்றும் அன்புடன்
இறை அடிமை
Tuesday, April 1, 2008
'இந்துத்வா' சக்திகளை ஒடுக்க தவறிய மத்திய அரசு
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 1, 2008
கோவை: நாட்டில் இந்துத்துவா சக்திகள் மீண்டும் தலை தூக்கியுள்ளதை தடுக்க மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வி அடைந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டிற்கு இடையே பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்துள்ளன. இந்துத்வாவை ஆயுதமாகக் கொண்டு அவை செயல்பட ஆரம்பித்துள்ளன. இதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது.மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மதவாத சக்திகளுக்கு எதிராக மெத்தனப் போக்குடன் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்துத்வா சக்திகளை முறியடிக்க முடியாமல் திணறுவது வருத்தத்திற்குரியது. அவற்றுக்கு எதிராக அலட்சிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு.
மதக் கலவரங்கள், மதவாத செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறி விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உரிய இழப்பீடும், மறுவாழ்வும் சரிவர கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் 1992-93ல் நடந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க மகாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதேபோல குஜராத் வன்முறை வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மத்திய அரசு தவறி விட்டது.
மதக் கலவரங்களைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். ஆனால் அதுதொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எதையும் எடுக்காமல் உள்ளது.
இதேபோல முஸ்லீம் சமுதாயத்தினர் மீது அரசு உரிய அக்கறையுடன் இல்லை என்பதை சச்சார் கமிட்டி பரிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன. நாட்டில் உள்ள முஸ்லீம்களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றார் காரத்.
அரசியல் தீர்மானம் நிறைவேறியது:
முன்னதாக மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்திய ஆட்சியாளர்களின் நாசகர தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவது, ஏகாதிபத்திய எதிர்ப்புடன் சுதந்திர வெளியுறவுக் கொள்கை, ஒடுக்கப்பட்ட தலித், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மலைவாழ் மக்கள் நலன்களை பாதுகாக்கும் சமூக சாசனம் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 19வது மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.மாநாட்டின் மூன்றாவது நாளான திங்கட்கிழமை மாலை இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது கடந்த இரண்டு நாட்களாக ஆழமான விவாதங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 41 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.வரைவுத் தீர்மானத்தின் பொதுவான திசைவழியையும், நிலைபாட்டையும் மாநாட்டில் பிரதிநிதிகள் அங்கீகரித்தனர்.அரசியல் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு திங்கட்கிழமை பிற்பகல் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தொகுப்புரை வழங்கினார்.இதையடுத்து இந்த தீர்மானம் பலத்த கரவொலிக்கு இடையே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்மானத்துக்கு மாற்று ஆலோசனையோ, மாற்று வழி முறையோ இதில் முன்வரவில்லை என்று பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Thanks: Thats Tamil
Monday, March 31, 2008
இந்நாட்டின் உண்மையான விடுதலை நாள் ......!
இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரங்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் முடுக்கி விடப் பட்டுள்ள சூழலில் இதமான தென்றலாக தெற்காசியாவிலேயே தொன்மையான வரலாற்று சிறப்பு, முதன்மையான அரபிக் கல்லூரி நிறுவனமான தாருல் உலூம் தேவ் பந்திலிருந்து வந்த செய்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 25 அன்று அந்த பாரம்பரியம் மிக்க மதரசாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக மார்க்க அறிஞர்களின் மாபெரும் மாநாடு நடந்ததும் தேசிய அளவில் பல்வேறு மதரசாக்கலிருந்து 6000க்கும் மேற்ப்பட்ட உலமாப் பெருமக்கள் குவிந்தும் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் ,ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க இயக்கங்களின் தலைவர்கள் திரண்டதும் பயங்கரவாததிர்க்கெதிரான அவதூறுகளை கண்டித்தும் முத்தாய்ப்பாக எழுச்சிமிகு பிரகடனத்தை வெளியிட்டதும் உலகையே திரும்பி பார்க்க செய்துள்ளது .
எல்ல விதமான அக்கிரமங்களையும் வன்முறைகளையும் பயங்கரவாதத்தயும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அந்தப் பிரகடனம் உரத்து முழங்குகிறது. "எல்லா மனிதர்களுடனும் சமத்துவ உணர்வு மனித நேயம் இரக்கம் அன்பு கருணை சகிப்புத் தன்மை ,நலம் நாடுதல் , நீதியுணர்வு, ஆகியவற்றோடு பழக வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாம் எல்ல விதமான பயங்கர வாதத்திற்கும் எதிரானது. அக்கிரமம், மோசடி, குழஅப்பம் , கலவரம், கொலை, சூறையாடல்,அமைதியை குலைத்தல், பதற்றத்தை உண்டுபன்னுதல் ஆகியவற்றை மிகப் பெரும் குற்றமாக இஸ்லாம் கண்டிக்கின்றது" என பிரகடனத்தில் திட்ட வட்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தேவ் பந்த் பிரகடனத்தில் சொல்லப் பட்டுள்ளது புதிய செய்தி அல்லதான். என்றாலும் அச்சு மின்னணு ஊடகங்களிலும் , அரசியல் வட்டாரங்களிலும் இந்தப் பிரகடனம் ஏற்ப்படுத்தி உள்ள நல்ல தாக்கங்களைப் பார்க்கும் போது மனம் நிம்மதி அடைகின்றது. முஸ்லிம்களை சுற்றி மண்டிக் கிடக்கின்ற சந்தேகம் ,துவேசம் ஆகி ய பனி மூட்டங்கள் விலகுவதற்கு இந்தப் பிரகடனம் துணை நிற்கும் என்கிற எதிர் பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது .இஸ்லாத்தின் பெயரில் சில வழி கேட்டுப் போன இளைஞர்கள் செய்கின்ற செயல்களால் இஸ்லாத்திற்கு ஏற்ப்பட்டுள்ள அவப் பெயர் களைவதற்கும் அது துணை போகும் .
அதே சமயம் இங்கு சில கேள்விகள் எழுகின்றன
எது பயங்கர வாதம் ? வழிகெட்டுப் போன சில முஸ்லீம்கள் செய்வது மட்டும் தான் பயங்கர வாதமா? இந்த நாட்டின் தந்தையாக போற்றப் படும் காந்தியடிகள் படுகொலை செய்யப் பட்டது பயங்கர வாதம் இல்லையா ? குஜராத்தில் பச்சிளம் குழந்தைகளை எரிகிற நெருப்பில் தூக்கி வீசப் பட்டதும் குடும்பப் பெண்களின் மானம் சூறையாடப் பட்டதும் நிராயுத பாணியாக நின்ற முஸ்லீம் கள் உயிரோடு எரிக்கப் பட்டதும் பயங்கர வாதம் இலையா?
அத்வானியும் ஜோஷியும் உமா பாரதியும் பட்டப் பாலில் பாபரி மஸ்ஜிதை இடித்தது பயங்கர வாதம் இல்லையா?
இன்று வரை பத்து இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்று குவித்துள்ள அமெரிக்க பயங்கரவாத நாடு இல்லையா?
பாலஸ்தீனைர்கள் மீது அன்றாடம் அக்கிர மங்களை கட்டவிழ்த்து விடுகின்ற இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது பயங்கர வாதம் இல்லையா?
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை ஆயிரக் கணக்கானோர் வகுப்பு வாத வெறியர்களால் கொல்லப் பட்டுள்ளார்கள் என்றாலும் இன்று வரை ஒரே ஒரு வெறியனாவது தூக்கிலிடப் பட்டுஇருக் கின்றாரா?
ஸ்ரீகிருஷ்னா ஆணையம் உட்பட எத்தனையோ விசாரணை ஆனயங்களால் சுட்டிக் காட்டப் பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பது பயங்கரவாதத்திற்கு துணைப் போவது ஆகாதா?
சொந்த அலுவலகங்களில் குண்டு வைத்து கலவரத்தை ஏற்ப்படுத்த திட்டமிட்ட தென்காசி இளைஞர்கள் பயங்கர வாதிகள் இல்லையா?
ஆளுக்கொரு நீதி என்கிற ஆநீதியான நடை முறையும் நயவஞ்சகாத்தனமும் இரட்டை அணுகுமுறையும் முற்றாக ஒழிக்கப் படுகின்ற நாள் என்னாளோ? அந்நாள் தான் இந்நாட்டின் உண்மையான விடுதலை நாள் ......!
நன்றி : சமரசம் மற்றும் இதனை பதிய சொல்லி வலியுறுத்திய நண்பருக்கும்
Sunday, March 30, 2008
தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், "டூம்ஸ்டே'
உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு
மாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், "டூம்ஸ்டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Thanks: Dinamalar
மனமே மறந்து விடாதே !
வலி மறந்த மனம்
அது வாய் பிளந்த பிணம்
வலி மறந்த மனம்
அது வாய் பிளந்த பிணம்
மண்ணில் மனிதம் காக்க
மாநபிகள் போற்றி வளர்த்த
மகத்தான மார்க்கத்தின் சொந்தக்காரன் நீ ...
ஹைர உம்மத் என்று படைத்தவனாலே
பாசமாய் அழைக்கபடுபவன் நீ
இறை கிருபையால் சில சாதித்து இருக்கலாம் ,
சாதனைக்கு தான் சந்தோசம்
ஆனால்
இறைவனின் சோதனை தான் உன் வாழ்க்கை
என்பதை மறந்து விடாதே ,
இந்த சமுதாயத்திற்காய் எதையும் செய்யாமல் இறந்து விடாதே !......
அன்புடன்
இமாம் அலி