Sunday, February 3, 2008

25 லட்சம் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008
டெல்லி: பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் சிறுபான்மையினர் சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அடுத்த 5 வருடத்தில் ரூ. 1,800 கோடி உதவித் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறுகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30 சதவீதம் மாணவிகளுக்காக ஒதுக்கப்படும்.இதன் மூலம் 25 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுவர். இந்த உதவித் தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 25 சதவீதத்தை மாநில அரசுகள் வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கான முழுத்தொகையும் மத்திய அரசே வழங்கும்.ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ரூ.350 வழங்கப்படும். பள்ளிகளில் ஆறாம் வகுப்பிற்கு மேல் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.600ம் வழங்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை அனைத்திந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் வரவேற்றுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் கமல் பரூக்கி கூறியதாவது, சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது. இந்த உதவித் தொகை கல்வியில் மிகவும் பின்தங்கியிப் போயுள்ள சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.


சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது.இதற்க்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்

1 comment:

Anonymous said...

சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது.இதற்க்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்