Saturday, March 1, 2008

பாலஸ்தீனத்திற்குள் மீண்டும் நுழைந்தது இஸ்ரேல்


காஸா (பாலஸ்தீனம்): பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் நுழைந்துள்ள இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4 நாட்களுக்கு முன் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 ஹமாஸ் தீவிரவாதிகள் உள்பட ஏராளமான அப்பாவிகளும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 வீரர்களும் பலியாயினர். இதையடுத்து இஸ்ரேல் படைகள் காஸா பகுதியில் ஊடுருவி பயங்கர தாக்குதலை நடத்தின. இதில் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸா பகுதியில் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தை ஆண்டாண்டுகாலமாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் கடந்த 2005ம் ஆண்டு தான் காஸா பகுதியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டித்துள்ளார். இஸ்ரேல்பாலஸ்தீனம் இடையிலான புதிய மோதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவரசமாகக் கூடி விவாதித்தது.

இதில் பேசிய கி மூன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால், அப்பாவி மக்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது தவறு.

No comments: