Wednesday, February 27, 2008

அமெரிக்க நலனுக்கு ஆபத்தானால் பாகிஸ்தானிலும் வேட்டை : ஒபாமா அறிவிப்பு


வாஷிங்டன் : "பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன் எனக் கூறவில்லை. அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாகிஸ்தான் உட்பட பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் பகுதிகளில், வேட்டையாடுவோம் என்று தான் கூறினேன்' என, பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், பராக் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் கடுமையாக மோதி வருகின்றனர். ஓகியோவில் நடந்த விவாதத்தின் போது, ஹிலாரி கிளின்டன், "செனட்டர் ஒபாமா, பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன், என மிரட்டுகிறார். இது புத்திசாலித்தனமான நடவடிக்கை இல்லை' என்றார். இதற்கு ஒபாமா அளித்த பதில் வருமாறு:பாகிஸ்தான் மீது குண்டு போடுவேன் எனக் கூறவில்லை. ஒசாமா பின்லாடன் மற்றும் இதர அல்குவைதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயக்கம் காட்டினால், நாம் எடுப்போம் என்று தான் கூறினேன்.நமக்கு அமெரிக்கர்களின் நலன் தான் முக்கியம். ஈராக்கில் அல்குவைதா ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது என்றால், அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் அமெரிக்கர்களின் நலன் காக்க, நாம் நடவடிக்கை எடுப்போம். எனவே, ஈராக் மற்றும் பிற நாடுகளில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி இருந்தேன். அதில் பாகிஸ்தானும் அடக்கம் தான்.இவ்வாறு பராக் ஒபாமா கூறினார்.

No comments: