Monday, February 25, 2008

சிவராத்திரியில் குழந்தை திருமணம் : தடுக்க ஆந்திர அரசு தீவிர முயற்சி


நகரி : பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் மகா சிவராத்திரி உற்சவ விழாவின்போது நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த ஆந்திர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.


காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவின் போது ஞானபிரசூணாம்பிகை சமேதரான வாயுலிங்கேஸ்வரர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவம் சிறப்பு வைபவமாக நடத்தி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மார்ச் 6ம் தேதியன்று மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. காளஹஸ்தி கோவிலில் சாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பெற்றோர் பால்ய விவாகம் நடத்தி வைப்பதை சுப நிகழ்ச்சியாக, நினைத்து எளிமையான முறையில் திருமணம் செய்கின்றனர்.சுவாமி திருமணத்தன்று அதிகாரிகளிடம் சிக்காமல், ஏராளமான மைனர் ஜோடிகள் பெற்றோருடன் மலர்மாலை தாலியுடன் ரகசியமாக கோவிலை சுற்றிலும் குவிந்து விடுகின்றனர்.
சட்டத்திற்குப் புறம்பாக, குழந்தைகளுக்கு திருணம் நடத்தி வைப்பதை தடுக்க சித்துõர் மாவட்ட கலெக்டர் ராவத் தலைமையில் வெள்ளியன்று காளஹஸ்தியில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


"மகா சிவராத்திரி உற்சவத்தின்போது சித்துõர், நெல்லுõர் மாவட்டத்தைச் சேர்ந்த வசதியற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், அறியாமையால், சிறுவயது பிள்ளைகளுக்கு பால்ய விவாகம் செய்து வைப்பது கொடுமையானது. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் செயல் கொலை செய்வது, கொலை செய்வதற்கு துõண்டி விடுவது போன்ற குற்றத்திற்கு சமமானது. இதை தடுத்து நிறுத்த அரசு அதிகாரிகள் பெற்றோரிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். மீறி செயல்படுவோர் கடுமையான தண்டனைக்குள்ளாவர் என எச்சரிக்கை செய்ய வேண்டும்' என, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளை கலெக்டர் ராவத் கேட்டுக் கொண்டார். விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் போஸ்டர்களையும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.


இதே போன்று தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற தாலுகாக்களில் குக்கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடி இருளர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெற்றோர் சிலரும், சிவராத்திரி தினத்தில், ரகசியமாக பால்ய விவாகம் செய்து வைப்பதை சுப நிகழ்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.

No comments: