Saturday, March 1, 2008

இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு

புதுடில்லி : பிற நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இடது சாரிகளின் எதிர்ப்பால் தாமதமாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அதற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா, பிரான்சுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாயின. பிரான்ஸ் தூதரும் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்கிறது என கூறியுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு செயலர் நிக்கோலன்ஸ் பர்ன்ஸ் அமெரிக்காவை மீறி இந்தியா வேறுநாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என கூறினார். மேலும் என்.எஸ்.ஜி., எனப்படும் சர்வதேச அணுசக்தி வழங்கும் நாடுகளில் ‌அமெரிக்காவின் பங்கு முதன்மையாக உள்ளது. இந்தியா வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமெனில் அமெரிக்காவின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. மேலும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments: