Saturday, March 1, 2008

ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி

திருநெல்வேலி; முஸ்லிம்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மனித நீதி பாசறை மாநில தலைவர் முகம்மது அலி ஜின்னா கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஜனநாயக அடிப்படையில் கடையநல்லுõரில் போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த உறுப்பினர்களை துன்புறுத்தி பொய் வழக்கு போட்டதையும் போலீஸ் துறையின் அராஜக செயலை கண்டித்து ஜனநாயக அடிப்படையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை மனித நீதி பாசறை கண்டிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை அரசு உடனடியாக இடமாற்றம் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் மீது பதிவு செய்துள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். படுகாயமடைந்த இவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். உறுப்பினர்கள் போஸ்டர் ஒட்டியதை சதி செய்ததாக சித்தரித்து போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். கோவையில் முஸ்லிம் இளைஞர்ள் மீது பொய் வழக்கு போட்டு மனித நீதி பாசறையின் வீண் பழி சுமத்திய போலீஸ் ஏ.சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதிகாரிகளின் அராஜகத்திற்கும், அத்துமீறல்களுக்கும் ஒரு போதும் பணிந்து விடாது. நீதிக்கான போராட்டத்தில் எத்தகைய சவால்களைம் எதிர்கொள்ள சித்தமாக உள்ளது. இதனை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர் ஷேக்முகம்மது தெஹ்லான் பாகவி, முகம்மது முபாரக், மாவட்ட செயலாளர் மகபூப் அன்சாரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Thanks:Dinamalar

No comments: