Monday, February 25, 2008

பா.ஜ., தாமரை யாத்திரை


பொள்ளாச்சியில் பா.ஜ., தாமரை யாத்திரை செயற்குழு கூட்டத்தில் முடிவு


பொள்ளாச்சி: அத்வானியை பிரதமராக்க பொள்ளாச்சியில் மார்ச்., 5ம் தேதி தாமரை யாத்திரை துவங்க முடிவு செய்யப் பட்டுள் ளது. பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில் பண்டித தீனதயாள் உபாத்யாயா சமர்பண நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, செயற்குழு கூட்டம் நடந்தது.


நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். நகர தலைவர் பாலு தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் நஞ்சப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டப்படுவதால், தற்போது, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படும் கட்டடத்தை அரசு பொது மருத்துவமனைக்கு ஒப்படைக்க வேண்டும். வால்பாறை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது போன்று பாலக்காடு ரோட்டிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டியுள்ளனர். சாக்கடை திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் இரவு நேரத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அதனால் சாக்கடை கட்டும் பணியை நகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக இருந்த நவரத்தின விநாயகர் கோவிலை அகற்றி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் வைத்துள்ளனர். அந்த விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மறுபடியும் நடக்காமல் இருக்க விநாயகர் கோவிலை சுற்றிலும் கம்பி வலை அமைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அத்வானியை பிரதமராக்க பொள்ளாச்சியில் மார்ச்., 5ம் தேதி தாமரை யாத்திரை துவங்க பொதுக்கூட்ட விழா நடக்கிறது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் 10 ஆயிரம் பேர் (?) கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Thanks : Dinamalar

No comments: