Wednesday, February 27, 2008

இட ஒதுக்கீட்டை பின்பற்றக் கோரி மனு : செலவுத்தொகை கட்ட கோர்ட் உத்தரவு

சென்னை : சென்னைப் பல்கலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றக் கோரி மனுத் தாக்கல் செய்தவருக்கு, ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவுத் தொகை விதித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தவுகித் ஜமால் அமைப்பின் செயலர் சையத் இக்பால் தாக்கல் செய்த மனுவில், "தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணி நியமனத்தின் போது, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை. எனவே, இந்த தேர்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதிகள் முகோபாத்யா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', "பணிகள் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர முடியாது. பொதுநலன் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரியவில்லை. விளம்பரத்துக்காக தொடரப்பட்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்படுகிறது. இதனை ஆறு வாரங்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.

Thanks:Dinamalar

No comments: