Saturday, March 1, 2008

காஸா மிகப்பெரும் இன அழிப்புக்குத் தயாராகட்டும்: இஸ்ரேல் மிரட்டல்!




ஜெரூஸலம்: "ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், காஸா பகுதி முழுவதும் சுவடின்றித் தரைமட்டமாக்கப்படும்" என இஸ்ரேலின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மத்தன் வில்நாய் மிரட்டியுள்ளார். காஸா பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல் தொடரும் நிலையில், முன்னர் யூதர்கள் மீது நாஜிகள் நடத்திக்காட்டியதைவிட மிகப்பெரிய இன அழிப்புக்கு காஸா தன்னைத் தயார் படுத்திக் கொள்ளட்டும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்


தவழும் அகவையில் ஒரு குழந்தை, மேலும் 5 குழந்தைகள் உட்பட 70 காஸாவினரை இஸ்ரேல் US தயாரிப்பான F-16 போர்விமானங்கள் மூலம் கடந்த இரு நாட்களில் மட்டும் குண்டுவீசிக் கொன்றுள்ளது. இது தவிர 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இஸ்ரேல் காஸா மீது முழு அளவிலான போர் தொடுத்துள்ளது என முன்னாள் பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்தார். உலக நாடுகள் இஸ்ரேலின் இந்தக் கொடூர நடவடிக்கையை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.




இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான கொலைவெறிக்குப் பலியான சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளில் கலந்துகொண்ட பாலஸ்தீனியச் சிறார்கள், "எங்களுக்கும் குழந்தைப்பருவத்தை அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது; அதனை அழித்துவிடாமல் உலக சமுதாயமே இஸ்ரேலைத் தடுத்து நிறுத்து!" என்ற வாசகங்கள் கொண்ட பலகைகளை ஏந்தியவண்ணம் சென்றனர்.
நன்றி : சத்திய மார்க்கம்
இனிய சமுதாயமே "குந்தும் ஹைர உம்மத்தன்" என்று ஏக இறைவன் நம்மை அழைப்பது இந்த பூமியில் நாம் நமையை ஏவி தீமையை தடுப்பதனால் தான் என்று அந்த இறைவனே கூறுகிறான். ஆனால் இத்தகைய ஒரு சம்பவம் நம்முடைய பிறப்பிலிருந்தே அல்லது பிறப்பிற்கு முன்னிருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இளம் பிஞ்சுகளுக்காய் மிசக் குறைந்த பட்சம் உங்கள் ஏகோபித்த குரலை குடுக்கக் கூடாதா? உங்கள் தலைவர்களிடம் நீங்கள் கேளுங்கள் எல்லா மூமின் களும் சகோதர சகோதரிகளே எனபது உண்மையாய் இருந்தால் இந்த சகோதர சகோதரிக்களுக்காக இவர்கள் இதுவரை ஏன் குரல் குடுக்க வில்லை.சரி இனியாவது குரல் கொடுப்பார்களா? என்ற ஒரு நியாயமான கேள்வியை கேளுங்கள் இந்த பிஞ்சு குழந்தைகளின் வாழ்வுரிமையை கொடுத்திடுங்கள். எத்தனையோ மாநாடுகள் போடும் நாம் இவர்களின் கண்ணீருக்காய் ஒரு மாநாடு போட்டால் என்ன என்று உங்கள் உரிமையை கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.உண்மை தலைவர்கள் ஒத்துழைப்பார்கள்.நமக்கு உதவி செய்திட அல்லாஹ் போது மாணவன்.
அன்புடன்
இறை அடிமை

No comments: