ரத்த அழுத்தம் குறைய பீட்ரூட் சாறு நல்லதாம்
தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ மருத்துவ நிபுணர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி, லண்டனில் உள்ள வில்லியம் ஹார்வே ஆராய்ச்சி மைய பேராசிரியர் அம்ரிதா அகுல்வாலியா கூறியதாவது:ஒருவர், தினமும் இரண்டு கிளாஸ் (500 மிலி) பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதை குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறையும். மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இயற்கையான முறையில் நோயை குணப்படுத்தும்
பீட்ரூட் ஜூஸ், செலவு குறைந்ததும் கூட.
ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், தினமும், மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, வெறுத் துப் போயிருப்பர். இது போன்றோருக்கு பீட்ரூட் ஜூஸ் சிகிச்சை மிகவும் ஆறுதலாக இருக்கும். பீட்ரூட் ஜூஸ் குடிக் கும்போது, பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட், மனிதனின் நாக்கில் உள்ள பாக்டீரியாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கலவை, மனிதனின் வயிறு வழியாக சென்று, சுத்திகரிப் பில் ஈடுபடுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சிறிது குறைகிறது.பழங்களும், பச்சைக் காய்கறிகளும் வயிற்றில் சென்று அடையும் மாற் றம் குறித்த ஆய்வில், இந்த உண்மை தெரிந்தது. இதற்காக, இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், அது சாதாரணமாக உணவில் கலோரி அளவை அதிகரிக்கும். இதற்கேற்ப மற்ற உணவு வகைகளை தவிர்த்துக் குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment