Tuesday, February 12, 2008

இது வேறயா? ஐயோ முடியல .............

வருகிறது 'கேப்டன்' டிவி!செவ்வாய்க்கிழமை,

பிப்ரவரி 12, 2008

சென்னை: தனது கட்சியின் குரலையும், கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக தனது கட்சிக்கென தனியாக டிவி சானல் தொடங்க முடிவு செய்துள்ளார் விஜயகாந்த்.கடந்த 15 ஆண்டுகளாக விஜயகாந்த் ஒரு விரதம் இருந்து வருகிறார். அது எந்த டிவிக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்பது. இந்த விரத்தை தவறாமல் கடைப்பிடித்து வரும் விஜயகாந்த், தேமுதிகவைத் தொடங்கிய பின்னர், தனது கட்சி செய்திகளை எந்த டிவியும் சரிவர தருவதில்லை என்று டிவிக்கள் மீது பாய்ந்தார்.இந்த நிலையில் தனது கட்சிக்கென தனியாக ஒரு டிவி சானலை தொடங்க முடிவு செய்து விட்டாராம் கேப்டன்.தமிழ்ப்புத்தாண்டு முதல் (தை முதல் நாளை அரசு தமிழ்ப் புத்தாண்டு என்று கூறினாலும் கூட விஜயகாந்த் வழக்கம் போல ஏப்ரல் 14ம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப் போவதாக கூறுகிறார்) இந்த புதிய டிவி உதயமாகும் என்று தெரிகிறது.இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடங்கவிருக்கிறார்.நமக்கென ஒரு டிவி இருந்தால் நமது கொள்கைகளையும், பேட்டிகளையும், கருத்துக்களையும், பேச்சுக்களையும் தங்கு தடையின்றி, எடிட்டிங் இன்றி நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறாராம் விஜயகாந்த். அதனால்தான் இந்த புதிய டிவி குறித்த சிந்தனைக்கு அவர் வந்துள்ளார்.டிவிக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்து கேப்டன் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவில்லை.



ஒரு சின்ன கேள்வி.

கட்சி சேதிகள் வெளியில் தெரிய தான் இந்த சேனல் னு உண்மைய சொன்னது ஒரு வகைல சந்தோசம் தான்.எல்லாம் சரி அண்ணன் ஆட்டயப் போட்டீங்களே கொஞ்சம் பொறம்போக்கு இடம் அது பத்தியும் இன்னும் உங்க கவுன்சிலர் எல்லாம் நீங்கோ பதவிக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆங்காங்கே ஆட்டயப் போடுறீங்களே அந்த செய்தி எல்லாம் கூடவா சொல்லப் போறீங்கோ...........

No comments: