Monday, February 11, 2008

தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை எழுதுவது தான் யாரோ?

முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.


திங்கள், 11 பெப்ரவரி 2008


தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப் பெரிதாக்கியத் தீவிரவாத வழக்குகள் அனைத்திலும் காவல்துறையும் அரசு வழக்கறிஞர்களும் ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் திணறுகின்றனர்.


கேரளாவில் கடந்த 1996 பிப்ரவரியிலிருந்து 2006 ஆகஸ்ட் வரையிலான 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் 27 முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதம், தேச விரோதம் போன்றக் குற்றங்கள் சுமத்திக் காவல்துறை கைது செய்துச் சிறையிலடைத்தது. இந்த இளைஞர்கள் அனைவரும் பல்வேறு வழக்குகளில் மொத்தம் 236 நாட்கள் ரிமாண்டில் இருந்தனர். பிணை கூடக் கிடைக்காத கடுமையான சட்டப்பிரிவுகள் மூலம் சிறையிலடைக்கப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் இந்த இளைஞர்களுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் ஒன்று கூடக் காவல்துறையினால் இதுவரை கண்டுபிடிக்கவோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவோ முடியவில்லை.

கேரள முன்னாள் முதல்வர் மறைந்த E.K.நாயனார் கொலை முயற்சி, குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கு, கடைக்கல் குண்டுவெடிப்பு, பானாயிகுளம் சிமி வேட்டை, அஞ்சல் வெடிகுண்டு (Letter bomb) துவங்கி ஊடகங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் புனையப்பட்டு நிறைந்து நின்றப் பல வழக்குகளிலும் அவற்றைத் துவங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கூட இதுவரை எடுக்கப்படாமல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு சிறு ஆதாரம் கூடக் கிடைக்காமல் இவ்வழக்குகளின் விசாரணைகள் பாதியிலேயே நிற்கும் வேளையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தற்பொழுது காவல்துறை தேட ஆரம்பித்துள்ளது.

1996 -ல் பதிவு செய்யப்பட்ட குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதக் காரணத்தால் மலப்புரம் நீதிமன்றம் காவல்துறையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது.

பொன்னானி வெளியங்கோட்டைச் சேர்ந்த P.K.M. முஹம்மது ஷரீப் முதலான 5 முஸ்லிம் இளைஞர்கள் குற்றம் சுமத்தப்பட்ட இவ்வழக்கில் இவர்கள்,

"ஈரானிலிருந்து ஆயுதப் பரிசீலனைப் பெற்றவர்கள் எனவும் பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு முதலானப் பயங்கர ஆயுதங்கள் இந்தியாவுக்குக் கடத்தியதாகவும்" காவல்துறை குற்றம் சுமத்தி இருந்தது.

ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுகளை வாரி வீசியிருந்த அன்றைய மலப்புரம் வட்ட ஆய்வாளரின் (Circle Inspector) குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது. "காவல்துறையின் பணி கதைகள் உருவாக்குவதல்ல" என நீதிமன்றம் அன்று கண்டித்தது. விசாரணை நிறைவடையவில்லை என்ற காவல்துறையின் நிலைப்பாடு காரணத்தால் இவ்வழக்கு 12 வருடங்கள் கடந்த பின்னரும் இன்றும் நீண்டுக் கொண்டே இருக்கின்றது.

8 முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக 1999 டிசம்பர் 12 அன்று கண்ணூர் நகர மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட E.K.நாயனார் கொலை முயற்சி வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் சாட்சியளிக்காமல் போக்குகாட்டிக் கொண்டிருக்கின்றார். அப்துல் நாசர் மஹ்தனி தலைமையிலான PDP-யைச் சேர்ந்த இவர்கள் கண்ணூரிலுள்ள பள்ளிக்குன்று என்னுமிடத்தில் ஒன்றுகூடி அன்றைய முதலமைச்சராக இருந்த E.K. நாயனாரைக் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டினர் என்பதே வழக்கு. வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் தலைமறைவானதால் விசாரணையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.


அந்த ஒரு நபரை மட்டும் தனியாக மாற்றி வழக்கைப் பிரித்து நடவடிக்கைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என மூன்று மாதம் முன்பு கண்ணூர் இரண்டாம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். எனினும் இதுவரை காவல்துறை அவ்வுத்தரவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையுமே இதுவரை ஆரம்பிக்கவில்லை.

2006 ஆகஸ்டு 15 அன்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஆலுவாவிலுள்ள பானாயிகுளத்தில் 5 முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இவ்வழக்கிலும் இன்றுவரை காவல்துறை நீதிமன்றத்தில் முறையான எந்த ஓர் ஆவணமும் தாக்கல் செய்யவில்லை. தீவிரவாதிகள் எனக்கூறி இவர்களைக் கைது செய்தக் காவல்துறை மொத்தம் 65 நாட்கள் அநியாயமாகச் சிறையிலடைத்திருந்தது. இவ்வழக்கில் பிரத்தியேக விசாரணைக் குழுவிற்குப் பானாயிகுளத்தில் உள்ள ஹிரா லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகம் அல்லாமல் வேறொன்றும் இதுவரை ஆதாரமாகக் கிடைக்கவில்லை.


முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படாததால் இரு மாதங்களுக்குப் பின் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கியது. கடந்த இரு வருடங்களாக விசாரணை முடியவில்லை என்றக் காரணம் கூறி காவல்துறை இவ்வழக்கை இன்றுவரை நீட்டித்துக் கொண்டே செல்கின்றது.

2006 அக்டோபரில் கொல்லம் கடைக்கலில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டதாகக் கூறி கேம்பஸ்ஃப்ரண்டைச் சேர்ந்த 5 மாணவர்களைக் கைது செய்து சிறையிலடைத்த வழக்கிலும் காவல்துறைக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்வழக்கில் 6 ஆம் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவன் ஷராபத் 6 நாட்களும் மற்ற நான்கு மாணவர்களும் மூன்று வாரமும் காவலில் சிறையில் இருந்தனர்.

DYFI-யின் நெருக்குதல் மூலம் இந்த 5 முஸ்லிம் மாணவர்கள் மீது தீவிரவாதக் குற்றம் சுமத்திக் காவல்துறை பொய்வழக்கு சுமத்தியதாகும்.

இவ்வழக்கும் விசாரணை முழுமையடையவில்லை என்றக் காரணம் கூறி நீட்டிக்கப்படுகின்றது.2006 செப்டம்பர் 21 அன்று குடியரசுத் தலைவரின் கேரளச் சுற்றுப்பயண வேளையில் அஞ்சல் வெடிகுண்டு தொடர்பாகத் தீவிரவாதி எனக் காவல்துறைக் கண்டுபிடித்த திருவனந்தபுரம் மணக்காடைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற மாணவன், உண்மையான குற்றவாளி பிடிக்கப்பட்டுக் குற்றமற்றவர் எனத் தெளிவான பின்னரும் காவல்துறை இதுவரை முஹ்ஸினுக்கு எதிராகப் பதிவு செய்த வழக்கைத் திரும்பப்பெறவில்லை.

களக்கூட்டத்திலுள்ள மேனன்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா எனும் நபர் தான் அஞ்சல் வெடிகுண்டு தயார் செய்து அதன் பின்னால் செயல்பட்டவர் எனப் பின்னர் விசாரணையில கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இவையல்லாமல் காவல்துறையும் ஊடகங்களும் இணைந்து உருவாக்கப்பட்டத் தீவிரவாதக் கதைகளின் பெயரில் கடந்த 12 வருட காலத்தில் கேரளத்தில் வேட்டையாடப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாகும்.

பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்தகையத் தீவிரவாத வழக்குகளில் ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்றாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களைச் சிறையிலடைக்கும் செயல்பாட்டைக் கேரள காவல்துறை இன்றும் தொடர்கிறது. இதில் நேற்று காஸர்கோட்டில் தீவிரவாதிகள் எனக் கூறி கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் காவல்துறையின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் புதிய இரைகள் என்றச் சந்தேகம் வலுபெறவே செய்கின்றது.

நன்றி: P.C. அப்துல்லாஹ்.(தேஜஸ் நாளிதழ் 11.02.2008.)

தொடர்புள்ள சுட்டி: இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி...!


நன்றி : சத்திய மார்க்கம்.காம்

-----------------------------------------------------


பத்திரிகை நேர்மை(?)யின் பல்லிளிப்பு!



வியாழன், 07 பெப்ரவரி 2008


கடந்த இரு நாட்களாகக் கர்நாடகாவை மையமாக வைத்து இந்திய ஊடகங்கள் பல "இஸ்லாமியத் தீவிரவாதக்" கூக்குரல் எழுப்பி வருகின்றன.

நடந்த சம்பவம் இது தான்:

மருத்துவம் படிக்கும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி கர்நாடகா மங்களாபுரம் பகுதியில் உள்ள காட்டு எல்லைப்பகுதியில் வாகனம் ஓட்டி வரும் பொழுது காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர். அவர்கள் சென்ற அந்தக் காட்டுப்பாதையில் சற்று உள்ளே சென்றால் அங்கு ஒரு தர்கா உள்ளது. அந்த தர்காவில் பறக்கும் பச்சை வண்ணக் கொடியும் உள்ளது. விஷயம் இவ்வளவு தான்.

அவர்கள் பிடிபட்ட நிமிடநேரத்தில் விஷயம் அறிந்தப் புலனாய்வு(!) செய்யப் புறப்பட்ட ஒரு பத்திரிக்கையின் இஸ்லாமிய எதிர்ப்புத் திமிர் நிறைந்த, 'நிருபர்' என்ற போர்வையில் உலவும் ஒரு மடையன் கொடுத்த விவரம் அடுத்த நாளில் இருந்து இந்திய ஊடகங்கள் ஒவ்வொன்றாக எவ்வித ஆய்வும் இன்றி அப்படியே வாந்தி எடுக்க ஆரம்பித்தன.

கொடுத்த புலனாய்வு(?) அறிக்கை இப்படி:

"பாகிஸ்தான் ISI-யுடன் தொடர்புடைய லஷ்கரே தொய்பாவைச் சேர்ந்த மூன்று அதிபயங்கரத் தீவிரவாதிகள் கர்நாடகா காட்டுப்பகுதியில் அதிபயங்கர ஆயுதங்களுடன் கைது; அவர்கள் ஆயுதப் பயிற்சி எடுக்கும் தர்காவைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துத் தீவிரவாதிகளைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து RDX போன்ற பயங்கர வெடிமருந்துகளும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்கள் ஆயுதப் பயிற்சி செய்யும் அக்காட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலிருந்து அடுத்தச் சில தினங்களில் கர்நாடகாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இயங்கும் தகவல் தொழில் நுட்ப(ஐடி) அலுவலகங்களைத் தகர்க்க அவர்கள் திட்டமிருந்தது தெரிய வந்தது"

இது போதாதா நம் காகிதப் புலிகளுக்கு?

இந்த சிறு இழையைப் பிடித்துக் கொண்டு கடந்த இரு நாட்களாக இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் காது, மூக்கு வைத்து பக்கங்களை "தீவிரவாதிகள் கைது" என நிறைத்துக் கொண்டாடி வருகின்றன. இதற்கிடையில் சம்பவமறிந்து விஷயத்தின் உண்மை நிலவரம் அறிய வேண்டி நேரடியாகச் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்ட ஒரு சில பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு அச்செய்தி முழுமையாகத் தவறானது என்ற தகவல் கிடைத்தது. ஏற்கெனவே "முஸ்லிம் தீவிரவாதிகள் கைது" தலையங்கம் தீட்டி விட்ட பத்திரிக்கை தர்மம்(!) பேணும் ஊடகங்களுக்கு அதனைக் கேட்க காது எங்கே திறந்து உள்ளது. தொடர்ந்து கூறியக் கதையையே இன்னும் மெருகூட்டி எழுதி வருகின்றன. இதற்கிடையில் சம்பவத்தைக் குறித்துக் கருத்துக் கேட்டபொழுது

பெங்களூர் ஐஜி சங்கர் பிதரி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"கர்நாடகா காவல்துறை கைது செய்த அந்த மூன்று இளைஞர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்ற எந்த ஒரு தகவலும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன என்றச் செய்தி தவறானதாகும். அவ்வாறு எந்த ஓர் ஆயுதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்படவில்லை."

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு? யாரோ கூறிய தவறான தகவலை கடந்த இரு நாட்களாக வாந்தி எடுத்துக் கொண்டாடிய ஊடகங்கள் இனி தங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்ளப்போகின்றன?. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று இளைஞர்களைத் தவறாகப் படுபயங்கரத் தீவிரவாதிகள் என உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியாயிற்று.

இனி அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

மனதால் உடைந்துப் போயிருக்கும் அந்த இளைஞர்களின் மனதுக்கு உறுதியளித்து அவர்களைச் சமூகத்தின் முன் தலைநிமிர்த்தி இந்தியக் குடிமகன்களாக நடைபோட வைக்க என்ன செய்ய வேண்டும்?

தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை எழுதுவது தான் யாரோ?


கருத்து எழுதியவர் V.Sadiq Batcha, பதிந்தது: February 8, 2008 நேரம்: 9:51

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)அன்புச் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இனி அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மனதால் உடைந்துப் போயிருக்கும் அந்த இளைஞர்களின் மனதுக்கு உறுதியளித்து அவர்களைச் சமூகத்தின் முன் தலைநிமிர்த்தி இந்தியக் குடிமகன்களாக நடைபோட வைக்க என்ன செய்ய வேண்டும்?///

''உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் இது உறுதி மிக்க காரியங்களில் அடங்கும்.''(அல்குர்ஆன் : 3:186)

கர்நாடகத்தில் இந்தியாவின் வந்தேறி பார்பனீயக் கூட்டங்கள் பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக மதவெறியை வளர்க்க ஆரம்பித்து நீண்ட நாட்களாகி விட்டது. அவர்கள் நடத்தும் பொய் நாடகத்தில் ஒன்றுதான் மருத்துவ மாணவர்களின் பரபரப்பு செய்தி ஏற்கனவே கலவரங்கள் நடத்தி இருக்கிறார்கள். பதவி வெறி, பணவெறி, ஆதிக்க வெறி இந்த மூன்றும் பார்பனீயத்தின் ரத்தத்தில் ஊறியது. இப்பொழுது கர்நாடகாவில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. கர்நாடக இஸ்லாமியர்கள் இந்த பார்ப்பனீய வெறியை புரிந்து கொண்டு ஒன்றுபட்டு எதிர்த்து வெற்றி அடையவேண்டும்.



1) முதலில் உண்மை ஏகத்துவம் அந்த மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும்.

2) இனிமேலாவது வலுவான இஸ்லாமிய அமைப்புகள் அங்கே உருவாக வேண்டும்.

3) இவர்கள் நிரபராதிகள் என்பது முடிந்தவரை நமது மீடியாக்களில் பெரிய அளவில் வெளிப்படுத்தப்பட வேண்டும். முடிந்த அளவு மக்களின் மனதில் நிரபராதிகள் என்பது பதிய வைக்கப்படும் வரைநோட்டீஸ்கள், தொலைக்காட்சிகள், வார மாத இதழ்களில் ஐஜி சங்கர் பிதரி தெரிவித்த செய்தி (கீழ்க்கண்ட செய்தி) திருப்பித் திருப்பி வர வேண்டும் (பார்ப்பனீய பொய்க்கூட்டங்கள் மீடியாவில் பொய்யை திருப்பி திருப்பி காட்டுவார்களே அதுபோல் - இதை விட உண்மை செய்தி வர வேண்டும்) இதற்கான துணிச்சலை அந்த 3(மூன்று) மாணவர்களும் பெற வேண்டும்.

சம்பவத்தைக் குறித்துக் கருத்துக் கேட்டபொழுது பெங்களூர் ஐஜி சங்கர் பிதரி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.'கர்நாடகா காவல்துறை கைது செய்த அந்த மூன்று இளைஞர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்ற எந்த ஒரு தகவலும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன என்றச் செய்தி தவறானதாகும். அவ்வாறு எந்த ஓர் ஆயுதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்படவில்லை.'

4) பொய்ச்செய்தியை பரப்பிய மீடியாக்களின் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும். வெற்றி கிட்டாவிட்டாலும் இந்த செய்தி மூலமாக உண்மை வருவதற்கு உதவும். பொய் என்ற ஆணவ பார்பனீய ரத்த வெறி பிடித்த மிருகங்கள் தைரியமாக பொய் பேசி, பொய்யையே ஆடையாக அணிந்து, பொய்யை விற்று, உடல் உழைப்பு இல்லாமல் இந்தியாவின் வரிப்பணத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டும், வெட்கம், மனிதநேயம், என்று மனிதர்களுக்கு இருக்கும் எந்த பண்புமே இல்லாமல் தினமும் மனித ரத்தங்களை குடித்துக்கொண்டு உலா வரும்பொழுது. வல்ல அல்லாஹ் வழங்கிய (உலகிற்கு மனித நேயத்தை தந்த) சத்தியமார்க்கத்தில் இருந்து கொண்டு உண்மையை உரத்துச் சொல்வதிலும், போராடுவதிலும் நாம் ஏன் தயங்க வேண்டும்.

----------

இனிய சமுதாயமே இப்போது கூட நீங்கள் சிந்தித்து இந்த நிகழ்வுக்காக மனம் வருந்தி விழிப்படைய வில்லை என்றால் இன்று அந்த அப்பாவி சகோதரர்களுக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு நாளை நமக்கோ அல்லது நம்முடைய மகன் மகள் அல்லது பேரன் பேத்தி தகப்பன் மாமன் என எல்ல உறவுகளுக்கும் நிகழ்ந்தே தீரும் எனபது நிதர்சன மான உண்மை.அதை இந்த சமுதாயம் உணர வேண்டும் என்பதற்க்காக தான் மேலே இந்த விசயங்களை தொகுத்து பதித்து இருக்கிறேன்.இது என்னால் அந்த அப்பாவி இளைஞர்களுக்கும் இனி படுவதிலிருந்து இந்த சமுதயத்துக்ம் கொடுக்க முடிந்த ஒரு அறிவுறுத்துதல் .இதனை நீங்கள் படிக்க நேரிட்டால் இது போல ஒரு சம்பவம் இனி நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டி இதன் தொகுப்பை நீங்கள் அறிந்த மற்ற மக்களுக்கும் அறிவுறுத்துங்கள்.அதன் மூலம் இந்த சமுதாயத்தை ஒரு விழிப்படைந்த ஒரு சமுதாயமாக மாற்றுங்கள். போலி வாதங்களால் வேட்டையாடப் படுவதிலிருந்தும் உங்களையும் சமுதாயத்தையும் காப்பாற்றுங்கள்


அன்புடன்

இறை அடிமை

No comments: