Tuesday, February 12, 2008

பர பரப்ப உண்டக்குறாங்களாம்.............எப்போ தான் இந்த பத்திரிகைகள் திருந்தப் போகுதோ ?

வேதாரண்யம் கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்


நாகப்பட்டினம் :வேதாரண்யம் கடலில் நேற்று மிதந்து வந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


வேதாரண்யம் படகு கட்டும் தள கிழக்கு கடல் பகுதியில் மூன்று கி.மீ., துõரத்தில் கருப்பு நிறத்தில் டப்பா வடிவில் ஒரு பொருள் மிதந்து வந்தது. கோடியக்கரை மீனவர் நடராஜன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் மர்ம பொருளை பத்திரமாக கைப்பற்றினர். 125 கிராம் எடையும் அதன் மேல் "ஹெவி டூட்டி பேக்டு' பி.ஈ.டி.ஜி.எப்.11.2008 என்றும் மறுபுறத்தில் ஜெ.ஜி.எஸ்* 024325 என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

கடலில் இலங்கை கடற்படை மிதக்க விட்டிருக்கும் கன்னி வெடிகள் தமிழக கடல் பகுதியில் மிதப்பதாக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழலில் மர்ம பொருளை போலீசார் பாதுகாப்பாக வைத்து நாகை வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தந்தனர்.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வெடிகுண்டு இல்லை என்றதும் சம்பவ இடத்திற்கு வந்த கடற்படை அதிகாரி ஷிண்தே மர்ம பொருளை சோதனையிட்டு கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் கருப்பு நிற இங்க் என தெரிவித்தார். இதையடுத்து மீனவர்கள் மற்றும் போலீசாரிடம் ஏற்பட்ட பதட்டம் நீங்கியது.

No comments: