Sunday, February 10, 2008

ஏமாறாதே ஏமாற்றாதே !

வேப்பமரத்தில் பால் வடிந்ததால்பெண்கள் சாமியாடி தரிசனம்

கமுதி,பிப்.11-
வேப்பமரத்தில் பால்வடிந் ததால் பெண்கள் சாமியாடி தரிசனம் செய்தனர்.

வேப்பமரம்

கமுதி அருகே சடையனேந்தல் ஊராட்சியை சேர்ந்தது நந்திசேரி கிராமம். இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் வேப்ப மரம் உள்ளது. சுமார்35ஆண்டு கள் பழமைவாய்ந்த இந்த வேப்ப மரத்தில் திடீரென பால் கொப்பளித்து ஆறு போல் ஓடியது. சுமார் 20 நாட் களாக வேப்பமரத்தில் பால் பொங்கி வழிந்ததால் நந்திசேரி, பூதத்தான், பளூவூர், பாப்பனம், பாப்பனந்தம், சம்பகுளம், நெடு குளம் ஆகிய கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த செய்தியை கேட்டு கோவில் வேப்பமரத்தின் முன்பு திரண்டனர்.

பின்னர், அங்கு விசேஷ பூஜை செய்து சாமியாடி தரி சனம் செய்தனர். தொடர்ந்து சடையனேந்தல் ஊராட்சி தலைவர் மல்லிகாமலைச்சாமி, துணைத்தலைவர் மலைச்சாமி ஆகியோர் தலைமையில் விசேஷ பூஜை தீபாராதனைசெய்யப் பட்டது. பலர் பக்திபரவசத்துடன் சாமியாடி குறி சொன்னார்கள். மேலும், தொடர்ந்து பால் வடிந்ததால் அந்த மரத்திற்கு அழகு முத்து மாரியம்மன் என பெயர் சூட்டி னார்கள்.
நன்றி : தின தந்தி


அன்பிர்க்கினிய சகோதர சகோதரி களே இது போன்ற எத்தனை சம்பவங்கள் போலியானது என்று கயவர்களின் முகத்திரை கிழிக்கப் பட்டு இருக்கிறது.ஆனாலும் இன்னும் ஒரு சில சுய நல வாதிகள் கடவுள்பக்தி கொண்ட சில அப்பாவி மக்களின் பக்தியை பயன்படுத்தி இது போன்ற காரியங்களை அறிவியலின் உதவி கொண்டு செய்து விட்டு அதில் நிறையவே ஆதாயம் தேடிக் கொள்கின்றனர். நிச்சயமாக உங்களின் மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத எழுத வில்லை.கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்பதற்க்காக எழுதுகிறேன். உந்தாரணமாக சாதாரண கம்பெனி ஒன்றில் வேலை வேண்டும் என்றாலே அதன் உரிமையாளர்கள் நமக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்பதனை அறிந்த பிறகே வேலையில் சேர்க்கிறார்கள்.இப்படி இருக்க நாம் நம்மை விட சக்தி மிக்கதாய் நம்மை படைத்ததாய் நினைக்கும் கடவுளுக்கு என்று நிச்சயமாக சில அபரிமிதமான தகுதிகள் இருந்தே ஆக வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தானே.அப்படி பார்க்கும் போது நீங்கள் வழி படும் கடவுள் அத்தகைய தகுதி உடையது தானா என்பதனை ஒரு முறை சிந்தித்து பார்த்தாலே போதும் இத்தகைய நாடகம் ஆடும் நய வஞ்சகர் களின் கர்ப்பனை கதாபாத்திரங்கள் உலகுக்கு வெட்ட வெளிச்ச மாகிவிடும்.சிந்திக்கும் சமுதாயம் நிச்சயமாக வெற்றி பெறும்

No comments: