தாக்கரேக்களின் தாதாயிஸம்!
ஜி,அத்தேஷ்
மும்பை, இந்தியாவின் பொருளாதார தலைநகரம், பங்கு சந்தை, துறைமுக வர்த்தகம், விமானப் போக்குவரத்து என தேசிய பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தும் முனையங்கள் மும்பையில் உள்ளன. மிகப்பெரிய பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட நகரம் இது, தனி நபர் வருமானமும் அதிகம், வருடா வருடம் தமிழகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வினாயகர் ஊர்வலத் தின் பிறப்பிடமும் மும்பைதான். பல் வகையான தொழிற்சாலைகளுக்கு இடையே, துப்பாக்கி மற்றும் கொலைக் கருவிகள் தயாரிக்கும் தலைமறைவு தொழிற்சாலைகளும் உண்டு. சர்வதேச கடத்தல் கும்பல்கள், கொலை தொழில் தாதாக்கள் எல்லாம் மும்பையில் மிகக் கணிசமாக வசிக்கின்றனர். தாவூத் இபுறாஹீம் மும்பை தாதாக்களின் குறியீடாக குறிப்பிடப்படுகிறார். சிவசேனை தலைவர் பால்தாக்கரே தாதாயிஸத்தின் இன்னொரு முனையம் என்றபோதிலும் அவர் விளம்பரக் குறியீட்டுக்குள் வருவதில்லை. சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு வன்முறையை நடைமுறைப்படுத்தும் சிவசேனையின் கொலை வெறித் தாக்குதல்களுக்கு பால் தாக்கரேதான் ஆணையிடும் அதிகார மையம். 1968ல் மும்பை நகரத்தில் இருந்து தமிழர்களை சிவசேனையினர் விரட்டி அடித்தனர். குறிப்பாக தென்னிந்தியர்கள் மீது கசப்புணர்வை கக்குவது அவர்களது இனவெறிக் கொள்கை. பின்னர், இந்துத்துவ சக்தியாக உருவெடுத்த சிவசேனா சிறுபான்மையினத்தவர்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த மும்பை கலவரத்தில் முஸ்லிம்களை கண்ட இடங்களில் எல்லாம் கொல்லத் தூண்டும் வண்ணம் தனது சாம்னா பத்திரிகையில் எழுதி, கொலைவெறித் தீ பரவச் செய்தார் பால்தாக்கரே. பின்னர் அரசியல் கட்சியாக சிவசேனையை உருவாக்கிய தாக்கரே அதிகார மையமாக உருவெடுத் தார். மும்பை குண்டுவெடிப்புக்கும், கலவரத்திற்கும் தாக்கரேதான் காரணம் என்று குற்றம் சாட்டிய ஸ்ரீ கிருஷ்ணா விசாரணைக் குழுவின் அறிக்கையை சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையிலேயே கிழித்தெரிந்தனர். தாக்கரே மீது அரசுக்கு இருக்கும் அச்சத்தினால், அந்த அறிக்கை அரசால் ஏற்கப்படாமல், மும்பை கலவரம் தொடர்பான வழக்குகள் இன்னும் முடிவுக்கு வராமல் கிடப்பில் உள்ளன.
கலாச்சார காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் இந்த இனவெறி இயக்கம் மஹாராஷ்டிரத்திற்கு வெளி யிலும் வெளிப்படையாக இயங்கி வருகிறது. ஏனைய மாநிலங்களில் மக்கள் செல்வாக்கை பெறமுடியாத ஆத்திரம் இன்னும் அந்த இயக்கத்திற்கு உள்ளது. இந்த பலகீனத்தினால் மஹாராட்டிரத் திற்குள் நிகழ்த்தும் கொலைவெறியாட் டங்களை மற்ற மாநிலங்களில் நிகழ்த்து வதில்லை. குறிப்பாக காதலர் தினத்தன்று பொது இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வன்முறையில் இறங்கி மக்களை தாக்குவது, வியாபார கடை களை நொறுக்குவது என சட்டத்தை கையிலெடுத்து வெறியாட்டம் ஆடுவது வழக்கம்.சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா என்ற புதிய கும்பல் இவ்வன்முறைகளை செய்து வருகிறது. பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே இதன் தலைவர்.
சித்தப்பாவுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனி இயக்கம் கண்டிருக் கிறார். சிவசேனாவைவிட தாங்கள் தான் கொள்கை பிடிப்பில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக, இக்கும்பல் தீவிர வன்முறையில் இறங்கி வருகிறது.
இப்போதும், கலாச்சாரத்திற்கு பாதிப்பு வந்துவிட்டது என்று கூக்கூரல் எழுப்பு கிறது புதிய சிவசேனா. அதுவும் வட மாநிலங்களில் இருந்து வருபவர் களால்தான் கலாச்சாரம் கெட்டுவிட்ட தாம். உ.பி மாநிலத்தவரான அமிதாப் பச்சன் புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகர், திரைப்படம் மூலம் கோடிக் கணக்கில் பணமும், புகழும் ஈட்டியவர். ராஜீவ் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வட்டம் கொண்டவர். மேலும் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அமர்சிங் உடன் மிகப்பெரிய நட்பும் அமிதாப்புக்கு உள்ளது. உ.பியில் சக்தி வாய்ந்த கட்சி சமாஜ்வாடி. இக்கட்சிக்கு மஹாராஷ்டிரத்திலும் கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. மும்பையில் சிவாஜி மைதானத்தில், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் கூட்டம் 03.02.2008 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் ராஜ் தாக்கரேயை கண்டித்து பேசினர். இதை தொடர்ந்து ராஜ் தாக்கரேயின் அடியாட்களுக்கும் சமாஜ்வாடி கட்சியினருக்கும் இடையே மோதல் நடந்தது. ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் வெளி மாநிலத்தவர் களின் வாகனங்களையும், உடமைகளை யும் அடித்து நொறுக்கத் தொடங்கினர். மும்பையில் நடித்து சம்பாதித்த பணத்தை, உ.பியில் முதலீடு செய்து மருமகள் ஐஸ்வர்யாராய் பெயரில் பல்கலைகழகம் கட்ட அமிதாப் அடிக்கல் நாட்டியது புதிய சேனையினரை ஆத்திரமூட்டியுள்ளது. ஆத்திரம் கொண்ட சேனையினர் அமிதாப் வீட்டின் மீது கற்களையும் சோடா பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உ.பி மாநிலத்தவர்களின் போஜ்பூரி மொழியில் திரைப்படம் ஓடிய அரங்கு களையும் தாக்கியுள்ளனர். அதிகமாக உ.பி, மாநிலத்தவர்களும், பீகாரிகளும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் தாக்கரேக்களின் தாதாயிஸத்தை அடக்க மறுத்து வருவது தான் வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணம் என்று தலைவர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர். மும்பை குண்டு வெடிப்பு நாயகனாக மும்பை காவல்துறை முன்னிறுத்தும் தாவூத் இபுராஹீமை தேடப்படுவோர் பட்டியலில் இந்திய அரசு வைத்துள்ளது. தாவூதை பிடிக்க சர்வதேச புலனாய்வு துறையின் உதவி களையும் மத்திய அரசு நாடுகிறது. ஆனால் உள் நாட்டிலேயே எல்லோருக் கும் நடுவில், அசட்டுத் துணிச்சலுடனும், சர்வ சக்திகளுடனும் கொலைவெறி கொண்டு பேசியும் எழுதியும், தூண்டியும் வரும் தாக்கரேயினரை கைது செய்து மும்பையை காக்க அரசுகள் தயங்குவது ஏன் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்களின் கேள்வி.

மும்பை வர்த்தகத்தில், பாலிவுட் திரைப்படத் துறைக்கு முக்கியப் பங்குண்டு. இந்திய கலாச்சாரத்தை கெடுத்து சீரழிக்கும், மானங்கெட்ட அரை நிர்வாண காட்சிகள் வர்த்தக நோக்கத்தில் திரைப்படமாக்கப்படுகின்றன. இத்தகைய கீழ்த்தரமான தொழில் மையமாக திகழும் பாலிவுட் திரைப்படத் தொழிலுக்கும், அதில் ஈடுபடும் பண முதலைகளுக்கும் எதிராக, இந்தக் கலாச்சாரக் காவலர்கள் களம் இறங்காதது ஏன்? மதுக்கடைகளும், கள்ளச் சந்தைகளும், விபச்சார விடுதிகளும், உயர்ரக விருந்து (?) விடுதிகளும் மும்பையில் அதிகம், விபச்சாரத்திற்கென்றே சிவப்பு விளக்குப் பகுதிகளை அரசே நடத்தி வருகின்றது. அதற்காக அனைத்து மாநிலங்களைச் சார்ந்த அபலைப் பெண்களும், கடத்தப் பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் பெண்களும் இங்கே கொத்தடிமைகளாக ஆதரவற்றவர்களாக, சதை வியாபாரி களாக அவதியுற்று வருகின்றனர். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேற்றப்பட்டு வயதாகும் வரை தனி நபர்களாக கைவிடப்படுகின்றனர். அங்கெல்லாம் நடந்து வரும் சமூகத் தீமைகளை களைய கம்புகளோடு சேனை புறப்படாதது ஏன்? சொந்த மாநில மக்களின் ஆதரவை இழந்து முகவரியற்றுப்போக நேரும் என்பதே காரணம். மராட்டிய இனவெறியை வெளிப்படுத்தி அண்டை மாநிலத் தவர்களை, தொழில் நகரத்தில் நுழைய விடாமல் தடுப்பதற்கும், வர்த்தக ஆதாயத்தை மாராட்டிய இனத்தவர் களுக்கே கிடைக்கச் செய்வதற்கும் வெளிமாநிலத்தவர்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல்களை கலாச்சாரத்தின் பெயரால் தாக்கரேக்களின் சேனைகள் செய்து வருகின்றனர்
நன்றி:TMMKonline.org
No comments:
Post a Comment