Friday, February 15, 2008

சாமி படத்தில் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி ( மர்ம பார்சல்)


ஸ்பெயின் நாட்டுக்கு சாமி படத்தில் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சிசுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல்

ஆலந்தூர், பிப்.16-

ஸ்பெயின் நாட்டுக்கு `கூரியர்' தபால் மூலம் சாமி படத்தில் வைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்றதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பார்சல்கள்


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்புவதற்காக ஒரு கூரியர் பார்சல் இருந்தது. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் சி.ராஜன் தலைமையில், அதிகாரிகள் சோதனை போட்டனர். அதை புதுச்சேரியில் இருந்து சாமுவேல் என்பவர் அனுப்பி இருந்தார். அதில் துணிகள் மற்றும் சாமி படம் இருந்தது.
இந்த பார்சல் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் ஸ்கேனில் வைத்து பார்த்தனர். அப்போது பார்சலில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என வந்தது.

போதைப்பொருள்


ஆனால் அதிகாரிகள் பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் சேலை, லுங்கி, புத்தகம் மற்றும் பெருமாள், அம்மன் போன்ற சாமி படங்கள் இருந்தன. இந்த படத்தை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது சாமி படத்தின் பின்புறம் கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் 4 பொட்டலங்கள் இருந்தன. இந்த பொட்டலத்தை அதிகாரிகள் எடுத்து பார்த்தபோது அதில் `ஹெராயின்' என்ற போதை பொருள் இருந்ததை கண்டறிந்தனர். இதன் எடை 650 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.30 லட்சம். உடனே அதிகாரிகள் பார்சலில் இருந்த புதுச்சேரி முகவரியில் விசாரித்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது.
உடனே போதை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சலை அனுப்பியவர்கள் யார்? இதை யாருக்கு அனுப்ப முயன்றனர் என சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks : Dailythanthi
அது எப்படிங்க ஒரு அப்பாவி முஸ்லீம் தீப்பெட்டி வைச்சிருந்தாலும் கூட உடனே இந்தியாவை தகர்க்க சதின்னு போட்டு காவிகளின் அடிவரை வருடி சுகமளிக்கும் இந்த பத்திரி கைகள் உண்மையான தீவிர வாதம் செய்யும் அலல்து கள்ள கடத்தல் செய்யும் பாசிஸ்டு களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் அந்த செய்தி களை பட்டும் படாமலும் போடுவதும்.அடப் போங்கய்யா நல்ல தான் பத்திரிகை சுதந்திரத்த காப் பாத்து ரீங்க. (காப்பாத்துறீங்க)

No comments: