Tuesday, February 12, 2008

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் ............



கோத்ரா ரெயில் எரிப்பு பற்றி மீண்டும் விசாரணை:


நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!


கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பற்றி மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட் டன.
இதனால் இரு சபை களும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மந்திரி லல்லு பிரசாத் பதில் அளித்து பேசினார்.
அப்போது 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த ரெயில் எரிப்பு சம்பவத் தில் 59 பேர் பலியானது பற்றி மீண்டும் உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறினார்.
3 மாத காலத்திற்குள் இந்த விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு ( ?) தெரிவித்து உள் ளது. நேற்று பாராளுமன்றம் கூடி யதும் பாரதீய ஜனதா உறுப் பினர் வி.கே. மல்கோத்ரா எழுந்து இந்தப் பிரச்சினையை கிளப்பினார்.
ரெயில்வே பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய லல்லு பிரசாத் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பற்றி குஜராத் மாநில அரசு விசா ரணை நடத்தி வரும் நிலையில் அதுகுறித்து மீண்டும் ஒரு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி னார்.
இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு சென்று, ஹஹலல்லுவை மந்திரி பதவியில் இருந்து நீக்குங் கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்று கோஷம் எழுப்பினார்கள்.
பதிலுக்கு ஆளும் கட்சி உறுப் பினர்கள், ஹஹநரேந்திர மோடியை (குஜராத் முதல்-மந்திரி) பதவி நீக்கம் செய்து நாட்டை காப் பாற்றுங்கள்" என்று கோஷம் போட்டனர்.
இருதரப்பினரும் இவ்வாறு கோஷம் போட்டதற்கு சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கண் டனம் தெரிவித்தார். ஹஹபாராளு மன்றத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக் கிறது" என்று கூறினார்.
அப்போது ராஷ்டிரீய ஜனதா தள உறுப்பினர் ராம் கிருபால் வர்மா கோஷம் எழுப்பியபடி சபையின் மையப் பகுதியை நோக்கி வரவே அவரை சபா நாயகர் எச்;சரித்தார்.
என்றாலும் தொடர்ந்து அமளி நீடித்ததால் பகல் 12 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.
பின்னர் 12 மணிக்கு சபை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்ட தால் பிற்பகல் 2 மணிவரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
2 மணிக்கு சபை கூடியதும் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து பேசுமாறு முன்னாள் ரெயில்வே மந்திரியான நிதிஷ் குமாரை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். அப்போது சிவசேனா உறுப் பினர் ஆனந்த் கீதே குறுக்கிட்டு, ஹஹகோத்ரா சம்பவத்துக்கும் ரெயில்வே பட்ஜெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
இதற்கு ஆளும் கட்சி உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த தால் அமளி ஏற்பட்டது. இத னால் பிற்பகல் 3 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
3 மணிக்கு சபை கூடியபோது கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத் துக்கும் ரெயில்வே பட்ஜெட்டுக் கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் ரெயில்வே மந்திரி நிதிஷ்குமார் கூறினார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதிப் படுத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மேற்கொண்ட முயற்சி கள் பலன் அளிக்கவில்லை.
இதனால் அவர் நேற்று முழு வதும் சபையை ஒத்திவைத்தார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் இந்தப் பிரச்;சினை தொடர்பாக அமளி ஏற்பட்டது.
மாநிலங்களவை கூடியதும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் எழுந்து கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பது கலவரத் துக்கு வழிவகுக்கும் என்றும் எனவே இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அத் துடன் சபையின் மையப் பகுதிக்கு சென்று லல்லு பிரசாத்துக்கு எதிராக கோஷம் போட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள்.
பதிலுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கேள்வி - பதில் நேரத்தை எடுத் துக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.
இதனால் அமளி ஏற்பட்ட தால் மேல்-சபை தலைவர் செகாவத் பகல் 12 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.


12 மணிக்கு சபை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் கோஷங்களை எழுப்பியதால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிற்பகல் 2 மணிவரை சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.


பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நேற்று முழுவதும் சபை ஒத்திவைப்பட்டது.


கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து மீண்டும் விசா ரணை நடத்த உத்தரவிடப் பட்டதால் ஏற்பட்ட அமளியின் காரணமாக நேற்று பாராளுமன் றத்தின் இரு சபைகளிலும் எந்த நடவடிக்கையுமறீ மேற்கொள்ளப் படவில்லை.

நன்றி : Tamilmanam




அன்பிற்க்கினிய இந்து சமுதாயமே !


அன்று இந்த கோத்ரா சம்பவம் நிகழ்ந்த உடன் இந்த பாரதிய ஜனதா கட்சியும் இன்னும் RSS மற்றும் அதன் வகயராக்களும் சேர்ந்து இந்த அப்பாவி முஸ்லிம்கள் மேல் பழியை போட்டதும் இன்னும் அதனையே காரணமாக கொண்டு பல ஆயிரம் முஸ்லிம்களை கொன்றும் பல பெண்கள் கற்பழித்தும் ( உங்கள் சொந்த சகோதரியை இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று சிந்தியுங்கள் ) பல ஏழை முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடியும் மிகப் பெரிய தலை குனிவை இந்த நாட்டிற்கு தேடி தந்த தை எந்த ஒரு உண்மை இந்தியனும் மறக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க இப்போது மீண்டும் அந்த வழக்கை விசாரித்தல் அதன் மூலம் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் தானே ,.அப்படி என்றால் இத்தனை ஒத்துக் கொள்வதுதானே (இவர்களின் நிலைப் பாடு படி) சரி இன்னும் இந்து சமுதாயத்திற்கும் உண்மை ஒருமுறை வெட்ட வெழிச்சமாகுமே. பிறகு ஏன் இவர்கள் இதனை செய்ய விடாமல் தடுக்க வேண்டும். இன்னும் இதன் காரணமாக கூச்சலும் குழப்பமும் உண்டு பண்ணி பிரச்சனையை ஏன் திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் சிந்திப்பவர்களாய் இருந்தால் இதிலே உங்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.




இவர்களா இந்தா நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள்.இன்யாவது இவர்களிடம் இருந்து நாம் இந்த நாட்டைக் காப்பற்றுவோம்.இனி ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராவோம்.


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

No comments: