Monday, February 11, 2008

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

பள்ளி மாணவனை தாக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு அபராதம் மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு

திருவனந்தபுரம், பிப்.12-

கேரளாவில், பள்ளி மாண வனை தாக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது.

மாணவன்

மங்களாபுரத்தைச் சேர்ந்த தாஹா ஹுசைன் என்பவரின் மகன் ஆரீப் முகமது (வயது19). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஆரீப் முகமது, சைக்கிளில் கடைக்குச் சென்றார். ரோட்டை கடப்பதற்காக அவர் நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் சாதாரண உடை அணிந்து வந்த மங்களாபுரம் கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் திலீப்கான் என்பவர் தனக்கு வழிவிட்டு ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு ஆரீப்கானை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இந்த நேரத்தில் அங்கு ஜீப்பில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார், போலீசார் ஜனார்த்தனன் பிள்ளை ஆகியோரும் அரீப்கானை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த ஆரீப்கான் உடனடியாக ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முதல்-மந்திரி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரிடம் ஆரீப்கான் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

தீர்ப்பு

இந்த விசாரணை முடிவில், ஆரீப்கானை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் திலீப்கானுக்கு ரூ.5ஆயிரம், வினோத் குமாருக்கு ரூ.3 ஆயிரம், போலீஸ்காரர் ஜனார்த்தனன் பிள்ளைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தொகையை, அவரவர் சம்பளத்தில் இருந்து 4 வாரங்களுக்குள் பிடித்தம் செய்து, பாதிக்கப்பட்ட ஆரீப்கானுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : தினத் தந்தி

No comments: