Friday, February 15, 2008

இன்னாப்பா புஸ்சு..........!

வகுப்பு நடந்த போது பயங்கரம்அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக்கொலைவெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

நியுயார்க், பிப்.16-
அமெரிக்க பல்கலைக்கழகத்தில், வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, முன்னாள் மாணவர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 7 மாணவர்கள் துடிதுடித்து இறந்தனர். இறுதியில், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரும், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார்.



இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

அமெரிக்க பல்கலைக்கழகத்தில்
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் துப்பாக்கியுடன் மாணவர்கள் செல்வதும், மற்ற மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதும், அடிக்கடி நடந்து வருகிறது. ஏற்கனவே 3 முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. ஏற்கனவே பிளாக் பர்க், வெர்ஜீனியா, வெர்ஜீனியா டெக், ஆகிய பல்கலைக்கழகங்களில் துப்பாக்கியால் மாணவர்கள் சுட்ட சம்பவம் நடந்து இருக்கிறது. கடைசியாக வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 32 மாணவர்கள் இறந்தனர்.
4-வது முறையாக, சிகாகோ நகரில் இருந்து 104 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தெற்கு இல்லினோஸ் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவம், நேற்று நடந்து இருக்கிறது. அந்த பல்கலைக்கழகம் 113 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். அங்கு 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் 862 பேர் வெளிநாட்டினர்.


வகுப்பு அறையில்



அந்த பல்கலைக்கழகத்தில், புவியியல் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது வகுப்பில் 162 மாணவர்கள் இருந்தனர். பேராசிரியர் தனது உரையை அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது திரை மறைவில் இருந்து ஒரு மாணவர் வெளியே வந்தார். அவர் கறுப்பு நிற பேண்ட்-சட்டை அணிந்து இருந்தார். ஒல்லியான, வெள்ளை நிறமான அவர், தலையில் தொப்பி வைத்து இருந்தார்.


அவர், மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால், வெறி பிடித்தவர் போல சுட்டார். அவர் சுட ஆரம்பித்ததும், மாணவ-மாணவிகள் அலறினார்கள். பல மாணவர்கள், தாங்கள் அமர்ந்து இருந்த மேஜை-நாற்காலிக்கு கீழே பதுங்கிக்கொண்டனர். மர்ம வாலிபர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும், பேராசிரியர் பின் பக்கமாக நழுவி விட்டார்.


8 பேர் சாவு


அந்த வெறி பிடித்த மாணவர், கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 3 மாணவிகள், வகுப்பு அறையிலேயே இறந்தனர். மேலும் 2 மாணவிகளும், 2 மாணவர்களும் ஆஸ்பத்திரியில், சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 16 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்களது உடைகளில் ரத்தக்கறை காணப்பட்டது.
ஏறத்தாழ 30 முறை சுட்ட அந்த மாணவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, வகுப்பு அறையிலேயே இறந்தார். அவரது உடல், பேராசிரியர் உரை அளிக்கும் மேடை மீது கிடந்தது. அவரிடம் 2 கைத்துப்பாக்கிகளும், ஒரு நீண்ட குழல் துப்பாக்கியும் இருந்தன. அவற்றில் மேலும் ஏராளமான குண்டுகள் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர்


இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று தெரியவருகிறது. அவர் கடந்த ஆண்டு, இந்த பல்கலைக்கழகத்தில் படித்து இருக்கிறார். அதற்கான அடையாள அட்டை அவரது சட்டைப்பையில் இருந்தது. அவர் ஏன் இவ்வாறு வெறித்தனமாக நடந்து கொண்டார்? இதற்கு காரணம் என்ன? என்பது மர்மமாக இருக்கிறது. அவருக்கு 27 வயது இருக்கும்.


துப்பாக்கி சூடு நடந்த தகவல் கிடைத்ததும், போலீசார், ஆம்புலன்சு வேன்களுடன் பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் விரைந்து வந்தனர். காயம் அடைந்து கிடந்தவர்களை, போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இன்னும் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

சுவர்களில் போஸ்டர்கள்


கடந்த ஏப்ரல் மாதம் வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்த பின், இல்லினோஸ் பல்கலைக்கழக சுவர்களில் கொலை மிரட்டல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கடந்த டிசம்பர் மாதமும் மிரட்டல் போஸ்டர்கள் காணப்பட்டன.
இதனால் அந்த பல்கலைக்கழகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. என்றாலும், நேற்று துப்பாக்கி வன்முறை சம்பவம் நடந்து விட்டது.

மாணவி பேட்டி


இந்த சம்பவம் நடந்த போது வகுப்பு அறையில் இருந்த மாணவி டிசிரே சுமித் கூறியதாவது:-


திடீர் என்று ஒருவன் பேராசிரியர் நிற்கும் மேடையில் தோன்றினான். கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் வெறித்தனமாக சுட ஆரம்பித்தான்.
நான் பயந்தபடி மேஜைக்கு கீழ் பதுங்கிக்கொண்டேன். சிறிது சிறிதாக தவழ்ந்து கொண்டே, பாதுகாப்பான இடத்துக்கு சென்றேன். என்றாலும் என்னுடன் இருந்த சக மாணவி, இறந்து விட்டார். மேலும் ஒரு மாணவிக்கு கண்ணில் குண்டு சிதறல் பாய்ந்து விட்டது. சில மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இவ்வாறு அந்த மாணவி கூறினார்.


ரோசி மோரோனி என்ற மாணவி கூறுகையில், ``வகுப்பில் திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்டது. எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். ஒரே கூக்குரலாக இருந்தது. நான் என்ன செய்வது என்றே தெரியாமல், இருந்த இடத்திலேயே பதுங்கிக் கொண்டேன். சில மாணவர்கள் எழுந்து ஓடினார்கள். அவர்கள் காயம் அடைந்தனர்'' என்றார்.

இந்தியர்கள் யாரும் இல்லை


இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டது. திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தலைவர் ஜான் ஜி.பீட்டர்ஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் இந்திய மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்று, அந்த பல்கலைக்கழகத்தில் இயங்கும் இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரவி கிரன் தெரிவித்தார்.


Thanks : Dailythanthi



உலகம் மொத்தமும் தீவிரவாதம் என்ற போலி முத்திரையில் அப்பாவி மக்களைக் கொன்று நவீன சிலுவை யுத்தம் நடத்தி வரும் இந்த அமெரிக்கா தன்னுடைய நாட்டில் இத்தகைய வன்முறைகளை ஒழிக்க வக்கற்றது எனபது இத்தோடு பல முறை நிரூபண மாகிவிட்டது.உலகின் எல்லா அதி அதி நவீனங்களும் (Technology advantages) எங்களிடம் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்ளும் இவர்களிடம் இத்தைய வன்முறைகளை தவிர உபயோகமான வேறு எதுவுமே இல்லை என்பதற்கு சமீப கால நிகழ்வுகள் சான்று பகருகிறது.


No comments: