Wednesday, February 20, 2008

வேலி ல போறத .......................


இங்கிலாந்தில் முதல் இந்து பள்ளிக்கூடம் அந்த நாட்டு அரசே தொடங்குகிறது
லண்டன், பிப்.21-


இங்கிலாந்து நாட்டில் ஹாரோ நகரில் 40 ஆயிரம் இந்துக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அந்த நகரின் மொத்த மக்கள் தொகையில் 19.6 சதவீதம் என்ற அளவில் இருக்கிறார்கள். இதனால் அந்த நகரில் முதல் இந்து பள்ளிக்கூடத்தை அந்த நாட்டு அரசாங்கம் தொடங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த பள்ளிக்கூடம் தொடங்கப்படுகிறது.


கிருஷ்ணா அவந்தி தொடக்கப்பள்ளி என்று அழைக்கப்படும். இதில் 210 மாணவர்கள் படிக்கலாம். நைனா பார்மர் இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்து நெறிமுறைப்படி இங்கு போதனைகள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு அந்த நாட்டு அரசு 70கோடி ரூபாய் செலவில் இந்த பள்ளிக்கூடத்தை கட்டி உள்ளது.

No comments: