Wednesday, February 20, 2008

ஒரு பொய்! பல்லாயிரம் படுகொலைகள்!!


அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…


February - 27


ஃபாஸிச எதிர்ப்பு தினம்


ஒரு பொய்! பல்லாயிரம் படுகொலைகள்!!


பிப்ரவரி :

27/ 2002 நாளை மறக்க முடியுமா? அது வரலாற்றில் கறை படிந்த நாள். உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த நாள். ஒரு இனத்தையே ஓட்டு மொத்தமாக அழிப்பதற்காக ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகள் கண்டெடுத்த நாள். ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகள் தங்கள் திட்டங்களை அமுல் படுத்த 'குஜராத் ஒரு சோதனைக்கூடம்" என்றார்கள். ஆதலால் பல மாதங்களாகவே குஜராத்தில் அனைத்து தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வந்தார்கள் ஃபாஸிஸ்டுகள். கொலைகார ஆயுதங்களைச் சேகரித்தார்கள். வெடிகுண்டுகளை தயாரித்தார்கள். தீயை வைத்தால் அதிவேகமாக எரிந்து முடிவதற்கு உதவி செய்யும் வேதியியல் பொடியைச் சேகரித்தார்கள். உடலில் பட்டால் எலும்பு தெரியும் வரை பொசுங்கும் ஒரு விதப் பொடியை சேகரித்தார்கள். மிகக் குறைந்த நேரத்தில் அதிக கொலை செய்வது எப்படி, வீடுகளையும், அனைத்து சொத்துகளையும் மிகச் சீக்கிரமாக துவம்சம் செய்வது எப்படி என்று ஃபாஸிஸ்டுகள் பயிற்சி எடுத்தார்கள். இப்படி அனைத்துத் தயாரிப்புகளையும் செய்து முடித்து விட்டுத்தான் அவர்கள் கோத்ரா சம்பவத்தை அரங்கேற்றினார்கள்.


February 22 ம் தேதி அஹமதாபாதிலிருந்து அயோத்தி நோக்கிப் புறப்பட்டது சமர்பதி எக்ஸ்பிரஸ். அயோத்தியிலிருந்து திரும்பும்பொழுது a1100 பயணிகளே கொள்ளளவு கொண்ட அந்த ரயில் வண்டியில் (Totla)2000 பேர் பயணம் செய்தனர். இதில் a1700 பேர் கரசேவகர்கள் என்ற கடைந்தெடுத்த ஃபாஸிஸ்டுகள். அந்த ரயில் வண்டி போகும் இடமெல்லாம் பிரச்சனைகளை உண்டு பண்ணினார்கள் ஃபாஸிஸ்டுகள். 'ஜெய் ஸ்ரீராம்", 'முஸ்லிம் பாரத் சோடோ, பாக்கிஸ்தான் ஜாவோ!"(முஸ்லிம்களே, இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! பாக்கிஸ்தானுக்கு ஓடுங்கள்!) போன்ற வெறிக்கோஷங்களை வழியெல்லாம் எழுப்பிக்கொண்டே வந்தார்கள். கரசேவகர்களின் அட்டகாசங்கள் கொடிக்கொட்டிப் பறந்தன அந்த வண்டியில்.
February 22 தேதி கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்தது அந்த வண்டி. வழியெல்லாம் செய்தது போல் அந்த ரயில் நிலையத்திலும் கரசேவகர்கள் தகறாறு செய்தனர். தேநீர் அருந்தி விட்டு, சிற்றுண்டி உண்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். ஒரு முஸ்லிம் தேநீர் வியாபாரியின் மகளை - இளம் பெண்ணை இழுத்துக் கொண்டு ரயிலுக்குள் ஓடினர். (அதற்கு பின் அந்த அபலைப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.) இப்படியாக தகறாறுகள் செய்த பின் ரயில் வண்டி புறப்பட்டது. சிறுது து}ரம் சென்றிருந்த நிலையில் திடீரென்று S6 கோச்சியிலிருந்து தீ எரிய ஆரம்பித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கோச்சு முழுவதும் தீ பரவியது. a58 பேர் உடல் கருகி இறந்தனர். S6 கோச்சுக்கு தீ வைத்தது யார் என்று தெரியாத நிலையில், முதல்வர் நரேந்திர மோடி அங்கிருந்த முஸ்லிம்களை குற்றஞ்சாட்டினார். அந்த சம்பவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று அவரது நர மூளை யோசித்தது. உடனே முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்டார். முஸ்லிம்கள் ஒன்று கூடி கோச்சுக்குள் தீப்பந்தங்களை வீசினார்கள் என்றொரு பொய் குண்டைப் போட்டார். ஏற்கனவே தயாராக இருந்த அத்தனை தயாரிப்புகளுடனும் ஃபாஸிஸ்டுகளைக் களமிறங்க பணித்தார். ஆனால் பின்னர் வந்த தடயவியல் ஆய்வின்படி கோச்சுக்குள் பற்றிய தீ வெளியிலிருந்து வந்ததல்ல, உள்ளிருந்துதான் உருவானது என்பது தெளிவானது. பிப்ரவரி a27 அன்றிரவு மோடி ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டினார். அதில் முக்கியான அமைச்சர்களும், காவல் துறை அதிகாரிகளும் பங்குபெற்றனர். பெரும் கலவரம் வெடிக்கும் என்று நன்றாக தெரிந்திருந்தும் இறந்த a58 உடல்களையும் அஹமதாபாத் வீதி வழியாக எடுத்துச்செல்ல சங்பரிவார்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று காவல்துறையினரிடம் வழியுறுத்தினார் மோடி. பெரும் கலவரம் வெடிக்கும் என்றஞ்சிய காவல்துறையினரிடம், 'ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஹிந்துக்கள் தங்கள் கோபத்தைத் தீர்க்கட்டும். நீங்கள் யாரும் அவர்களைத் தடுக்கக்கூடாது" என்று பணித்தார். அரசியல் சாசனச் சட்டத்தையும், மதசார்பின்மையையும் காப்பேன் என்று உறுதி மொழி எடுத்து முதல்வர் பதவியைப் பிடித்த மோடி அன்று ஹிந்துத்துவ ரவுடி கும்பல்களின் தலைவனாகக் காட்சித் தந்தார். அந்த ரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா முதல்வர் மோடி இவ்வாறு சொன்னதை பின்னர் ஒரு விசாரணைக் குழுமத்திடம் சாட்சியாகச் சொன்னார். குஜராத் கலவரத்தை விசாரிக்க உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 'அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்" என்ற அந்த விசாரணைக் குழுவிடம் இதனைச் சொன்ன ஹரேன் பாண்டியா, தனது பெயரை ஒருக்காலும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கோரினார். அவரது கோரிக்கைப்படி அவரது பெயரை வெளிபடுத்தாமலே அந்தக் குழு தனது விசாரனை அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நரேந்திர மோடியின் நர மூக்கு இதனை மோப்பம் பிடித்தது. ஒருசில மாதங்களில் ஹரேன் பாண்டியா கொல்லப் பட்டார்.


2002 பிப்ரவரி a28 தேதி குஜராத் முழுவதும் நரவேட்டைகள் ஆரம்பமாயின. காவல்துறை காக்கிச் சட்டை அணிந்தது. ஏற்கனவே தாங்கள் தயாரித்து வைத்திருந்த துல்லியமான திட்டப்படி ஃபாஸிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். குறைந்த நேரத்தில் முஸ்லிம்களை கூட்டங்கூட்டமாகக் கொன்றனர். பெண்களை கதறக் கதறக் கற்பழித்தனர். கர்பிணியின் வயிற்றைக் கிழித்து, கருவை வெளியே எடுத்து, வாளின் முனையில் குத்தி, ஓங்கி தரையில் அடித்தனர். கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மண்டையோடுகளை வைத்து கிரிக்கெட் விளையாடினர். கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எரித்தனர். அத்தோடு ஆதாரங்கள் அனைத்தையும் பொசுக்கினர். இதனால் வெளியே தெரியாமலேயே பல கொலைகள், கற்பழிப்புகள் கருகிப்போயின். உடனேயும், ஜந்தாண்டுகள் கழித்தும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி முதல்வரானார். இன்றும் மோடி உட்பட யாரும் தண்டிக்கப்படவில்லை.


இதுதான் இன்றய இந்தியாவின் நிலை!


முஸ்லிம்களே! தாயகத்தில் முஸ்லிம்களின் நிலையைச் சிந்திப்பீர். செயல்படுவீர்.


Thanks: South India Friends Association (SIFA).

No comments: