Monday, February 18, 2008

வெளிநாட்டினர் நடத்திய ரகசிய பூஜை

சபரிமலை, பொன்னம்பலமேட்டில்வெளிநாட்டினர் நடத்திய ரகசிய பூஜைவிசாரணை நடத்த கேரள மந்திரி உத்தரவு

பத்தனம்திட்டை, பிப்.19-

சபரிமலை பொன்னம்பல மேட்டில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் வெளிநாட்டினர் ரகசிய பூஜை நடத்தியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கேரள மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டினர் பூஜை

சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேடு தடை செய்யப்பட்ட வனப்பகுதியாகும்.
இங்கு கடந்த 15-ந் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 பேர் பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.
மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அவர்கள் அந்த வனப்பகுதிக்கு சென்று இந்த பூஜையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சபரிமலை ஆகம விதிகளுக்கு எதிராக, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அனுமதியின்றி இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேவசம் போர்டு உறுப்பினர் பி.நாராயணன், கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த பிரச்சினை விசுவரூபமெடுத்து உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இதைத்தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் நடைபெற்ற பூஜை குறித்து விசாரணை நடத்த கேரள வனத்துறை மந்திரி பினாய் விஸ்வம் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த பிரச்சினை பற்றி விசாரணை நடத்திய ரன்னி மாவட்ட வன அதிகாரி தனது முதற்கட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில், 2 மத்திய மந்திரிகள் சிபாரிசில் வெளிநாட்டினர் அனுமதி பெற்று அந்த பகுதிக்கு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Thanks:Dailythanthi

No comments: