
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.
முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.
"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.
15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
Thanks: Dinamalar
1 comment:
இவன் அப்படின்னு எவனோ ஒரு கருத்து சொல்லி இருக்கிறான் சரி கருத்து என்னானு தெரிஞ்சுகிடலாம்னு நினைச்சா சொன்னவன் ஒரு மனநிலை சரி இல்லாதவன்னு அவன் சொன்ன விசயத்த வைச்சி தெரியுது.இதுவும் ஒரு வித பாசிச படையெடுப்பே ..................
இப்போ இவனுக்கு ஒரு வரி
உன்னோட எதிர்ப்ப இதே மாதிரி அனகரீகமா நீ தெரிவிச் சாலும் அது பத்தி எனக்கு கவலை இல்லை.இப்போ என்னோட I.P உனக்கு கிடைச்சிருக்குமே.எதிர்ப்புக்கு பயந்த எவனும் வாழந்ததா சரித்திரமே கிடையாது
புன்னகையோடே தொடரும் என் பதிவுகள்
Anbudan.
Iraiadimai
Post a Comment