இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அதனையடுத்து மூதூர் நகருக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
இந்த நிலையில் மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் முழுமையாக மீளக் குடியேறிவிட்ட போதிலும், தமிழ் மக்களில் கணிசமானோர் இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை.
ஆயினும் அங்கு தமிழ்- முஸ்லிம் உறவுகள் சீரடைந்துள்ளதாக அப்பகுதி முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள்.அங்கு இந்தக் காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அக்ஷன் பெயிம் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கான சூத்திரதாரிகள் குறித்த வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment