கிளி
ஒரு கிளி மறு கிளிக்காய் .............
என் இனிய கிளியே !
வானம் சற்று கடினமானதாய்............
பறக்கும் போது இறக்கை கிழிக்கும்
காற்றாய் எதிர்ப்பு மேகத்தின் ஊடே வந்தாலும்
எதற்கும் அஞ்சாத என் கிளி
பார்த்தே பறந்தது எதிர்ப்பின் ஏற்றத்தை!
சர்வ வல்லமை மிக்கவனை சங்கமிக்க
சற்றும் தளராமல் சங்குற்றத்தோடு சருகாய் பறந்தது லட்சிய வானில்
சாதனை அது வேண்டும் என்றோ என்னவோ
சாத்தனாய் சில வல்லூறுகள்
சல்லடை ஆக்கிவிட்டது என் செல்லக் கிளியை
சாதனை படைக்க உன்னை
சற்று தொலைவில் சந்திக்கும் முன்னே
சத்தமின்றி சக்திமிக்கதாய், சத்தியத்தை சென்றடைந்து விட்டாயே
சத்தியமாய் சொல்கிறேன் நீ சத்தியத்தில் சாதித்துவிட்டாய்
சற்று பொறு
இதோ உன்னைத்தேடி நானும் நம் இனமும்
சக்திமிக்கவனிடம் சொல்
இதோ என் இனமும் உன் சத்திய வழியிலே என்று
சருகாய் பறக்க நாங்களும் இதோ வானம் நோக்கி................
உன்னை சல்லடை ஆக்கிய வல்லூறுகள்
எங்கள் சங்கை நோக்கி சங்கமிக்கும் நேரம்
சற்று தொலைவில் தான்
சித்தம் கொண்டே காத்திருக்கிறோம் சத்ததோடே நிகழும்
அந்த சல்லாபத்துக்காய்
சித்தப் படி சித்தியைப் பெறுவது மிகக் கடினம்
என் சித்திரமே நீ சித்தியடைந்து விட்டாய்
முன் நெஞ்சில் நீரோடு உன்னை முன்மொழிந்தவன்
இதோ............
வருகிறேன் நானும் உன்னருகே
கூட்டத்தோடு பறக்கிறது இந்த சின்னக் கிளி.
No comments:
Post a Comment