Friday, February 22, 2008

இஸ்ரேலை ஐ. நா கண்டிக்க வேண்டும் என்கிறது இரான்

இரானின் அணு ஆற்றல் திட்டத்துக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக இஸ்ரேல் பயமுறுத்தல்கள் விடுத்துவருவதை தடுக்க வேண்டும் என்று, அசாதாரணமான முறையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலை இரான் வலியுறுத்தியுள்ளது.

இரானுக்கு எதிராக இஸ்ரேல் வெளியிட்டுவரும் இந்த பயமுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் நியாயமற்றவை என்று ஐ.நா மன்றத்துக்கும், அதன் தலைமைச் செயலருக்கும், ஐ.நாவுக்கான இரானியத் தூதுவர் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்துலகச் சட்டத்தின் அப்பட்டமான மீறல் இதுவென தனது கடிதத்தில் இரானின் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். இரானின் அணுத்திட்டங்கள் சமாதான நோக்கிலானவை மாத்திரமே என்றும், இஸ்ரேலை ஐ.நா கண்டிக்க வேண்டுமென்றும் தூதுவர் கேட்டிருக்கிறார்.
நன்றி: தமிழ் பிபிசி

No comments: