Saturday, February 23, 2008

கலவரங்களுக்கு ஒரு புதிய யுத்தி !?

சமீப காலங்களாக நாம் அனைவரும் கேட்ட அதிகமாக கண்டுக் கொள்ளாத ஒரு விசயம் தான் வட நாட்டில் நடக்கும் மொழிப் போர்.இது யாரும் மொழிப் பற்றோ அல்லது மண்ணின் நேசமோ கொண்டு மார் தட்டிக் கொள்வது கிடையாது.இன்றைய கால கட்டத்தில் " வளர வேண்டுமா வளர்ந்து நிர்ப்பவனிடம் சண்டைக்கு செல்" இது புது மொழி இது தான் இன்றைய நடை முறை. ராஜ் தாக்கரேயின் வாதங்கள் எந்த அளவுக்கு விவேகமானது (?) பதிலடியாக லாலுவின் ஆட்கள் கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிர்ப்பது இது தினமும் நாம் கேட்டு மறு காதோடு மறந்து போகும் நிகழ்வு.ஆனால் நான் கவனிக்காத நிறைய விஷயங்கள் இதில் இருக்கத்தான் செய்கிறது.ஜாதி வெறி அடங்கி விட்ட தாக நாம் நினைக்கும் இந்த கால கட்டத்தில் அதனுடைய நவீன மயமாக்கல் தான் இத்தகைய பரிணாமங்கள்.எது எப்படியோ இந்தியா என்றும் வல்லரசு ஆகிவிடக் கூடாது என்று நினைக்கும் நயவஞ்சகர்களின் நவீன மயமாக்கப் பட்ட நயவஞ்சகம் தான் இத்தகைய சம்பவங்கள்.நாட்டுப் பற்று கொண்ட மக்கள் இதன் பின்னணியை சிந்திக்க வேண்டுகிறேன்.

No comments: